Saturday, 29 June 2019

கலியுகம் முடியும் தருணத்தை உணர்த்தும்  நாகலோகம்.!!

மனிதர்கள் வாழ்வது பூலோகம். இறைவனின் இருப்பிடம் மேலுலகம். வைகுண்டம், கயிலாயம் எல்லாமே அங்குதான் இருக்கிறது. அது போன்று மனிதர்கள் வாழும் பூமிக்கடியில் பாதாளத்தில் ஓர் உலகம் உண்டு அது பாதாள உலகம் என்று சொல்கிறார்கள் ஆன்மிக பெரியவர்கள்.

மனிதர்களுக்கு தெரிந்ததெல்லாம் பூலோகம் மட்டும்தான். மேல் உலகம் சென்றவர்கள் திரும்பவில்லை. பாதாள உலகத்தைக் காணமுடியவில்  லை. ஆனால் பாதாள உலகம் உண்டு என்பதை நிரூபிக்கிறது உத்தரகாண்ட் மாநிலம் பித்தோகர்க் மாவட்டத்தில் அமைந்துள்ள பாதாள புவனே ஸ்வரர்  கோயில்.

இயற்கை எழில் கொஞ்சும் மலைகள் சூழ இரண்டு நதிகளுக்கிடையே தவழும் அழகிய கிராமத்தில் தான் இந்தக் கோவில் அமைந்திருக்கிறது. கோயிலை அடைய அரைக்கிலோமீட்டர் நடந்துசெல்ல வேண்டும். தூரத்திலிருந்தே கோவிலைப் பார்க்க முடிகிறது. ஸ்கந்த புராணத்தில் இந்தக் குகை கோயிலுக்கு நான்கு கதவுகள் இருந்ததாகவும், போன யுகத்தில் இரண்டு கதவுகள் மூடிவிட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த பாதாள உலகுக்கு செல்லும் வழியைப் பற்றி அதில் குறிப்பிட்டிருந்தாலும் சூரிய வம்சத்தை சேர்ந்த ரித்து பர்னா என்பவர்தான் இந்தக் கோயி லின் உள்ளே நுழைந்ததாக புராணக்கதை கூறுகிறது. மகாபாரதத்தில் பஞ்ச பாண்டவர்கள் இங்கு வந்து ஈஸ்வரனை பூஜித்தபின்பு மேல் உலகம் சென்றதாக கூறுகிறார்கள். கலியுகத்தில் ஆதிசங்கரர் இங்கு வழிபட்டு லிங்கத்துக்கு செப்பு காப்பு வைத்திருக்கிறார்.

இந்து மத இதிகாச நூல்களின் படி முப்பத்து முக்கோடி தேவர்களும் ஒன்றாக சேர்ந்திருக்கும் இந்த கோவில்தான் பாதாள உலகுக்கு செல்லும் வாசல் என்று சொல்கிறார்கள். சுண்ணாம்பு பாறைகளால் கட்டப்பட்டிருக்கும் இந்தக் கோயில்  வளாகத்தில் சிவன், பார்வதிக்கு கோவில்கள் உண்டு. அதைத் தாண்டி சென்றால் குகையின் நுழைவாயில் தெரிகிறது. 160 அடி நீளமும்,100 அடி ஆழமும் கொண்ட  இந்தக் குகைக்குள் செல் வது சாதாரணமான விஷயமல்ல.
குகைக்குள் ஒரு மனிதன் மட்டுமே உள்ளே நுழைய முடியும்.  குகையின் பக்கவாட்டில் பிடிமானத்துக்காக சங்கிலி வைத்திருக்கிறார்கள். அதுவும் புழுவை போல் வளைந்து நெளிந்து செல்ல வேண்டும். இந்தக் குகைக்குள் கவனமாக ஊடுருவி சென்றால் 80 படிக்கட்டுகளுக்கு அடுத்து சுரங்கப் பாதை ஒன்று உண்டு. இதன் வழியாக கயிலாயம் செல்லலாம் என்றும் நம்பப்படுகிறது. ஆனால் தற்பொது இந்த சுரங்கமானது அடைக்கப்பட்டி ருக்கிறது.

