Tuesday, 2 June 2020

வள்ளல் வடிவேலன்.!!

அடர்ந்த கானகமதில் 

அச்சத்தின் இருள்சூழ

அலையும் எண்ணம் கொடிய 
மிருகம் -ஆசை
அழகு பெண்ணுரு பேய்!
அமைதி பாதை தேடும்
அன்பு மனம் நாடும்
ஆனந்த திருவடி கண்டேன்
மயில் முதுகில் ஏறிவந்து
மலரொளி முகமருள் விசாகன்!

முருகனென் சிந்தை கொண்டான்
உருகு தமிழ் சந்தம் தந்தான்
பருகும் அமுது தமிழ் பருகிட
பெருகும் ஞானச்சுடர் வேல்தந்தான்
கருத்தில் நின்றோதும் குமாரகுரு
உருமாறி முதுமை தேறி
பருவகால மாலை கொண்டான்!
பருத்த வீரத்தோள் தழுவ
பெருத்த தனமுடைய வள்ளிக்
குறத்தி விரும்பி வந்தாள்!

சிறப்புபேர் ஊர் கொண்டான்
சிங்கார கொடி கொண்டான்
சிற்றிதழில் முத்தமிழ் கொண்டான்
சிலையென மனை கொண்டான்
கலையென துணை கொண்டான்
பாயும் வேலும் ஆறும் 
பாதமதில் பாம்பும் கொண்டான்
போர்ப்படை வீரநடையால்
பகை வளர்த்து மோதிய
பத்மாசூரனை வாகை கொண்டான்!

சின்னஞ்சிறு பாலன் வேலன்
சிவனுக்கு போதித்த குருநாதன்
செந்தூர் கடலோரம் நின்றருள்
செய்யும் கந்தா குகனே
செந்தமிழ் தலைவா இறைவா
சித்தர் மனமாளும் சிவபாலா
செய்யாள் மருகா அருகா
செய்யோன் உருவே திருவே
செவ்வாய் பதியே மதியே
சற்குணசீலா முருகா பணிந்தோம்!

வளம் தரும் வாழ்வு
வள்ளல் வடிவேலன் அருள
ஆறெழுத்து மந்திரத்தால்
ஆறுமுகனை தினம் பாடு!
அருணகிரி நோய் தீர்த்து
நால்வகை கவி தந்தான்!
அல்லல்படும் துயர் தீர
அற்புதமூலிகை முருகன்
அடுத்தபிறவி அடைத்து
எடுத்தபிறவிப் பயன் தருவான்...

🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔

           🎪 *ஓம் நமசிவாய* 🎪

🌴🛕🌴🛕🌴🪔🌴🛕🌴🛕🌴
  

_     என்றும் இறைப்பணியில்_

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*

             📲 +919486053609

     🕉️ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ 🕉️
       
       🙆🏻‍♂️ *இறைத்தொண்டு!* 🙆🏻‍♂️

🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴

காலமெல்லாம் காத்தருளும் கந்தன்குடி முருகன்.!!

தெய்வானை தவம் செய்யலாம் என நெஞ்சுக்குள் உறுதிபூண்டு பூலோகம் தவழ்ந்திறங்கினாள்.  தேன்காடு எனும் மதுவனத்தில் நுழைந்தாள். இந்திரன்  மகளாயினும் எளியவளாக மாறினாள். பன்னீர் விருட்சத்தின் கீழ் அமர்ந்தாள். தியானத்திற்குரியவரை மனதில் நிறுத்தினாள். உள்ளம் குழைந்தது.  முகத்தில் ஒளி கூடியது. வெகு விரைவில் தவம் கனியும் என்பதாக பன்னீர் மரம் சிலிர்த்தது. இலைகள் முல்லை அரும்பு மழையாக  பொலபொலவென கொட்டியது. தெய்வானை தேவி அழகாக ஓளிர்ந்தாள்.  வெகு ஆழமாக தனக்குள் பயணித்தாள். வேறொருபுறம் இரண்டு அரக்கர்கள்  மதுவனத்தின் வெகுதொலைவே தவமியற்றலாம் என எண்ணி அமர்ந்தனர். அக்னி குண்டங்களின் மத்தியில் அமர்ந்தனர். புறத்திலும், அகத்திலும்  தவத்தீ கொழுந்து விட்டெறிந்தது. 

அது தேவர்களை விட அசுரர்கள் கடுந்தவம் இயற்றிய யுகாந்திர காலம். காலம், தேசமெல்லாம் மறந்து சதாகாலமும் ஈசனையும், பிரம்மனையும்  நினைத்து பேய்த்தவம் இயற்றினர். தீ சுடினும் தவம் கலையாது கயிலைநாதன் வரும்வரை காத்திருந்தனர். எதையும் அதீதமாகச் செய்வதில்  வல்லவர்கள் அசுரர்கள். தனக்குள் ஆழ்ந்து சென்றனர். ஆனால், கொடுத்த வரத்தை ரத்தினமாக பாதுகாக்காது மகாபாதகச் செயலாக அடாது செய்து  அழிவைத் தேடிக் கொண்டனர். அங்கிங்கெனாதபடி நீக்கமற நிறைந்திருக்கும் ஆதிசக்தி தமது லீலைகளை தேவ, அசுரர்களை முன்னிறுத்தி  நிகழ்த்தினள். பூலோகம் உள்ளவரையில் லீலை நிகழ்ந்த பூமி புண்ணியத் தலமாக பொலிந்தது. மானிட உயிர்கள் மட்டுமல்லாது, மகரிஷிகளும்  தலத்தின் மகாத்மியம் உணர்ந்து சிவசக்தியரின் நிழலொற்றி நடந்தனர். ஓடிச் சென்று சேவித்தனர். பக்தர்களின் மனதில் பதியவைக்க தலத்தின்  மகிமையை பாக்களாக்கி மகிழ்ந்தனர். அந்த ஞான பரம்பரையும், தலத்தின் மகாத்மியமும், சிவசக்தியரின் அளவிலா விளையாட்டுகளும் ஒன்றுக்குள்  ஒன்று பிணைந்த நேரம் ஒன்று நெருங்கி வந்தது. அதில் குமரக் குகனும் அமரும் தலம் ஒன்று உருவாகியது. அதை பார்வதி தேவி காளியாக  மாறும்முன்பு திடமாக தமக்குள் உணர்ந்திருந்தாள்.

குழந்தை குமரன் குமரப் பருவத்தை எட்டியிருந்தான். ஞானத்தோடு கலந்த விவேக வீரத்தையும் சிவசக்தியர் குழைத்து ஊட்டியிருந்தனர். சிவத்தையே  தமது அகத்தில் வைத்து அம்பரன், அம்பன் எனும் அரக்கர்கள் தியானிப்பதாக கேள்வியுற்றான், கந்தன். தந்தையும் அகமகிழ்ந்து கேட்ட வரங்களை  ஒன்று விடாது அளித்ததை அறிந்து மகிழ்ச்சியுற்றான். ஆனால், அடுத்தடுத்து நிகழ்ந்தவை கந்தனை கோப சிகரத்தில் ஏற்றியது. அசுரர்கள் தேவ குலப்  பெண்களின் கற்பை சிதைத்தனர். காமக் கொடூரர்களாக விளங்கி தேவலோகத்தையே நரகலோகமாக்கினர். இந்திரன் இடிந்து அமர்ந்தான். தேவக்கூட்டம்  விழித்துக் கொண்டு கதறியது. கயிலைக் கதவருகே தடுமாறி விழுந்தனர். ஈசனிடம் கண்ணீர் பெருக்கி அம்பரன், அம்பன் எனும்  சகோதரர்கள் செய்யும்  அட்டகாசங்களை சொன்னது. உடனிருந்த கந்தன் முதலில் எழுந்தான். 

தந்தையளித்த வரங்கள் இப்படி அதர்மம் செய்வதற்கா என வாள் உருவிக் கர்ஜித்தான். பார்வதிதேவி கந்தனை சமனப் படுத்தினாள். ஈசனிருக்க ஏன்  கவலைப்படுகிறாய் குமரா. காலம் பார்த்து கயிலைப்பெருமான் செய்வதைப் பார் என்றாள். தேவர்கள் நிம்மதிப் பெருமூச்சோடு கயிலையின் வாயிலை  விட்டு வெளியேறினர். வானம் முழுதும் கருநீல வண்ணமொன்று ஊறி ஊடுருவி நிற்பதை வெகு தொலைவே நடந்து கொண்டிருந்த தேவர்கள்  கண்டனர். அம்பர சகோதரர்கள் நித்திரையின்போது மஞ்சத்திலிருந்து தவறி விழுந்தனர். அசுர சேவகர்கள் ஏதோ விபரீதம் நிகழப்போகிறது என்று  அவர்களை விட்டு விலகினர். தனிமையாக அசுரர்களை மரணபயம் மெல்ல கவ்வியது. கயிலையில் பார்வதிதேவி தேவர்கள் அகன்றபின்னும்  குமரனை ஆதூரத்தோடு பார்த்தாள். இவனுக்கு எப்போது மணம் செய்விப்பது என மெல்லிய கவலை கொண்டாள். இவனை மணப்பவள்  எங்கிருக்கிறாளோ என ஆவலாக ஈசனைப் பார்க்க மகாதேவன் அந்த திசையை சுட்டிக் காண்பித்தார். 

பார்வதி அந்த அடர்ந்த காட்டின் அழகை கண்டு திகைத்தாள். இவளா என் மருமகள் என மகிழ்ந்தாள். கண் திறந்தாள். சிவன் இப்போது பார்வதியை  நோக்க பார்வதி அசுரர்களை அழிக்க நடக்கத் தொடங்கினாள். கந்தனும் பூவுலகம் வரை தாயுடன் வந்தான். சற்று பின்நோக்கி பார்த்த பார்வதி அன்னை  ‘‘இது என்னால் நிகழ்த்தப்பட வேண்டிய வதம். உனக்கானது அடுத்துள்ளது. அதோ அந்த மதுவனத்தருகே குடி கொண்டிரு. அங்கு சென்றால் தாய்  சொன்னதின் காரணத்தை அறிவாய்’’ என்றாள். தாய் சொன்ன கணத்தில் தன்னை யாரோ அழைப்பது போன்று உணர்ந்தான், கந்தன். ஒருமித்த  சக்தியொன்று அன்பு அலைகளாக தன்னைசுற்றியிருப்பதை உணர்ந்தான். அலைகளின் மேல் செல்லும் ஓடம்போல அன்பின் சக்தியை அகத்தில்  உணர்ந்தவன் அந்த திசை நோக்கி நகர்ந்தான். அந்த காட்டின் விஸ்தாரம் பார்த்து திகைத்தான். தேனடைகளிலிருந்து தேன் தாரையாக வழிந்து  கொண்டிருந்ததை ஆச்சரியமாகப் கண்டான். 

தேனும், தினைமாவும் உண்பவன் இன்னும் களிப்புற்றான். தெய்வானை தியான பூர்த்தியின் எல்லையில் நின்றாள். தோளில் அமர்ந்திருந்த கிளி ஒன்று  காதருகே கூவியது. கிளியின் ஓசை கேட்ட குமரன் ஏதோ வீணையின் நாதத்தில் லயித்தவன்போல ஓசை வந்த திசைநோக்கி நகர்ந்தான். மாவும்,  பலாவும் நெடிதுயர்ந்திருந்தன. வேரில் பலா வெடித்து கானகம் முழுதும் வாசம் பரப்பியது. வாழைகுலை மஞ்சள்பூசி நாணி தலைசாய்ந்திருந்தன. காடுகளூடேபோய் கானகத்தில் மையத்தை நெருங்க  வானத்து நிலவின் வட்டம்போல பன்னீர் மரமொன்று இது பச்சை நிலவோ என எண்ணும்படியாக  பிரமாண்டமாக நிழல் பரப்பியிருந்தது. தெய்வானையின் தவத் திரட்சி கந்தனை தன்வயமிழக்க வைத்தது. உள்ளத்தில் அன்பு மடிகனத்த பசு  பாலைப்பொழிவதுபோன்று சுரந்தது. காற்றில் மிதக்கும் இலக்கற்ற சிறகுபோல நடந்து தெய்வானை முன்பு நின்றான், கந்தன். கிளி குமரன்.... குமரன்.....  என்று படபடத்து சிறகை விரித்து பறந்தது. கண்கள் திறந்தாள் தெய்வானை. கந்தனின் கருணைவிழிகள் தேவத்தலைவன் இந்திரனின் தெய்வானை  என இனம் கண்டு கொண்டது. தெய்வக் காதல் காரணமற்று பொங்கியது. உள்ளத்தினிடையே உரையாடல் இருக்க வார்த்தைகளாக என்ன பேசுவது  என கற்சிலையாகி நின்றனர்.

தெய்வானை கந்தனை நமஸ்கரித்து எழுந்தாள். கைகூப்பியபடியே வானவர் உறையும் தேவலோகம் சென்றாள். வெகுதொலைவே அம்பர  சகோதரர்களின் மரண ஓலம் காட்டிற்குள் எதிரொலித்துத் திரும்பியது. தேவர்கள் தேவியை தோத்திரம் செய்வது இனிய கானமாக காற்றினுள் மிதந்து  வந்தது. தேவர்கள் வானுலகிற்கு செல்லும்போது காடுகளூடே நடந்து கொண்டிருந்த கந்தனைக் கண்டனர். அசுரர்கள் கொட்டம் அழிந்ததைச்  சொன்னார்கள். வேறொரு விஷயத்தையும் காதருகே விவரித்தனர். சூரபத்மன் எனும் அரக்கன் வேறொரு பக்கம் அட்டகாசங்கள் செய்வதாகவும் அதை  தேவியிடம் தெரிவித்தபோது குமரன் வதம் செய்வான் என்று அருளிச் சொன்னதை சொன்னார்கள். தேவர்கள் மெல்ல மேலே மிதந்து மேகங்களை  ஊடறுத்து சென்றதை பார்த்தார். காட்டின் நிசப்தம் குமரனை வெகுகாலம் குடிகொள்ளச் செய்தது. இரு வதத்திற்கு இடைப்பட்ட காலத்தில் தனிமை  தவம்போல ஒரு பக்குவத்தை அந்த தேன்காடு எனும் மதுவனம் தந்தது. கந்தனையே மணம்புரிய விரும்பிய தெய்வானை எனும் கன்னிகையின்  தவத்தை காணநேர்ந்ததும், அடுத்தொரு வதம் இருப்பதை சூட்சுமமாக சுட்டிக்காட்டிய தாயின் திருவடியை மனதுக்குள் நமஸ்கரித்து கானகம் தாண்டி  சென்றார். 

