தன் குருவான அகத்திய மாமுனி அறிவுறுத்தியபடி, புண்ணிய நதியான தாமிரபரணியில் ஒன்பது மலர்களை அந்த ஆற்றின் போக்கிலேயே விட்டார்.பிறகு, அந்த மலர்கள் எங்கெல்லாம் நின்றனவோ அங்கெல்லாம் சிவாலயம் அமைத்து வணங்கினார். கடைசி மலர் நின்ற சங்கம தீர்த்தத்தில் நீராடி சிவபெருமானை வணங்கி வழிபட்டு முக்தியும் அடைந்தார். இப்படி முதல் மலர் நின்ற பாபநாசத்தில் சிவலிங்கம் ஸ்தாபித்து வணங்கினார். உரோம சமகரிஷி உருவாக்கிய நவகயிலாயங்களில் இது முதலாவது. சூரிய அம்சமாக சிவபெருமான் உள்ளார். சிம்ம ராசிக்காரர்கள் இங்கு வந்து சிவனை வணங்கி நலம் பெறுகிறார்கள். ஸ்ரீபாபநாசர், பழமறைநாயகன், முக்காளிங்கநாதர், வயிராச லிங்கம் என்றெல்லாம் இறைவன் வணங்கப்படுகிறார். அம்பாள் உலகம்மை.
இக்கோயிலுக்கு தாமிரபரணி தீர்த்தம், வேததீர்த்தம், பழைய பாபநாச தீர்த்தம், கல்யாண தீர்த்தம், வைரவ தீர்த்தம், பாண தீர்த்தம் ஆகியன புண்ணிய தீர்த்தங்களாக உள்ளன. பாபநாச தீர்த்தம் என்ற அகத்தியர் அருவியில் சிறு குழந்தைகள் கூட நீராடலாம். வருடம் முழுவதும் தண்ணீர் விழும் ஜீவ அருவி இது. இங்கிருந்து 14 கி.மீ. தொலைவில் உள்ள பாணதீர்த்தம் ராமபிரான் தனது தந்தை தசரதனுக்கு ஆடி அமாவாசை அன்று நீத்தார் கடன் நிறைவேற்றிய இடமாகும். எனவே இங்கு ஆடி அமாவாசையில் பிதுர் கடன் கழிப்போர் லட்சக்கணக்கில் கூடுவர். கோயிலில் உள்ள தாமரை தடாகத்தில் சித்திரை விசு அன்று தெப்பத் திருவிழா நடக்கும். நாம் பாவத்தினைப் போக்க கங்கையை நோக்கிப் பயணம் செய்கிறோம். ஆனால், கங்கையே தன் பாவத்தினைப் போக்கிக் கொள்ள மார்கழி மாதந்தோறும் பாபநாசத்திற்கு வருவதாக முக்காளிங்க முனிவர் எழுதிய பாபநாச தல புராணத்தில் கூறப்பட்டுள்ளது.
ஆக, பாபநாச தீர்த்தத்தில் நீராடினால் காசிக்குச் சென்று கங்கையில் நீராடியதற்கு சமம் என்கிறார்கள். இக்கோயில் இறைவன், கண் நோய், தோல் நோய் நீக்கி நல்வாழ்வளிக்கிறார். அருகிலேயே தலை அணையும், அகத்தியர் அருவியும் உள்ளன. வருடம் பூராவும் குளித்து மகிழ புனித நீர் பொங்கியபடி காத்திருக்கிறது. கல்யாண தீர்த்தத்தில் கோடீஸ்வரரையும், அகத்தியரையும் வணங்கலாம். அகத்தியர் அருவி அருகே அகத்தியருக்கு முருகன் தமிழ் கற்றுக் கொடுத்த புராணத்தை நினைவுபடுத்தும் அகத்தியர்முருகன் இருவரும் அருட்பாலிக்கும் கோயிலையும் வணங்கலாம். நெல்லை புதிய பேருந்து நிலையத் திலிருந்து பாபநாசத்திற்கு பேருந்துகள் உள்ளன. ரயிலில் வருவதானால் அம்பாசமுத்திரத்தில் இறங்கி அங்கிருந்து 5 கி.மீ. தொலைவில் பாபநாசத்தினை அடையலாம். கோயில் காலை 6.30 மணி முதல் 12 மணி வரையிலும் மாலை 5 மணி முதல் 8 மணிவரையும் திறந்திருக்கும்...
🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳
🔔 *சர்வம் சிவமயம்* 🔔
🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
என்றும் இறைப்பணியில்
*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
*ஆன்மீக குழு*
*வாட்சப் ல் இணைய*
📲 +919486053609
⏰ _ஒழுக்கம்! கட்டுப்பாடு!_ ⏰
👳🏻♂ *இறைத்தொண்டு!* 👳🏻♂
🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡
No comments:
Post a Comment