இமயமலைப் பகுதிகளில் தற்போது மிக அரிதான பிரம்ம கமல மலர்கள் பூத்திருக்கின்றன.
இமயமலைப் பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் இந்தோ - திபெத் எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் பிரம்ம கமல மலர்களின் அரிய புகைப்படங்களை டிவிட்டரில் பகிர்ந்துள்ளனர்.
இந்த பிரம்ம கமல மலர்கள் ஹிமாலயப் பகுதியிலும், உத்ரகாண்ட் மற்றும் பர்மா, சீனாவின் சில பகுதிகளிலும் மலரும். இந்த மலர் உத்ரகாண்ட் மாநிலத்தின் தேசிய மலராகும். இந்த மலருக்கு ஒரு சிறப்பம்சம் என்னவென்றால், இதில் ஆண் மற்றும் பெண் மகரந்தங்கள் தன்னகத்தே அமைந்திருப்பதுதான்.
பொதுவாக இந்த மலர் ஜூலை மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை பாறைகள் மற்றும் புற்கள் நிறைந்த மலைப் பகுதிகளில் பூப்பது வழக்கம்.
இந்த மலரும், செடியும் மருத்துவ குணம் கொண்டவை. திபெத் நாட்டில் இதனை மருத்துவத்துக்காக பயன்படுத்துகிறார்கள்.
இந்த மலருக்குப் பின்னணியில் ஒரு புராணக் கதையும் உள்ளது. அதாவது, லட்சுமணனுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு சஞ்சீவினி மூலிகையால் குணம் அடைந்தார். அப்போது, சொர்கத்தில் இருந்து கடவுள் பூக்களை தூவினார். அதில் சில பூக்கள் இமாலயப் பகுதியில் விழுந்ததாகவும், அதுவே பூமியில் வேர்விட்டு வளர்ந்து பிரம்ம கமலம் என்று பெயர் பெற்றதாகவும் கூறப்படுகிறது...
🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳
🔔 *சர்வம் சிவமயம்* 🔔
🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
என்றும் இறைப்பணியில்
*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
*ஆன்மீக குழு*
*வாட்சப் ல் இணைய*
📲 +919486053609
⏰ _ஒழுக்கம்! கட்டுப்பாடு!_ ⏰
👳🏻♂ *இறைத்தொண்டு!* 👳🏻♂
🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡
No comments:
Post a Comment