Sunday, 1 September 2019

விநாயகர் வலது கையில் ஸ்வஸ்திக்குறி ஏன்?

இந்த உலக தர்மங்களைத் கடைபிடித்து வாழவேண்டும் என்று விநாயகர் ஸ்வஸ்திகத்தை கையில் வைத்துக் கொண்டு உணர்த்துகிறார்.


விநாயகர் ஜாதகம்

விநாயகர் ஆவணியில் சதுர்த்தியில் அவதரித்த நாளையே விநாயகர் சதுர்த்தியாக கொண்டாடி மகிழ்கிறோம். இவர் கன்னி ராசிக்கு உரியவர். கடகத்தில் குருவும், மகரத்தில் செவ்வாயும் கன்னியில் புதனும் உச்சம் பெற்றுள்ளனர். சூரியன் சொந்த வீடான சிம்மத்தில் உள்ளார். செவ்வாய் சூரிய விருச்சிகமே இவரது லக்னம். உத்திராடத்திற்கு இவர் அதிதேவதையாகத் திகழ்கிறார். இவரது ஜாதகத்தை வழிபட்டால் இந்த நட்சத்திரத்தினர் பலன் பெறுவர் என்பது ஐதீகம்.

யுகங்களில் தோன்றும் கணபதிகள்

விநாயகர் கிருதயுகத்தில் தேஜஸ்வி என்ற பெயரில் சிம்மவாகனத்தில் தோன்றினார். த்ரேதா யுகத்தில் மயூரேஸ்வராக மயில் வாகனத்தில் தோன்றினார். துவாபர பாகத்தில் கஜனை ராக மூஞ்சுறு வாகனத்தில் தோன்றினார். கலியுகத்தில் பிள்ளையாராக எலி வாகனத்தில் விநாயகர் அருள்பாலித்து வருகிறார்.

‘உ’ என்பது யஜுர் வேதத்தின் சாரம். ஒரு செயல் தொடங்குவதிலிருந்து, முறையாக நடந்து, சரியாக முடிந்து, நிறைவான பலன் கிட்டும் வழியை விரிவாகச் சொல்கிறது இந்த வேதம். முன்வினை, பின்வினை, செய்வினை என்ற எல்லா வினைகளுக்கும் நாயகன் விநாயகன். ஆக்கம் கொண்ட சிந்தனைக்கு ஊக்கத்தை அளித்து, எந்தத் தொந்தரவும் இன்றி அந்தச் செயல் தொடரவும் வளரவும், வளர்வதைக் காக்கவும் செய்யும் திறன் இந்த விநாயகன் அருளால் கிடைக்கிறது. ஆகவேதான், எந்தச் செயலையும் தொடங்கும் முன்பாக பிள்ளையார் சுழி போட்டுத் தொடங்குகிறோம்.

வலது கையில் ஸ்வஸ்திக்குறி ஏன்?

ஸ்வஸ்திகம் என்பது இந்த உலகத்தின் நான்கு திசைகளிலும் இறைவன் அருளாட்சி செய்வதைக் குறிக்கிறது. அதில் உள்ள ஒவ்வொரு வளைவும் கூறும் தத்துவம் உயர்வானது. ஆன்மாவானது ஞானம் யோகம், சரியை, கிரியைகளைத் தாண்டி பகவானிடம் நெருங்க வேண்டுமானால் பஞ்ச பூதங்களான நீர், நிலம், காற்று, நெருப்பு, ஆகாயம் ஆகியவற்றைக் கொண்ட இந்த உலக தர்மங்களைத் கடைபிடித்து வாழவேண்டும் என்று விநாயகர் ஸ்வஸ்திகத்தை கையில் வைத்துக் கொண்டு உணர்த்துகிறார்.

யானைத்தலை விளக்கம்

தலை என்பது உள் அவயங்களான மூளை, கண், காது, வாய், மூக்கு என முக்கியமான உறுப்புகளைத் தன்னுள் கொண்ட ஒரு கூட்டமைப்பு.

அறிவின் இருப்பிடத்தை விசாலமான நுண்ணறிவை, பேரறிவை, காக்க அமைந்ததே யானைத் தலை.

யானைத் தலை யானின் தலையில் கிரீடம் சூடி அவரை வணங்கும் மக்களுக்கு ராஜபோக வாழ்வு கிட்டும்...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  

     என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

ஓணம் திருவிழாவின் வரலாறு தெரியுமா?