படிக்கட்டுகளில் இறங்கும் போதே நரசிம்மரின் உருவம் தெரிகிறது. கீழே இறங்கியதும் ஆதிசேஷன் பூமியைத் தாங்கும்படி இருக்கும் காட்சியை காணலாம். அங்கு  யாக குண்டமும் காணப்படுகிறது.அர்ஜூனனின் கொள்ளுப்பேரனான ஜனமேஜயன் தன் தந்தை பரீட்சித் மரணத்துக்கு பழி வாங்க இங்குதான் நாக யாகம் செய்ததாக கூறப்படுகிறது.
ஆதிசேஷன் முதுகின் மேல் நடந்தால் எட்டு இதழ் தாமரையிலிருந்து விநாயகர் மீது தண்ணீர் சொட்டு சொட்டாக விழுகிறது. மேலும் வளைவுக ளைக் கடந்தால் பத்ரிநாத், கேதார்நாத், அமர்நாத் விக்ரகங்கள் லிங்கவடிவில் காணப்படுகின்றன. இயற்கையா எழுந்த லிங்கங்கள்  எளிதில் காண முடியாத உருவமாகவே இருக்கிறது. இது சக்தி யுகத்தில் தோன்றியதாக கூறுகிறார்கள். பக்கத்தில் கால பைரவர் ஆக்ரோஷத்துடன் வாயை துருத்திக்கொண்டு நிற்கிறார். அந்த வாயின் உள்ளே நுழைந்தால் மோட்சத்தை அடையலாம் என்கிறார்கள். அங்கு சிவபெருமான்  சிம்மத்தின் மேல்  பாதாள சண்டியுடன் காட்சி தருகிறார்.
கருவறையில் ஆதிசங்கரர் வைத்த மூன்று செப்புலிங்கங்கள் இருக்கிறது. லிங்கத்தின் மீது மாறி மாறி நீர் சொட்டி அபிஷேகம் நடக்கிறது. அதைத் தாண்டி கழுத்தில் நாகங்களுடன் சிவன் காட்சி தருகிறார். சிவபெருமானுடன் முப்பத்து முக்கோடி தேவர்களும் இங்கிருப்பதாக ஐதிகம்.

அங்கிருந்து குகையின் வேறுவழியாக வெளியேற வேண்டும்.  வெளியேறும் இடத்தில் நான்கு யுகங்களைக் கொண்ட  லிங்கங்கள் இருக்கிறது.  இவற்றில் கலியுகத்தைக் குறிக்கும்  லிங்கம் மேல் இருக்கும் கூம்பைத் தொடும் தருணமே கலியுகம் முடியும் தருணம் என்கிறார்கள்.
இந்தகுகை கோயிலுக்கு சென்று வந்தால் நிச்சயம் புதிய உலகம் சென்ற உணர்வை  உண்டாக்கும். வாழ்நாளில் ஒருமுறையாவது பாதாள புவ னேஸ்வரரைத் தரிசியுங்கள்...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  

     என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

சர்வேஸ்வரனையும் விட்டு வைக்காத சனீஸ்வரன்.!!

ஆலய வழிபாடு என்பதை தாண்டி நவகிரகங்களை குளிர்விக்கத்தான் மனிதர்கள் போராடிக்கொண்டிருக்கிறார்கள். நவகிரகங்களில் அதிக பக்தி யும் பயமும்  கொண்டு வணங்கப்படுபவர் சனீஸ்வரனாகத்தான் இருக்க முடியும். மற்ற கிரகங்களுக்கு இல்லாத சிறப்பு சனீஸ்வரனுக்கு உண்டு. ஈஸ்வரன் என்னும் பெயரை தாங்கி அழைக்கப்படுவதுதான்அது.

சனி பிடித்தால் சகலமும் போகும் என்று புலம்புகிறோமே. சனி மனிதர்களை மட்டுமல்ல அண்டத்தை ஆளும் சர்வேஸ்வரனையும் விட்டுவைக்க வில்லை. சனீஸ்வரனைக் கண்டால் பூலோகத்தில் மட்டுமல்ல தேவலோகத்திலும், கயிலாயத்திலும், வைகுண்டத்திலும் இருப்பவர்களும் கூட அலறி ஓடுவார்கள்.
ஒரு முறை சனி பகவான் தேவலோகம் சென்றார். சனிபகவான் நம்மை தேடி வருகிறாரோ என்று பயந்து இந்திரசபையில் உள்ளவர்களும், தேவர் களும் ஓடி ஒளிந்துகொண்டார்கள். அதைக் கண்ட சனி பகவான் பயப்பட வேண்டாம் உங்களை ஒன்றும் செய்ய மாட்டேன் என்று சிரித்தப்படி மேலும் நடந்தார். எதிர்பட்ட நாரதரும் சனியைக் கண்டு ஓடலாமா? நிற்கலாமா? என்று அஞ்சியபடி அலைபாய்ந்தார். அவரையும் கண்டு சிரித்தப் படி கடந்துவிட்டார் சனிபகவான்.
வைகுண்டம் சென்றார். அங்கிருப்பவர்களும் அலறியடித்தப்படி ஓட அவர்களையும் ஒரு புன்சிரிப்புடன் கடந்துசென்றார். எல்லோரும் சனி பகவா னைப் பார்த்துகொண்டிருந்ததால் நம்மை பிடிக்கவில்லை என்ற நிம்மதி ஏற்பட்டது. அதே நேரம் இவர் யாரை தேடி ஓடுகிறார் என்றும் சந்தேகம் வந்தது. இறுதியாக கயிலாயத்துக்குள் அடியெடுத்துவைத்தார்.  அனைவருக்கும் ஆச்சர்யம் அப்படி யாரை தேடி வருகிறார் சனிபகவான் என்று.

