Tuesday, 7 July 2020
மஹா பெரியவா அருள்வாக்கு.!!
வாழ்வை வளமாக்கும் ஸ்ரீனிவாச காயத்ரி மந்திரம்.!!
Monday, 6 July 2020
சனிபகவானை கவர்வது எப்படி?
தீய சக்திகளிடமிருந்து காக்கும் கலச கயிறு.!!
பகவான் இரும்பு இதயம் கொண்டவனா?
ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கலியுகத்தை பற்றி கணிப்பு.!!
Sunday, 5 July 2020
பஞ்ச சம்ஸ்காரம்.!!
*அது என்ன?.., ஆலங்காட்டு ரகசியம்…..?*
*சிதம்பர ரகசியம் னு ஒன்னு இருப்பது எல்லோருக்குத் தெரியும்.*
*அதுபோல ஆலங்காட்டு ரகசியம்னு ஒன்னும் இருக்கு.*
*நடராஜர் பஞ்ச சபைகளில் நாட்டியமாடியவர்.*
*நடராஜர் நாட்டியமாடிய முதல் தலம் திருவாலங்காடு ஆகும்.*
*இங்கு சிவபெருமான் வடாரண்யேஸ்வரராககோயில் கொண்டருளுகிறார்.*
*இதை, ரத்தின சபைஎன்று போற்றப்படுகிறது.*
*சிதம்பரம் திருத்தலத்தில் நடராஜர் ஆகாய வெளியாக இருப்பதை, சிதம்பர ரகசியம் என்பார்கள்.*
*அதுபோல, ஆலங்காடு எனப்படும் இந்த திருவாலங்காட்டிலும் ஒரு ரகசியம் புதைந்து உள்ளது. நிறையவர்க்குத் தெரியுமோ?, தெரியாதோ!, தெரியாது.*
*சிவபெருமானைத் தரிசிக்க, காரைக்கால் அம்மையார் கயிலாயத்திற்கு தலைகீழாக நடந்து சென்று கொண்டிருந்தார்.*
*இப்படி வருவதைக் கண்ட பார்வதி, சிவபெருமானிடம், இவர் யார்? கேட்டாள்.*
*அதற்கு பதிலளித்த சிவபெருமான், இவர்கள் என் அம்மை என்றார்.*
*வெகு அருகே வந்துவிட்ட காரைக்காலம்மையாரை, என்ன வரம் வேண்டும்?என சிவபெருமான் கேட்டபோது…..*
*அதற்கு காரைக்காலம்மை, எப்போதும் உன் நாட்டிய தரிசனம் காணும் பாக்கியம் எனக்கு வேண்டும் என்றார்.*
*அம்மை கேட்ட வரத்தை, அப்படியே ஆகட்டும் என்று அருளினார் சிவபெருமான்.*
*அந்தசமயத்தில், திருவாலங்காடு பகுதியை ஆட்சி செய்து கொண்டிருந்த மன்னனின் கனவில் அன்றே தோன்றினார் சிவபெருமான்.*
*காரைக்கால் அம்மையார் இங்குள்ள எம் கோயிலில் தங்கப் போகிறார், எனவே எனக்கு பின்புறத்தில், அவருக்காக ஒரு சன்னிதியை நீ எழுப்பும்படி கூறிவிட்டு மறைந்தருளினார்.*
*அதன்படியே அம்மன்னனும், நடராஜருக்கு பின்புறம் உள்ள இடத்தில், சன்னிதியில் பாதியை மறைத்து, சுவர் எழுப்பி கட்டிவித்தான்.*
*சிவபெருமான் அருள் கிடைத்த காரைக்காலம்மையாரும், அதனுள் ஐக்கியமானார்.*
*இன்றுவரை இந்த நிமிட அளவிலும், இங்கு சிவனின் ஆனந்த தாண்டவத்தை காரைக்கால் அம்மையார் தரிசித்துக்* *கொண்டிருப்பதாக ஐதீகம்.*
*இதுவே, ஆலங்காட்டு ரகசியம்*.
