Sunday, 1 September 2019

செப்டம்பர் 2-ந்தேதி விநாயகர் சதுர்த்தி- விநாயகனே வினை தீர்ப்பவனே.!!

இந்து கடவுளர்களில் மிகவும் பிரசித்தமான கடவுளாக விளங்குபவர் கணபதியே. தடைகளை விலக்கி நாம் தொடங்கும் எல்லா செயல்களிலும் வெற்றியை அளிப்பவர் கணபதி.


தடைகளை விலக்கி நாம் தொடங்கும் எல்லா செயல்களிலும் வெற்றியை அளிப்பவர் கணபதி. நல்ல அறிவையும் புகட்டுபவர். மாணவர்களால் மனம் உருக வணங்கப்படுபவர்.

தொடங்கும் ஒவ்வொரு செயலுக்கும் இவருக்கே முதல் வழிபாடு என்ற மரபு பல காலமாக உள்ளது. எதனை எழுதுவதற்கு முன்பும் இவரை நினைத்து பிள்ளையார் சுழி போட்டு தான் எழுத தொடங்குவார்கள். சாலை ஓரங்களில், இரண்டு சாலைகள் கூடும் இடங்களில் கணபதி சிலை வைக்கப்பட்டு வணங்கப்படுகிறது. இந்து கடவுளர்களில் மிகவும் பிரசித்தமான கடவுளாக விளங்குபவர் கணபதியே.

பஞ்சாயதன பூஜையில் அதாவது சிவன் அம்பாள், விஷ்ணு, சூரியன், விநாயகர் என்பதில் முதலில் வருபவர் கணபதி. கணபதியினை வணங்கும் மதத்திற்கு காணாபத்யம் என்று பெயர். இதனை பின்பற்றுபவர்கள் கணபதியை உலகினை படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழிலையும் செய்பவராகவும் பிரம்மா, விஷ்ணு, சிவன் என்று மூன்று வடிவங்களிலும் இவர் விளங்குபவராகவும் கருதுகின்றனர்.

பிரம்மவைவர்த்த புராணத்தில் கணபதியே தான் ஸ்ரீகிருஷ்ணன் என்று சொல்லப்படுகிறது. எனவே இவர் வைணவர்களாலும் வணங்கப்படுகிறார்.அவர்கள் இவருக்கு அளிக்கும் பெயர் விஸ்வக்சேனர் என்பதாகும். புத்தர்களும் ஜைனர்களும் கூட கணபதிக்கு முக்கிய இடம் அளிக்கின்றனர்.

கணபதி வழிபாடு இந்தியாவில் மட்டும் என்று இல்லாமல் தமிழிழம் நோபாளம், திபெத், தாய்லாந்து, பெர்சியா, ஆப்கானிஸ்தான், மத்திய ஆசியா, என கடல் கடந்தும், சீனா, ஜப்பான், ஜாவா, பாலி, போர்னியா போன்ற அயல் நாடுகளிலும் பரவியுள்ளது. மத்திய அமெரிக்காவிலும், மெக்சிகோவிலும் கண்டு எடுக்கப்பட்ட 3, 000 இந்து கடவுள் சிலைகளில் கணபதி சிலையும் அதிகமாக உள்ளன. 

மெக்சிகோவில் இவருக்கு உள்ள பெயர் வீரகோசா அயல் நாடுகளில் வெகு பழமை காலத்திலேயே கணபதி வழிபாடு இருந்துள்ளது. ஈரான் நாட்டில் அரிசிதான் என்ற இடத்தில் பல வருடங்களுக்கு முன் யானை முகம் கொண்ட ஒரு தகடு அகழ் ஆராய்ச்சியின்போது கண்டு பிடிக்கப்பட்டது. ஆராய்ச்சியாளர்கள் இந்த தகட்டின் காலத்தை 1200 ஆண்டுகளுக்கு மந்தையது என நிர்ணயித்துள்ளனர்.