ஆனால் கயிலை வாழ் பரம்பொருளுக்கு தெரிந்துவிட்டது. சனிபகவான் தம்மை தான் பிடிக்க வருகிறார் என்று. உடனே விஷ்ணு பகவானிடம் ஆலோசித்தார். சனி வரும் போது தாங்கள் இங்கே இல்லாவிட்டால் போதும் அவர் சென்றுவிடுவார் என்று சொன்ன விஷ்ணு, சிவபெருமானை பாறைகள் நிறைந்த குகைப்பகுதிக்கு அழைத்து சென்று குகையின் உள்ளே அமர்த்தி விட்டு குகையை மூடிவிட்டு சென்றார்.
விஷ்ணுவிடம் எதிர்பட்ட சனிபகவான் எம்பெருமானை கண்டீர்களா என்று கேட்டார். இல்லையே நான் அவரை பார்த்து நாட்கள் ஆகிவிட்டனவே என்று நில்லாமல் சென்றார் விஷ்ணு. குகைக்குள் இருந்த சிவபெருமானுக்கு சக்தியில்லாமல் தனித்திருப்பது கவலையாக இருந்தது. என்ன செய் வது என்று அங்கேயே அமர்ந்து தியானத்தில் மூழ்கி விட்டார். வருடங்கள் கடந்தது. தியானத்திலிருந்து விழித்த சிவபெருமான் குகையின் வாசலை திறந்து குகையிலிருந்து வெளியே வந்தார். அவரை வரவேற்க தேவர்களும், நாரத மகரிஷியும், பிரம்மாவும், விஷ்ணுவும் வந்திருந்தார் கள். சற்றுதள்ளி சனிபகவான் புன்னகையோடு நின்று கொண்டிருந்தார்.

சனிபகவானைக் கண்டதும் அதிர்ந்த சிவபெருமான் நீ  இப்போது என்னை பிடிக்க முடியாது. அந்தக் காலம் கடந்துவிட்டது. நான் உன்னிடமிருந்து தப்பித்துவிட்டேன் என்றார் புன்னகையோடு. உடனே சனீஸ்வரன் ஐயனே நான் உங்களைப் பிடித்ததால் தான் யாருமின்றி சக்தியுமின்றி தனித்து தாங்கள் குகைக்குள் இத்தனை வருடங்கள் இருந்தீர்கள். தாங்கள் தானே என் பணியை  தவறாது செய்ய கட்டளை பிறப்பித்தவர். இதனை மீள முடியுமா என்றார்.  

இறைவன் என்றும் பாராமல் என்னையும் பிடித்து ஆட்டுவித்ததால்  என்னுடைய பட்டப்பெயரான ஈஸ்வரனை உனக்கு அருளுகிறேன் என்றார் அன்று முதல் சனீஸ்வரன் என்று  அழைக்கப்படுகிறார்.
அண்ட சராசரங்களையும் காக்கும் முதன்மையானவனையே சக்தியிடமிருந்து பிரித்து  ஆட்டுவித்த சனிபகவான் சாதாரண மனித பிறவியாக நம்மை விட்டுவைப்பாரா என்ன? சனிக்கிழமை தோறும் சனிபகவானை வழிபடுங்கள். வழிபாடு துன்பத்தை குறைத்து தைரியத்தைக் கொடுக்கும்...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  

     என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

ஆசையாக எழுந்தருளிய அத்தி வரதர்.!!

கேட்கும் வரங்களை அள்ளித் தரவல்ல வரதராஜப் பெருமாள், “உமக்கு என்ன வர வேண்டும்?” என்று பிரம்மாவிடம் கேட்டார். “இங்கே எனக்குக் காட்சி தந்தாற்போல, இதே இடத்தில் நீங்கள் எழுந்தருளியிருந்து அனைத்து உயிர்களுக்கும் அருள்புரிய வேண்டும். அனைவரும் வேண்டும் வரங்களைத் தந்தருள வேண்டும்!” என்று பிரார்த்தித்தார் பிரம்மா.