*இந்த திருத்தலம் சிவன் கோயிலாக இருந்தாலும், இங்கு பெருமாள் கோவில்களைப் போல பக்தர்களுக்குத் தீர்த்தத்தையே இங்கு வழங்குகின்றனர்.*
*ஆச்சரிய அம்பிகை:*
*நடராஜரின் அருகிலுள்ள சிவகாமியை ஆச்சரிய அம்பிகை என்கின்றனர்.*
*சிவனுக்கு ஈடு கொடுத்து, காளி நடனம் ஆடியதைக் கண்ட அம்பிகை ஆச்சரியப்பட்டாள்.*
*இதனால் அவளுக்கு சமிசீனாம்பிகை என்று பெயர் ஏற்ப்பட்டது.*
*இதற்கு ஆச்சரியம் அடைந்தவள் என்று பொருள்.*
*இடது கை நடுவிரலை மடக்கி, கன்னத்தில் கை வைக்கப் போகும் விதத்தில் முகத்தில் வியப்பை வெளிப்படுத்தும் இந்த சிலையின் அமைப்பை பார்த்துக் கொண்டே இருக்கலாம்.*
*நடராஜர் ஆடிய போது, அவரது உக்கிரம் தாங்காத தேவர்கள் மயக்கத்திற்கு ஆளாயினர்.*
*சுவாமி அவர்களைத் தன் தலையிலிருந்த கங்கை நீரைத் தெளித்து எழுப்பினார்.*
*இதனடிப்படையில் இங்கு பக்தர்களுக்கு தீர்த்தம் வழங்கப்படுகிறது.*
*நடுவர்களாக இருவர்:*
*சுனந்தரிஷி என்பவர் சிவநடனம் காண விரும்பி தவமிருந்தார்.*
*இவரைச் சுற்றி புற்று வளர்ந்து நாணல் புல் வளர்ந்து மூடியது.*
*இதனால் இவருக்கு முஞ்சிகேசர் (முஞ்சி நாணல்)என பெயர் வந்தது.*
*அதே சமயம், கார்கோடகன் என்ற நாகமும், செய்த தவற்றுக்கு மன்னிப்பு வேண்டி இங்கு தவமிருந்தது.*
*இருவருக்கும் அருளிய சிவன், நடன போட்டிக்கு அவர்களை நடுவராக இருக்கச் செய்தார்.*
*சிவநடனத்தைக் காணும் பேறு இருவருக்கும் கிடைத்தது.*
*நாட்டிய காளி:*
*நடராஜருடன் போட்டியிட்ட காளிதேவிக்கு தனிக்கோயில்இங்கு உள்ளது.*
*இவள் காலை தூக்க முயன்ற நிலையில் நாட்டிய காளியாக சாந்தமாக வீற்றிருக்கிறாள்.*
*இக்கலிகால வாழ்வு, மிக அபரீத ஆசைகளை உள்ளடக்கிக் கொண்டவை.*
*இதில் வாழ்ந்து வரும்போது, நிறைய வினைப் பெருக்கங்களை பெருக்கி அதன் இயல்பாகவே வாழ்கிறோம்.*
*வாழ்வில் எது கிடைத்தாலும், சேமித்து வைத்தாலும், அது நமக்காக அது சொந்தமாகாது.*
*இறுதியில், நம் இறப்புக்கு அப்புறம், அது நம் உறவுகளுக்கோ, அடுத்தவர்க்கோ போய் விடும், அவர்களுக்கும் இதே நிலைதான்.*
*என்றும் இறுதி வரையும் ஒன்று மட்டுமே நம்மோடு இருக்கும், அது தானம் தர்மம் புண்ணியம் மட்டுமே.*
*You tube* https://www.youtube.com/channel/UCnI2Ct1g46VzdvmRx5cpmzQ
*Spiritual Web Site :* https://sirumalanchisudalaiandavar.blogspot.com/?m=1
*Facebook page :* https://www.facebook.com/SirumalanchiOthapanaiSudalaiAndavar/
*Facebook group :* https://www.facebook.com/groups/196034940747765/
*Temple web site :* http://www.sirumalanchisudalaiandavar.com
*இதைச் செய்யாது விட்டோர், பின் விளைவு கண்டு வருந்துவர்.*
*இருப்பினும்,*
*பிறவாமையைப் பெற்றுக் கொள்வதுதான், கடைசி வழி.*