மிகவும் பழமையான ரிக் வேத வல்லுனர்கள் கடவுளர்களில் மிகச் சிறந்தவராக கணபதியினை கருதுகின்றனர். கணபதியினை குறித்த பல தோத்திரங்கள் வேதங்களில் காணப்படுகின்றன. தமிழ் ஈழத்திலும், இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் கணபதி வழிபாட்டு புனித தலங்கள் ஏராளமாக உள்ளன. விநாயகப் பெருமான் ஓங்கார வடிவானவர் அரச மரத்தடியில் அமர்ந்து காட்சிக்கு எளியவராகத் திகழ்பவர் பிரார்த்திக்க நினைக்கும் அளவில், அதை நிறைவேற்றி அருள்பவர். வேண்டும் வரம்தரும் பெருமான். தேவரும் மூவரும் போற்றும் பிரான் சனீஸ்வரனே தன்னைப் பிடிக்க இயலாமற் செய்தவர். 

சனித் தொல்லையில் இருந்து காக்கும் கடவுள். விக்னேஸ்வரராகப் போற்றப்படுகிறார். கணங்களின் அதிபதி. அதனால் கணபதி, கணேசர் என்றெல்லாம் துதிக்கப்படுகிறார்.

விநாயகரை வழிபடும் முறை: விநாயகரை ஒரு முறை வலம் வர வேண்டும். தலையில் குட்டிக் கொண்டு, தோப்புக்கரணம் போடுவது வழக்கம். ஜாதக ரீதியாக கேது புத்தி, கேது திசை உள்ளவர்கள் தினந்தோறும் விநாயகரைத் தவறாமல் வழிபட்டால் துன்பங்கள் குறைந்து, நன்மைகள் பெறலாம்.

விநாயகருக்கு உகந்தவை: விநாயகருக்கு அருகம்புல் மாலை மிக உகந்தது. வில்வ மாலை, எருக்கு மாலையும் சாத்தி வழிபடலாம். சதுர்த்தி அன்று மட்டும் துளசியால் அர்ச்சனை செய்யலாம் என்பர். ஜாதிப்பூ கொண்டு அர்ச்சனை செய்தால், ஞானம் பெருகும். அருகம்புல் அர்ச்சனையால் ஐசுவரியம் பெருகும். ஆரோக்கியம் வளரும்...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  

     என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

விநாயகர் சதுர்த்தி விரத வழிபாடும்.! பலன்களும்.!!

ஆவணி மாதத்தில் வரும் விநாயகர் சதுர்த்தி நோன்பை கடைப்பிடிப்பதால் புத்திர பாக்கியம், செல்வம் ஆகிய பலன்கள் கிடைக்கப்பெறும். ஒவ்வொரு மாதத்திலும் சதுர்த்தி வருகிறது. அன்றைய தினங்களில் விநாயகரை நோக்கி நோன்பு அனுஷ்டிப்பது சிறப்பு வாய்ந்ததாகும். ஒவ்வொரு மாதமும் சதுர்த்தி நோன்பை கடைப்பிடித்தால் கிடைக்கும் பலன்களை இங்கு காணலாம்.


சித்திரை - விஷ்ணு லோகம்

வைகாசி - சங்கர்ஷண லோகம்

ஆனி - சொர்க்க லோகம்

ஆடி - நினைத்தது கைகூடும்

ஆவணி - விருப்பங்கள் நிறைவேறும்

புரட்டாசி - சுகம் கிடைக்கும்

ஐப்பசி - ஈசனுக்கு பூஜை செய்த பலன் கிடைக்கும்

கார்த்திகை- பெண்களுக்கு சகல சவுபாக்கியமும் உண்டாகும்.

மார்கழி - மகிழ்ச்சி வந்து சேரும்

தை - தன லாபம் கிட்டும்

மாசி - ஆரோக்கிய நலம்

பங்குனி - செல்வ வளம் பெருகும் 

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  

     என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

ஆலயங்களில் விநாயகர் சதுர்த்தி பூஜை.!!

விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு எல்லா விநாயகர் கோவிலிலும் விசேஷ பூஜைகள் நடைபெறும். விடியற்காலை பிரம்ம முகூர்த்தத்தில் கணபதி ஹோமம் நடைபெறும்.


விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு எல்லா விநாயகர் கோவிலிலும் விசேஷ பூஜைகள் நடைபெறும். விடியற்காலை பிரம்ம முகூர்த்தத்தில் கணபதி ஹோமம் நடைபெறும்.

விக்கினங்கள் விலகவும், நன்மைகள் ஓங்கவும் இவைகள் செய்யப்படுகின்றன. இந்த ஹோமத்தில் 108 மூலிகைகள், வாசனைத் திரவியங்கள் பயன் படுத்தப்படுகின்றன.

கணபதி ஹோமத்திற்குரிய திரவியங்கள் எட்டு. அவை மோதகம், அவல், நெய், பொரி, சத்துமா, கரும்பு, கொப்பரைத் தேங்காய், சுத்தமான எள், வாழைப்பழம், இதை தவிர அறுகம்புல், விளாம்பழம், நாவல்பழம், மாதுளம்பழம் இவை களையும் ஹோம நிவேதனமாக செய்ய வேண்டும்.

முதலில் தைலக்காப்பு, பிறகு மாகாப்பு (அரிசி மாவு) பஞ்சாமிர்தம், தேன், நெய், பால், பழ வகைகள், தயிர், கரும்புச்சாறு, விபூதி, சந்தனம், பன்னீர் அபிஷேகங்கள் செய்யப்படும். மாலையில் விநாயகருக்கு சந்தனக்காப்பு, விபூதிக்காப்பு, பூவலங்காரம் நடைபெறும். துளசி இலைகள் விநாயகர் சதுர்த்தி அன்று மட்டும் பூஜைக்கு உகந்தது...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  

     என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

விநாயகர் பற்றிய 25 வழிபாட்டு தகவல்கள்.!!

தடைகளை விலக்கி நாம் தொடங்கும் எல்லா செயல்களிலும் வெற்றியை அளிப்பவர் கணபதி. விநாயகருக்கு உகந்த 25 வழிபாட்டு தகவல்களை அறிந்து கொள்ளலாம்.


1. விநாயகரின் ஐந்து கைகளில் உள்ளவை. 1) துதிக்கையில் தண்ணீர்க்குடம். 2) பின் இரண்டு கைகளில் அங்குசம், பாசம். 3) முன் கைகளில் வலது கையில் தந்தம், இடது கையில் மோதகம்.

2. விநாயகரை ஒரு முறை வலம் வருதல் வேண்டும்.

3. மகாபாரதத்தை வியாசர் சொல்லச் சொல்ல விநாயகர் எழுதினார்.

4. விநாயகர் பயிர் தொழிலுக்குரிய தெய்வம் என்று சொல் லப்படுகின்றார். அதாவது பயிரை அழிக்கக் கூடிய பெருச்சாளியைத் தமது வாகனமாக்கி அடக்கி வைத்துள்ளார் என்பது இதன் பொருள்.

5. விநாயகரின் வாகனங்கள் மயில், காளை, சிங்கம், யானை, குதிரை, பூதம் முதலியனவாகும்.

6. வெள்ளிக் கிழமை தோறும் அருகம்புல், தேங்காய் ஆகியவற்றினைக் கொண்டு கணபதி ஹோமம் செய்து வந்தால், நீண்ட ஆயுளும், செல்வமும் கிடைக்கும்.

7. விநாயகரின் மந்திரம் ஓம் கம் கணபதியே நமஹ என்பதாகும். காலை மாலை 108 தடவை இந்த மந்திரத்தை சொல்லி வந்தால் சகல நன்மைகளும் உண்டாகும்.

8. பல்லவர் காலக் கோவில்களில் பரிவார தேவதையாக முதன் முதலாக அமைக்கப் பெற்ற கணபதி காஞ்சி கைலாசநாதர் கோவிலில் காணப்படுகின்றார்.

9. பஞ்சபூதத் தொடர்பு உடையவர் விநாயகர். இவர் அரச மரத்தடியில் ஆகாய வடிவாகவும், வாதநாராயண மரத்தடியில் வாயு வடிவமாகவும், நெல்லி மரத்தடியில் நீர் வடிவமாகவும், ஆல மரத்தடியில் மண்வடிவமாகவும் விளங்குகின்றார்.

