Saturday, 23 June 2018

உவரி ஸ்ரீ சுயம்புலிங்கசுவாமி திருக்கோவில்.!!

ஐந்து தலை நாகத்துடன் உவரி கடற்கரையிலிருந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் சுயம்புலிங்க சுவாமி!

தமிழ்நாட்டில் உள்ள பிரசித்திப் பெற்ற சிவாலயங்களில் உவரி சுயம்புலிங்க சுவாமி கோவில் குறிப்பிடத்தக்கது. வங்க கடல் அலை தாலாட்டும் எழிலார்ந்த இடத்தில் இறைவன் இயற்கையாக தோன்றி கருணையுடன் காட்சி தருகிறார். உவரியில் பஞ்சப்பூதங்கள் ஐந்தும் இணைந்து அவற்றின் மொத்த அம்சமாக உருவாகியுள்ள சுயம்பு லிங்கத்தை தரிசிப்பது பெரும்பாக்கியம். தன்னை நாடி வரும் பக்தர்கள் வாழ்வில் நலமும், செல்வமும் வழங்கி மனக்குறை அகற்றி தீராத நோய்களை எல்லாம் தீர்த்து வைக்கும் வைத்தியநாதனாக அருள்பாலிக்கிறார் சுயம்புலிங்க சுவாமி.
மார்கழி மாதம் முழுவதும் சுயம்புலிங்க சுவாமியின் மீது சூரியஒளி விழும். இது சுவாமிக்கு சூரியன் அபிஷேகம் செய்வதை போல் காணப்படும். இந்த அரிய காட்சியை இன்றும் நாம் காணலாம்.
கிட்டத்தட்ட 500 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த இக்கோவிலில் மூலவராக சுயம்புலிங்க சுவாமியும் அம்மனாக பிரம்மசக்தி அம்மனும் தல விருட்சமாக கடம்ப மரமும் தீர்த்தமாக கடற்கரையருகே ஒரு தெப்பகுளமும் உள்ளது.
வீர வள நாடு என மன்னர்கள் காலத்தில் அழைக்கப்பட்ட இப்பகுதியில் சுவாமி சுயம்புலிங்கமாக உருவாகியுள்ளார். முன்னொரு காலத்தில் பால் வியாபாரி ஒருவர் கடம்ப மரத்தை தாண்டி செல்லும் போது பல தடவை இடறி விழுந்ததால் அம்மரத்தை வெட்டி வீச எண்ணி மரத்தை வெட்டுகின்றான். மரத்தின் வேரிலிருந்து இரத்தம் பீறிக் கொண்டு ஒடுகிறது, அப்போது திடீரென வானத்திலிருந்து " அசரீரி ஒலிக்க " தாம் இந்த இடத்தில் சுயம்புவாக உள்ளேன் எனக்கு கோவில் கட்டி பக்தர்கள் வழிபாடு செய்யுமாறு சொல்லி மறைந்துள்ளது.
உடனே அப்பகுதியில் பனை ஒலையால் கூறை வேயப்பட்டு ஈசன் சுயம்புவாக காட்சியளிக்கிறார்.பின்னர் நாளடைவில் கோவில் பிரபலமடையவே கற்களால் கோவில் கட்டப்பட்டுள்ளது.
இந்த ஆலயத்தை சுற்றி கன்னி விநாயகர், இசக்கியம்மன், சாஸ்தா கோவில்களும் உள்ளன.

சிறப்பு :

இக்கோவிலிற்கு செல்லும் பக்தர்கள் கடலில் குளித்த பின்னர் அருகிலிருக்கும் கிணற்றிலும் குளித்த பின்னர் கோவிலுக்குள் செல்ல வேண்டும்.

