Thursday, 19 July 2018

தான் விரும்பியது சீர்வரிசையில் இல்லை என்று கோபித்துக்கொண்ட சாமுண்டி அம்மன்!

பொதுவாக, தங்கைக்கு அண்ணன் சீர்வரிசை செய்வது வழக்கம். ஆனாலும் தேனி மாவட்டம், கம்பத்திலிருந்து ஆங்கூர்பாளையம் செல்லும் வழியில் உள்ள சாமுண்டிபுரம் என்னும் கிராமத்தில் கோயில் கொண்டிருக்கும் அருள்மிகு சாமுண்டி அம்மன், கம்பம் நகரில் அருள்புரியும் ஸ்ரீ கம்பராயப் பெருமாளுக்கு ஆனிமாதம் பெருமாள் கோயிலில் நடைபெறும் விழாவின்போது சீர்வரிசை செய்வது வழக்கம்!

காரணம், இந்த பெருமாள், சாமுண்டி அம்மனுக்கு அண்ணன் முறையாம். பெருமாள் கோயில் விழாவின் முதல் நாள் கொடியேற்றத்தன்று வருகை தரும் சாமுண்டி அம்மன், விழாவின் கடைசி நாளில் அண்ணனுக்கு சீர்வரிசை வழங்குவார். பதிலுக்கு அண்ணனும் தங்கைக்கு சீர்வரிசை செய்வார். ஆனால், தான் விரும்பியது சீர்வரிசையில் இல்லை என்று கோபித்துக்கொண்டு தங்கை தனது ஆலயத்திற்கு திரும்புவாள்.

இதனை அறிந்த பெருமாள், ஆடிமாதம் முதல் வெள்ளிக்கிழமை அன்று, தன் தங்கைக்குப் பிரியமான வளையல்களை சீர்வரிசை தட்டில் வைத்து அத்துடன் தாம்பூலம், மஞ்சள், சந்தனம், பழங்கள், குங்குமத்துடன் பட்டாடையும் வைத்து சீர் செய்வார்.

சகோதரி உறவின் உன்னதமான தன்மையையும் அண்ணன் - தங்கை உறவினையும் எடுத்துக்காட்டுவதாக இந்த ஆடித் திருவிழா நடைபெறுகிறது. இந்த விழாவில் கலந்துகொண்டால் அண்ணன் - தங்கை உறவு பலப்படும் என்பது ஊர் மக்களின் நம்பிக்கை...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  
        என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

No comments:

Post a Comment