அவ்வாறே வரதராஜப் பெருமாளும், “தேவர்கள், மனிதர்கள், விலங்குகள் என அனைவரின் கண்களுக்கும் புலனாகும்படி நான் இங்கேயே குடிகொண்டிருப்பேன். இது சத்தியம்!” என்று உறுதியளித்தார்.அதன்பின் அத்தி மரத்தால் ஆன ஒரு விக்கிரகத்தில் வரதராஜப் பெருமாளைக் காஞ்சீபுரத்தில் பிரதிஷ்டை செய்தார் பிரம்மா. அத்தி மரத்தால் ஆன விக்கிரகத்தைக் கொண்டமையால், ‘அத்தி வரதர்’ என்று அப்பெருமாள் அழைக்கப்பட்டார்.

இந்திரனின் வாகனமாகிய ஐராவதம் என்னும் யானை, மலையாக மாறி வந்து வரதராஜப் பெருமாளைத் தன் மேல் தாங்கியது. வடமொழியில் ‘ஹஸ்தி’ என்றால் யானை என்று பொருள். ‘கிரி’ என்றால் மலை. யானையே மலையாக இருப்பதால், ‘ஹஸ்திகிரி’ என்றழைக்கப்படுகிறது. ஹஸ்திகிரியையே தமிழில் அத்திகிரி என்று சொல்கிறோம். 24 படிகள் கொண்ட ஹஸ்திகிரி மலைமேல் வரதராஜர் காட்சியளிக்கிறார்.

முனிவர்களை அழைத்து அத்திவரதருக்குப் பூஜை செய்யும் முறையை விளக்கினார் பிரம்மா. அதன்பின் மகிழ்ச்சியுடன், சரஸ்வதி, சாவித்திரி, காயத்திரியை அழைத்துக் கொண்டு சத்திய லோகத்துக்குச் சென்ற பிரம்மா, வரதராஜனின் வடிவைத் தியானித்துக் கொண்டும், அவரது திருவருளை எண்ணிக் கொண்டும் ஆனந்தமாகத் தம் காலத்தைக் கடத்தினார்.

“ஆதியுகத்து அயன் கண்டிட நின்ற அருள்வரதர்
காதல் உயர்ந்த களிற்றைத் திரேதையில் 
காத்தளித்து
வாதுயர் தேவ குருவுக்கு இரங்கித் துவாபரத்தில்
சோதி அனந்தன் கலியில் தொழுதெழ 
நின்றனரே!”

முதல் யுகமான கிருத யுகத்தில் பிரம்மாவால் பூஜிக்கப்பட்ட வரதராஜப் பெருமாள், இரண்டாம் யுகமான திரேதா யுகத்தில் கஜேந்திரனாலும், மூன்றாம் யுகமான துவாபர யுகத்தில் தேவகுருவான பிருகஸ்பதியாலும், நான்காம் யுகமான கலியுகத்தில் ஆதிசேஷனாலும் பூஜிக்கப்பட்டார்.காஞ்சியில் வரதராஜருக்கு வருடந்தோறும் பல உற்சவங்கள் நடைபெற்றாலும், வையம் புகழும் வைகாசித் திருநாள் என்றழைக்கப்படும் கருட சேவை மிகவும் பிரசித்தமானது. வைகாசி விசாகத்தன்று கருட வாகனத்தில் எழுந்தருளும் வரதராஜப் பெருமாளின் எழிலைக் காணக் கண்கோடி வேண்டும்.

“அத்தியூரான் புள்ளை ஊர்வான் அணிமணியின்
துத்திசேர் நாகத்தின் பின்துயில்வான் - முத்தீ
மறையாவான் மாகடல் நஞ்சுண்டான் தனக்கும்
இறையாவான் எங்கள் பிரான்.”
 - என்று வரதனின் கருட சேவை 
வைபவத்தைப் பூதத்தாழ்வார் பாடுகிறார்.