*நம் செயலும், சிந்தனையும் நல்லதாக இருக்க வேண்டுமென்றால், நாம் சிவநெறிக்குள்ளாக பயணிக்க வேண்டும்.*
*பிறந்தோம், வாழ்கிறோம் என இருந்திடல் கூடாது.*
*இனி இறப்பென்று ஒன்று நமக்கு வருமே?*
*நமக்கு, பிறவா நிலையொன்று ஒன்று வேண்டுமே!, அது முக்கியமல்லவா?*
*இந்த எண்ணம் ஒவ்வொரு ஆன்மாவுக்கும் உயிருக்கும் வர வேண்டும்.*
*இப்பிறப்பில், கர்ம வினைப் பயன்கள் இனி தொடராதிருந்து, பிறவிப்பயனை முடித்து, மீண்டும் பிறவாமையை பெற வேண்டுமே?*
*அதனால்தான்,*
*பிறப்பை வெறுத்து, பிறவாமைக்கு முற்பட வேண்டுவது.*
*சிவன் இல்லையேல் இப் புவனம் இல்லை*
*சிவன் இல்லையேல் சலனம் இல்லை!*
*சிவன் இல்லையேல் பயணம் இல்லை!*
*சிவன் இல்லையேல் எதுவும் இல்லை!*
*சிவன் இல்லையேல் சக்தி இல்லை!*
*அந்தச் சிவன் இல்லையேல் எந்த ஜீவன் இல்லை!*
*சிவனின்றி ஓர் அணுவும் அசைவதில்லை!*
*என்றும் எதற்கும், எல்லையே இல்லாதவை சிவனே!!*
*ஓம் நமசிவாய*
*அவனருளால் அவன்தாள் வணங்குவோம்!*
*பகிர்தல் ஒரு மிகச் சிறந்த பண்பாடு மட்டுமல்ல வாழ்க்கையில் உயர்வான இடத்தை அடைய முக்கியமானதொரு ஆயுதமும் அதுதான்*
🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔
🎪 *ஓம் நமசிவாய* 🎪
🌴🛕🌴🛕🌴🪔🌴🛕🌴🛕🌴
_ என்றும் இறைப்பணியில்_
*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
*ஆன்மீக குழு*
*வாட்சப் ல் இணைய*
📲 +919486053609
🕉️ _ஒழுக்கம்! கட்டுப்பாடு!_ 🕉️
🙆🏻♂️ *இறைத்தொண்டு!* 🙆🏻♂️
🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴
கடுமையான கடன் நெருக்கடிகள் தீர.!!
முற்பிறப்பு கர்மாக்கள் அல்லது கவனக்குறைவு அல்லது ஏழரைச்சனி/அஷ்டமச்சனி அல்லது அளவற்ற கருணையால் தவறான ஆட்களுக்கு ஜாமீன் ஏற்றல்,குடும்பப் பொறுப்பை தன் மீது சுமத்திக் கொள்ளுதல் போன்றவற்றாலும்,
வேறு பல சொல்லமுடியாத காரணங்களாலும் தனி மனிதர்கள் கடன் என்ற மோகினியிடம் சிக்கிக் கொள்கின்றனர்;
பலவிதமான பரிகாரங்கள்,வழிபாடுகள் செய்தாலும் கடன் குறைவதற்கான வழிகளே தெரியவில்லை; என்றும் தெரிவிக்கின்றனர்;
ருணவிமோசன வழிபாடுகள் செய்தும் தீரவில்லை எனில் கடுமையான கர்மவினையால் இந்தக் கடன்கள் நமக்கு உருவாகியிருக்கிறது என்றே எடுத்துக் கொள்ள வேண்டும்.
இந்த பைரவ பரிகாரத்தைச் செய்ய விரும்புவோர் முதலில் அசைவம் சாப்பிடுவதையும்,மது அருந்துவதையும் நிரந்தரமாகக் கைவிடவேண்டும்;
ஏனெனில்,தினமும் மது அருந்துபவர்களின் ஜாதகம் இயங்காது;அடிக்கடி அசைவம் சாப்பிடுபவர்களின் இறைவழிபாடு அவர்களுக்கே பலன்கள் தருவதில்லை;
யாருக்கு கடன் இருக்கிறதோ அவர்கள் தமது பழைய பனியன்/வேட்டியை எடுத்துக் கொள்ள வேண்டும்;(கணவனின் கடன் தீர மனைவி இந்த வழிபாட்டைச் செய்யலாம்;
அப்பா சார்பாக மகளோ,சகோதரன் சார்பாக சகோதரியோ இதைச் செய்யக் கூடாது.