கேரள மக்கள் ஆண்டுதோறும் கோலாகலமாக கொண்டாடும் ஓணம் பண்டிகை புராண காலத்தைய தொடர்புடையது. விஷ்ணுவின் அவதாரங்களில் ஒன்றான வாமன அவதாரம் நிகழ காரணமாக இருந்த நிகழ்வே இந்த ஓணம் பண்டிகையின் மூல காரணமாக உள்ளது.

அதாவது, முன்னொரு காலத்தில், சிவாலயத்துள் எரிந்து கொண்டிருந்த விளக்கின் திரியைத் தூண்டி, பிரகாசமாக எரிய  உதவி  செய்தது ஒரு எலி. அந்த எலிக்கு மூன்று லோகத்தையும் ஆட்சி செய்யும் அதிகாரத்தை வழங்கினார் சிவபெருமான். அந்த எலியானது மறு பிறப்பில் மகாபலி என்ற என்ற பெயருடன் மன்னனாக பிறந்து, சக்ரவர்த்தியாகி மூவுலகையும் சிறப்பாக ஆட்சி புரிந்தது.

மகாபலி மன்னனின் ஆட்சியில் மக்கள் மகிழ்ச்சியுடன் வாழ்ந்தனர். அசுரகுலத்தின் வாரிசான மகாபலி மன்னனின் வளர்ச்சியைக் கண்ட தேவர்கள், மகாபலி மன்னனுடன் போரிட்டனர். போரில் அசுர குலம் ஜெயிக்கவே, தேவர்குலம் பயந்து திருமாலிடம் முறையிட்டனர். திருமாலை மகனாக அடைய வேண்டி, காசிப முனிவரின் மனைவியான திதி என்பவள் வரம் கேட்க, அதன்படியே அவர்களுடைய மகனாக வாமன அவதாரம் எடுத்தார் திருமால். 
அசுர குலத்தினனாக  இருந்த போதிலும்,  தான தர்மங்களிலும், யாகங்கள் நடத்துவதிலும் மகாபலி மன்னன் சிறந்தவனாக விளங்கினான். அதனை தமக்கு சாதகமாக பயன்படுத்த நினைத்த வாமனன், மகாபலியின் அரண்மனைக்குச் சென்று, தான் தவம் செய்வதற்காக மூன்றடி மண் கேட்டார். வந்திருப்பது கடவுள் அவதாரமான வாமனன்  என்பதை அறிந்த அசுரகுருவான சுக்கிராச்சாரியார், தானம் தர ஒப்புக்கொள்ள வேண்டாமென மகாபலியை தடுத்தார்.

இறைவனே தம்மிடம் கையேந்தி நிற்பதை அறிந்த மகாபலி, குரு சொன்னதை கேளாமல், மூன்றடி மண் தானம் தர ஒப்புக் கொண்டார். உடனே திரிவிக்கிரம அவதாரம் எடுத்த திருமால், ஓரடியால் பூலோகத்தையும், மற்றொரு அடியால் தேவலோகத்தையும் அளந்து, மூன்றாவது அடிக்கு இடமில்லையே என்றுக் கூற, மகாபலி மன்னன் தன் தலைமேல், மூன்றாவது அடியை அளக்குமாறு கூறினார்.
அதன்படி அவர் சிரம் மீது கால்வைத்து, வாமனர்  அழுத்த, அவர் பாதாள லோகத்திற்குள் சென்றார். அந்த சமயத்தில் மகாபலி சக்ரவர்த்தி, வாமனனிடம் தான் ஆண்டுக்கு ஒருமுறை மக்களை வந்து பார்க்க வேண்டும் என வரம் கேட்டார். அதற்கு வாமனனும் வரமளித்தார். 

அப்படி தன் மக்களை மகாபலி சக்ரவர்த்தி காண வரும் நாளே ஓணம் திருநாளாக கொண்டாடப்படுகிறது. தங்களை காண வரும் மன்னனை வரவேற்கவும், தாங்கள் மகிழ்ச்சியாக இருப்பதை காட்டவும் மலையாள மக்கள் வாசலில் பூக்களால் கோலமிட்டு, அதில் தீபம் ஏற்றி வழிபடுகின்றனர்.
இந்த திருநாளில், கேரள மக்களின் மகிழ்ச்சியை காண வரும் மகாபலி மன்னர் ஆசிர்வாதங்களையும், செல்வங்களையும் வாரி வழங்குவர் என்பது ஐதீகம்...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  

     என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

விநாயகர் வித்தியாசமானவர்.!!