பின்னர், ஒரு சமயம் காஞ்சிபுரத்துக்கு வந்த பிரம்மா, மீண்டும் அத்தி வரதரைக் குறித்து ஒரு யாகத்தைச் செய்தார். அந்த யாகத்தீ அத்தி வரதப் பெருமாளின் மேல் பட்டுப் பெருமாளின் திருமேனி பின்னமானது. அதைக் கண்டு அதிர்ந்து போனார் பிரம்மா. “வரதா! உனது கருணையால் எனது யாகசாலையில் அக்னிக்கு நடுவே தோன்றிக் காட்சியளித்து எனக்கு அருள்புரிந்தாய். ஆனால் இன்று எனது கவனக் குறைவால் எனக்காக நீ குடிகொண்டிருக்கும் இந்தத் திருமேனி பின்னப்பட்டு விட்டதே!” என்று கதறினார்.

அப்போது பிரம்மாவிடம் பேசிய அத்தி வரதர், “பிரம்மனே! இக்கோயிலின் வாசல் பகுதியில் உள்ள நூற்றுக்கால் மண்டபத்துக்கு வடக்கே அனந்தஸரஸ் என்னும் பொய்கை உள்ளது. அந்தப் பொய்கைக்குள் ஒரு நீராழி மண்டபம் உள்ளது. அந்த நீராழி மண்டபத்துக்குத் தெற்கே விமானத்துடன் கூடிய நாலுகால் மண்டபம் ஒன்றுள்ளது. அந்த நாலுகால் மண்டபத்துக்குள் என்னைப் பத்திரப்படுத்தி வைத்துவிடுங்கள்! யாகத்தீயால் ஏற்பட்ட சூட்டைத் தணித்துக்கொள்ள அந்தப் பொய்கைக்குள்ளே நான் இளைப்பாறப் போகிறேன்!” என்று சொன்னார்.

திருமாலின் ஆணையை ஏற்ற பிரம்மா, அத்தி வரதரை ஒரு வெள்ளிப் பேழையில் வைத்து, அனந்த ஸரஸ் பொய்கையிலுள்ள அந்த நாலுகால் மண்டபத்துக்குள்ளே எழுந்தருளப் பண்ணினார். எந்தக் காலத்திலும் அந்தப் பொய்கையிலுள்ள நீர் வற்றாத படியால் பெருமாள் நம் கண்ணுக்குத் தெரிவதில்லை.

காஞ்சிபுரத்துக்கு அருகிலுள்ள பழைய சீவரம் என்னும் ஊரிலிருந்த தேவராஜப் பெருமாள் காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயில் கர்ப்பக் கிரகத்தில் எழுந்தருளப் பண்ணப்பட்டார்.இவ்வாறு அனந்த ஸரஸ்ஸுக்குள் சென்ற அத்தி வரதர், நாற்பது வருடங்களுக்கு ஒருமுறை தான் வெளியே வந்து அடியார்களுக்கு அருட்பாலிப்பதாக பிரம்மாவுக்கு வாக்களித்தார். அதன்படி நாற்பது வருடங்களுக்கு ஒருமுறை எழுந்தருளுகிறார்...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  

     என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

ஆங்கிலேய அதிகாரியைக் காத்த அத்திகிரி வரதர்.!!

ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் முதன்மை அதிகாரிகளுள் குறிப்பிடத்தக்கவராக விளங்கியவர் ராபர்ட் க்ளைவ். தென்னிந்தியாவைப் பொறுத்தவரை தம் ஆதிக்கத்தில் இருந்த பகுதிகளில் எந்த எதிர்ப்பையும் வளரவிடாதபடி செய்தவர். ஒரு முறை அவர் தம் படைகளுடன் காஞ்சிபுரம் தலத்துக்கு வந்தார். திடீரென அவருக்கு உடல்நலம் குன்றியது. 


கடுமையான காய்ச்சலும் உடல் சோர்வும் அவரை அப்படியே வீழ்த்தியது. ஒரு அடிகூட எடுத்து வைக்க முடியாதபடி பெரிய பாதிப்பு ஏற்பட்டது. அவருடன் எப்போதும் வரும் ஆங்கிலேேய மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்தனர். ஏற்கெனவே அவருடைய நோய் அறிகுறிகளை உடனிருந்தே கவனித்து வந்த அவர்கள் இந்த முறை திகைத்துத் தடுமாறினர். பகலிலேயே ஆரம்பித்த உபாதை நள்ளிரவு நேரத்தில் மிகவும் மோசமாகியது. 

க்ளைவின் நோயும், அதைக் கட்டுப்படுத்த மருத்துவர்கள் மேற்கொண்ட முயற்சிகளும் செய்தியாக வெளியே பரவியது. தம்மை அடிமைப்
படுத்தியவர் என்ற உண்மை சுட்டாலும், அதைவிட மனித நேயத்துக்கே முக்கியத்துவம் கொடுத்த சில அன்பர்கள், காஞ்சி வரதராஜப் பெருமாளிடம் முறையிட்டார்கள். 