10. விநாயகப் பெருமான் பிரணவம் ஆகிய ஓங்கார மந்திர சொரூபமாய் விளங்குபவர்.

11.இப்வுலகில் விநாயகரின் பரிபூரண அருளைப் பெற்று வாழ்ந்தவர் புருசுண்டி என்ற முனிவர். இவர் விநாயகரைப் போல் துதிக்கையுடன் கூடிய தோற்றத்தில் காணப்பட்டார்.

12. விநாயகர் உருவத்தில் எல்லா கடவுள்களும் உள்ளனர். நாபி - பிரம்ம உருவம், முகம் - விஷ்ணு, கண் - சிவரூபம், இடப்பாகம் - சக்தி, வலப்பாகம் - சூரிய ரூபம் என்று கருதப்படுகிறது.

13. விநாயகருக்கு தேங்காய் எண்ணெய் காப்புதான் மிகவும் பிரியமானது.

14. விநாயகர் ஏற்காத இலை துளசி இலை.

15. விநாயகப் பெருமானின் அருளைப் பெற்றோர் அவ்வை யார், நம்பியாண்டார் நம்பி, சேந்தனார்

16. பிள்ளையார் சுழியில் உள்ள ஐந்தெழுத்துத் தத்துவம் நமசிவாய என்பதாகும்.

17. விநாயகர் புகழ் பாடும் நூல்கள்: ஸ்ரீகச்சியப்ப முனிவர் அருளிய விநாயகக் கவசம், ஸ்ரீவிநாயக சப்தகம், ஷோடச கணபதி ஸ்துதிகள், ஸ்ரீகணேச புஜங்கம், ஸ்ரீகணேச பஞ்ச ரத்னம், ஸ்ரீகணேச வைகறைத் துதி, அவ்வையார் அருளிய விநாயகர் அகவல், ஸ்ரீகணேஷாஷ்டகம்.

18. விநாயகர் என்றால் அவரை விட மேலான ஒருவர் இல்லை என்று அர்த்தமாகும்.

19. விநாயகர் சதுர்த்தி விழா மராட்டியத்திலும், ஆந்திராவிலும் 11 நாட்கள் வழி பாடாகக் கொண்டாடப்படுகின்றது.

20. பிள்ளையாருக்கு ஞானக்கொழுந்து என்றொரு பெயருண்டு. ஞானத்தை அருள்வதற்காக விநாயகர் அரச மரத்தடியில் அமர்ந்துள்ளார்.

21. வைணவ கோவில்களில் அமைக்கப்பட்டுள்ள விநாயகர் தும்பிக்கையாழ்வார் என்று அழைக்கப்படுகின்றார்.

22. கணபதிக்கும், சனீஸ்வரனுக்கும் பிரியமானது வன்னி மரம். எனவே, வன்னிமர இலைகளால் விநாயகப் பெருமானை வழிபட்டால் சனிபகவான் தொல்லைகள் நீங்கும்.

23. கணபதி வழிபாடு என்பது காணா பத்யம் என்றழைக்கப்படுகிறது. இது ஆதிசங்கரர் சிறப்பித்த வழிபாடு ஆகும்.

24. விநாயகப் பெருமான் சித்தி, புத்தி என்ற தம் மனைவியர் மூலம் உருவாக்கியவர் தான் சந்தோஷி மாதா ஆவார்.

25. விக்னம் என்றால் கஷ்டம். கஷ்டங்களை அகற்றுபவர் என்பதால் விக்னேஸ்வரர் என்கிற பெயர் விநாயகருக்கு ஏற்பட்டது...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  

     என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

பெருமை வாய்ந்த பிள்ளையார்.!!

எந்த வழிப்பாட்டிலும், விநாயகருக்கு இடம் உண்டு. விநாயகரை வழிபடாமல், பூஜை செய்யாமல், எந்த செயலை செய்தாலும், அது வெற்றி பெறாது. விநாயரை வழிபட்டபின் தான், இஷ்ட தெய்வங்களை பூஜிப்பது,  இந்தியாவில் மட்டுமின்றி,. உலகம் முழுவதும் உள்ளது.