மண் தோசம் :

பெரும்பாலும் கிராமங்களில் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்டால் மணலை வாரி ஒருவர் மீது ஒருவர் வாரி தூற்றுவது இயல்பு. அப்படி வீசியெறியும் மண்ணால் இருவருக்குமே மண் தோசம் பிடித்துக் கொள்கிறது. நாளடைவில் சண்டையிட்டுக் கொண்டவர்கள் நட்பு பாராட்டினாலும் மண் தோசம் விலகுவதில்லை!
இந்த மண் தோசம் விலக வேண்டுமானால் இக்கோவில் கடற்கரையில் சிவனை வேண்டி இரு தரப்பினரும் கடற்கரையிலிருந்து மண்ணை ஓலை பெட்டியிலோ அல்லது வாளியிலோ அள்ளி கரையில் வந்து 11 முறை அல்லது 48 முறை என எண்ணி சுமந்து அள்ளி போடுவதால் மண் தோசம் நீங்குகிறது.
இக்கோவிலில் "வைகாசி விசாகம் " "தைப்பூசம் " "ஆடி அமாவாசை " "பங்குணி உத்திரம் " மற்றும் ஒவ்வொரு தமிழ் மாத கடைசி வெள்ளிக் கிழமையும் மிக பிரசித்தி!
கடம்ப மரத்தை வெட்டிய போது இரத்தம் வந்ததை தடுக்க உவரி சுயம்புலிங்க சுவாமியின் மேல் சந்தனத்தை பூசி ரத்தத்தை நிறுத்திய காரணத்தால் அவரை வழிபட வரும் பக்தர்களுக்கும் சந்தனத்தை மேனி எங்கும் பூசுவதற்கு கொடுக்கின்றனர். சுவாமியின் திருமேனியிலும் தினமும் சந்தனத்தை அரைத்து பூசுகின்றனர். தீராத நோய் உள்ளவர்களும், காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களும், சந்தனத்தை மருந்தாக்கி நலம் பெறுகின்றனர். சந்தனம், விபூதியை தண்ணீரில் கலந்து அருந்துகிறார்கள். உவரி கோவிலில் காலை 6 மணிக்கு உதயமார்த்தாண்டம், பகல் 11.30 மணிக்கு உச்சிக்கால பூஜைகளும், இரவு 7 மணிக்கு சாயரட்சை, 8.30 மணிக்கு அர்த்த ஜாமபூஜை நடைபெறும். உவரி சுயம்புலிங்க சுவாமி கோவிலில் 9 நிலைகளுடன் 108 அடி உயரத்தில் ராஜகோபுரம் கட்டப்படுகிறது. இது முழுக்க, முழுக்க கருங்கற்களால் உருவாகிறது என்பது விசேஷம்..
இத்தகைய சிறப்பும், பெருமையும் வாய்ந்த உவரி சுயம்புலிங்க சுவாமி திருக்கோவில் திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அணுமின்நிலையத்தில் இருந்து கிழக்கே 25 கி. மீ தொலைவிலும், திசையன்விளையிலிருந்து 10 கி.மீ தொலைவிலும், திருச்செந்தூரிலிருந்து (குலசை 20 கி.மீ) கடலோர மார்க்கத்தில் கன்னியாகுமரி செல்லும் வழியில் 30 கி.மீ தூரத்திலும் அமைந்துள்ளது.
2004 ல் சுனாமியானது உவரியை தாக்க ஆர்ப்பரித்து வந்தபோது தன் ருத்ர தாண்டவ பார்வையினால் சுனாமியை சுருண்டோடச் செய்து தன் பக்தர்களையும் உவரியையும் கடல் வெள்ளத்திலிருந்து காத்து கடலை தன் கோட்டைக்குள் வர விடாமல் பின்வாங்கி மண்டியிடச் செய்தார். கடற்கரையிலிருந்து இக்கோவில் இருநூறு மீட்டர் தொலைவில் தான் உள்ளது.

ஓம் சுயம்புலிங்க சுவாமியே போற்றி! போற்றி!!!

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  
        என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

No comments:

Post a Comment