விநாயகர் சதுர்த்தி அன்று அவருக்கு நடத்தப்படும் வழிபாடுகள் வித்தியாசமானவை. ஏனெனில் விநாயகரே வித்தியாசமானவர்தான்.


தெய்வங்களுக்கு எல்லாம் தெய்வமாய் வணங்கப்படப்படுபவர் விநாயகர். அதனால் தான் அவரை “முதல் கடவுள்” என்கிறோம். ஒரு காலத்தில் “கணாதிபத்யம்“ என்ற பெயரில் தனி சமயமாக விநாயகர் வழிபாடு இருந்தது. அனைத்து தெய்வங்களின் வழிபாடு ஒருங்கிணைக்கப்பட்ட போது தனக்கென உள்ள ஆலயத்தில் முதன்மை தெய்வமாகவும், சிவன் கோவில்களில் பரிவார தெய்வமாகவும், பெருமாள் கோவில்களில் பாதுகாப்பு தெய்வமாகவும் விநாயகர் வணங்கப்படுகிறார்.

விநாயகருக்கு ஆண்டுக்கு ஒரு தடவை நடத்தப்படும் விநாயகர் சதுர்த்தி விழா பிரசித்திமானது. இந்த ஆண்டுக்கான விநாயகர் சதுர்த்தி விழா செப்டம்பர் 2-ந்தேதி (திங்கட்கிழமை) நாடெங்கும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.

விநாயகர் திங்கட்கிழமை பிறந்தவர். இந்த ஆண்டு விநாயக சதுர்த்தி விழா திங்கட்கிழமை வருகிறது. எனவே இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா இரட்டிப்பு சிறப்புப் பெற்றுள்ளது.

அன்று அவருக்கு நடத்தப்படும் வழிபாடுகள் வித்தியாசமானவை. ஏனெனில் விநாயகரே வித்தியாசமானவர்தான். அவரது உருவத் தோற்றம் மனித உடல் யானை தலையுடன் வித்தியாசமானது. அவரை தோப்பு கரணம் போட்டு, தலையில் குட்டி நாம் செய்யும் வழிபாடு வித்தியாசமானது.

அவருக்காக செய்யப்படும் விதம், விதமான அலங்காரங்கள் வித்தியாசமானவை. அவருக்கு படைக்கப்படும் நைவேத்தியங்கள் வித்தியாசமானவை. மொத்தத்தில் விநாயகர் வழிபாடு வித்தியாசங்கள் நிறைந்ததாக இருப்பது தெரியும்.

விநாயகரை எந்த இடத்திலும் நிறுவி வழிபடலாம். எந்த அளவிலும் செய்து வழிபடலாம்...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  

     என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

விநாயகர் சதுர்த்தி : ‘அண்ணனுக்கும்’ ஆறுபடை வீடு.!!

1. அல்லல்போம் விநாயகர்


கிரிவலத்துக்கு புகழ் பெற்ற திருவண்ணாமலையில் உள்ள அருணாச்சலேஸ்வர் கோயிலில் உள்ள ‘அல்லல்போம் விநாயகர்’ சன்னதியே விநாயகரின் முதல் படை வீடு என்கின்றனர். ‘அல்லல்’ - துன்பம், ‘போம்’ - நீக்குதல். அதாவது, தீராத துன்பத்தில் தவிப்பர்கள் இந்த அல்லல்போம் விநாயகரை தரிசித்தால் துன்பம் நீங்கும் என்பது ஐதீகம்.

2. ஆழத்து பிள்ளையார்

தமிழகத்தில் சிவன் சுயம்புவாய் வீற்றிருக்கும் பிரபல தலங்களுள் ஒன்றான, விருத்தாசலம், விருத்தகிரீஸ்வரர் கோயிலின், முதல் பிரகாரத்தில் இந்த ‘ஆழத்து பிள்ளையாரும்’ அமர்ந்திருக்கிறார். இதுதான் 2ம்படை வீடு. பெயருக்கேற்ற மாதிரியே 18 அடி பள்ளத்தில் வீற்றிருக்கும் இவரை வணங்கினால் வளமான கல்வி, செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை.