விநாயகரை நாம், கணேஷ், கணேசன்’ என அழைக்கிறோம். கிரேக்கர்களும் ரோமானியர்களும், ஜேனேஷ்’ என்ற தெய்வத்தை முதலில் வழிபட்ட பின்தான் எந்த செயலையும் தொடங்குவதை வழக்கமாக கொண்டுள்ளனர். 
இந்த,  ஜேனேஷ் என்ற தெய்வத்தின் அடிப்படையில்  தான், ஆங்கில ஆண்டின் முதல் மாதத்துக்கு, ஜனவரி என பெயரிட்டடதாவும் கூறப்படுகிறது...


🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  

     என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

விநாயகரின் ஒடிந்த கொம்புக்கான காரணம் தெரியுமா உங்களுக்கு?

களிமண் விநாயகரை வழிபட்டால் நற்பதவி கிட்டும்.

புற்று மண்ணால் உருவாக்கப்பட்ட விநாயகரை வழிபட்டால், செல்வம் பெருகும். 
உப்பால் உருவாக்கப்பட்ட விநாயகரை வணங்கினால் ,எதிரிகளை.வெற்றி காணலாம். 
கல் விநாயகரை வழிபட்டால், சகல பாக்கியமும் கிட்டும்.

விநாயகருக்கு, ஒரு கொம்பு ஒடிந்ததற்கு புராணக்கதை அனைவருக்குமே தெரியும்.  வியாசர் சொல்லச்சொல்ல, மஹா  பாரதத்தை முதலில் எழுத்தாணி கொண்டுதான் எழுதினார். ஒரு கட்டத்தில் எழுத்தாணி தேய்ந்து விட்டது.  
தன் பணியைத்  தடையில்லாமல் செய்ய, தனது  தந்தத்தை உடைத்து எழுத ஆரம்பித்தார். எல்லா மனிதர்களுக்குமே, ஒரு காரியத்தை செய்யும் போது,  தடை வருகிறது, எந்தத் தடையையும் கண்டு நீங்கள் மனம் தளர்ந்துவிடக்கூடாது. 
என்ன வசதி இருக்கிறதோ அதைக்கொண்டு  காரியத்தை தொடர்ந்து நடத்தி வெற்றிபெற வேண்டும் என்பதையே உடைந்த கொம்பு எடுத்துக்காட்டுகிறது...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  

     என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

நாக தோஷம் நீக்கும் ஆவணி ஞாயிறு வழிபாடு.!!

தமிழ் மாதங்களில், ஒவ்வொன்றிலும், ஒரு கிழமை சிறப்பு வாய்ந்தது. ஆடி,தை மாதங்களில், வெள்ளி; ஆவணியில், ஞாயிறு; புரட்டாசியில் சனி; மாசியில், செவ்வாய்; கார்த்திகையில் திங்கள்  என கூறலாம். 

ஆவணி மாதம் வரும் ஞாயிற்றுக்கிழமைகளில்,  விரதம் இருப்பது,  மகத்துவம் வாய்ந்தது. ஆவணி மாதம் ஜோதிட சாஸ்திரப்படி சிம்ம மாதம் என அழைக்கப்படுகிறது.  சூரியன், சிம்ம ராசியில், இவ்வாறு அழைக்கப்படுகிறது.
சூரியனுக்கு சிம்ம ராசி,  பலமான வீடு. நமக்கு ஆத்மபலத்தைத் தருபவர் சூரியனே. எனவே தான் ஆவணி மாதத்தில், விநாயகர் அவதாரம், கிருஷ்ணாவதாரம் ஆகியன நிகழ்ந்தன. 
திருமணம் ஆகாதவர்கள், புத்திர பாக்கியம் இல்லாதவர்கள்,  பித்ரு தோஷம் உள்ளவர்கள், கண் தொடர்பான பிரச்னை இருப்பவர்கள்,ஆவணி ஞாயிற்றுக்கிழமைகளில்  விரதம்  இருந்தால் சிறப்பான பலன் கிடைக்கும்.