கோயில் பட்டர்களும் வரதராஜர் சந்நதியிலிருந்து செப்புப் பாத்திரத்தில் துளசி தீர்த்தத்தை ஒரு பாத்திரம் நிறைய எடுத்து வந்தார்கள். அதை க்ளைவிடம் தந்து, வரதராஜப் பெருமாளை வேண்டிக்கொண்டு பருகிடுமாறு கேட்டுக் கொண்டனர். க்ளைவ் தன் மருத்துவர்களைப் பார்த்தார். அவர்கள் தலை குனிந்து தம் தோல்வியை ஒப்புக் கொண்டதோடு, இந்த முயற்சிக்கு மவுனமாக அனுமதியும் தந்தார்கள்.    
 
அதன்படி, பெருமாளின் பிரசாதமாகிய துளசி தீர்த்தத்தை அருந்திய ராபர்ட் க்ளைவ், அன்றிரவு  நன்றாகத் தூங்கினார். விடிந்த பின் காய்ச்சலும், உடல் வலியும் மறைந்து போக, பழைய உற்சாகத்துடன் இயங்க ஆரம்பித்தார் அவர். வரதராஜப் பெருமாளின் மகிமையை உணர்ந்த அவர், தன்னிடமிருந்த மகரகண்டி எனும் விலையுயர்ந்த நகையை பெருமாளுக்கு காணிக்கையாக சாற்றினார். இன்றும் விழாக் காலங்களில் வரதராஜர், க்ளைவ் மகரகண்டியை அணிந்து வீதியுலா வருவது நடக்கிறது. 

மூலவர் வரதராஜன், பேரருளாளன், தேவாதிராஜன், தேவப்பெருமாள், அத்தியூரான்  என்று பக்தர்களால் பலவாறு கொண்டாடப்படுகிறார். தாயார் பெருந்தேவியாக, மகாதேவியாக தனிக்கோயிலில் அருள்கிறாள். தேசிகரின் ஸ்ரீஸ்துதிக்கு மனமிறங்கி ஒரு ஏழை அந்தணரின் திருமணத்திற்காக தங்க மழை பொழியச் செய்தவள் இந்த தேவி.

பிரம்மனின் யாகம் எந்தத் தடையும் காணாமல் நிறைவேற அக்னி ஜ்வாலையாக பெருமாள் காத்து நின்றதால், உற்சவர் திருமுகத்தில் அக்னி வடுக்கள் போன்ற புள்ளிகளைக் காணலாம். யாகமுடிவில் புண்யகோடி விமானத்தில் சங்கு, சக்ர, கதாபாணியாய் திருமால் தோன்றி அவிர்பாகம் ஏற்றருளினார். யாகத்தில் பங்கேற்ற தேவர்கள் உட்பட அனைவருக்கும் கேட்ட வரங்களைத் தந்ததால் வரதர் என பெருமாளுக்கு திருநாமம் இட்டனர். திருமால் இங்கேயே நித்யவாசம் செய்ய தேவேந்திரனின் வாகனமான ஐராவதமே மலை வடிவம் கொண்டு பெருமாளை தாங்கியதால் இத்தலம் அத்திகிரி எனப்பட்டது. 

திருமாலின் 108 திவ்ய தேசங்களில் குங்குமத் திலகம் போன்று விளங்கும் தலம் இது. இங்குள்ள குளத்தில் அத்தி வரதர் வைக்கப்பட்டுள்ளார். 
40 ஆண்டுகளுக்கு ஒருமுறை இவரை வெளியே எடுத்து பக்தர்கள் தரிசனத்துக்கு வைக்கிறார்கள். 

சித்ரா பௌர்ணமியன்று இரவு 12 மணிக்கு மேல் நான்முகன் வரதராஜரை பூஜை செய்ய வருவதாக ஐதீகம். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் பெருந்தேவித்தாயார் ஆலயத்தின் உள்ளே புறப்பாடும், ஒவ்வொரு ஏகாதசியன்றும் வரதராஜப் பெருமாள் ஆலயத்தின் உள்ளே புறப்பாடும், வெள்ளிக்கிழமையும் ஏகாதசியும் சேர்ந்த அன்று இருவரும் சேர்ந்த புறப்பாடும் நடக்கும் தலம் இது. 