சூரபத்மன் வதத்தை முடித்து தெய்வானை மணந்து, வள்ளித் திருமணம் புரிந்து தான் மிகவும் விரும்பிய இந்த கானகத்தில் வந்து கந்தன் குடிகொண்டு  அடியாகளுக்கு அருளியதால் இன்றும் இத்தலத்திற்கு கந்தன்குடி என்றே பெயர்பெற்று விளங்குகிறது. தவமிருந்து தெய்வானை பார்த்த அந்த தலத்தை நாமும் காண்போமா. அன்று கந்தன் பார்த்த கானகம்போல் அடர்ந்த மரங்கள்மட்டும்தான் இல்லை.  ஆனால், பச்சைபசேலென பரவியிருக்கும் விளைநிலங்கள். சிலுசிலுவென மனதை குதூகலப்படுத்தும் தென்றல் காற்று என இயற்கைழகின் மத்தியில்  அழகுக் குமரன் குடியிருக்கிறான். கிழக்கு நோக்கிய கோயில் அமைப்பு. கோயிலின் வாயிலிலிருந்து நீண்ட நடுமண்டபம் அமைந்துள்ளது. அதன் மேல்  விதானத்தி அறுபடை வீடுகளையும் அழகிய சித்திரமாக வரைந்துள்ளனர். அதனருகேதான் தெய்வானை தெற்கு நோக்கிய தனிச்சந்நதி அமைந்துள்ளது.  நின்றகோலத்தில் கைகளில் கிளியோடு, தவம்முடித்த களை முகமெங்கும் பரவியிருக்க, சாந்தமும், நாணமும் ஒருசேரக் கலந்திருக்க  நின்றகோலத்தில் அருள்கிறாள் தெய்வானை எனும் தேவசேனா. சிறிய திருச்சந்நதியாக இருந்தாலும் நின்று பார்க்கவைக்கும் ஒரு தெய்வீக வசீகரம்  பொலியும்படியாக விளங்குகிறது. இவளை தரிசித்தாலே போதும் திருமணம் கைகூடும் என்பது நிதர்சனம். மகாமண்டபத்தில் நடராஜர் சபையும்  அதனையடுத்து ஸ்நபன மண்டபமும் உள்ளன. 

அர்த்தமண்டபத்தை அடுத்து கர்ப்பக்கிரகத்தில் வள்ளி, தேவசேனா, சுப்ரம்ணியசுவாமி ஆனந்தமாக வீற்றிருக்கிறார். இது என்னுடைய இடம் என்று  மிகுந்த உரிமையோடு கந்தன் குடி கொண்டிருக்கிறான். சொந்த ஊருக்கு வருவோரை எத்தனை அன்பாக உபசரிப்போமோ அதுபோல கந்தனை சகல  உபசாரங்களோடும் அமர்வித்துள்ளனர். சந்தனக் காப்பு, விபூதிக் காப்பு, வெள்ளிக் கவசம், தங்கக் கவசம் என வேளைக்கொரு அபிஷேகமும்,  அலங்காரமுமாக செய்து மகிழ்கிறார்கள். கருவறை நெருங்கினாலே ஒரு ஆனந்த ஊற்று அகத்தில் கொப்பளிக்கிறது. இத்தனை நாள்பட்ட துயரங்கள்  இதற்கா இவ்வளவு பயந்தோம் என தூசாக பறந்து போகின்றது. வள்ளியும், தெய்வானையும் வியப்புணர்வோடு காட்சி தருகிறார்கள். கந்தனின்  மேலுள்ள பக்திக்கு சாட்சி பாவனையில் பக்தர்களையும், கந்தனையும் பார்ப்பதுபோன்றொரு உணர்வு அச்சந்நதியில் ஏற்படுகிறது. அழகன் முருகன்  பேரழகுச் சிகரமேறியிருக்கும் அற்புதத் தலமெனில் மிகையில்லை. இந்த கந்தவேளை அருணகிரிநாதர் போற்றித் திருப்புகழ் பாடியுள்ளார் என வரலாறு  கூறுகிறது. 

கந்தன் கொடுத்த களிப்பில் பிராகாரத்தை வலம் வருவோம். உள்பிராகாரத்தில் தெற்கே விநாயகர் வீற்றிருகிறார். அவரை அடுத்து வாகன அறையும்,  பள்ளி அறையும் மடப்பள்ளியும் உள்ளன. ஐராவதம் எனும் தேவேந்திரனின் வெள்ளையானையை தெய்வானைக்கு துணையாக கந்தன்குடிக்கு இந்திரன்  அனுப்பி வைத்தான். அந்த ஐராவதம் திருக்குளத்தில் நீராடி வழிபட்டு புனித வாழ்வு பெற்றது. அது ஐராவதேஸ்வரர் என பெயர் பெற்றது.  இக்கோயிலின் தலவிருட்சம் பன்னீர் மரமாகும். இதனடியில் தெய்வானை தவமிருந்தாள். இந்த ஆலயத்தில் காசியைப்போல விஸ்வநாதர், விசாலாட்சி  தனிச் சந்நதிகளில் வீற்றிருக்கின்றனர். கந்த புஷ்கரணி எனும் திருக்குளம் உள்ளது. இதில் நீராடி கந்தனை வழிபடுவோர் மனதின் மாசுக்கள் கரையும்  என்பார்கள், ஆன்றோர்கள். இக்கோயிலின் பைரவர் சந்நதிக்கு எதிரேயுள்ள சன்னலில் கட்டியிருந்த தேன் கூட்டிலிருந்து சொட்டிய தேனைச் சேகரித்து  மூலவர்க்கு முன்னாளில் அபிஷேகம் செய்ததாக பழஞ்செய்தி ஒன்று கூறுகிறது. சிறிய ஆலயமனாலும், தொன்மையில் கீர்த்தியிலும், கந்தனின்  புகழ்பாடுவதிலும் ஈடிணையற்ற கோயில். கோயிலிலுள்ள ஒவ்வொரு தெய்வத் திருமேனிகளையும் மிக அழகாக அலங்கரிக்கிறார்கள். கோயில்  முழுவதையும் வலமாக வந்து கொடிமரத்தின் கீழ் வணங்கி நிமிர நம் உள்ளத்திலும் கந்தன் குடி கொண்டுவிடுகிறான். இத்தலம் திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டத்தில் பேரளத்திற்கு அருகில் உள்ளது. கும்பகோணம் - காரைக்கால், மயிலாடுதுறை - காரைக்கால்  பேருந்து வழித்தடத்தில் கொல்லாபுரத்தை கடந்தால் கந்தன்குடியை காணலாம்...

🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔

           🎪 *ஓம் நமசிவாய* 🎪

🌴🛕🌴🛕🌴🪔🌴🛕🌴🛕🌴
   

 _     என்றும் இறைப்பணியில்_

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*

             📲 +919486053609

     🕉️ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ 🕉️
        
       🙆🏻‍♂️ *இறைத்தொண்டு!* 🙆🏻‍♂️

🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴

Monday, 1 June 2020

கும்பகோணம் திருநாகேஸ்வரம் திருவிண்ணகரம் ஸ்ரீ ஒப்பிலியப்பன் பெருமாள்.!!

பெருமாளுக்கு பக்தர்களை சோதித்து தடுத்தாட் கொள்வதில் அலாதி விருப்பம்.

துளசிவனத்தில் தோன்றிய குழந்தையை பூதேவி என்ற திருநாமமிட்டு வளர்த்து வந்தார் மார்க்கண்டேய முனிவர்.

பெண் சற்று வளர்ந்ததும் பெருமாள் கிழவர் வேடத்தில் வந்தார்.
மார்கண்டேயரிடம் ” உங்கள் பெண் அழகாக இருக்கிறாள் . அவளை எனக்கு மனம் முடித்து வையுங்கள் ” என்கிறார்.

என்னடா இது கிழவர் வந்து பெண் கேட்கிறாரே என்று திடுக்கிட்டார். சமாளித்து கொண்டு ” பெரியவரே !
என் பொண்ணுக்கு உப்பு போட்டுக்கூட சமைக்க தெரியாது … அவளை எப்படி திருமணம் செய்வீர்கள் ? ” என்கிறார் .

” பரவாயில்லை … நான் உப்பில்லாமல் சாப்பிடுகிறேன் சீக்கிரம் திருமணத்திற்கு ஏற்பாடு செய்யுங்கள் ” என்கிறார் கிழவர் ஆகிய பெருமாள்…

இவரை எப்படி சமாளிப்பது என்று மார்கண்டேயேர் முழித்தபோது
ஸ்ரீ நிவாஸர் தம் திரு உருவத்தை காண்பித்து தான் சாட்ஷாத் மகாவிஷ்ணுவே என்று அருளி முன்பு வாக்கு கொடுத்தபடி திருமகளை திருமணம் செய்யவே எழுந்தருளியதாக கூறினார்.

மகா சந்தோஷத்துடன் மார்க்கண்டேயர் சம்மதித்தார். பெருமாளுக்கு வலது புறம் கீழே மண்டியிட்டு வணங்கும் திருக்கல்யாண கோலத்துடன் அருளும் (தனி சன்னதி கிடையாது) தாயார்
பூமா தேவி பூமி நாச்சியார் என்று அழைக்கப்படுகிறார். இவர்களுக்கு இடது புறம் பெருமாளுக்கு கன்னிகாதானம் செய்து வைத்த மார்க்கண்டேய மகரிஷி அமர்ந்த நிலையில் வணங்கும் நிலையில் உள்ளார்.

இத்தலத்தில் இன்றும் பிரசாதங்களில் உப்பு சேர்ப்பதில்லை. எனவே உப்பு சுவையை நீக்கிய பெருமாள் என்பதால் “லவண வர்ஜித வேங்கடேசன்”
(உப்பினை விலக்கிய பெருமாள் ) என்கிறது புராணம். உப்பு இல்லாத பெருமாள் – உப்பில்லா அப்பன் – உப்பிலியப்பன் என்று அழைக்கப்படுகிறார்.

108 திவ்ய தேசங்களில் இந்த திவ்ய தேசத்தில் மட்டும் தான் உப்பில்லாத பிரசாதம் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்...

🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔

           🎪 *ஓம் நமசிவாய* 🎪

🌴🛕🌴🛕🌴🪔🌴🛕🌴🛕🌴
  

_     என்றும் இறைப்பணியில்_

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*

             📲 +919486053609

     🕉️ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ 🕉️
       
       🙆🏻‍♂️ *இறைத்தொண்டு!* 🙆🏻‍♂️

🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴

ஜூன் 5 சந்திர கிரகணம். இந்த கிரகண நேரத்துல, இப்படி செஞ்சு பாருங்க! நம்ப முடியாத அதிசயத்தை உங்களால் நிகழ்த்த முடியும்.!!

2020 ஆம் ஆண்டு சந்திர கிரகணம் மூன்று முறை நிகழப் போகின்றது. ஜூன் 5, ஜூலை 5, நவம்பர் 30. இதில் முதலாவதாக வரக்கூடிய சந்திர கிரஹணம் ஜூன் 5ஆம் தேதி இரவு 11.16 மணியில் இருந்து 02.32 மணி வரை, மொத்தம் மூன்று மணி நேரம் தொடரப் போகின்றது.  ஆனால், இந்த சந்திர கிரகமானமானது, இந்தியாவில் நிழல் கிரகணம் போல்தான் தோன்றும் என்று சொல்லப்பட்டுள்ளது. குறிப்பாக தென் அமெரிக்கா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா, ஆசியா, ஆஸ்திரேலியா இந்த நாடுகளில் முழுமையாக பார்க்கலாம் என்றும் விஞ்ஞானிகளால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் இந்த சந்திர கிரகண நேரத்தில், பூமியில் நம் கண்ணுக்கு தெரியாத சில மாற்றங்கள் நடைபெறத் தான் செய்யும். அப்படி இருக்கும் பட்சத்தில், கிரகணம் ஏற்படக்கூடிய இந்த மூன்று மணி நேரத்தை நாம் எப்படி நமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளலாம், என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

பொதுவாகவே கிரகண நேரத்தில் மாந்திரீகம், தாந்திரீகம் மற்றும் மந்திரங்களுக்கு அதிகப்படியான உரு ஏற்றும் வேலை செய்யப்படும். ஏனென்றால், இந்த சமயங்களில் தெய்வங்களின் ஆதிக்கமானது பூமியில் நிறுத்தி வைக்கப்படும் என்பதும் நம்முடைய சாஸ்திர குறிப்புகளில் சொல்லப்பட்டுள்ளது.

ஆனால் சில தெய்வங்களை இந்த கிரக நேரங்களிலும் வழிபடலாம் என்றும், அந்த தெய்வங்களுடைய சக்தியானது, எந்த காலத்திலும் குறையாமல் இருக்கும் என்றும் சொல்லப்பட்டுள்ளது. குறிப்பாக சிவனின் மந்திரத்தை உச்சரிக்கலாம். சக்திதேவியின் மந்திரத்தை உச்சரிக்கலாம். ஆஞ்சநேயரின் மந்திரத்தை உச்சரிக்கலாம். சிலபேர் சிந்தாமணி மந்திரத்தை உச்சரிப்பார்கள். மிகவும் சக்தி வாய்ந்த, கோபம் உடைய தெய்வங்களை இந்த சமயத்தில் வழிபடுவது நல்லது என்று சொல்லப்பட்டுள்ளது.

நம்முடைய மனதில் நீண்ட நாட்களாக நிறைவேறாமல் இருக்கும் ஒரு காரியத்தை நிறைவேற்ற வேண்டும் என்றாலும், இந்த கிரகண நேரத்தில் நேரத்தில் வேண்டிக் கொள்வது மிகவும் நல்லது. அந்த காரியம் சீக்கிரமே நிறைவேறும் என்பதும், நிறைவேறிய அந்த காரியத்தை நிரந்தரமாக நம்மிடமே தக்கவைத்துக் கொள்ளலாம் என்றும் சொல்லப்பட்டுள்ளது.