தந்தை இல்லாதவர்கள், இந்த கிழமையில், சூரியனைத் தந்தையாக ஏற்றுக் கொண்டு, சூரியோதய வேளையில், கிழக்கு நோக்கி விழுந்து வணங்கி, சூரிய பகவானிடம் ஆசி பெற்றால், இரட்டிப்பு பலன்  கிடைக்கும்.
நாக தோஷம் கொண்டவர்கள்,பாம்பை கனவில் அடிக்கடி காண்பவர்கள்,பாம்பு தொல்லை இருப்பவர்கள், நாகநாதருக்கு பாலபிஷெகம் செய்யலாம்..
ஆவணி ஞாயிற்றுக்கிழமைகளில், காலை, 6 –7 மணிவரை, சூரிய ஹோரை இருக்கும்.
உடல் நலனுக்காக, சூர்ய நமஸ்காரம் பயிற்சி  மேற்கொள்பவர்கள்,  ஆவணி ஞாயிறன்று துவங்குவது, சிறப்பு வாய்ந்தது. 
தமிழகத்தில், நாகர் கோவிலிலும், கேரளாவில், சில இடங்களிலும், பாம்பை மூலவராக கொண்ட கோவில்கள் உள்ளன. இங்கு, ஆவணி ஞாயிறன்று, நாகருக்கு பெண்கள் அபிஷேகம் செய்வது சிறப்பு வாய்ந்தது.
ஆவணி ஞாயிறன்று, ‘ஆதித்ய ஹிருதயம்’ துதி பாராயணம் செய்வது பெரும் பலனை தரும்...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  

     என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

கணவன், மனைவி இடையே ஒற்றுமையை அதிகரிக்கும் ஸ்வர்ண கௌரி விரதம்.!!

ஆவணி மாதம் வளர்பிறை திருதியை தினத்தில், அனுஷ்டிப்பது தான், ஸ்வர்ண கௌரி விரதம். 

இந்த விரத மஹிமை, ஸ்காந்த புராணத்தில், ஸூத பவுராணிகர் திருவாய்மொழியாக அமைந்துள்ளது. கணவன் மனைவி ஒற்றுமைக்காகச் செய்யப்படும் விரதங்களில் முதன்மையானது ஸ்வர்ண கவுரி விரதம். 

ஒரு முறை முருகப் பெருமான், சிவபெருமானிடம், இந்த விரதம் பற்றி கேட்டதற்கு, அவர் கூறியதாவது: முன்னொரு காலத்தில், சரஸ்வதி நதி தீரத்தில், விமலம் என்ற நகரம் இருந்தது. அதை சந்திரபிரபன் என்ற அரசன்ஆட்சி செய்து வந்தான். அவனுக்கு இரு மனைவியர். அவர்களுள் முதல் மனைவியிடம், அரசின் மிக அன்புடன் இருந்தான். 
ஒரு நாள், அந்த அரசன் வேட்டையாடக் கானகம் சென்ற போது, அங்குள்ள ஒரு குளக்கரையில் தேவைதைகள்,  ஒரு விரதத்தை அனுஷ்டிக்கக் கண்டான். அவர்களிடம் அந்த விரதம் பற்றி கேட்டான். 
அவர்களும், இது 'ஸ்வர்ண கௌரி விரதம், இதை ஆவணி மாதம்  வளர்பிறை த்ருதீயையன்று அனுஷ்டிக்க வேணடும். இந்த விரதத்தை கௌரி தேவியைக் குறித்து 15 ஆண்டுகள் அனுஷ்டிக்க வேண்டும். இதை அனுஷ்டிப்பதால் எல்லா நலமும் உண்டாகும்' என்று கூறி விரதம் அனுஷ்டிக்கும் முறையையும் சொன்னார்கள்.