ராமானுஜரைக் காக்க வேண்டி, சோழ மன்னனால் பார்வையிழந்த கூரத்தாழ்வான், இந்த பெருமாளை நோக்கி வரதராஜ ஸ்தவம் எனும் துதியைப் பாட, பெருமாள் அவருக்கு பார்வையை மீட்டுத் தந்த ஒப்பற்ற தலம். பெருமாள் இங்கு புண்ய கோடி விமானத்தின் கீழ் வீற்றிருப்பதால் இத்தலத்தில் செய்யப்படும் புண்ணியச் செயல்கள் எல்லாம் கோடிமடங்கு பலன்தரும் என்பது ஐதீகம்.திருமங்கையாழ்வார் 4 பாசுரங்களாலும், பூதத்தாழ்வார் 2 பாசுரங்களாலும், பேயாழ்வார் 1 பாசுரத்தாலும் வரதராஜப்பெருமாளை மங்களாசாஸனம் செய்திருக்கின்றனர்...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  

     என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

அனந்த ஸரசுக்குள் அத்திவரதர் ஏன்?

வரதராஜப் பெருமாளை உருவமாக கண்டு பிரம்மித்த பிரம்மன். அதே உருவத்தை அத்தி மரத்தில் உருவாக்கி பிரதிஷ்டை செய்து பூஜித்ததை எண்ணி மகிழ்ச்சி கொள்ளாத நாளே இல்லை. அந்த மன சந்தோஷத்தின் பால் மீண்டும் சத்திய விரத க்ஷேத்திரம்(காஞ்சிபுரம்) வந்தார் பிரம்மன். அத்தி வரதர் முன் தன் மனநிறைவின் காரணமாக யாகம் ஒன்றை செய்தார்.


கடந்த 1979-ம் ஆண்டு வெளியே வந்த அத்தி வரதர், இப்போது 2019-ம் ஆண்டு ஜூலை மாதம் 1-ம் தேதி அனந்த ஸரஸ்ஸில் இருந்து எழுந்தருள்கிறார். நாற்பத்தெட்டு நாட்கள் அங்குள்ள வசந்த மண்டபத்தில் பக்தர்களுக்கு அருட்பாலிக்கவுள்ளார். நாற்பதாண்டுகளுக்கு ஒருமுறை கிட்டும் பெரும் பேற்றைக் காணும் பாக்கியம் நமக்கு இவ்வருடம் கிட்டியுள்ளது. எனவே ஜூலை 1 முதல் நாற்பத்தெட்டு நாட்கள் காட்சிதரும் அத்தி வரதரைத் தரிசித்து அனைத்து வளங்களும் நலங்களும் பெற்று இன்புறுவோமாக!

அந்த யாகத்தில் உருவான தீச்சுடர், அத்தி வரதப் பெருமாளின் மேல் பட்டுவிட்டது. அதைக் கண்டு அதிர்ந்து போனார் பிரம்மா. “வரதா! உனது கருணையால் எனது யாகசாலையில் அக்னிக்கு நடுவே தோன்றிக் காட்சியளித்து எனக்கு அருள்புரிந்தாய். ஆனால் இன்று எனது கவனக் குறைவால் உன் திருமேனி இப்படி ஆகிவிட்டதே!” என்று வருந்தினார்.

அப்போது பிரம்மாவிடம் அத்தி வரதர், “பிரம்மா! திருமேனியில் (பின்னப்பட்டு) குறைவு கொண்டு விக்கிரஹமாக இவ்விடம் நின்றருள்வது நன்றன்று. மேலும் யாகத்தீயால் ஏற்பட்ட சூட்டைத் தணித்துக் கொள்ள கோயிலின் நூற்றுக்கால் மண்டபத்துக்கு வடக்கே உள்ள அனந்தஸரஸ் என்னும் பொய்கைக்குள் இருக்கும் நீராழி மண்டபத்துக்குத் தெற்கே விமானத்துடன் கூடிய நாலுகால் மண்டபம் ஒன்று உள்ளது. அந்த நாலுகால் மண்டபத்துக்குள் என்னை வைத்துவிடு. அந்தப் பொய்கைக்குள்ளே நான் இளைப்பாறுகிறேன்!” என்று கூறினார்.

‘‘நான் செய்த ரூபத்தை நானே பார்க்க முடியாமல் செய்து விட்டேனே பகவானே!’’  என்று கூறிய பிரம்மனிடம், ‘‘வருத்தம் கொள்ளாதே ஆண்டுகள் அறுபது முடிந்ததும் என்னை எப்படி வைத்தாயோ அப்படியே எடுத்து வசந்த மண்டபத்தில் வைத்து பூஜித்துக்கொள். ஒரு மண்டலத்துக்கு மேல் அவ்விடம் வைக்காதே’’ என்று கூறினார்.