3. கள்ள வாரணப்பிள்ளையார்

நாகை மாவட்டம், திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயில், கள்ளவாரணப்பிள்ளையார் வீற்றிருக்கிறார். எதுக்கு இந்த பெயராம்? அதாவது, பாற்கடலை கடைந்து எடுத்த அமிர்தத்தை, மகாவிஷ்ணு அனைவருக்கும் பகிர்ந்துள்ளார். தனக்கு முதலில் படைக்காமல் மற்றவர்களுக்கு விநியோகிப்பதா என்ற செல்லமான கோபத்தில் அமிர்த குடத்தை ஒளித்து வைத்தாராம். அதனால்தான் அந்த பெயராம் (என்னா ஒரு கள்ளத்தனம்). ஆயுள் வேண்டி இந்த 3ம் படை விநாயகரை பக்தர்கள் வணங்குகின்றனர். 

4. சித்தி விநாயகர்

மதுரை மீனாட்சியம்மன் கோயில், அம்மன் சன்னதியில் சித்தி விநாயகர் வீற்றிருக்கிறார். ‘நரியை பரியாக்கிய லீலை’ கேள்விப்பட்டிருப்பீர்கள். அந்த லீலை நடப்பதற்கு முன்பு மாணிக்கவாசகர், இந்த சித்தி விநாயகரைத்தான் வணங்கி சென்றாராம். எண்ணிய சிந்தனைகள் வெற்றியை தருவதே இந்த நான்காம் படை நாயகரின் சித்தம் என்கின்றனர் ஆன்மிகவாதிகள்.

5. கற்பக விநாயகர் கோயில் 

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே உள்ள பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் 5ம் படை வீடாக கருதப்படுகிறது. சுமார் 1,600 ஆ‌ண்டுகளு‌க்கு மு‌ன், குடவரை‌  கோ‌யிலாக‌ க‌ட்ட‌ப்ப‌ட்ட ‌முதல் பிள்ளையார் தலமென போற்றப்படுகிறது. இங்கு 6 அடியில் பிரமாண்ட வலம் சுழி விநாயகர் வீற்றிருக்கிறார். வலது கையில் சிவலிங்கம் வீற்றிருப்பது விசேஷம். இங்கு சதுர்த்தி விழாவில் நடக்கும் சந்தனக்காப்பு மிகவும் பிரபலமானது. கஜமுகாசுரனை‌ கொ‌ன்ற ‌பாவம் தீர விநாயக‌ர், தந்தை ஈசனுக்கு பூஜை செய்த தலமிது என்றும் கூறப்படுகிறது. கல்வி, செல்வம், குழந்தைப்பேறு வேண்டி இத்தலங்களுக்கு ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.

6. பொள்ளாப்பிள்ளையார்

கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் அருகே திருநாரையூரில் பொள்ளாப்பிள்ளையார் சன்னதி உள்ளது. இங்கும் மூலவர் சிவனாக இருந்தாலும், விநாயகரே முக்கியத்தவம் பெறுகிறார். ‘பொள்ளா’ என்றால் ‘உளியால் செதுக்காத’ என்று அர்த்தமாம். அதாவது, உளியால் செதுக்காமல் சுயம்புவாக உருவாகியவர் இந்த பொள்ளாப்பிள்ளையார் என்கின்றனர். வியாபாரத்தில் வெற்றி வேண்டுமா? இந்த ஆறாம் படை கணபதியை தரித்து விட்டு வாருங்கள்...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  

     என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

வேழ முகத்தோனே.! ஞான முதல்வனே.!!

நல்ல காரியம் நடக்கும்போது கணபதியை மனசுல நினைச்சுக்க.... எது செய்றதா இருந்தாலும் பிள்ளையார் சுழி போட்டு ஆரம்பி...’’ - என பெரியவர்கள் சொல்ல கேட்டிருப்பீர்கள். நம் வாழ்வின் ஒவ்வொரு செயல்களிலும் விநாயகர் முழுமையாக நிறைந்திருக்கிறார். அதனால்தான் அவரை முழுமுதற்கடவுள் என ஆன்மிகவாதிகள் தெரிவிக்கின்றனர். அந்த விநாயகரை நினைத்து போற்றும் நாள்தான் விநாயகர் சதுர்த்தி. ஒவ்வொரு ஆண்டும் தமிழ் மாதமான ஆவணியில் வரும் வளர்பிறை சதுர்த்தியை, விநாயகர் சதுர்த்தியாக கொண்டாடி வருகிறோம். என்ன நாளை(செப்.2) விநாயகர் சதுர்த்தியை கொண்டாட ரெடியாகிட்டீங்களா?