எடுத்துக்காட்டாக, உங்களுக்கு அதிகப்படியான செல்வம் கிடைக்க வேண்டும் என்றும், அந்த செல்வம் நம்மிடமே நிலைத்திருக்க வேண்டும் என்றும் வேண்டிக் கொள்ளலாம். இல்லையென்றால், நல்ல வேலை கிடைக்கவேண்டும். கிடைத்த வேலையானது நம் வாழ்நாள் முழுவதும் நிலையாக இருக்க வேண்டும் என்றும் வேண்டிக் கொள்ளலாம். இப்படி உங்கள் இஷ்டம்போல், உங்கள் மனதில் நினைத்த காரியத்தை நிறைவேற்றிக் கொள்வதற்கு இது தக்க சமயமாக சொல்லப்பட்டுள்ளது.

இந்த சந்திர கிரகமானது தொடங்கக் கூடிய அந்த நேரத்தில், பின்வரும் மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். இரவு 11.16 மணிக்கு மேல் 02.32 மணிக்குள் இந்த மந்திரத்தை எப்போது வேண்டுமென்றாலும் உச்சரிக்கலாம். நினைத்ததை நிறைவேற்றும் சிவமந்திரம் உங்களுக்காக இதோ!

“ஓம் நமசிவய ஐயும் கிலியும் சவ்வும் சுவாகா!”

இந்த மந்திரத்தை வெறும் 27 முறை உச்சரித்தால் மட்டுமே போதும். அதன் பின்பு கிரகண வேளையில், ‘ஓம் நமசிவாய’ மந்திரத்தை உச்சரிக்கலாம். ‘ஸ்ரீ ராம ஜெயம்’ சொல்லலாம். சக்தி வாய்ந்த அம்மனை வழிபடலாம். இப்படி செய்யும் பட்சத்தில், நம் மனதில் நினைத்துக் கொண்டிருக்கும் அந்தக் குறிக்கோளானது நிறைவேறி, நம்மிடமே நிலைத்து நிற்க, நமக்கு கிடைத்திருக்கும் அற்புதமான 3 மணி நேரம், இந்த சந்திர கிரகண நேரம் என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்...

🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔

           🎪 *ஓம் நமசிவாய* 🎪

🌴🛕🌴🛕🌴🪔🌴🛕🌴🛕🌴
  

_     என்றும் இறைப்பணியில்_

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*

             📲 +919486053609

     🕉️ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ 🕉️
       
       🙆🏻‍♂️ *இறைத்தொண்டு!* 🙆🏻‍♂️

🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴

வைகாசி விசாகம் சிறப்புகள்.!!

விசாக நட்சத்திரம் என்பது ஆறு நட்சத்திரங்களின் கூட்டம் ஆகும். விசாக நட்சத்திரத்தில் பிறந்ததால் முருகப் பெருமானை விசாகன்  என்றும் அழைக்கின்றனர். வி என்றால் பட்சி (மயில்) என்றும், சாகன் என்றால் பயணம் செய்பவர் என்றும் அதாவது பட்சி (மயில்) மீது பயணம்  செய்பவர் என பொருள் கூறப்படுகிறது.  முருகன் அவதரித்த நாள் பௌர்ணமியுடன் கூடிய வைகாசி விசாகம் ஆகும்.


வைகாசி விசாகம் முருகனின் அவதார நாளாகக் கொண்டாடப்படுகிறது. எமதர்ம ராஜனின் அவதார தினமாகவும் கருதப்படுகிறது. எனவே  இந்நாளில் விரதம் மேற்கொண்டு வழிபாடு செய்வதால் நோய் நீங்கி நீடித்த ஆயுள் கிடைப்பதாகக் கருதப்படுகிறது.

மகாபாரதத்தின் வில் வீரரான அர்ஜுனன் பாசுபத ஆயுத்தை சிவபெருமானிடமிருந்து பெற்ற நாள் வைகாசி விசாகமாகும்.திருமழப்பாடி  என்னும் ஊரில் சிவபெருமான் மழு ஏந்தி திருநடனம் புரிந்ததும் இந்நாளே. பன்னிருஆழ்வார்களில் ஒருவரான நம்மாழ்வார் பிறந்த தினமும் இந்நாளே  ஆகும்.

சோழ சக்கரவர்த்தியான ராஜராஜ சோழனின் சரித்திரத்தை நாடகமாக ஆண்டுதோறும் வைகாசி விசாகத் திருநாளில் நடத்திய நாடகக்  கலைஞர்களுக்கு ஊதியமாக நெல் வழங்கிட ஆணையை ராஜேந்திர சோழன் பிறப்பித்து இருந்ததாக தஞ்சை பெரிய கோயிலில் உள்ள கல்வெட்டு  செய்தி ஒன்று குறிப்பிடுகிறது.

வடலூரில் ராமலிங்க அடிகளார் சத்யஞான சபையை நிறுவியதும் இந்நாள் தான். பெரும்பான்மையான கோவில்களில் மகா உற்சவம்  நடத்தப்படுகிறது. வைகாசி விசாகத்தன்று பிறப்பவர்கள் அறிவில் சிறந்தவர்களாக இருப்பார்கள் என்றும் கருதப்படுகிறது.

வான்மீகி ராமாயணத்தில், விஸ்வாமித்திரர் ராம-லட்சுமணர்களுக்கு குமரனின் பிறப்பு மற்றும் பெருமைகளைக் கூறுவார். மேலும் இதனை  கூறுபவர் மற்றும் கேட்பவர்களுக்கு பாவங்கள் நீங்குவதாக சொல்லுவார்.இந்நிகழ்வை குமாரசம்பவம் என்று வான்மீகி குறிப்பிடுவார்.

இதனை பின்பற்றியே வடமொழிக் கவிஞரான காளிதாசர் முருகனின் பிறப்பு மற்றும் அவரின் பெருமைகள் பற்றி கூறி அந்நூலிற்கு குமார  சம்பவம் என்றும் பெயரிட்டுள்ளார்.

சித்தார்த்தர் என்னும் கௌதம புத்தர் பிறந்த நாளும், அவர் ஞானத்தை அடைந்த நாளும் வைகாசி பௌர்ணமி அன்று கொண்டாடப்
படுகிறது. இதனையே புத்த பூர்ணிமா என்று அழைக்கின்றனர்.

இவ்வளவு சிறப்பு வாய்ந்த வைகாசி விசாகத்தில் நாமும் விரத முறையைப் பின்பற்றி வாழ்வின் உயர்ந்த நிலையை அடைவோம்.

வைகாசி மாதம் என்பது வசந்த காலம் எனப்படும் இளவேனிற் காலத்தின் பிற்பகுதி ஆகும். எனவே வைகாசி விசாகத்தில் கோயில்களில்  வசந்தோற்சவ விழாக்கள் நடத்தப்படுகின்றன.

இளவேனிற் காலத்தில் இவ்விழா நடைபெறுவதால் திருச்செந்தூரில் கருவறையில் தண்ணீர் கட்டி நிற்கும்படி செய்து இறைவனுக்குச்  சிறுபருப்புப் பாயாசம், நீர்மோர், அப்பம் முதலியவற்றைப் படைத்து உஷ்ணசாந்தி உற்சவம் (வெப்பம் தணிக்கும் விழா) என்ற நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

இங்கு வசந்த மண்டபத்தில் உள்ள நீர்த் தொட்டியில் ஆறு மீன் பொம்மைகளை நீரில் இடப்பட்டு, குமரன் வாயில் இருந்து சிந்திய பாலினை உண்டதால் சாபம் நீங்கப் பெற்ற பாரச முனி குமாரர்களை நினைவுபடுத்தும் விதமாக ஆறு முனிவர்களின்  உருவங்களையும் வைத்து சாப விமோசன நிகழ்ச்சி நடத்தப்படுகிறது...

🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔

           🎪 *ஓம் நமசிவாய* 🎪

🌴🛕🌴🛕🌴🪔🌴🛕🌴🛕🌴
  

_     என்றும் இறைப்பணியில்_

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*

             📲 +919486053609

     🕉️ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ 🕉️
       
       🙆🏻‍♂️ *இறைத்தொண்டு!* 🙆🏻‍♂️

🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴

மகிமை மிக்க நிர்ஜலா ஏகாதசி விரதம்.!!

புகழ்பெற்ற நிர்ஜலா ஏகாதசி

2.6.2020 செவ்வாய்க்கிழமை

அந்தி சாயும் பொழுதில், அழகிய நந்த வனத்தில் பஞ்ச பாண்டவர்களும், அவர்களது மாமன் மகன் கண்ணனும் மகிழ்ச்சியாக பேசிக் கொண்டிருந்தார்கள் .‘‘நாளை ஏகாதசி! விரதம் இருப்பது முக்கியம். விரதம் இல்லாமல் உண்பவர்கள், பாவத்தையே உண்பதாக சாஸ்திரங்கள்  கூறுகின்றன. ஆகவே நாளை நாம் விரதம் கடைபிடிக்க வேண்டும்’’ சொன்னது தர்மத்தில் சிறந்த யுதிஷ்டிரர் தான்.‘‘கவலை படாதே யுதிஷ்டிரா! நான்  ஆயற்பாடியில் இருக்கும் போதே ஒவ்வொரு ஏகாதசியும் நிச்சயம் விரதம் இருப்பேன்! அன்று வெறும் வெண்ணெய் மட்டும் தான் உண்பேன் தெரியுமா  உங்களுக்கு?’’ கண்ணன் பெருமிதத்தோடு மார்தட்டிக் கொண்டான்.

‘‘உன்னை பற்றி எங்களுக்கு தெரியாதா கண்ணா! ? ஏகாதசி அன்று உனது பல்லில் பச்சை தண்ணீர் கூட படாதே! காரணம் நீ தின்பது பன்னிரண்டு  பானை வெண்ணெய் மட்டும் தானே மாயவா!’’ கண்ணனின் தோளில் கைபோட்ட படியே அர்ஜுனன்  கண்ணனை நகைத்தான்.‘‘ஆம் கண்ணா! அதுவும்  திருடித் தின்ற வெண்ணெய் ஆயிற்றே? சுவை அதிகமாகத்தான் இருக்கும்? திருடித் தின்றதெல்லாம் நீ,  ஆனால் பழி என்னவோ பாவம் அந்த ஸ்ரீ  ராமச் சந்திர மூர்த்திக்குத் தான். ஆம் யாரும் சாப்பாட்டு கிருஷ்ணன் என்று சொல்வதில்லையே.? சாப்பாட்டு ராமன் என்று தானே சொல்கிறார்கள்.’’  என்றபடி சகாதேவனும் அர்ஜுனனோடு சேர்ந்துக் கொண்டான்.

‘‘ஆமாம், ஆமாம், உலகில் நல்லவனாக வாழ்வதே ஒரு குற்றம் தான்.’’ நகைத்தபடி யுதிஷ்டிரரும் கண்ணை வாரினார்.  கண்ணன் கூச்சத்தில் நெளிய  ஆரம்பித்தான். அப்போது தான் அவனது கண்களில் ஒரு ஓரமாக சோகமே வடிவாக அமர்ந்திருக்கும் பீமன் பட்டான். அவன் அப்படி அமர்ந்திருப்பது  கண்ணனின் மனதை நெருடவே அவனது அருகில் சென்று அமர்ந்தான் கண்ணன். ஆதரவாக அவனை அணைத்தபடியே  ‘‘என்ன பீமா ஏன் சோகமாக  இருக்கிறாய்?’’ என்று வினவினான்.  

‘‘ஒன்றுமில்லை கண்ணா! நான் உண்டு, உண்டு பழக்கப்பட்டவன். என்னால், உண்ணாமல் ஒரு நாளில்லை ஒரு பொழுது கூட இருக்க முடியாது.  உனக்கே தெரியும் நான் வாயு குமாரன் என்று. வாயுவுக்கு சாமானன் என்று ஒரு பெயர் உண்டு. அந்த சாமானன் என்ற வாயு தானே உலகில் உள்ள  அனைத்து ஜீவ ராசிகளின் வயிற்றிலும் ஜீரண சக்தியாக இருக்கிறது. உலகிற்கே ஜீரண சக்தியாக இருக்கும் வாயுவின் மகன் நான். ஆகவே எனக்கு  எவ்வளவு உண்டாலும் நிறைவு என்பது வருவதே இல்லை. ஆகவே, ஏகாதசி விரதம் என்னை பொறுத்த வரையில், குதிரை கொம்பு தான் கண்ணா!’’  சற்று இடைவெளி விட்டு கண்ணனின் முகத்தை கவனித்தான் பீமன். அது என்றும் போல அன்றும் ஒரு மாறாப் புன்னகையை பிரதிபலித்தது. அந்த  புன்னகையின் நடுவே பீமனுக்கான கரிசனுமும் இழை ஓடுவது அவனுக்கு புரிந்தது. கண்ணனின் புன்னகை தந்த மன நிறைவில் விசும்பிய படியே  தொடர்ந்தான் பீமன்....

‘‘ஏகாதசியன்று, நானும் விரதம் இருக்க, ஒரு வழி சொல்லேன் கண்ணா’’  கெஞ்சினான் பீமன். பீமனின் நிலை பரந்தாமனுக்கு நன்கு விளங்கியது.  அவனுக்கு அருள் செய்ய மனதால் முடிவெடுத்து விட்டான் அந்த மாயவன். அவன் முடிவெடுத்த இரண்டொரு நொடிகளில்,  பாண்டவர்களின்  இல்லத்திற்கு வியாச முனிவர் விஜயம் செய்தார்.பரந்தாமனின் அவதாரம், வேதத்தை நன்கு அறிந்து, அதை உலகிற்கு வகுத்து தந்தவர், பரம  பாகவதரான, சுக பிரம்ம மகரிஷியின் தந்தை, பராசர முனிவரின் தவப் பயன், இவை எல்லாவற்றையும் விட பாண்டவர்களுக்கு அருமையான  பாட்டன், வியாச முனிவர். எனில் வரவேற்பை பற்றி சொல்ல வேண்டுமா? தடபுடலாக இருந்தது. பஞ்ச பாண்டவர் ஐவரும், பாஞ்சாலியும், குந்தியும்  அவரை வணங்கினார்கள். கண்ணனும் தான்.