நண்பனுக்காக பெண் தோழியோ இதைச் செய்யக் கூடாது;தனித்து வாழும் ஆண்கள் தாமாகவே செய்ய வேண்டும்)
.நீண்டகாலமாக பயன்படுத்திய பனியன்/வேட்டியை சுத்தமாக்கிக்கொள்ள வேண்டும்;(துவைத்து காய வைத்தப்பின்னர் இதைச் செயல்படுத்தவும்) பத்து செண்டிமீட்டர் நீளமும் பத்து செண்டிமீட்டர் அகலமும் உடைய 16 சம சதுரத் துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ள வேண்டும்;
கூடவே,கறுப்பு நூல்கண்டு ஒன்றும் கொஞ்சம் மிளகும் வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும்;(சமையலறையில் இருக்கும் மிளகைப் பயன்படுத்தக்கூடாது; தனியாக கடையில் வாங்கிக் கொள்வது அவசியம்)
ஒரு சனிக்கிழமை மாலை 5 மணிக்கு மேல் 8 மணிக்குள் இந்த 16 சம சதுரத் துண்டுகளில் இரண்டை மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும்;
அதில் ஒவ்வொன்றிலும் 27 மிளகுகளை வைத்து கறுப்பு நூலால் கட்டிக் கொள்ள வேண்டும்;ஒரு தேங்காய் வாங்கி,அதை உடைத்துவிட்டு,உள்பகுதியில் ஈரமில்லாமல் துடைத்து வைத்துக் கொண்டு தேங்காயின் உள்பகுதியில் இந்த 27மிளகுகளைக் கொண்ட கறுப்புநூலால் கட்டப்பட்ட சிறுபொட்டலத்தை வைக்க வேண்டும்;
ஒவ்வொன்றையும் ஒவ்வொரு தேங்காய் மூடியினுள்(உள்ளே தேங்காய் இருக்கவேண்டும்) வைத்து,அந்த தேங்காயில் சுத்தமான நல்லெண்ணெயை ஊற்ற வேண்டும்.
பைரவப் பெருமானின் சன்னிதியில்,இந்த தேங்காய்த் துண்டுகளை பைரவப்பெருமானின் முன்பாக வைக்க வேண்டும்;(சில கோவில்களில் பைரவரின் முன்பாக வைக்க அனுமதிப்பதில்லை;
அவர் இருக்கும் பகுதியில் எந்த இடத்தில் வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம்)வைக்கும்போது அங்கே இருக்கும் காலியான அகல்விளக்கின்(இல்லாவிட்டால் கடையில் வாங்கி வரவும்) மீது தேங்காயின் கூர்மையான கீழ்ப்பகுதி இருப்பது போல நிலைநிறுத்திவைக்க வேண்டும்;
பைரவப் பெருமானிடம் மனப்பூர்வமாக தனது கடன்கள் விரைவாக தீர வேண்டும் என்று வேண்டிக் கொண்டு இந்த இரண்டு தேங்காய்களிலும் இருக்கும் மிளகுப்பொட்டலத்தின் மீதும் தீபமேற்ற வேண்டும்.
இது போல தொடர்ந்து எட்டு சனிக்கிழமைகளுக்கு செய்ய வேண்டும்.தீட்டு,வேலைப்பளு போன்ற காரணங்களால் தொடர்ந்து எட்டு சனிக்கிழமைகள் செய்ய முடியாத நிலை வந்தாலும்,விட்டுவிட்டாவது எட்டே எட்டு சனிக்கிழமைகள் மட்டும் இம்மாதிரியான வழிபாடு செய்ய வேண்டும்.
எட்டாவது சனிக்கிழமை நிறைவடைந்தது முதல் 90 நாட்களுக்குள் எவ்வளவு பெரிய கடன் தொகையாக இருந்தாலும் அவை தீர எதிர்பாராத உதவியை பைரவப் பெருமான் அருளுவார்;
கடந்த 25 ஆண்டுகளாக இந்த சுயபரிகாரமுறையைப் பின்பற்றி ஏராளமானவர்கள் தமது கடன்களில் இருந்து மீண்டிருக்கின்றனர்.
தனித்து வாழ்ந்து வரும் பெண்கள் தமது சக்திக்கு மீறிய கடன்களில் சிக்கியிருந்தால் கடையில் கிடைக்கும் கைத்தறி காடாத் துணியை வாங்கி அதில் மேலே கூறியது போல 27 மிளகு வைத்து வழிபாடு செய்ய கடன்கள் தீரும்.
ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ
🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔
🎪 *ஓம் நமசிவாய* 🎪
🌴🛕🌴🛕🌴🪔🌴🛕🌴🛕🌴
_ என்றும் இறைப்பணியில்_
*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
*ஆன்மீக குழு*
*வாட்சப் ல் இணைய*
📲 +919486053609
🕉️ _ஒழுக்கம்! கட்டுப்பாடு!_ 🕉️
🙆🏻♂️ *இறைத்தொண்டு!* 🙆🏻♂️
🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴
உப நயனம் . தாரா பலன் பார்க்க.!!
இவைகளை உங்கள் கணினியில் சேமித்து வையுங்கள். பிற்கால சந்ததியினருக்கு தேவை படும்.
தாரா பலன் பார்க்க:-
உங்கள் பிறந்த நக்ஷத்திரத்திற்கு மிகவும் உத்தமமாக உள்ள தாரா பலன் நக்ஷத்திரம்.