எப்படி கொண்டாடுவது :  விநாயகர் சதுர்த்தியன்று சூரிய உதயத்திற்கு முன் எழுந்து, பூஜையறையில் மனப்பலகை எனப்படும் மரப்பலகையை வைத்து அதன் மீது கோலமிடவும். அதன் மீது தலைவாழை இலையை வடக்கு பார்த்து வைக்க வேண்டும். அதன் மீது தலைவாழையை வைத்து, பச்சரிசியை பரப்ப வேண்டும். பின்னர் வீட்டில் பிடித்த களிமண் பிள்ளையார் சிலை அல்லது வெளியில் வாங்கிய சிலையை வைக்க வேண்டும். அதற்கு அருகம்புல் மாலை அல்லது எருக்கம்பூ மாலையை அணிவிக்கவும். தொடர்ந்து பிள்ளையார் மூல மந்திரம் பாடி, மல்லிகை, செவ்வந்தி, அரளி போன்ற மலர்களால்  அர்ச்சனை செய்ய வேண்டும்.

பிடித்ததை படைத்து... தொடர்ந்து, விநாயகருக்கு பிடித்த பலகாரங்களான மோதகம், கொழுக்கட்டை, சுண்டல், பொரி, வடை, அவல் மற்றும் விளாம்பழம், வாழைப்பழம், திராட்சை, பேரிக்காய் உள்ளிட்டவைகளை வைத்து படைக்க வேண்டும். நல்ல நேரம் அல்லது கவுரி நல்ல நேரத்தில் படைப்பது சிறந்தது. காலை முதல் படைத்த விநாயகர் சிலையை நீர்நிலைகளில் கரைக்கும் வரை விரதமிருந்து மேற்கொள்வது மிகவும் சிறந்தது. கரைப்பது ஏன் : வீட்டில் வைத்து படைத்த களிமண் விநாயகர் சிலைகளை ஆறு உள்ளிட்ட நீர்நிலைகளில் கரைப்பது ஏன் தெரியுமா? பழங்காலத்தில் ஆடிப்பெருக்கு காலங்களில் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும். 

அப்போது ஆற்று மணலை தண்ணீர் அடித்துக் கொண்டு செல்லும். மழை பெய்தும் தண்ணீரை சேமிக்க முடியாத நிலை இருந்து வந்தது. அதே நேரம் களிமண் நிலத்தில்,  மழை நீர் பூமியில் இறங்கும். எனவே, ஆடி முடிந்து ஆவணியில் வரும் விநாயகர் சதுர்த்தியன்று, களிமண் சிலைகளை ஆற்றில் கரைப்பார்கள். அந்த களிமண் ஆற்று நிலத்தில் படியும்போது, நிலத்தடி நீர் தங்கி நீராதாரம் பாதுகாக்கப்படும். இதனால்தான் சதுர்த்தியன்று, விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைப்பது வழக்கமாக இருந்து வருகிறது.

இலையிலும் அர்ச்சனை: விநாயகருக்கு முக்கியமாக அரளி, எருக்கம்பூவை அல்லது அருகம்புல்லால் பூஜை செய்வது வழக்கம். மேலும், மகிழம், பாதிரி, தும்பை, செவ்வரளி, வில்வம், குருந்தை, பவளமல்லி, ஜாதிமல்லி, ஊமத்தை, சம்பங்கி, புன்னை, மந்தாரை, மாதுளம், கண்டங்கத்திரி, மாம்பூ, தாழம்பூ, முல்லை, கொன்றை, எருக்கு, செங்கழுநீர் உள்ளிட்ட பூக்களால் அர்ச்சிக்கலாம். கிரந்தி, மாதுளை, மருவு, நொச்சி, ஜாதிக்காய் இலை, நாரிசங்கை, வன்னி, அரசு, நுணா, எருக்கு, தேவதாரு, மாசி, பருஹதி எனும் கிளா இலை, வில்வம், அருக்கு, ஊமத்தை உள்ளிட்ட இலைகளையும் பயன்படுத்தலாம்.

ஸ்லோகம்  சொல்லுவோமா?