அமைதியாக வியாசரை வணங்கிய கண்ணன், பீமன் அருகில் சென்றான் ‘‘பீமா! உனது சந்தேகத்தை வியாச முனிவரிடம் கேட்டு தெளிவு பெற்றால்  என்ன? எப்படி என் யோசனை?’’ என்று பீமனுக்கு மட்டும் கேட்கும் குரலில் கிசுகிசுத்தான். பீமனுக்கும் அது சரி என்று படவே, தனது கண்களாலேயே  கண்ணனுக்கு நன்றிகள் தெரிவித்துவிட்டு பவ்யமாக வியாசரின் அருகில் சென்று அடக்கத்தோடு நின்று கொண்டான்.‘‘பீமா! உன் மனதில் ஏதோ வினா  ஒன்று இருப்பது போல தெரிகிறதே!’’ வியாசரே மவுனத்தை கலைத்தார். அவரே பேச்சை தொடங்கியதால் தயக்கமின்றி பீமனும் தனது வினாவை  கேட்க ஆரம்பித்தான்.‘‘சுவாமி, எமது சகோதரர்களும் திரௌபதியும் மாதா குந்தி தேவியும், ஏன்? கண்ணனும் கூட ஏகாதசிக்கு ஏகாதசி தவறாமல்  விரதம் இருக்கிறார்கள். ஆனால் என்னால் இந்த சான் வயிற்றை கட்டுப்படுத்த முடியவில்லை சுவாமி..’’

‘‘பீமனுடைய வயிறு சான் வயிறாம்’’ அர்ஜுனன், கண்ணனின் காதுகளில் கிசுகிசுக்க இருவரும் கண்களாலேயே நகைத்தார்கள். அதை கண்ட வியாச  முனிவர், அதை பொருட்படுத்தாமல் பீமனின் உரையில் கவனத்தை செலுத்தினார்.‘‘நான் ஏகாதசி விரதம் இருந்தே ஆகவேண்டுமா?. அந்த விரதத்தை  கடைபிடிக்காவிட்டால் என்ன ஆகும்?’’‘‘பீமா! நீ மோட்சத்தையும் உயர்ந்த மேல் லோகங்களையும் விரும்புபவனாக இருந்தால் அந்த விரதம் மிகவும்  முக்கியம். ஏகாதசி தேவதைக்கு அந்த ஸ்ரீமன் நாராயணன் கொடுத்த வரம் அது. அதுமட்டுமில்லாமல் ஏகாதசி அன்று உண்பவன் பாவத்தை மட்டுமே  உண்கிறான் என்று வேதங்கள் சொல்கிறது. ஆகவே நீ அதை கடைபிடித்தே தீர வேண்டும். புரிகிறதா!’’ பரிவோடு சொன்னார் வியாசர்.
‘‘அனைவரின் உடலின் உள்ளும் ஒரு அக்னி இருப்பதாக சாஸ்திரங்கள் சொல்கிறது. அதற்கு ஜடராக்னி என்று பெயர். அந்த அக்னியே பசியாக  அடிவயிற்றில் கொழுந்து விட்டு எரிகிறது. அந்த அக்னியை தனிக்கவே நாம் உண்கிறோம். ஆனால் நான் உண்ணாமல் போனால் அந்த (பசி) அக்னி  என்னை எரித்தே விடும் சுவாமி. அதிலிருந்து என்னை காக்க ஏதாவது வழியை சொல்லுங்கள்.‘‘கெஞ்சினான் பீமன்.

‘‘பீமா! நீ சொன்னாயே “ஜடராக்னி” ஒவ்வொரு ஜீவனின் உள்ளேயும் அந்த ஜடராக்னியாக இருந்து உயிர்களை இயக்கும் அந்த மாயவனை  வணங்குவது மனிதர்களான நமது கடமை இல்லையா? ( அஹம் வைஷ்வானரோ பூத்வா - நான் பிராணிகளின்  வயிற்றில்ஜடராக்னியாக இருந்து  அவர்கள் உண்பதை ஜீரணம் செய்கிறேன் என்று கண்ணன் கீதையில் சொல்வது நினைவு கூறத்தக்கது.)ஆகவே, கடமையில் வழுவாதவனாக விரதம்  இரு!’’‘‘என்னால் ஒரு வேளை உணவு இல்லாமல் இருப்பதையே நினைத்து பார்க்க முடியவில்லை சுவாமி நான் எப்படி வருடத்தின் எல்லா  ஏகாதசியிலும் விரதம் இருப்பேன்!’’ வெதும்பிய படி பீமன் கேட்டான்.‘‘போகட்டும் பீமா! நீ மற்ற ஏகாதசியில் விரதம் இருக்க வேண்டாம்.  குறைந்தபட்சம் ஒரு நாளாவது விரதம் இருப்பாயா?’’‘‘ஒரு நாள் என்றால் முயற்சிக்கிறேன் சுவாமி’’ யோசித்தபடி பகர்ந்தான் பீமன்.

‘‘நல்லது! எனில் நாளையே ஏகாதசி தான். அதுவும் நிர்ஜலா ஏகாதசி. ஏகாதசிகளில் சிறந்தது நிர்ஜலா ஏகாதசி. ஜேயேஷ்ட மாதம், சுக்ல பக்ஷ  ஏகாதசியை நிர்ஜலா ஏகாதசி என்பார்கள். அந்த நன்னாளில் நீ விரதம் இருந்தால் மற்ற எல்லா ஏகாதசியிலும் விரதம் இருந்த பலன் கிடைக்கும்  பீமா!’’ என்ற வியாசரின் மொழியை கேட்டு பீமன் சந்தோஷத்தில் துள்ளினான்.  மற்ற பாண்டவர்களின் கண்கள் ஆச்சரியத்தில் விரிந்தது.‘‘எனில், குருதேவா அந்த விரதத்தை அனுஷ்டிக்கும் முறையை கூறுங்கள்’’ இடையிட்டான் தர்மன். அதைக் கேட்ட வியாசர் புன்னகைத்த படியே  தொடர்ந்தார்.‘‘நிர்ஜலா ஏகாதசி நன்னாளில் ஒரு சொட்டு நீர் கூட அருந்தாமல் விரதம் இருக்க வேண்டும் குழந்தைகளே. இந்த நியதியை நிர்ஜலா  ஏகாதசி அன்று சூரியன் உதிப்பது முதல் மறுநாள் துவாதசி அன்று சூரியன் உதிக்கும் வரை கடைபிடிக்க வேண்டும்.’’

‘‘எனில், குருவே நித்ய கர்மங்களை செய்யும் போது ஆசமனம் செய்ய வேண்டி இருக்கும். (தெய்வீக காரியங்களை செய்வதற்கு முன்னால்  உடலையும் மனதையும் தூய்மை படுத்திக்கொள்ள, இறைவனின் நாமத்தை கூறி மூன்று முறை நீர் அருந்துவது வழக்கம்.  இதையே ஆசமனம் என்று  சொல்லுவார்கள்.) பிறகு எப்படி இந்த விரதத்தை கடைபிடிப்பது.?’’ பீமனும் தருமனும் ஒரே குரலில் கேட்டார்கள். அதை கேட்ட வியாசர் அருள்  பொங்க புன்னகை பூத்தார்.‘‘நல்ல கேள்வி குழந்தைகளே! நிர்ஜலா ஏகாதசி அன்று ஆசமனம் செய்யும் போது, கைகளில் இறைவனின் நாமத்தை கூறி  மந்திரிக்க நீர் எடுப்போம் இல்லையா? அப்போது நாம் கைகளில் எடுக்கும் நீரின் அளவு, ஒரு கடுகை, முழுகடிக்கும் அளவுக்கு மேல் இருக்கக் கூடாது  புரிகிறதா?’’ சிக்கலான கேள்விக்கு சாதாரணமாக பதில் சொல்லிவிட்டு மர்மப் புன்னகை பூத்தார் வியாசர்.‘‘சுவாமி இந்த விரதம் இருப்பதன் பயன்  என்னவோ?’’ பணிவோடு பீமன் கேட்டான்.

‘‘இந்த ஏகாதசியில் நான் கூறியவாறு விரதம் இருப்பவன், வருடத்தின் அனைத்து ஏகாதசியிலும் விரதம் இருந்த பயனை அடைவான். அவன் செய்த  அனைத்து பாவங்களையும், இந்த ஏகாதசி விரதத்தின் பலன் என்னும் தீ, நொடியில் சாம்பலாக்கி விடும். நிர்ஜலா என்பதன் பொருளே  - நீர் கூட  இல்லாமல் என்பது தான். ஆகவே நீர் கூட அருந்தாமல் இந்த நன்னாளில் விரதம் இருப்பது உத்தமம். (முடியாதவர்கள், அவரவர்களின் உடல்  நிலையை மனதில் கொண்டு உணவு அருந்தலாம்) இந்த ஏகாதசியில் விரதம் இருந்து மாயவனை வழிபட்டால், அந்த கோவிந்தனின் கருணையால்  அனைத்து வரங்களும் கிடைக்கும். மோக்ஷ சாம்ராஜ்யத்தையும் எளிதில் அடையலாம். பொதுவாக ஒரு ஜீவன் இறந்ததும் அவனது ஆத்மாவை,  எம  பட்டர்கள் எமனின் முன்னிலையில் நிறுத்துவார்கள். 

எமன் அவர்கள் செய்த பாவங்களுக்கு ஏற்ப,  தக்க நரகத்தில் அடைப்பான். ஆனால், நிர்ஜலா ஏகாதசி விரதத்தை கடை பிடித்தவனுடைய ஆத்மாவை,  எம பட்டர்களால் தீண்ட முடியாது. அந்த ஆன்மாவை நேரிடையாக விஷ்ணு தூதர்கள், வைகுண்டம் அழைத்துச் செல்வார்கள்.  நிர்ஜலா ஏகாதசி  அன்று மாலவனை வணங்கி, அவன் அடியவர்களுக்கு உணவு, நீர், பசுகள், இப்படி முடிந்ததை தானம் செய்ய வேண்டும். இப்படி நான் சொன்னது  போல்,  தானம் செய்தவன், ஒரு கோடி தங்கத்தை ஒரே நாளில் தானம் செய்த பலனை அடைகிறான். இன்னும் நிர்ஜலா ஏகாதசியின் மகிமைகள்  ஏராளம் மகனே, அவற்றை எல்லாம் சொல்லி மாளாது.’’ பெரிய உரையை நிகழ்த்தி முடித்தார் வியாச பகவான். 

அதை கேட்ட பீமனுக்கு பரம சந்தோஷம். நாளை நிச்சயம் விரதம் இருந்தே தீர வேண்டும் என்று முடிவு கட்டினான். தனது முடிவை முதலில் தனது  தாயான குந்தி தேவியிடம் சொன்னான். அதை கேட்ட குந்தி ஆனந்தத்தில் திக்கு முக்காடிப் போனாள். இல்லாமல் போகுமா? பஞ்ச பாண்டவர்கள்  ஐவரும் சேர்ந்து முதல் முறையாக ஏகாதசி விரதம் இருக்கப் போகிறார்கள். இதுவரை வயிற்றை கட்டுப் படுத்த முடியாமல் தவித்த பீமனும் நாளை  அவர்களோடு சேரப் போகிறான். அவளது மகிழ்ச்சியை சொல்லவும் வேண்டுமா? ஆனந்தக் கண்ணீர் வழிய தனது மகனை (பீமனை) ஆரத் தழுவிக் 
கொண்டாள். 

‘‘பீமா! பஞ்ச பாண்டவர்களான நீங்கள் ஐவரும், நாளை சேர்ந்து முதல் முறையாக விரதம் இருக்கப் போவதால் இந்த ஏகாதசி இனி ‘‘பாண்டவ  ஏகாதசி’’ என்று உங்கள் நினைவோடு அழைக்கப்படட்டும்! ஆசிகள்! ’’ என்று தனது அன்பை மொத்தம் கொட்டி பீமனுக்கு ஆசி வழங்கினாள். அதை  கண்ட கண்ணன் மர்மப் புன்னகை பூத்தான். இந்த நாடகத்தை நடத்தியதே அவன் தானே. பீமனுக்காக வியாசரின் வடிவில் வந்து ஒரு தீர்வு  சொல்லிவிட்டான் அந்த கோவிந்தன். ஆம் வியாசரும் அவனுடைய ஒரு அவதாரம் தானே? அதனால் தானே வியாசரை விஷ்ணு என்றும்,  விஷ்ணுவே வியாசர் என்றும் புராணங்கள் சொல்கிறது. (வியாசாய விஷ்ணு ரூபாய வியாச ரூபாய விஷ்ணவே.....).மேலே நாம் கண்ட சரிதம் பிரம்ம  வைவர்த்த புராணத்தில் இருக்கிறது. அந்த புராணம் நமக்கு காட்டும் வழிமுறைகளை பின் பற்றி, வரும் நிர்ஜலா ஏகாதசி அன்று ( ஜூன் இரண்டாம்  தேதி) விரதமிருந்து மாதவனை வணங்குவோம்...

தொகுப்பு: ஜி.மகேஷ்

🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔

           🎪 *ஓம் நமசிவாய* 🎪

🌴🛕🌴🛕🌴🪔🌴🛕🌴🛕🌴
   

 _     என்றும் இறைப்பணியில்_

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*

             📲 +919486053609

     🕉️ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ 🕉️
        
       🙆🏻‍♂️ *இறைத்தொண்டு!* 🙆🏻‍♂️

🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴

உங்கள் வீட்டில் கெட்ட சக்தி குடி கொண்டுள்ளதா! என்பதை எப்படி கண்டுபிடிப்பது?: குலதெய்வ பரிகாரம் செய்வது எப்படி?

நல்ல சக்தியின் ஆதிக்கம் இந்த பூலோகத்தில் இருக்கின்றது என்பது எந்த அளவுக்கு உண்மையோ, அந்த அளவிற்கு, கெட்ட சக்தியும் இருக்கின்றது என்றே சொல்லலாம். காரணம், நல்லது மட்டும் இருந்தா எல்லோருக்கும் நல்லது மட்டும் தானே நடக்கணும்! ஏன் கெட்டது நடக்குது? எதிர்மறை ஆற்றல்கள் இருக்கும் பட்சத்தில் தான், கெடுதல் நடக்கின்றது அல்லவா? சரி. கெட்ட சக்தியானது உங்கள் வீட்டிலோ அல்லது உங்களிடமோ குடிகொண்டு இருக்கின்றது, என்பதை எப்படி கண்டறிய முடியும், என்பதைப் பற்றியும், இதுபோன்ற பிரச்சனைகள் உங்கள் வீட்டிலோ அல்லது உங்களிடத்திலோ இருந்தால், அதைப் போக்கிக் கொள்ள என்ன பரிகாரம் செய்ய வேண்டும்? என்பதையும் பற்றியும்தான் இந்த பதிவின் மூலம் விரிவாக தெரிந்து கொள்ளப் போகின்றோம். 


