Tuesday, 24 July 2018

சடையப்பநாதர் - சவுடேஷ்வரி அம்மன் திருக்கோவில்

தர்மபுரி மாவட்டத்தின் பாலக்கோடு நகரில் இருக்கிறது 200 ஆண்டுகள் பழமையான சடையப்பநாதர் உடனுறை சவுடேஸ்வரி அம்மன் கோயில். ஜடாமுடி சூடிய சிவனே இங்கு லிங்க வடிவத்தில் சடையப்பநாதராக அருள்பாலிக்கிறார். இதனால் சடையப்பநாதர் என்று பக்தர்கள் போற்றுகின்றனர் என்கின்றனர் அடியார்கள். ஒவ்வொரு மாதமும் பிரதோஷ விழா, இங்கு திருவிழா போல் கொண்டாடப்படுகிறது. அந்த நாளில் சிவனுக்கு சிறப்பு பூஜைகள் செய்து, எளியவர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. ஒரு காலத்தில் சடையாண்டி என்னும் சித்தர், இங்கு சிவனை லிங்கமாக பிரதிஷ்டை செய்து வழிபட்டார். அவர் வழிபட்ட சிவனை சடையப்பநாதர் என்று வணங்குகின்றனர். சடையாண்டி சித்தர், இங்கேயே ஜீவசமாதி அடைந்தார். 

அதற்கான ஆதாரங்கள் இங்கே உள்ளது என்கின்றனர் தொல்லியல் ஆய்வாளர்கள். சடையப்பநாதரை வழிபட்டால், மரணத்தின் விளிம்பில் இருப்பவர்களை கூட காப்பாற்றுவார். குழந்தை பாக்கியம் இல்லாத பெண்மணி ஒருவர், இங்கு வந்து சிவனை வழிபட்டார். அவரிடம் ஒரு யோகி, உனக்கு ஆண் குழந்தை பிறக்கும். ஆனால் உனது கணவர் உயிருடன் இருக்க மாட்டார். இங்குள்ள சிவனை வழிபட்டால், நிச்சயம் உனது மாங்கல்யத்தை காப்பாற்றுவார் என்றார். இதையடுத்து கர்ப்பம் தரித்த பெண்மணி, சிவனுக்கு தினமும் பூஜைகள் செய்தார். அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. ஆனால் கணவர் விபத்தில் சிக்கி உயிருக்கு போராடினார். அப்போதும் மறக்காமல் சிவனை வேண்டினார் அந்த பெண்மணி. 

சிறிது நேரத்தில் அங்கு வந்த மருத்துவர்கள், உனது கணவருக்கு உடல் முழுவதும் காயம்பட்டபோதிலும், மண்டை ஓட்டில் அடிபடாதது அபூர்வம். இதனால் அவரை பிழைக்க வைக்கலாம் என்று கூறி சிகிச்சை அளித்தனர். இதற்கு பிறகு அப்பகுதி மக்கள் சடையப்பநாதரை ஓடுகாத்த சிவன் என்று போற்றி வழிபட்டனர் என்ற சிலிர்ப்பூட்டும் தகவலும் உலவுகிறது. விபத்துகளில் இருந்து விடுபடவும், குழந்தை வரம் வேண்டியும் வேண்டுதல் வைத்து சடையப்பநாதரை வழிபடக்குவியும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வேண்டுதல்கள் அனைத்தும் உடனடியாக நிறைவேறுவதே, மக்கள் ஆர்ப்பரித்து இங்கு வருவதற்கு காரணம் என்கின்றனர் சைவ முன்னோடிகள். 

வேண்டுதல்கள் நிறைவேறியவுடன் நெய்விளக்கேற்றி சிவனுக்கு நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர் பக்தர்கள். இதேபோல் மாசி மகம், மகா சிவராத்திரி, வைகாசி விசாகம், தைப்பூசம், ஆவணி அவிட்டம், சித்திரை பிறப்பு என்று விசேஷ நாட்களில் சிறப்பு பூஜையும், வழிபாடுகளும் களை கட்டும். சங்கடங்கள் தீர்க்கும் சடையப்பநாதர் கோயிலில் அருள்பாலிக்கும் சவுடேஸ்வரி அம்மன், தீய சக்திகளிடம் இருந்து நம்மை காக்கும் தெய்வம். அவளை வழிபட்டால் புயலாய் வரும் துன்பங்கள், பனியாய் கரைந்து போகும். பாவங்களும், சாபங்களும் நீங்கி விமோசனம் கிடைக்கும் என்பது தமிழகம் மட்டுமின்றி ஆந்திரம், கர்நாடக மாநிலங்களில் இருந்தும் வரும் பக்தர்களிடம் ஆண்டாண்டு காலமாய் தொடரும் நம்பிக்கை...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  
        என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

No comments:

Post a Comment