வீட்டுல பென்டிரைவ்ல விநாயகர் பக்தி பாடல்களை கேட்டபடியே பூஜிக்கலாம். அதே நேரம் சில மந்திரங்களை சொல்லி செய்வது சிறப்பு. முயற்சிக்கலாமா?

விநாயகர் சகஸ்ரநாமம்
சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் 
சதுர்ப்புஜம்ப்ரசன்ன வதனம் த்யாயேத் 
சர்வ விக்நோப சாந்தயே...

விநாயகர் காயத்ரி மந்திரம்
வக்ரதுண்டாய ஹீம்ஓம் நமோ 
ஹேரம்ப மதமோதிதமம சர்வ சங்கடம்
நிவாரயே ஸ்வாஹாஓம் கம் க்ஷிப்ரப்ரசாதனாய நமஹ...

அங்கரனுக்கு அபிஷேகம் 

பொதுவாக, வீட்டில் யாரும் சுவாமி சிலைகளுக்கு அபிஷேகம் செய்வதில்லை. ஆனால், விநாயகருக்கு நீங்கள் செய்யலாம். கீழே தரப்பட்ட நீண்....ட பட்டியலில், உங்களுக்கு தேவையானதை டிக் பண்ணிக்குங்க...
தண்ணீர், எண்ணெய், சீயக்காய், பஞ்சகவ்யம், ரசப்பஞ்சாமிர்தம், சந்தனம், திருநீறு, குங்குமம், பன்னீர், சந்தனாதித்தைலம், பழப்பஞ்சாமிர்தம், நெய், பால், தயிர், தேன், கருப்பஞ்சாறு, பழ ரகங்கள், இளநீர்,  மாப்பொடி, மஞ்சள் பொடி, திரவியப்பொடி கொண்டு அபிஷேகம் செய்யலாம்.

அருகம்புல்லை  படைப்பது ஏன்?

‘‘500 ரூபாய்க்கு மாலை வாங்க வேண்டாம்... 5 ரூபாய்க்கு அருகம்புல் மாலை வாங்கி சாத்துங்க கணபதிக்கு... அது போதும்...’’ என்பார்கள். அருகம்புல்லோட ஆனைமுகத்தான் கனெக்ட் ஆனது எப்படி என பார்க்கலாமா?
எமனின் மகன் அனலாசுரன். இவன் மூர்க்கனாக மாறி தேவர்களுக்கு தொல்லை தந்தான். இயல்பிலேயே அவன் உடல் அனல் வீசும். அதனால், யாருமே அவனை நெருங்க முடியாது. தேவர்கள் விநாயகரிடம் முறையிட்டனர். விநாயகர் பெரும் அனல் அவதாரம் எடுத்து அனலாசுரனை வீழ்த்தினார். 

அவன் மேலும் உருப்பெறக்கூடாது என்றெண்ணி அந்த சாம்பலை விழுங்கினார். ஆனால் நடந்ததோ வேறு. விநாயகரின் உடலை அனல் தாக்கியது. வெப்பத்தை தணிக்க நீராடி பார்த்தார். என்னென்னவோ செய்து பார்த்தார். வெப்பம் சிறிதும் குறையவில்லை. அப்போது சப்த ரிஷிகளான அத்திரி, பிருகு, குத்ஸர், வசிஷ்டர், கவுதமர், காஸ்யபர், ஆங்கிரஸர் ஆகியோர், 21 அருகம்புல் கட்டை விநாயகரின் தலையில் வைத்துள்ளனர். உடனே, விநாயகரின் உடலை வாட்டிய வெப்பம் தணிந்தது. அன்று முதல் விநாயகருக்கு மிகவும் பிடித்து பொருளாக அருகம்புல் ஆகிப்போனதாம்.

அங்கரனுக்கு அபிஷேகம்

பொதுவாக, வீட்டில் யாரும் சுவாமி சிலைகளுக்கு அபிஷேகம் செய்வதில்லை. ஆனால், விநாயகருக்கு நீங்கள் செய்யலாம். கீழே தரப்பட்ட நீண்....ட பட்டியலில், உங்களுக்கு தேவையானதை டிக் பண்ணிக்குங்க...
தண்ணீர், எண்ணெய், சீயக்காய், பஞ்சகவ்யம், ரசப்பஞ்சாமிர்தம், சந்தனம், திருநீறு, குங்குமம், பன்னீர், சந்தனாதித்தைலம், பழப்பஞ்சாமிர்தம், நெய், பால், தயிர், தேன், கருப்பஞ்சாறு, பழ ரகங்கள், இளநீர்,  மாப்பொடி, மஞ்சள் பொடி, திரவியப்பொடி கொண்டு அபிஷேகம் செய்யலாம்.