இதைப்பற்றி தெரிந்துகொள்வதற்கு முன்பு, கெட்ட சக்திகளான ஏவல், பில்லி, சூனியம் இவைகளில் நம்பிக்கை உள்ளவர்கள் மட்டும் இந்த பதிவை தொடர்ந்து படிக்கலாம். நம்பிக்கை இல்லாதவர்களுக்கு எதுவுமே இல்லை. பரிகாரமும் இல்லை. உங்கள் குலதெய்வமானது குடிகொண்டிருக்கும் இடம் என்றால், அது உங்களுடைய நில வாசப்படி என்று சொல்லலாம். ஒருவருடைய கால்கள் தொடர்ந்து நிலையிலோ அல்லது அங்கு இருக்கும் படிக்கட்டிலோ, இடி பட்டு கொண்டே இருந்தாலும், ஒருடைய தலை வாசல் படியில், இடித்துக் கொண்டே இருந்தாலும், அவருக்கு ஏதோ ஒரு பிரச்சனை இருக்கின்றது என்பதை குலதெய்வம் அவருக்கு வலியுறுத்துவதாக அர்த்தம். அடிக்கடி குறிப்பாக கால் கட்டை விரலில், நில வாசப்படியில் இடித்துக் கொள்வார்கள். கொஞ்ச நாள் கழிச்சு பார்த்தா, அவங்களுக்கே தெரியாம ஏதாவது ஒரு பிரச்சினையில் சிக்கி இருப்பாங்க!

அடுத்ததாக, ஒரு மனிதனின் நிம்மதியான தூக்கம் கெடும். தொடர்ந்து உடல் சோர்வினால் தோல்வியை மட்டுமே சந்தித்து வருவார்கள். அவங்க வீட்டிலேயும் சரி, அவங்க மேலேயும் சரி, ஒரு வித்தியாசமான, கெட்ட வாடை வீச ஆரம்பிக்கும். வீட்ல இருக்கிற உடையக்கூடிய பொருட்கள், அடிக்கடி கீழே விழுந்து உடைந்து கொண்டே இருக்கும். எடுத்துக்காட்டாக, கண்ணாடி பொருட்கள் கணவன் மனைவிக்குள் உங்கள், வாழ் நாளில் இல்லாத ஒரு சண்டை உருவாகி, அன்னியூன்னியத்தை கெடுத்துவிடும். சிலபேர் வீட்ல ஒரு பல்லி கூட இருக்காது. இதுவும் அபசகுண குறியீடு தான். மனம் பலவீனம் அடைந்து, எந்த ஒரு செயல்பாட்டிலும், சுறுசுறுப்பாக ஈடுபடாமல், நிம்மதியாக தூங்கவும் முடியாமல், ஒரு சோம்பேறித்தனம் நம் உடம்புக்குள் புகுந்து ஆட்டிப்படைக்கும். உடல் எரிச்சல் ஏற்படும்.

இது எல்லாவற்றையும்விட, உங்கள் வீட்டில் தீபம் ஏற்றி வைத்தீர்கள் என்றால், காற்று வீசவில்லை என்றாலும், அந்த சுடரானது நின்று எரியாது. இப்படிப்பட்ட பிரச்சனைகள் எல்லாம் உங்களுக்கு ஒரு முறை இரண்டு முறை ஏற்பட்டால், பயம் தேவையில்லை. தொடர்ந்து ஏற்பட்டு வரும் பட்சத்தில் உங்களுக்கு பிரச்சனை இருக்கின்றது என்பதை கணித்து விடலாம்.

இப்படிப்பட்ட பிரச்சினைகளை, உங்களுக்கு உருவாக்க வேண்டும் என்று நினைக்கும், உங்கள் எதிரிகள் முதலில் உங்களது குலதெய்வத்தை தான் கட்ட பார்ப்பார்கள். ஆக, உங்களது குலதெய்வ கோவிலுக்கு அடிக்கடி சென்று வர பாருங்கள். குலதெய்வ கோவிலுக்கு சென்று, எலுமிச்சை பழம் வாங்கி வைத்து, அதாவது குலதெய்வம் மடியில் வைத்து, பூஜை செய்துவிட்டு, அந்த எலுமிச்சை பழத்தை வீட்டிற்கு எடுத்து வரவேண்டும். இரண்டு எலுமிச்சை பழங்கள் அவசியம் தேவை. ஒரு எலுமிச்சை பழத்தை உங்கள் வீட்டு பூஜை அறையில் வைத்து விட வேண்டும். ஒரு எலுமிச்சை பழத்தை ஜூஸ் எடுத்து குடித்து விடலாம். 

இப்படி குலதெய்வத்தின் எழுமிச்சைபழம் உங்கள் வீட்டில் வாடிய பின்பு, திரும்ப திரும்ப இதே முறையை பின்பற்றி வரவேண்டும். குலதெய்வம் உங்கள் வீட்டிற்கு வருவதற்கு இது ஒரு சிறந்த வழியாக அமையும். முடிந்தவர்கள், ஏதாவது ஒரு ஜீவ சமாதிக்கு சென்று அங்கேயே தங்கி, உங்களது நேரத்தை செலவழிக்கலாம். உங்களால் முடிந்தால் இரண்டு, மூன்று நாட்கள் கூட ஜீவசமாதியில் தங்கி, உங்களால் முடிந்த சேவைகளை செய்யலாம். நல்ல பலன் இருக்கும். உங்கள் உடம்பில் இருக்கும் எந்த ஒரு தீய சக்தியாக இருந்தாலும் வெளியில் ஓடி விடும்.

குறிப்பாக நாகப்பட்டினத்தில் இருக்கும் கோரக்கர் சமாதிக்கு பவுர்ணமி தினத்தில் சென்று வழிபட்டால் இப்படிப்பட்ட பில்லி, சூனியம் பிரச்சனைக்கு நல்ல தீர்வு கிடைக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது. திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சென்று, கடலில் தலை மூழ்கி விட்டு இரவு தங்கலாம். சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்யலாம். வேப்பிலை, மஞ்சள் தூள் கலந்த தண்ணீரில் தலைக்கு குளித்துவிட்டு, பின்பு வழிபாடு செய்வது மிகவும் சிறப்பு. திருவேற்காடு கருமாரியம்மன் கோவிலுக்கு செல்லலாம். குறிப்பாக அஷ்ட காலபைரவர் கோவிலுக்கு செல்லலாம். இவையெல்லாவற்றையும் விட முக்கியமானது எது தெரியுமா? யாரை கெட்ட சக்தியானது சீக்கிரம் அணுகும்? யாரிடம் மன உறுதி இல்லையோ, மன தைரியம் இல்லையோ, அவர்களை கெட்ட சக்தி கட்டாயம் சீக்கிரம் பிடித்துக்கொள்ளும். மன தைரியத்தோடு, இவையெல்லாம் எதுவுமே இந்த பூமியில் இல்லை என்ற உறுதியோடு தைரியத்தோடு, மன உறுதியோடு இருப்பவர்களுக்கு எந்த கெட்ட சக்தியும் கிடையாது. எந்த கெட்ட சக்தியும் அவர்களை எதுவும் செய்யாது என்பது குறிப்பிடத்தக்கது.

உங்களுக்கு பிரச்சினை என்று வரும் சமயத்தில், யாரை நம்மையும் அதிகப்படியான பணத்தை கொடுத்து ஏமாறாமல், முழுமையான இறை வழிபாட்டை நம்பிக்கையோடு செய்யும் பட்சத்தில் உங்கள் வீட்டில் இருக்கும் கெட்ட சக்தியும் விலகிவிடும். உங்களிடம் இருக்கும் கெட்ட சக்தியும் கட்டாயம் விலகி விடும் என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்...

🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔

           🎪 *ஓம் நமசிவாய* 🎪

🌴🛕🌴🛕🌴🪔🌴🛕🌴🛕🌴
  

_     என்றும் இறைப்பணியில்_

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*

             📲 +919486053609

     🕉️ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ 🕉️
       
       🙆🏻‍♂️ *இறைத்தொண்டு!* 🙆🏻‍♂️

🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴

உங்கள் வீட்டில் கெட்ட சக்தி குடி கொண்டுள்ளதா! என்பதை எப்படி கண்டுபிடிப்பது?: குலதெய்வ பரிகாரம் செய்வது எப்படி?

நல்ல சக்தியின் ஆதிக்கம் இந்த பூலோகத்தில் இருக்கின்றது என்பது எந்த அளவுக்கு உண்மையோ, அந்த அளவிற்கு, கெட்ட சக்தியும் இருக்கின்றது என்றே சொல்லலாம். காரணம், நல்லது மட்டும் இருந்தா எல்லோருக்கும் நல்லது மட்டும் தானே நடக்கணும்! ஏன் கெட்டது நடக்குது? எதிர்மறை ஆற்றல்கள் இருக்கும் பட்சத்தில் தான், கெடுதல் நடக்கின்றது அல்லவா? சரி. கெட்ட சக்தியானது உங்கள் வீட்டிலோ அல்லது உங்களிடமோ குடிகொண்டு இருக்கின்றது, என்பதை எப்படி கண்டறிய முடியும், என்பதைப் பற்றியும், இதுபோன்ற பிரச்சனைகள் உங்கள் வீட்டிலோ அல்லது உங்களிடத்திலோ இருந்தால், அதைப் போக்கிக் கொள்ள என்ன பரிகாரம் செய்ய வேண்டும்? என்பதையும் பற்றியும்தான் இந்த பதிவின் மூலம் விரிவாக தெரிந்து கொள்ளப் போகின்றோம். 


இதைப்பற்றி தெரிந்துகொள்வதற்கு முன்பு, கெட்ட சக்திகளான ஏவல், பில்லி, சூனியம் இவைகளில் நம்பிக்கை உள்ளவர்கள் மட்டும் இந்த பதிவை தொடர்ந்து படிக்கலாம். நம்பிக்கை இல்லாதவர்களுக்கு எதுவுமே இல்லை. பரிகாரமும் இல்லை. உங்கள் குலதெய்வமானது குடிகொண்டிருக்கும் இடம் என்றால், அது உங்களுடைய நில வாசப்படி என்று சொல்லலாம். ஒருவருடைய கால்கள் தொடர்ந்து நிலையிலோ அல்லது அங்கு இருக்கும் படிக்கட்டிலோ, இடி பட்டு கொண்டே இருந்தாலும், ஒருடைய தலை வாசல் படியில், இடித்துக் கொண்டே இருந்தாலும், அவருக்கு ஏதோ ஒரு பிரச்சனை இருக்கின்றது என்பதை குலதெய்வம் அவருக்கு வலியுறுத்துவதாக அர்த்தம். அடிக்கடி குறிப்பாக கால் கட்டை விரலில், நில வாசப்படியில் இடித்துக் கொள்வார்கள். கொஞ்ச நாள் கழிச்சு பார்த்தா, அவங்களுக்கே தெரியாம ஏதாவது ஒரு பிரச்சினையில் சிக்கி இருப்பாங்க!

அடுத்ததாக, ஒரு மனிதனின் நிம்மதியான தூக்கம் கெடும். தொடர்ந்து உடல் சோர்வினால் தோல்வியை மட்டுமே சந்தித்து வருவார்கள். அவங்க வீட்டிலேயும் சரி, அவங்க மேலேயும் சரி, ஒரு வித்தியாசமான, கெட்ட வாடை வீச ஆரம்பிக்கும். வீட்ல இருக்கிற உடையக்கூடிய பொருட்கள், அடிக்கடி கீழே விழுந்து உடைந்து கொண்டே இருக்கும். எடுத்துக்காட்டாக, கண்ணாடி பொருட்கள் கணவன் மனைவிக்குள் உங்கள், வாழ் நாளில் இல்லாத ஒரு சண்டை உருவாகி, அன்னியூன்னியத்தை கெடுத்துவிடும். சிலபேர் வீட்ல ஒரு பல்லி கூட இருக்காது. இதுவும் அபசகுண குறியீடு தான். மனம் பலவீனம் அடைந்து, எந்த ஒரு செயல்பாட்டிலும், சுறுசுறுப்பாக ஈடுபடாமல், நிம்மதியாக தூங்கவும் முடியாமல், ஒரு சோம்பேறித்தனம் நம் உடம்புக்குள் புகுந்து ஆட்டிப்படைக்கும். உடல் எரிச்சல் ஏற்படும்.

இது எல்லாவற்றையும்விட, உங்கள் வீட்டில் தீபம் ஏற்றி வைத்தீர்கள் என்றால், காற்று வீசவில்லை என்றாலும், அந்த சுடரானது நின்று எரியாது. இப்படிப்பட்ட பிரச்சனைகள் எல்லாம் உங்களுக்கு ஒரு முறை இரண்டு முறை ஏற்பட்டால், பயம் தேவையில்லை. தொடர்ந்து ஏற்பட்டு வரும் பட்சத்தில் உங்களுக்கு பிரச்சனை இருக்கின்றது என்பதை கணித்து விடலாம்.

இப்படிப்பட்ட பிரச்சினைகளை, உங்களுக்கு உருவாக்க வேண்டும் என்று நினைக்கும், உங்கள் எதிரிகள் முதலில் உங்களது குலதெய்வத்தை தான் கட்ட பார்ப்பார்கள். ஆக, உங்களது குலதெய்வ கோவிலுக்கு அடிக்கடி சென்று வர பாருங்கள். குலதெய்வ கோவிலுக்கு சென்று, எலுமிச்சை பழம் வாங்கி வைத்து, அதாவது குலதெய்வம் மடியில் வைத்து, பூஜை செய்துவிட்டு, அந்த எலுமிச்சை பழத்தை வீட்டிற்கு எடுத்து வரவேண்டும். இரண்டு எலுமிச்சை பழங்கள் அவசியம் தேவை. ஒரு எலுமிச்சை பழத்தை உங்கள் வீட்டு பூஜை அறையில் வைத்து விட வேண்டும். ஒரு எலுமிச்சை பழத்தை ஜூஸ் எடுத்து குடித்து விடலாம். 

இப்படி குலதெய்வத்தின் எழுமிச்சைபழம் உங்கள் வீட்டில் வாடிய பின்பு, திரும்ப திரும்ப இதே முறையை பின்பற்றி வரவேண்டும். குலதெய்வம் உங்கள் வீட்டிற்கு வருவதற்கு இது ஒரு சிறந்த வழியாக அமையும். முடிந்தவர்கள், ஏதாவது ஒரு ஜீவ சமாதிக்கு சென்று அங்கேயே தங்கி, உங்களது நேரத்தை செலவழிக்கலாம். உங்களால் முடிந்தால் இரண்டு, மூன்று நாட்கள் கூட ஜீவசமாதியில் தங்கி, உங்களால் முடிந்த சேவைகளை செய்யலாம். நல்ல பலன் இருக்கும். உங்கள் உடம்பில் இருக்கும் எந்த ஒரு தீய சக்தியாக இருந்தாலும் வெளியில் ஓடி விடும்.

