Tuesday, 2 July 2019

சித்தர நோக்கில் சீரமிகு சிதம்பரம்.!!

சிதம்பரம் நடராஜர் கோவில் ஆனித் திருமஞ்சனம் 7-7-2019


சிவ ஸ்தலங்களுள் மிகவும் போற்றப்படுவதும், யோகிகள்&சித்தர்கள் மற்றும் ஓசைபடாது ஆழ்வார்களும் தொழும் க்ஷேத்திரம், சிதம்பரம். இங்கே வீற்றிருக்கும் ஆனந்தக் கூத்தன் என நந்தனாரால் போற்றப்படும் சிதம்பரம் நடராஜர் சந்நதியும், ஆழ்வார்களால் போற்றப்படும் அரங்கநாதன் குடி கொண்டிருக்கும் திருசித்திரக்கூடம் என்ற இந்த க்ஷேத்திரம் நாடியில், ‘‘கயிலாயத்து தொழுந் தேவரெலாம் நேரே நின்று தொழ அமைந்த தலமா மிது தக்ஷிண கயிலாமாமே’’ என்கிறது.அதாவது இமயமலையில் கயிலாய தரிசனம் செய்து முடித்தபின் தேவர்களும் சித்தர்களும் ககன மார்க்கமாய் (வான் வெளியில்) ஒரே நேர் அச்சில் தெற்கு நோக்கி வந்தால், சிதம்பரத்தை அடையலாம் என்கிறது நாடி. கயிலாயமும், சிதம்பர நடராஜரும் 180 டிகிரி அச்சில் அமைந்துள்ளன. இங்கு ஆகாய அம்சமாக சிவன் தாண்டவமாடி மகிழ்ச்சியுடன் இருப்பதை ரிஷிகள் அனுபவித்து இங்கு கோயிலை எழுப்பி இருக்கின்றனர். 

ஆகாயத்தை எப்படி பார்க்க இயலாதோ அப்படி சிவனையும் நாம் லிங்க வடிவில் தரிசிக்க இயலாது. அகத்தியர், போகர் வான்மீகி போன்றோர்களால் பூஜிக்கப்பட்ட ஒளி புகும் ஸ்படிகலிங்கம். இங்கு இறைவன் ஆனந்தமயமாக & ஸ்வர்ணமயமாக தாண்டவமாடுகிறார். இதனைப் பார்வதி பிராட்டியும் மகாலட்சுமியும் கண்டு இன்புறுகிறார்கள். வைகுந்தத்தில் திருமகளை காணாத மகாவிஷ்ணு, அன்னை, தில்லையில் இருப்பதை அறிந்து அங்கு வந்தார். சிவபெருமானின் ஆனந்த நடனத்தை தன்னை மறந்து ரசித்தவராய் இமை சிமிட்டாமல் வியந்து பார்த்துக் கொண்டு இருக்க, கோடானு கோடி தேவர்களும், கந்தர்வர்களும், யக்ஷர்களும், அண்டத்து ரிஷியரும், முனிவரும் கூடி தொழ, ஆனந்தமயமானது தில்லை. தனது சகோதரி மகாலட்சுமியின் வேண்டுகோளுக்கு இணங்கி இன்றுவரை முக்கண்ணனார், தன் நெற்றிக் கண்ணை மூடிக் கொண்டுதான் ஆனந்த நர்த்தனம் புரிகிறார். சிவபெருமானின் கிருபை பூர்ணமாக லட்சுமிக்கு கிடைக்கிறது. சிவபெருமானின் உள்ளத்து உணர்வுகளை நன்கு உணர்ந்தவர் பார்வதி தேவியார். அவர் மகாலட்சுமியை நோக்கி சிவனின் ஆசியை கூறுகிறாள்.

‘‘நீ எனது ஆனந்த கூத்தை இமை மூடாது பார்த்து மகிழ்ந்தமையால் தேவர்களும், மற்றேனைய தேவ புருஷர்களுக்கும் இனி இமை மூடாது எமது நடனத்தை கண்டு முழுமையான இன்பம் கண்டமையால், நீ இருக்கும் இடத்தில் ஆனந்தத்திற்கு குறை இராது. எமது மேனி, திருமகளே, உன் பார்வையால் தங்கமானது. அதனால் இக்கணம் தொட்டு நீ தங்கத்தில் முழுமையாக வாசம் செய்வாய். வெற்றிலை, மஞ்சள், பட்டு, நவரத்தின கற்கள், மண், உலோகம், கரி எண்ணெய் போன்றவற்றில் உன் ஆட்சி இருக்கும். சுமங்கலி பெண்களின் குங்குமத்திலும், வளையல்களிலும், சிரிப்பிலும் தேவர்கள் உன்னைக் காண்பர். மகாலட்சுமி ஆன நீ, எமைப்போல ரூபமின்றி, பக்தர்கள் வீட்டில் சஞ்சரிப்பாய். புண்ணிய, தர்ம சிந்தை உடையவர்களுடன் அரூபமாக வாழ்வாய். மகாலட்சுமியே, நீ இருக்கும் இடத்தை எல்லா ஜீவராசிகளும் விரும்பும். தேவர்களும் அரசர்களும் உன்னை போற்றுவர். உன் வாசம்தான் பரிபூர்ண வாழ்வு என்பர் மாந்தர்’’ என சிவபெருமானின் திரு உள்ளத்தை பார்வதி தேவி, திருமகளுக்கு ஓதி ஆசி தந்தார். திருமகளும் மகிழ்ந்து தனது பூர்ண கருணா கடாக்ஷத்தை சிவனுக்கும் பார்வதிக்கும் தர, பொன்மயமானது அவர்கள் மேனி. அவர் அணிந்திருந்த வில்வமாலையும் மற்றேனைய பொருட்களும் தங்கமயமாக, அந்தக் கோயில் பொன் அம்பலமானது என்கிறார் அகஸ்தியர்.