சிங்கிள் பசங்க... இதை படிங்க...

திருமணமாகாமல் ‘முரட்டு சிங்கிள்’ போல வலம் வருபவரை, ‘‘பேசாம விநாயகர் மாதிரி கல்யாணம் பண்ணாம ஆத்தங்கரையில போய் உட்கார்ந்துக்க...’’ என்பார்கள். ஆனால், விநாயகருக்கு சித்தி, புத்தி என 2 மனைவிகள் உள்ளனர். அவர்களுடன் விநாயகருக்கு ஆண்டுதோறும் திருமணமே நடக்கிறது என்ற கதை தெரியுமா உங்களுக்கு? ராமநாதபுரம் மாவட்டம், ஆர்.எஸ்.மங்கலம் அருகே உப்பூரில் ‘வெயிலுகந்த விநாயகர்’ கோயில் உள்ளது. தமிழகத்திலேயே விநாயகருக்கு இங்குதான் திருக்கல்யாணம் ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. 

அதுக்கும் ஒரு ஆன்மிக கதையிருக்கு... கேட்குறீங்களா?

ராமபிரான் தனது மனைவி சீதாவை மீட்பதற்காக இலங்கை செல்லும்போது, வழியில் உப்பூரில் ஓய்வு எடுத்திருக்கிறார். அப்போது வனப்பகுதியில் இருந்த விநாயகரை வணங்கி தியானம் செய்திருக்கிறார். அப்போது எழுந்த அசீரிரியில், ‘‘விநாயகருக்கு திருமணம் செய்து வைத்தால், உன் மனைவி சீதாவை சிக்கலின்றி மீட்கலாம்’’ என ஒலித்தது. இதனைத்தொடர்ந்து விநாயகருக்கு சித்தி, புத்தி தேவியரை திருமணம் செய்து சீதாவை மீட்டார் ராமர் என புராணக்கதைகள் தெரிவிக்கின்றன. 

அது மட்டுமல்ல... விநாயகருக்கு யானை தலை என்பதால் அவரை திருமணம் செய்து கொள்ள முன்வரவில்லை. இதனால் தேவர்களின் திருமணங்களில் விநாயகர் குழப்பங்களை ஏற்படுத்தினார். அவர்கள் பிரம்மனிடம் முறையிட்டுள்ளனர். உடனே, பிரம்மன் சித்தி, புத்தி என 2 அழகான பெண்களை உருவாக்கி, விநாயகருக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டது என்றும் கூறுகின்றனர்.

ஆசியாவின் மெகா ஆனைமுகத்தான்

ஆசியாவின் மிகப்பெரிய விநாயகர் சிலை திண்டுக்கல், கோபாலசமுத்திரக்கரை பகுதியில் உள்ளது. மொத்தம் 32 அடி. பூட்டு, பிரியாணிக்கு புகழ் பெற்ற ஊரில், இவ்ளோ பெரிய சிலை ஏன்?  கோயில் நிர்வாகி கணேஷ்பாபு கூறுவதை கேட்போமே... எனது தந்தை மருதநாயகம் தீவிர விநாயகர் பக்தர். ஆலமரத்தடி விநாயகரை வணங்கி வந்த அவருக்கு, 108 விநாயகர் சிலைகளை கொண்டு கோயில் கட்ட வேண்டுமென்ற ஆர்வம் ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து கடந்த 2002ல், 108 கருங்கல் விநாயகர் சிலைகளை  உருவாக்கி கோயிலில் பிரதிஷ்டை செய்தோம். 

அதற்கு பின்தான் இந்த மெகா பிள்ளையாரை உருவாக்கும் எண்ணம் ஏற்பட்டது. ஊத்துக்குளியை சேர்ந்த சண்முகவேல் ஸ்தபதி, சுமார் 3 ஆண்டுகளாக உருவாக்கியது இந்த சிலை. ஒரே கருங்கல்லால் ஆனது. இதே கோயிலில் தமிழகத்திலேயே முதன்முறையாக 11 அடியில் வியட்நாம் மார்பிளில், செய்த அமர்ந்த நிலை சிவனையும் பிரதிஷ்டை செய்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  

     என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