குறிப்பாக நாகப்பட்டினத்தில் இருக்கும் கோரக்கர் சமாதிக்கு பவுர்ணமி தினத்தில் சென்று வழிபட்டால் இப்படிப்பட்ட பில்லி, சூனியம் பிரச்சனைக்கு நல்ல தீர்வு கிடைக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது. திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சென்று, கடலில் தலை மூழ்கி விட்டு இரவு தங்கலாம். சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்யலாம். வேப்பிலை, மஞ்சள் தூள் கலந்த தண்ணீரில் தலைக்கு குளித்துவிட்டு, பின்பு வழிபாடு செய்வது மிகவும் சிறப்பு. திருவேற்காடு கருமாரியம்மன் கோவிலுக்கு செல்லலாம். குறிப்பாக அஷ்ட காலபைரவர் கோவிலுக்கு செல்லலாம். இவையெல்லாவற்றையும் விட முக்கியமானது எது தெரியுமா? யாரை கெட்ட சக்தியானது சீக்கிரம் அணுகும்? யாரிடம் மன உறுதி இல்லையோ, மன தைரியம் இல்லையோ, அவர்களை கெட்ட சக்தி கட்டாயம் சீக்கிரம் பிடித்துக்கொள்ளும். மன தைரியத்தோடு, இவையெல்லாம் எதுவுமே இந்த பூமியில் இல்லை என்ற உறுதியோடு தைரியத்தோடு, மன உறுதியோடு இருப்பவர்களுக்கு எந்த கெட்ட சக்தியும் கிடையாது. எந்த கெட்ட சக்தியும் அவர்களை எதுவும் செய்யாது என்பது குறிப்பிடத்தக்கது.

உங்களுக்கு பிரச்சினை என்று வரும் சமயத்தில், யாரை நம்மையும் அதிகப்படியான பணத்தை கொடுத்து ஏமாறாமல், முழுமையான இறை வழிபாட்டை நம்பிக்கையோடு செய்யும் பட்சத்தில் உங்கள் வீட்டில் இருக்கும் கெட்ட சக்தியும் விலகிவிடும். உங்களிடம் இருக்கும் கெட்ட சக்தியும் கட்டாயம் விலகி விடும் என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்...

🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔

           🎪 *ஓம் நமசிவாய* 🎪

🌴🛕🌴🛕🌴🪔🌴🛕🌴🛕🌴
  

_     என்றும் இறைப்பணியில்_

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*

             📲 +919486053609

     🕉️ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ 🕉️
       
       🙆🏻‍♂️ *இறைத்தொண்டு!* 🙆🏻‍♂️

🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴

ஸ்ரீராமனுக்கு கோயில் எடுப்பித்த பத்ராசலம் ராமதாசர்.!!

சிறு வயது முதலே, ராம பக்தியில் ஆழ்ந்தவர் கோபன்னா. அதன் விளைவாக தான தருமங்கள் செய்வதிலும் தாராளமானவராக விளங்கினார் இவர். ஒரு சமயம் பத்ராசலம் என்ற இத்தலத்தில் பாகால டாமக்கா என்ற பெண்மணி வாழ்ந்து வந்தாள். அவளும் ராமனிடம் மிகுந்த பக்தி பூண்டவள். ஒரு சமயம் காட்டினுள் சென்ற டாமக்கா, ஒரு பாம்பு புற்றிலிருந்து ஒளி வெளிப்படுவதை கண்டு திகைத்தாள். உள்ளே தைரியமாகக் கைவிட்டுப் பார்த்தபோது, அவளுக்கு ராமர், சீதை, லட்சுமணர் சிலைகள் கிடைத்தன. அவற்றை வைத்து அவளே ஒரு சிறிய கோயில் கட்டி வழிபட்டு வந்தாள்.

கோபன்னா நேர்மையில் சிகரமானவர். அதனால் எதிரிகளும் அவருக்கு அதிகம். அந்த எதிரிகளில் சிலர் இவரைத் தாக்கி இந்த காட்டில் போட்டு விட்டுச் சென்றனர். அச்சமயம் பாகால டாமக்கா அங்கு வந்து கோபன்னாவிற்குத் தேவையான சிகிச்சைகள் அளித்துக் காப்பாற்றினார். அப்போது அவள் உருவாக்கிய சிறிய ராமர் கோயிலைக் கண்ட கோபன்னா மிகவும் பரவசமடைந்தார். ராமபக்தி மிகவே, தன் மனைவி, மகனுடன் காட்டிற்கு வந்து இந்த ராமரை பூஜித்து வந்தார்.

பத்ராசலம் அந்நாளில் ஹைதராபாத் நிஜாமின் ஆதிக்கத்தில் இருந்தது. அவரிடம் மந்திரியாகப் பணியாற்றிய அக்கன்னாவின் மருமகன்தான் கோபன்னா. தாசில்தாராக வேலை பார்த்து வந்தார்.பதவிதான் தாசில்தார்; ஆனால் அவரது கவனம் முழுவதும் ராம சேவையில்தான்! இதனாலேயே அவர் ராமதாஸ் என்றும் அழைக்கப்பட்டார். 

மகேசனுக்கு சேவை செய்தால் அது மக்களுக்குப் போய்ச் சேரும் என்று நினைத்தாரோ என்னவோ? ராமபிரானுக்கு விழாக்கள் நடத்துவதும், வரும் பக்தர்களுக்கு அன்னதானம் செய்வதுமாக இருந்த அவர், பக்தி மயக்கத்தில், இதற்காக அரசாங்கப் பணத்தை செலவு செய்ததை ஒரு குற்றமாகவே கருதவில்லை. ஆனால் ஹைதராபாத் நிஜாம் அப்படித்தான் கருதினார். ஆதாரத்துடன் கோபன்னா இழைத்த குற்றங்களுக்கு தண்டனை தரும் வகையில் அவரை ஹைதராபாத்துக்கு வரவழைத்து, சிறையில் அடைத்துத் துன்புறுத்தினார். 

இதற்கும் வருத்தப்படவில்லை ராமதாஸர். சிறையில் பலவகையாக துன்பங்களைத் தான் அனுபவித்தாலும், ராம நாம ஜபத்தை மட்டும் அவர் கைவிடவேயில்லை. சிறையிலேயே ராம கீர்த்தனைகள் பலவற்றை இயற்றிப் பாடியும் வந்தார். துன்பத்தால் துவண்டாலும், ராம ஜபத்தால் புத்துணர்வு பெற்றவராகவே திகழ்ந்தார் அவர். அவருடைய துன்பத்தைத் துடைப்பதற்காக ராம - லட்சுமணர்கள் வேடம் புனைந்து நிஜாமை வந்து சந்தித்தார்கள். தாங்கள் பெரிய பணக்காரர்கள் என்றும், கோபன்னா ‘கையாடல்’ செய்த அரசாங்கப் பணத்தைத் தாங்கள் அவர் சார்பில் திரும்ப செலுத்திவிடுவதாகவும், ஆகவே அவரை விடுவிக்க வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார்கள். 

உடனே கோபன்னாவை விடுவித்தார் நிஜாம். அப்போது பளிச்சென்ற ஒளியுடன் பணம் கட்டியவர்கள் மறைந்துவிட, அப்போதுதான் நிஜாமுக்கும் கோபன்னாவின் ராமபக்தி புரிந்தது. தன் வாயால் கோபன்னாவை ‘ராமதாஸ்’ என்று அன்புடன் அழைத்த நிஜாம், அந்தக் கோயிலில் ராமதாஸ் தொடர்ந்து பணியாற்ற அனுமதித்தார்; தேவைப்பட்ட உதவிகளையும் செய்தார்.

அந்த ஆதரவுடனும், மக்களின் ஒத்துழைப்புடனும் (தற்போது கோதாவரி நதிக்கரையில் உள்ள) ராமர் ஆலயத்தை பாகால டாமக்கா விருப்பப்படி, 17ம் நூற்றாண்டில் நிர்மாணித்து, எல்லா விழாக்களையும், பூஜைகளையும் நடத்தினார், ராமதாஸர். அவ்வாறு கோயில் கட்டி வரும் சமயம், மூலவரின் சந்நதிக்கு மேல் கோபுரத்தில் சுதர்சன சக்கரம் அமைப்பதில் கொஞ்சம் சிக்கல் ஏற்பட்டது. அதனால் சற்றே மனம் தளர்ந்தார் ராமதாஸர். அன்றிரவே அவர் கனவில் ராமர் தோன்றி, அதிகாலையில் கோதாவரியில் குளிக்குமாறும், அப்போது அதில் கிடைக்கும் சுதர்சன சக்கரத்தை கருவறை கோபுரத்தில் நிறுவுமாறும் உத்தரவிட்டார். அதன்படியே எல்லாமும் நடந்தன. 

 சிறு குன்றின் மேல் அமைந்துள்ள இத்தலம் கோதாவரி நதிக்கரையில் பசுமையான இயற்கை சூழல் நிறைந்த இடத்தில் அமைந்துள்ளது. 
ஆந்திரப்பிரதேசத்தின் கம்மம் என்ற ஊருக்கு சுமார் 200 கி.மீ தொலைவில் உள்ள இத்தலத்திற்குச் செல்ல பேருந்து வசதிகள் உள்ளன. மேலும், ஹைதராபாத், விஜயவாடா போன்ற இடங்களிலிருந்தும் பேருந்துகள் உண்டு.

இத்தலத்தில் ராமபிரான், தான் திருமால் அவதாரம்தான் என்பதை விளக்கும் வகையில்  சங்கு, சக்கரம் ஏந்தி ஒரு கையில் அம்பு, மற்றொரு கையில் வில்லுடன் சீதா தேவியை தனது மடியில் இருத்தி அமர்ந்த திருக்கோலத்தில் தரிசனமளிக்கிறார். அருகில் இளையவன் நின்ற நிலையில் சேவை சாதிக்கிறார்.

இந்த மலைப்பகுதியில் பத்ரா என்ற முனிவரின் ஆஸ்ரமம் இருந்ததால், இத்தலம் பத்ராசலம் என்றாயிற்று. இத்தலத்தில் ஸ்ரீராமநவமி மிகவும் முக்கியமான விழாவாகக் கொண்டாடப்படுகிறது. பல இடங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான மக்கள் அங்கே கூடி ராமபிரானின் திருவருளைப் பெறுகிறார்கள்.

நிஜாம் காலத்தில், பெருமாளுக்கு நிஜாமே ஆபரணங்கள், வஸ்திரங்கள் கொண்டு வந்து சமர்ப்பித்து விழாவைச் சிறப்பாக நடத்த உதவி வந்தார். இன்றும் இத்தலத்தில் தினமும் இரவு ஏழரை மணிக்கு நடக்கும் தர்பார் சேவை பிரசித்தி பெற்றது. ராமச்சந்திர மூர்த்திக்கு ராஜ உடைகள் அணிவிக்கப்பட்டு, தர்பாரில் எழுந்தருளச் செய்து அன்றைய கோயில் வருமானம் முறைப்படி எண்ணப்படும். அப்போது ராமதாஸரின் கீர்த்தனைகள் இசைக்கப்படும். 

இந்தியாவிலேயே மிகப் பெரிய அளவில் செல்வம் கொழித்த இடமாக ஹைதராபாத் நிஜாமின் அரண்மனை விளங்கியதற்குக் காரணம், ராமபிரானே நேரில் வந்து பொற்காசுகளை நிஜாமுக்கு அளித்ததுதான் காரணம் என்பார்கள். தென்னாட்டில், சிவாலயம் உருவாக்க, மன்னன் கஜானாவிலிருந்து பணத்தை எடுத்து செலவழித்த திருவாதவூரர் போல, வடக்கே ராமதாஸர்...

🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔

           🎪 *ஓம் நமசிவாய* 🎪

🌴🛕🌴🛕🌴🪔🌴🛕🌴🛕🌴
  

_     என்றும் இறைப்பணியில்_

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*

             📲 +919486053609

     🕉️ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ 🕉️
       
       🙆🏻‍♂️ *இறைத்தொண்டு!* 🙆🏻‍♂️

🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴

குலம் தழைக்க அருள்வார் குருநரசிம்மர்.!!

குரு நரசிம்மர்

மஹாவிஷ்ணுவின் அவதாரங்களில், ராம மற்றும் கிருஷ்ண அவதாரங்களை அடுத்து, நான்காவது அவதாரமான நரசிம்ம அவதாரத்திற்கு எண்ணற்ற  ஆலயங்கள் அமைந்துள்ளன, உக்ர, பிரஹ்லாத வரத, யோக நரசிம்மர் என்று பல திருஉருவங்களில் நரசிம்மர் இந்த ஆலயங்களில் எழுந்தருளி  பக்தர்களுக்கு அருட்பாலிக்கிறார். 

ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் நரசிம்மருக்கு எண்ணற்ற ஆலயங்கள் உள்ளன. கர்நாடக மாநிலம், உடுப்பி மாவட்டம், சாலிக்கிராமம் என்ற  சிறிய கிராமத்தில் ஸ்ரீநரசிம்மர் குரு நரசிம்மராக தேவியின்றி எழுந்தருளியிருக்கிறார். இந்த ஊரைச் சுற்றிலும் உள்ள பதினான்கு கிராமங்களில் உள்ள  மக்கள் அனைவருக்கும் இந்த  நரசிம்மரே குலதெய்வமாக மட்டுமின்றி, ஆசார்யாராகவும் அமைந்திருப்பது இத்தலத்தின் தனிச் சிறப்பாகும். 
உடுப்பி மாவட்டத்தின் மிக முக்கியமான யாத்திரைத் தலமாகத் திகழும் இந்த சாலிக்கிராமத்தில் ஸ்ரீகுரு நரசிம்மர் ஆலயம் அமைந்ததன் பின்னணியில்  பல புராணக் கதைகள் கூறப்படுகின்றன.  கந்தபுராணம் ஸஹ்யாத்ரி காண்டம் மற்றும் பத்ம புராணம் புஷ்கர காண்டத்தில் சாலிக்கிராமத் தலம்  பற்றிய  குறிப்புகள் உள்ளதாக தல புராணம் தெரிவிக்கிறது. 