அவர்கள் கூறியவற்றை கவனமாகக் கேட்ட அரசன், தானும் அதில் பங்கு கொண்டு  விரதத்தை முறையுடன் அனுஷ்டித்து, 16 முடிச்சுக்கள் அடங்கிய நோன்புச் சரடைக் கையில் கட்டிக் கொண்டான். அரண்மனைக்குத் திரும்பியதும், தன் ராணிகளிடம், தான் அனுஷ்டித்த விரதத்தைப் பற்றிக் கூறினான்.
முதல் மனைவி, இதைக் கேட்டு சினம் கொண்டாள். அரசனின் கையில் கட்டியிருந்த நோன்புக் கயிற்றை அறுத்தெறிந்தாள். அது, அரண்மனைத் தோட்டத்திலிருந்த ஒரு பட்ட மரத்தின் மீது  விழுந்தது. உடனே, அந்த மரம் துளிர்க்கத் துவங்கி விட்டது.
இதைக் கண்டு அதிசயித்த அரசனின் இரண்டாவது மனைவி, உடனே, அந்த நோன்புக் கயிற்றை எடுத்துத் தன் கையில் கட்டிக்கொண்டாள். அதைக் கட்டிக் கொண்ட உடனே, கணவனின் அன்புக்கு உரியவளாகி விட்டாள்.
முதல் மனைவியோ, அகம்பாவம் கொண்டு தான் செய்த தவறுக்காக, கணவனால் வெறுத்து ஒதுக்கப்பட்டாள். அவள் கானகம் சென்று, தான் செய்த தவறுக்காக மனம் வருந்தி, தேவியைத் துதித்துக் கொண்டே,  அங்கிருக்கும் முனிவர்களின் ஆசிரமங்களைச் சுற்றி வந்தாள். ஆனால் முக்காலமும் உணர்ந்த மெய்ஞ்ஞானிகளான முனிவர்கள், தேவியை நிந்திப்பவர்களுக்கு பிராயச்சித்தமே கிடையாது என்பதை உணர்ந்த காரணத்தினால், அவளை அங்கிருந்து, விரட்டினார்கள்.

பிறகு அவள் இங்குமங்கும் அலைந்து திரியும் வேளையில், ஒரு தடாகத்தின் அருகில் உள்ள மரத்தடியில் ஒரு வன தேவதை பூஜை செய்வதைக் கண்டு, அவள் அருகில் சென்றாள். ஆனால் வனதேவதையும் அவளை விரட்டவே, மனம் நொந்து சென்றாள். 
ராணியானவள், கௌரி தேவியைத் துதித்து, மன்னிப்பு வேண்டி வந்த காரணத்தினால், அப்போது, கௌரி தேவி மன மகிழ்ந்து அவள் முன் தோன்றினாள். உடனே, ராணியும், ஆனந்தக் கண்ணீர் பெருக, மனம் உருக, தேவியைப் பலவாறு துதித்து, கௌரி பூஜையையும் விரதத்தையும் அனுஷ்டித்து, கௌரி தேவியிடம் சவுபாக்ய வரம் பெற்று நாடு திரும்பினாள்.
தேவியின் அருளால், அரசன் அவளை மிகப் பிரியமுடனும், மதிப்புடனும் வரவேற்றான். அவளும், சகல சுகங்களையும் முன் போல் அனுபவித்து சிறப்புற வாழ்ந்தாள்.
எனவே, இந்த விரதத்தை அனுஷ்டிக்கும் பெண்களுக்கு சகல சுகமும் வளரும்.
தம்பதிகளிடம் ஒற்றுமை, அன்பு, அதிகரிக்கும்.

பூஜை செய்வது எப்படி என்பதை அடுத்த கட்டுரையில் காணலாம்...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  

     என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

ஸ்வர்ண கௌரி பூஜை செய்வது எப்படி?

விரத தினத்திற்கு முன் தினம், இல்லம், பூஜையறையைச் சுத்தம் செய்து, பூஜைக்குத் தேவையானவற்றைத் தயார் செய்து கொள்ள வேண்டும். 