அத்தி வரதரின் ஆணையை ஏற்ற பிரம்மா, அத்தி வரதரை ஒரு வெள்ளிப்பேழையில் வைத்து, அனந்த சரஸ் பொய்கையிலுள்ள அந்த நாலுகால் மண்டபத்துக்குள்ளே எழுந்தருளப் பண்ணினார். அத்தி வரதர் அவ்விடம் வாசம் கொள்வதால் எந்தக் காலத்திலும் அந்தப் பொய்கையிலுள்ள நீர் வற்றியதே இல்லை.

வரதராஜப் பெருமாள் கோயில் இப்போது இருக்குமிடம் முன்னர் அத்திமரங்கள் சூழ்ந்த யானை வடிவான மலையாக இருந்தது. இதனால் அத்தி மரங்கள் சூழ்ந்த மலை(கிரி) என்பதால் இத்தலம் அத்திகிரி என்றழைக்கப்பட்டது. இதன் காரணமாக இவ்விடம் எழுந்தருளிய வரதராஜ பெருமாளுக்கு அத்திகிரி வரதராஜர் என்ற நாமம் உருவானது. அதுவே அத்தி வரதர் என சுருங்கலாயிற்று. 

இவ்வாறு அனந்த சரஸ்ஸுக்குள் சென்ற அத்தி வரதர், நாற்பது வருடங்களுக்கு ஒருமுறை தான் வெளியே வந்து அடியார்களுக்கு அருள்பாலிப்பதாக பிரம்மாவுக்கு வாக்களித்தார். அதன்படி நாற்பது வருடங்களுக்கு ஒருமுறை வெளியே வரும் அத்தி வரதர், 48 நாட்களுக்கு வரதராஜப் பெருமாள் கோவில் வசந்த மண்டபத்திலே எழுந்தருளியிருப்பார். 24 நாட்கள் சயனத்திருக்கோலத்திலும், 24 நாட்கள் நின்ற திருக்கோலத்திலும் காட்சி தருவார். 48 நாட்களுக்குப் பின் மீண்டும் அனந்த சரஸ் பொய்கைக்குள்ளே சென்றுவிடுவார்.

கடந்த 1979-ம் ஆண்டு வெளியே வந்த அத்தி வரதர், இப்போது 2019-ம் ஆண்டு ஜூலை மாதம் 1-ம் தேதி அனந்த ஸரஸ்ஸில் இருந்து எழுந்தருள்கிறார். நாற்பத்தெட்டு நாட்கள் அங்குள்ள வசந்த மண்டபத்தில் பக்தர்களுக்கு அருட்பாலிக்கவுள்ளார். நாற்பதாண்டுகளுக்கு ஒருமுறை கிட்டும் பெரும் பேற்றைக் காணும் பாக்கியம் நமக்கு இவ்வருடம் கிட்டியுள்ளது. எனவே ஜூலை 1 முதல் நாற்பத்தெட்டு நாட்கள் காட்சிதரும் அத்தி வரதரைத் தரிசித்து அனைத்து வளங்களும் நலங்களும் பெற்று இன்புறுவோமாக!

முன்பு அறுபது ஆண்டுக்கு ஒரு முறை வசந்த மண்டபத்தில் காட்சி அளித்த அத்தி வரதர். இருநூறு ஆண்டுகளுக்கு முன்பிலிருந்து நாற்பது ஆண்டுக்கு ஒரு முறை வசந்த மண்டபத்தில் காட்சி தருகிறார் என்றும் சொல்லப்படுகிறது. இதற்கு முன்பு அதாவது 2.7.1979லும் அதற்கு முன்பு 12.7.1939-ஆம் ஆண்டிலும் அதற்கும் முன்பு 13.6.1899-லிலும், 18.8.1859-லிலும் அத்தி வரதரை நீரிலிருந்து வெளியே எழுந்தருளச் செய்து, பொதுமக்களின் தரிசனத்திற்காக 48 நாட்கள் விசேஷ பூஜைகளுக்குப் பிறகு மீண்டும் தண்ணீருக்குள்ளேயே திரும்ப எழுந்தருளச் செய்யப்பட்டார்.

தற்போது ஜூலை 1, 2019ல் காட்சி கொடுக்க உள்ளார். 48 நாட்களுக்கு வரதராஜப் பெருமாள் கோவில் வசந்த மண்டபத்திலே எழுந்தருளியிருப்பார். 24 நாட்கள் சயனத்திருக்கோலத்திலும், 24 நாட்கள் நின்ற திருக்கோலத்திலும் காட்சி தருவார்...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  

     என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