சீதா  மற்றும் கும்காசி நதிகளுக்கு இடைப்பட்ட பிரதேசத்தில்  புராண காலத்தில் முனிபுங்கவர்கள் தவம் செய்து கொண்டிருந்தபோது, புனித  யாத்திரையாக நாரத முனிவர் அங்கு வந்து தங்கினார். ஒருநாள் திடீரென்று பூமி அதிர்ந்து, கடுங்காற்று வீச, பறவைகள், விலங்குகள் எல்லாம் அலறி  பயங்கரமான கூச்சல் போட்டன. முனிவர்கள் இதுகண்டு அச்சமடைந்து, செய்வதறியாது திகைத்து, நாரத முனிவரிடம் தஞ்சமடைந்தனர். 

அப்போது, இப்புனிதத் தலத்தில் பிரம்மாவும் சிவபெருமானும் ஆராதித்த ஸ்ரீநரசிம்மர், சங்கு சக்கரம் ஏந்தி, யோகானந்த நரசிம்மராக, அங்குள்ள சங்கு  சக்கர தீர்த்தங்களுக்கு நடுவே உள்ள அரச மரப் பொந்தில் சுயம்புவாக எழுந்தருளியிருக்கிறார் என்றும் அந்த விக்கிரகத்தை எடுத்து பிரதிஷ்டை செய்து  அனைவரும் வழிபடவேண்டும் என்றும் ஓர் அசரீரி  அவர்களுக்கு உணர்த்தியது. 

நாரதர் பிற முனிவர்களுடன் சேர்ந்து இரண்டு புனித தீர்த்தங்களுக்கிடையே வளர்ந்திருந்த பிரமாண்டமான அரசமரத்தின் கீழ் உள்ள பொந்தில் இருந்த  நரசிம்மர் விக்கிரகத்தை எடுத்து பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்தனர். நரசிம்மர் சாலிக்கிராம சிலாரூபமாக, சுயம்புவாக வெளிப்பட்ட இந்தப் பகுதிக்கு  சாலிக்கிராமம் என்ற பெயரே அமைந்தது. 

 அக்காலத்தில் கடம்ப மன்னர்கள் ஆட்சியின்போது, கோதாவரி நதிக்கரையில் அமைந்திருந்த அஹிசந்திரா என்ற இடத்திலிருந்து லோகாதித்யன்  என்ற மன்னனின் ஆணைப்படி பட்டாச்சார்யர் என்ற வேத விற்பன்னரின் தலைமையில் அந்தணர்கள் அங்கிருந்து வெளிவந்து இந்த சாலிக்கிராமம்  ஊரில் குடியேறினர். இந்தப் புனித தலத்தில் அவர்கள் அதிராத்திரம், பௌண்ட்ரம் போன்ற யாகங்களைச் செய்து வந்தனர். யாகங்கள் துவங்குவதற்கு  முன்பாக கணபதி பூஜை செய்த பட்டாச்சார்யாரின் கனவில் பத்து கரங்களுடன் விநாயகர் தோன்றி அங்கு நாரத முனிவரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட  ஸ்ரீநரசிம்மரை தங்கள் குருவாகக் கொண்டு வழிபட்டு வர ஆணையிட்டார். அவர்களும் அகமகிழ்ந்து ஸ்ரீநரசிம்மரை தங்கள் குருவாக ஏற்றுக் கொண்டனர். 

அப்பகுதியில் யானைகளும், சிங்கங்களும் தங்கள் பகைமையை மறந்து ஒற்றுமையாக இருப்பது கண்டு அதிசயித்த பட்டாச்சார்யார் இந்த ஆலயத்தில்  விநாயகரைப் பிரதிஷ்டை செய்து, இத்தலத்தை நிர்வைர்ய ஸ்தலம் (பகைமையே இல்லாத) என்று அழைத்தார். இந்த ஆலயத்தில் ஸ்ரீநரசிம்மர்,  ஸ்ரீமஹாகணபதி இருவரும் யந்திரத்தின்மீது பிரதிஷ்டை செய்யப்பட்டிருப்பதும், யானையின் அம்சமான விநாயகரும், சிங்கத்தின் அம்சமான நரசிம்மரும்  பிரதான மூர்த்திகளாக அருகருகே இருந்து பக்தர்களுக்கு அருட்பாலிப்பதும் ஒரு சிறப்பாகும். 

பொதுவாக ஆதிசங்கர, ராமானுஜ மற்றும் மத்வ சம்பிராயத்தைச் சேர்ந்தவர்கள் அந்தந்த சம்பிராயத்தைச் சேர்ந்த ஒரு மடாதிபதியை தங்கள்  ஆசார்யராக ஏற்றுக்கொண்டு அவரை வழிபடுவது மரபு. ஆனால் இந்த சாலிக்கிராமம் ஊரைச் சுற்றிலும் உள்ள 14 கிராமங்களில் குடியிருக்கும் கோட்டா  எனப்படும் கோத்திரத்தைச் சேர்ந்த அந்தணர்கள் ஸ்ரீநரசிம்மரையே தங்கள் குருவாக ஏற்றுக்கொண்டு அவரை ஆசார்ய புருஷராக, பரம்பரை  பரம்பரையாக வழிபட்டு வருகிறார்கள். ஸ்ரீஆதி சங்கரருக்கு முன்பாகவே ஸ்ரீநரசிம்மரின் குரு ஸ்தானம் தங்களுக்கு கிடைத்துவிட்டதாக அவர்கள்  கூறுகின்றனர். 

அக்காலத்தில் ஸ்ரீகுரு நரசிம்மர் கிழக்கு நோக்கி கோவில் கொண்டிருந்தார் என்றும், அவர் உக்கிரத்தின் காரணமாக எதிரில் இருந்த வயல்களில்  பயிர்கள் கருகிவிட்டன என்றும், பின்னர் தேவப்ரச்னம் பார்த்து, நரசிம்மரை சாந்தப்படுத்தி மேற்கு நோக்கிப் பிரதிஷ்டை செய்தனர் என்றும் கூறப்படுகிறது. மேலும் அவர் சாந்தமடைய, அவருக்கு நேர் எதிரே ஆலயத்திற்கு வெளியே ஒரு அனுமன் சந்நதியும் நிறுவப்பட்டதாம். 

பொதுவான கன்னட ஆலயம் போன்ற முன் நுழைவாயில், முக மண்டபம், நமஸ்கார மண்டபம், கருவறை என்று அமைந்துள்ள இந்த ஆலயத்தின்,  பிரதான நுழைவாயிலின் மேலே  நடுவில் யோகபட்டத்துடன் கூடிய நரசிம்மர், வலப்புறம் விநாயகர், இடப்புறம் மஹாலட்சுமி, இரு மருங்கிலும்  கருடன், அனுமன் என சுதைச் சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. முக மண்டபத்தை அடுத்து உள்ள சந்நதியின் நுழைவாயிலின் மீதும் ஸ்ரீகுரு  நரசிம்மரின் சுதைச் சிற்பமும் இருபுறங்களிலும் துவாரபாலர்களும் உள்ளனர். 

கருவறையில் ஸ்ரீகுரு நரசிம்மர், இரண்டு கரங்களோடு, அமர்ந்த கோலத்தில் வலக்காலை குத்திட்டு மடித்தும், இடக்காலை மடக்கியும், வலக்கரத்தில்  பிரயோக சக்கரமும், இடக்கரத்தில் சங்கும் ஏந்தி அருட்பாலிக்கிறார். இந்த அரிய விக்கிரகம் எட்டாவது நூற்றாண்டினைச் சேர்ந்தது என்று  கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆலய வளாகத்தில் விநாயகர், துர்க்கா பரமேஸ்வரி சந்நதிகள் உள்ளன. 

அக்காலத்தில் நீதிமன்ற வழக்குகளில் சாட்சி சொல்லவேண்டியவர்கள் இந்த குரு நரசிம்மர் சந்நதிக்கு முன்பாக சாட்சி  சொல்வதும், அதை நீதிபதியே  நேரில் வந்திருந்து பதிவு செய்வதும் வழக்கமாக இருந்ததாம். இவ்வாறு சாட்சி சொல்பவர்கள் புஷ்கரணிகளில் புனித நீராடி, ஈர உடையுடன் சந்நதிக்கு  முன்பாக ஆறு அகல் விளக்குகளை ஏற்றி, சாட்சி சொல்வது ஒரு மரபாக இருந்தது. 

இந்த ஆலயத்தில் 1970 முதல் 2003 வரை பல கட்டங்களில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஒவ்வோர் மாதமும் சுவாதி நட்சத்திரத்தன்று  சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன. நரசிம்ம ெஜயந்தி சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. ஜனவரி மாதம் ஜாத்ரா உற்சவம் பிரம்ம ரத  உற்சவத்துடன் வெகு கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. அப்போது ஏராளமான பக்தர்கள் இங்கு வந்து கூடுகின்றனர். 

இங்குள்ள சக்கர தீர்த்தத்தில் புனித நீராடினால் எதிரிகளைப் பற்றிய பயம், உடல் மற்றும் மன நோய்கள் தீரும் என்றும், சங்க தீர்த்த ஸ்நானம்  பாவங்களைக் கழுவும் என்றும், இரண்டிலும் நீராடினால் செல்வம் பெருகும் என்ற நம்பிக்கை பக்தர்களிடையே உள்ளது. ஸ்ரீகுரு நரசிம்மரை  வழிபடுபவர்கள் அவரை தங்கள் ஆசார்யாக ஏற்றுக் கொண்டு தங்கள் வீடு களில் நடைபெறும் விசேஷங்களில் குரு நரசிம்மருக்கு காணிக்கை  எடுத்து  வைக்கும் வழக்கம் உள்ளது. 

கர்நாடகா மாநிலம், உடுப்பி மாவட் டத் தலைநகரான உடுப்பியிலிருந்து 21 கி.மீ. தொலைவிலும், மங்களூரிலிருந்து 80 கி.மீ. தொலைவிலும்  சாலிக்கிராமம் அமைந்துள்ளது. உடுப்பி  செல்வோர் இந்த  ஸ்ரீகுரு நரசிம்மர் ஆலயத்திற்கும் சென்று தரிசித்து வரலாம். ஆலயம் காலை 6 முதல் 1  மணிவரையிலும், மாலை 4 முதல் இரவு எட்டு மணிவரையிலும் திறந்திருக்கும்...

🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔

           🎪 *ஓம் நமசிவாய* 🎪

🌴🛕🌴🛕🌴🪔🌴🛕🌴🛕🌴
  

_     என்றும் இறைப்பணியில்_

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*

             📲 +919486053609

     🕉️ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ 🕉️
       
       🙆🏻‍♂️ *இறைத்தொண்டு!* 🙆🏻‍♂️

🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴

வினைகள் தீர்க்கும் விநாயகர் தலங்கள்.!!

விநாயகர்

மதுரையிலிருந்து 20 கி.மீ தொலைவில் திருபுவனம் கோட்டை எனும் இடத்தில் விநாயககோரக்கர் அருள்கிறார். நோய்களைத் தீர்ப்பதிலும் சனி தோஷம் தீர்ப்பதிலும் விநாயகர் வடிவில் உள்ள கோரக்க சித்தர் அருள்கிறார்.

ராமநாதபுரம் உப்பூரில் வெயிலுகந்த விநாயகர் அருள்கிறார். தட்சிணாயன காலங்களில் இந்த விநாயகரின் தெற்கு பகுதியிலும் உத்திராயண காலங்களில் வடக்கு பகுதியிலும் கதிரவன் தன் கிரணங்களால் இந்த விநாயகரை வணங்குகிறான். 

கிருஷ்ணகிரியில் உள்ள பாகலூரில் விநாயகப் பெருமான் சிவலிங்க ஆவுடையாரின் மேல் வலது கையில் ஒடிந்த தந்தத்துடனும் இடக்கையில் கொழுக்கட்டையுடனும் ஈசான்ய திக்கை நோக்கி அமர்ந்தருள் புரிகிறார்.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சேரன்மாதேவியில் உள்ளது மிளகு பிள்ளையார் ஆலயம். மழை பொய்த்தால் இவரது உடலில் மிளகை அரைத்துத்தடவி அபிஷேகம் செய்வித்தால் உடனே மழைபொழியும் அற்புதம் நிகழ்கிறது. 

மதுரை கீழமாசி வீதியில் மொட்டை விநாயகரை தரிசிக்கலாம். பார்வதியால் அவள் காவலுக்குப் படைக்கப்பட்ட சிறுவனின் தலையை ஈசன் அறியாமல் கொய்தார். அவர் மொட்டை விநாயகராக இத்தலத்தில் அருள்வதாக ஐதீகம். இத்தலத்தில் திருவுளச்சீட்டு போட்டுப் பார்ப்பது வழக்கமாக உள்ளது.

விழுப்புரம், தீவனூரில் நெற்குத்தி விநாயகர் லிங்க வடிவில் அருள்கிறார். லிங்கத்திருமேனிக்கு அபிஷேகம் செய்யும் போது அதில் உள்ள விநாயகரை தரிசிக்கலாம். 

நாகப்பட்டினம் செண்பகபுரியில் உள்ளது ஆதிகும்பேஸ்வர சுயம்பு விநாயகர் ஆலயம். இவர் சந்நதி கோஷ்டங்களில் மும்மூர்த்திகளும் அருள்வது வித்தியாசமான அமைப்பு.

தூத்துக்குடி, ஆறுமுகமங்கலத்தில் ஆயிரெத்தெண் விநாயகர் அருள்கிறார். இத்தல சித்திரை மாத பிரம்மோற்சவத்தின் ஏழாம் நாள் பஞ்சமுக ஹேரம்ப கணபதி நடராஜப் பெருமானுடன் திருவீதியுலா வருகிறார்.

கோயமுத்தூர் மத்தம்பாளையத்தில் காரண விநாயகரை தரிசிக்கலாம். இக்கோயிலில் விநாயகர் அருகில் நந்தியம்பெருமான் வீற்றிருப்பது தனிச் சிறப்பு.

சேலம் மாவட்டம், ஆத்தூரில் தலையாட்டி கணபதி எனும் காவல் கணபதியை தரிசிக்கலாம். இவர் தலையை ஆட்டும் விதமாக இடதுபுறம் சாய்ந்தபடி அருள்கிறார். 

சிதம்பரத்திலிருந்து 17 கி.மீ. தொலைவில் உள்ள திருநாரையூரில் அருள்கிறார் பொள்ளாப் பிள்ளையார். நம்பியாண்டார் நம்பிக்கு அருள்புரிந்த விநாயகர் இவர். ராஜராஜசோழனுக்கு சைவத் திருமுறைகளைத் தொகுக்க உதவியவர். உளியால் செதுக்கப்படாத (பொள்ளா) பிள்ளையார்.