(1) அசுவினி, மகம், மூலத்திற்கு ,
தாரா பலன் உள்ள நக்ஷத்திரம்:-
ரோஹிணி,ஹஸ்தம், திருவோணம்.
பூசம்,அனுஷம்,உத்திரட்டாதி
ஸ்வாதி, சதயம் ரேவதி.
(2) பரணி, பூரம், பூராடத்திற்கு
தாரா பலன் உள்ள நக்ஷத்திரம்.
உத்திரம், உத்திராடம்,ரேவதி
மிருகசீர்ஷம், சித்திரை,அவிட்டம்.
அசுவதி,மகம்,மூலம்,புனர்பூசம்.
(3 )கிருத்திகை,உத்திரம், உத்திராடதிற்கு:-ரோஹிணி,ஹஸ்தம்,திருவோணம்,ஸ்வாதி,சதயம்,பூசம்,அனுஷம்,அசுவதி,மகம்,மூலம்,உத்திரட்டாதி.
(4)ரோஹிணி,ஹஸ்தம்,திருவோணத்திற்கு:-மிருகசீர்ஷம், சித்திரை,அவிட்டம்,புனர்பூசம்,ரேவதி,உத்திரம்,உத்திராடம்.
(5)மிருகசீஷம், சித்திரை, அவிட்டத்திற்கு:-சுவாதி,சதயம்,உத்திரம்,உத்திராடம்பூசம்,அனுஷம்,உத்திரட்டாதி,அசுவதி,மகம்,மூலம்,ரோஹிணி.ஹஸ்தம்,திருவோணம்.
(6) திருவாதிரை,சுவாதி,சதயத்திற்கு:-புனர்பூசம்,ரேவதி,ரோஹிணி,ஹஸ்தம்,திருவோணம்,மிருகசீர்ஷம்,சித்ரை,அவிட்டம்
.(7) புனர்வசு,விசாகம்,பூரட்டாதிக்கு:-பூசம்,அனுஷம்,உத்திரட்டாதி,அசுவதி,மகம்,மூலம்,உத்திரம்,மிருகசீர்ஷம், சித்ரை,அவிட்டம்,சுவாதி,சதயம்,உத்திராடம்.
(8) பூசம்,அனுஷம்,உத்திரட்டாதிக்கு:-
சுவாதி,சதயம்,ரேவதி,புனர்பூசம்,
ரோஹிணி,ஹஸ்தம்,திருவோணம்
(9) ஆயில்யம்,கேட்டை,ரேவதிக்கு:-
அசுவதி,மகம்,மூலம்,
மிருகசீர்ஷம்,சித்திரை,அவிட்டம்,
பூசம்,அனுஷம்,உத்திரட்டாதி.
புனர்வசு,உத்திரம்,உத்திராடம்.
விவாஹ சுப முஹூர்தத்திற்கு ஏற்றவை
இல்லாத பரணி,க்ருத்திகை, திருவாதிரை,
ஆயில்யம்,பூரம்,விசாகம்,கேட்டை,
பூராடம்,பூரட்டாதி இதில் சேர்க்க
பட வில்லை.
உதாரணமாக விவாஹத்திற்கு சுப முஹுர்த்த நாள் பார்க்க வேன்டுமென்றால் பெண் நக்ஷத்திரம் தெரிந்து கொண்டு அதன் படி
பெண் நக்ஷத்திரம் அனுஷம் என்றால் நக்ஷத்திர வரிசையில் ( 1) க்குள் இருப்பது பெண் நக்ஷத்திரம். இதில் (8) க்குள் இருக்கும் அனுஷம் பெண் நக்ஷத்திரத்திற்கு அடியில் உள்ள ரோஹிணி, ஹஸ்தம், திருவோணம்,
ஸ்வாதி, சதயம், ரேவதி , புனர்வசு ஆகியவைகளில் ஏதாவது ஒரு நக்ஷத்திரம் உள்ள தினங்களாக பார்த்து நாள் குறிக்க வேண்டும்.
நல்ல தாரா பலன் உள்ள நக்ஷத்திரம் மட்டும் இருக்கிறது...
🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔
🎪 *ஓம் நமசிவாய* 🎪
🌴🛕🌴🛕🌴🪔🌴🛕🌴🛕🌴
_ என்றும் இறைப்பணியில்_
*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
*ஆன்மீக குழு*
*வாட்சப் ல் இணைய*
📲 +919486053609
🕉️ _ஒழுக்கம்! கட்டுப்பாடு!_ 🕉️
🙆🏻♂️ *இறைத்தொண்டு!* 🙆🏻♂️
🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