பூஜைக்குத் தேவையானவை : கௌரி தேவி விக்ரகம் அல்லது பொம்மை செய்து பூஜிக்கலாம். அல்லது கலசத்தில் தேவியின் பிரதிமையை வைத்து அலங்கரிக்கலாம்.  .
மாவிலை தோரணங்கள், மஞ்சள், குங்குமம், சந்தனம், ஊதுவத்தி, கற்பூரம், அக்ஷதை.
தேங்காய், வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம், மற்ற வகைப் பழங்கள்.
பூமாலை, உதிரிப்பூ, கஜவஸ்திரம், புடவை, ரவிக்கை அல்லது இரண்டு ரவிக்கைத் துணிகள், 
திருவிளக்குகள், தயிர்,பால், தேன், வெல்லம், நெய்(பஞ்சாமிர்த ஸ்நானத்திற்கு).
பஞ்சபாத்திர உத்திரிணி, தீப்பெட்டி முதலியன.

தேவிக்கு நிவேதனமாக, சர்க்கரைப் பொங்கல் செய்வது உசிதம். விரதத்தை காலை அல்லது மாலை வேளையில் அனுஷ்டிக்கலாம். மாலை வரை உபவாசமிருந்து, சூரிய அஸ்தமனமாகும் சமயம், அனுஷ்டிப்பதே சிறப்பு. 
மாக்கோலமிட்டு, மாவிலை தோரணங்களால் அலங்கரிக்கப்பட்ட மண்டபத்தில், அம்பிகையை கலசத்தில் அலங்கரித்து வைக்க வேண்டும். தங்க ஆபரணங்களால் அழகுற அலங்கரிப்பது விசேஷம். இதனால் குடும்பத்தில் தங்கம் வாங்கும் வசதி பெருகும். . மண்டபம் கிழக்குப் பார்த்து இருக்க வேண்டும்.
வடக்குப் பார்த்து அமர்ந்து பூஜிக்க வேண்டும். அம்பிகையின் திருமுன் இருபுறமும் விளக்குகள் ஏற்ற வேண்டும். வலப்புறம் நெய் தீபமும், இடப்புறம் நல்லெண்ணெய் தீபமும் ஏற்ற வேண்டும்.

முதலில் விக்னேஸ்வர பூஜையைச் செய்து விட்டு, அம்பிகைக்கு ஷோடசோபசார பூஜை செய்ய வேண்டும்.
தேவியின் ஒவ்வொரு அங்கத்தையும்( பூஜித்து, பின் பதினாறு முடிச்சுக்களிட்ட நோன்புச் சரடுகளுக்கு பூஜை செய்யவும். பின் அஷ்டோத்திரம் சொல்லி அர்ச்சிக்க வேண்டும்.
நிவேதனம் செய்து, தேங்காய் உடைத்து, பழங்கள் தாம்பூலம் நிவேதித்து, கற்பூரம் காட்டி வணங்கவும். கைநிறையப் பூக்களை எடுத்துச் சமர்ப்பித்து, பிரதக்ஷிண நமஸ்காரங்கள் செய்து, நோன்புச் சரடைக் கட்டிக் கொள்ளவும். பின் தேவிக்கு, இரு நெய் தீபங்களை ஆரத்தி நீரின் நடுவில் ஏற்றி வைத்து ஆரத்தி காண்பிக்கவும். 16 சிறு மாவிளக்குகள் செய்து, நடுவில் தீபம் ஏற்றி அவற்றை ஒரு தட்டில் வைத்து சுற்றிக் காண்பிப்பது சிறப்பு.
சுமங்கலிகளுக்கு உணவளித்து, பழம், தாம்பூலம் அளித்து சிறப்பிக்க வேண்டும்.

 இரவு பிரசாதம் மட்டும் சாப்பிடுவது சிறப்பு. முடியாதவர்கள், பலகாரம் சாப்பிடலாம்.
மறு நாள், தேவிக்கு சுருக்கமாக, புனர் பூஜை செய்ய வேண்டும். அதாவது, தேவிக்கு, தூப தீபம் காட்டி, இயன்ற நிவேதனம் செய்து, கற்பூரம் காட்டி, பூக்கள் சமர்ப்பித்து வணங்கவும்...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  

     என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