தஞ்சாவூர், கணபதி அக்ரஹாரத்தில் விநாயகர் சதுர்த்தி விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது. இப்பகுதி மக்கள் தங்கள் வீடுகளில் விநாயகசதுர்த்தியைக் கொண்டாடுவதில்லை. இந்த ஆலயத்திலேயே வந்து கொண்டாடுகின்றனர்.

ஓசூர்&பேரிகை பாதையில் பாகலூர் ஏசியன் பேரிங் கம்பெனி அருகில் மாடி விநாயகர் அருள்கிறார். இவர் சந்நதியில் இருபுறங்களிலும் பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகரும், மலைக்கோட்டை மாணிக்கவிநாயகரும் சந்நதி கொண்டுள்ளனர். 

திருச்சி உச்சிபிள்ளையார் கோயிலின் அடிவாரத்தில், மாணிக்க விநாயகர் கோயில் உள்ளது. இந்த பிள்ளையாருக்குக் கீழே யந்திர பிரதிஷ்டை செய்துள்ளார்கள்.

திருவையாறுக்கு அருகேயுள்ள திருவேதிக்குடி வேதபுரீஸ்வரர் கோயிலில் வேத விநாயகர் அருட்பாலிக்கிறார். இவர் வேத கோஷத்தை சற்றே செவியை சாய்த்த வண்ணம் கேட்பதால் செவிசாய்த்த விநாயகர் என்கிறார்கள்.

கும்பகோணம், ஆடுதுறைக்கு அருகேயுள்ள மருத்துவக் குடியில் தேள் போன்ற வடிவமைப்பில் விருச்சிகப் பிள்ளையார் அருள்கிறார். 

திருச்சிக்கு அருகேயுள்ள பிட்சாண்டார் கோயிலில் சிம்ம வாகனத்தின் மீது பஞ்சமுக விநாயகர் ஐந்தடி உயரத்தில் அருட்கோலம் காட்டுகிறார். 

தஞ்சை மாவட்டம் பேராவூரணியில் மராட்டிய மன்னர் துளசாஜி மகராஜாவால் கட்டப்பட்ட நீலகண்ட விநாயகரை தரிசிக்கலாம். நீலகண்டரின் பிள்ளையாதலால் நீலகண்ட பிள்ளையார் என்றழைக்கப்படுகிறார். 

தஞ்சாவூர் கீழவாசலில் வல்லப அம்பிகா சமேத சுவேத விநாயகர் (வெள்ளை விநாயகர்) ஆலயம் அமைந்துள்ளது. ஆயிரம் ஆண்டுகட்கு முன் சோழர்களால் வழிபட்ட இந்த விநாயகருக்கு கோட்டை விநாயகர் என்றும் பெயருண்டு...

ந. பரணிகுமார்

🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔

           🎪 *ஓம் நமசிவாய* 🎪

🌴🛕🌴🛕🌴🪔🌴🛕🌴🛕🌴
  

_     என்றும் இறைப்பணியில்_

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*

             📲 +919486053609

     🕉️ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ 🕉️
       
       🙆🏻‍♂️ *இறைத்தொண்டு!* 🙆🏻‍♂️

🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴

குறைகள் களைவார் கோதண்டராமர்.!!

புன்னை நல்லூர்

தனிச் சிறப்பு பெற்று விளங்கும் ராமர் கோயில்களில் ஒன்று தஞ்சை அருகே புன்னைக்காடு என்ற புன்னை நல்லூரில் உள்ளது. பெயர் கோதண்டராமர் திருக்கோயில். தஞ்சாவூரை ஆண்ட மராட்டிய மன்னரான பிரதாபசிங் ராஜாவால், சமுத்திரத்தின் வடகரையில் கட்டப்பட்டது. கலை நுணுக்கத்துடனும், திருப்பொலிவோடும் கூடிய பல்வேறு சிற்பங்களும், வானளாவிய 5 நிலைகளையும் கொண்ட ராஜகோபுரம் கம்பீரமாக நிற்கிறது. 

 அழகிய வட்டக்கல்லின் மேல் அமைக்கப்பட்டுள்ள கொடிமரத்தின் அடிப்பகுதியில் கிழக்குப் பக்கம் சீதை,  ராமருடன் லட்சுமணரும், தெற்குப் பக்கம் சங்கும், மேற்கு பக்கம் நாமமும், வடக்குப் பக்கம் சக்கரமும் அழகிய வேலைப்பாட்டுடன் புடைப்புச் சிற்பங்களாக அமைக்கப்பட்டுள்ளன. மண்டபத்தின் உட்புற சுவர்களில் கருடாழ்வார், ஆஞ்சநேயருடன், ராமர் பட்டாபிஷேக காட்சிகள் தஞ்சை பாணி ஓவியங்களாக வரையப்பட்டுள் ளன. பெரும் சக்தி வாய்ந்த கருடாழ்வார் தம்மை வேண்டுவோர் அனைவருக்கும் அருட்பாலிக்கும் விதமாக  கொடிமரத்தின் அருகிலேயே அமைந்துள்ளார். அர்த்த மண்டபத்தின் நுழைவாயிலின் முன்பு துவார பாலகர்களும், தென்புறத்தில் விஷ்வக்சேனரும் எழுந்தருளியுள்ளனர். 

தஞ்சாவூரை ஆண்ட மராட்டியர்களின் நிர்வாகத் திறமையையும், பக்தி நெறியையும் பாராட்டும் விதமாக ஏதாவது பரிசு கொடுக்க வேண்டும் என விரும்பிய நேபாள மன்னர் ஒருவர், சாளக்கிராம கல்லினால் ஆன ராமர், லட்சுமணர், சீதாதேவி, சுக்ரீவன் ஆகிய திருவுருவங்களை வழங்க, அவையே மூலவர்களாக பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. 

ராமனின் தாமரை மலர் போன்ற திருமுக மண்டலம், மணிகள் அசைந்தாடி சிற்றொலி எழுப்பும் வளைந்த கோதண்டத்தை லாவகமாக கையில் ஏந்தியிருக்கும் எழிற்பாங்கு, மூன்று வளைவுடன் கூடிய திருமேனி ஆகியவை பக்தி உணர்வுடன் கலை உணர்வையும் தூண்டி நம்மை பரவசத்தில் ஆழ்த்துகின்றன. வலப்புறம் சாமுத்ரிகா லட்சணத்துடன் சீதாதேவியும், இடப்புறம் அண்ணன் சேவைக்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்ட இளவல் லட்சுமணனும், சுக்ரீவனும் சாளக்கிராம கல்லில் மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளனர். 

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நீடாமங்கலம் அருகே உள்ள பூவனூர் கிராமத்திலிருந்து ராமர், சீதாதேவி,  பூதேவி ஆகியோர் பூமியிலிருந்து உற்சவர்களாக தோன்றினர். அவர்கள் புன்னைநல்லூருக்கு கொண்டு வரப்பட்டனர். மூலவர் மூர்த்திகளின் அருகிலேயே இவர்கள் வைக்கப்பட்டனர். இந்த உற்சவ மூர்த்திகளின் அருகிலேயே லட்சுமணன், ஆஞ்சநேயர் ஆகியோர் திருவுருவங்களும் உற்சவ மூர்த்திகளாய் எழுந்தருளியிருக்கின்றன. மனக்குறையோடு இந்த கோதண்டராமரிடம் வருவோர், அவரை தரிசித்த அந்தக் கணமே குறைகள் நீங்கியவராய், மனம் தெளிந்து செல்வது இத்தலத்தின் அருள் நடைமுறையாக உள்ளது. தஞ்சாவூர் - நாகை சாலையில் தஞ்சாவூரிலிருந்து 6 கி.மீ. தூரத்தில் புன்னைநல்லூர் உள்ளது...

- ஆ. அன்னவயல்

🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔

           🎪 *ஓம் நமசிவாய* 🎪

🌴🛕🌴🛕🌴🪔🌴🛕🌴🛕🌴
  

_     என்றும் இறைப்பணியில்_

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*

             📲 +919486053609

     🕉️ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ 🕉️
       
       🙆🏻‍♂️ *இறைத்தொண்டு!* 🙆🏻‍♂️

🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴

அப்படி ஒரு பக்தி.!!

தன் உள்ளத்தில் கோயில் கட்டி குடி வைத்துள்ள கோதண்டராமரை, யுகம் யுகமாகத் தனது நெஞ்சில் சுமக்கும் ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியை மீண்டும் ஒருமுறை மண் மீது தரிசிக்கும் ஆசையில் அனுமன் தற்போது ஆந்திராவில் உள்ள அகோபிலம் திருத்தலத்தில் ஒரு கருங்காலி மரத்தின் அடியில் தவத்தில் ஆழ்ந்திருந்தார்.

நீண்ட நெடுங்காலம் தொடர்ந்த அந்த தவத்தை அன்று நிறைவு செய்ய முடிவு செய்தது பரம்பொருள். அது மட்டுமா ?.

தன் அன்புக்குரிய அடியவனாம் அனுமனுடன் கொஞ்சம் விளையாடிப் பார்க்கவும் சித்தம் கொண்டது. சூரிய கோடிப் பிரகாசத்துடன் வாயு மைந்தனின் முன் திருக்காட்சி தந்தது.

ஆவலுடன் கண்விழித்தார் ஆஞ்சநேயர். மறு கணம் அவர் புருவங்கள் உயர்ந்தன. தேவர்களும் ரிஷிகளும் தவமாய் தவம் கிடந்தும் கிடைக்காத பகவானின் தரிசனத்தால் மகிழ்வதற்குப் பதிலாகக் குழப்பத்தில் ஆழ்ந்தார் வாயுவின் மகன் ஆஞ்சநேயர்.

இருக்காதா பின்னே ! ஸ்ரீ ராமனைத் தரிசிக்கும் ஆவலுடன் கண் திறந்தால்… மிரட்டும் விழிகளும் கோரைப் பற்களும் சிங்க முகமுமாக ஸ்ரீ நரசிம்ம மூர்த்தி அல்லவா காட்சி தருகிறார் ?!.

ஸ்ரீ ராமனைக் காணாத ஏமாற்றத்தால் அனுமனின் முகம் வாடிப் போனது. என் ராமன் எங்கே ? என்பது போல் ஸ்ரீ நரசிம்ம ஸ்வாமியின் திருமுகத்தை நோக்கினார் ஆஞ்சநேயர்.

இறை மலர்ந்தது.
நானும் ராமனும் ஒருவர்தானே என்று அனுமனிடம் சொல்வது போல் தலையசைத்துப் புன்னகைத்தார்.

அந்த இறைமொழி புரிந்தது என்றாலும், அஞ்சனை மைந்தனுக்கு மனம் ஒப்பவே இல்லை. அழகின் உறைவிடமான என் ராமன் எங்கே?.கோரைப் பற்களும் கோர முகமும் கொண்ட இவர் எங்கே ! கருணை பொழியும் ஸ்ரீ ராமனின் திருமுகம் பகைவரையும் ஈர்க்குமே ! அவரும் இவரும் ஒருவரே என்பதை எப்படி ஏற்க முடியும் ? – அனுமனின் மனக் குழப்பம் தீரவில்லை.

அசுரர்களையே குலை நடுங்கச் செய்த தலம் இது. அரக்கர் தலைவன் ஹிரண்யகசியுவின் கதை முடித்த தலம். இங்கு, உக்கிரமான இந்தக் கோலத்தில் அருள்வதே சிறப்பு என்ற பரம்பொருளின் எண்ணம். ராம பக்தியால் அனுமனுக்குப் புரியவில்லையோ !. ஸ்ரீராமன் எனும் வடிவில் பரம்பொருளை ஆராதித்துப் பழக்கப்பட்ட அவர் மனம், இவரும் அவரும் ஒன்றே என்று ஏற்க மறுத்தது !

விண்ணும், மண்ணும், இந்தப் பால் வெளியும், பஞ்ச பூதங்களும், சர்வ மார்க்கங்களும், சகல தேவர்களும் எனது அம்சமே !.
அணு முதல் அண்டபகிரண்டம் அனைத்தும் எனது சாந்நித்தியமே !.
இது வேறு, அது வேறு என்ற பாகுபாடு இங்கில்லை என்பதை அனுமனுக்கு மட்டுமல்ல, நம் எல்லோருக்கும் உணர்த்த எண்ணிய இறை, ஒரு காரியம் செய்து. திருக்கரத்தில் வில்லேந்தி காட்சி தந்தது. நன்றாக என்னை உற்றுப் பார் என்று ஆணை இட்டது.

அனுமனும் உற்று நோக்கினார்!. ஸ்ரீநரசிம்மரும், ஸ்ரீராமனும் நாராயணரின் அவதாரம்தான் என்பதை ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு விளக்கும் விதமாக, சிரத்துக்கு மேல் ஆதிசேஷன் படம் விரித்துக் குடைபிடிக்க… வலக் கரத்தில் சக்கரமும், இடக் கரத்தில் கோதண்டமும் திகழ அற்புதமாய் அருட்காட்சி தந்தார் ஸ்ரீநரசிம்மர்.

அனுமனுக்கு உண்மை புரிந்தது.
தான் போற்றும் பரம்பொருளே இவர்தான் என்று உணர்ந்தார். கண்ணீர் மல்க நெடுஞ்சாண் கிடையாக விழுந்து நமஸ்கரித்தார்.

அனுமனுக்கு அன்று காட்சி கொடுத்த ஸ்ரீநரசிம்மரை வில்லேந்திய அதே திருக்கோலத்தில், இன்றைக்கும் நாம் அகோபிலத்தில் தரிசிக்கலாம். கருங்காலி மரத்தடியில் அனுமனுக்குக் காட்சி தந்தால், இந்த நரசிம்மருக்கு ஸ்ரீகரஞ்ச நரசிம்மர் என்றே திருநாமம். கரஞ்சை என்றால் கருங்காலி என்று பொருளாம்...

ஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம்

🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔

           🎪 *ஓம் நமசிவாய* 🎪

🌴🛕🌴🛕🌴🪔🌴🛕🌴🛕🌴
  

_     என்றும் இறைப்பணியில்_

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*

             📲 +919486053609

     🕉️ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ 🕉️
       
       🙆🏻‍♂️ *இறைத்தொண்டு!* 🙆🏻‍♂️

🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