இன்றும் இந்த ஆனந்த நடனத்தை ரசித்தபடியே சக்கரத்தான் கோயில் கொண்டிருக்கிறார். இந்த கோயிலுக்கு சித்திரகூடம் என்று பெயர். இந்த பெருமாளை தொழுத குமுதவள்ளி தாயாரும், திருமங்கை கலியனும் சிவபெருமானை தொழுது இன்புற்றனர். ராமானுசன் இந்தப் பெருமாளை தொழுது சிவதரிசனம் கண்டார் என்கிறது நாடி. இங்குள்ள நந்தீசன் சிவபெருமானை தொழுது கயிலாயம் நோக்கி கை கூப்பினார். அப்போது சிவகணங்கள் யாவும் தென் கோடியில் வேறு ஒருபுறத்தை நோக்கி தொழுது வான்வெளி பிரயாணம் செய்ய கண்டார். அந்த சிவகணங்கள் நாடிச் சென்றது, கோணீஸ்வரம். என்ற கோணமலையில் குடிகொண்டிருக்கும் ஈசனையே. இது இன்று திரிகோணமலை என்று இலங்கையின் வடகிழக்கு புறத்தே விளங்குகிறது. இதை ‘தக்ஷிணகோடி கைலாயம்’ என்கிறார் அகஸ்தியர். கைலாயம்-சிதம்பரம்-கோணீஸ்வரம் மூன்றும் பூமியின் ஒரே அச்சில் அமைந்துள்ளன என பூலோக வல்லுநர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர்.

கைலாய தரிசனம் செய்ய வேண்டும். இயலாதவர்கள், தில்லை நடராஜரையும், கோணீஸனையும் தொழுதால் பிறந்த பயனை அடைய செய்யும். மதுமாயி சமேதராய் கோணேசர் அருள் பரிபாலிக்கிறார். இந்திரஜித்து, ராவணேஸ்வரன், கும்பகர்ணன், கர்ணன் ஆகியோரால் பூஜிக்கப்பட்ட மூர்த்தி இவர். கிரியா பாபா அனுதினமும் தொழும் சிவ ஸ்தலங்களுள் முக்கியமானது. சீதையால் ஆராதனை செய்யப்பட்ட சிவத்தலங்களுள் தகுளேஸ்வரம், திரு கீர்த்தீஸ்வரம், மண்ணீஸ்வரம், தென்னார ஈஸ்வரம் என்பன அதிமுக்கியம் வாய்ந்தவை. இன்றும் திரு அருட்பிரகாச வள்ளலார், கிரியா பாபா உள்ளிட்ட தேவர் குழாம், கோணேஸ்வரருடன் கூடிய நகுளேஸ்வரன் உள்ளிட்ட ஐந்து சிவ க்ஷேத்திரங்களையும் தொழுது தில்லை நடனராசனையும் திருச்சித்திரக்கூட அண்ணலையும் ஆராதித்து பின் கைலாயம் செல்கின்றனர் என்கிறது நாடி. கலியுகம் தோன்றி 5120 ஆண்டுகளுக்கு பிறகே திருசித்திரக் கூடத்துறையும் அரங்கிற்கு அனைத்து சிவ பக்தர்களும் ஒப்ப பிரம்மோற்சவம் உள்ளிட்ட பல உற்சவங்களும் நடைபெற சாத்தியமான சூழல் உண்டாகும். அதுவரை பற்பல தடைகள் வரக்கூடும். பிற்காலத்தில் தில்லை நடராஜர் சந்நதி உலகிலேயே மிகப் பிரபலமான க்ஷேத்திரமாக விளங்கப்போகிறது. 

இன்றும் சுந்தரமூர்த்தி நாயனார் கண்ணப்ப நாயனார், ஞான சம்பந்தர், அப்பர், பதஞ்சலி, வ்யாக்ரபாதர் போன்றோரும், சிவநாடு சேர்ந்த ராஜராஜ சோழர், திருமலை நாயக்கர், பராந்தகச் சோழர், கிருஷ்ண தேவராயர், ஆதித்ய சோழர், அருள்பாய சோழர், விக்ரமாதித்யர் போன்றோர் மகா சிவராத்திரிக்கு எழுந்தருளி சிவனை ஆராதிக்கின்றனர். சிவகங்கை தீர்த்தமே பூலோகத்தில் சகல பீடைகளிலும் இருந்து நிவாரணம் தரவல்லது. மேலும், சிவனின் நடன காட்சியானது தீமைகளை அழித்து மக்களை காத்தல், உலகை நடத்திச் செல்லல் என்ற பல அம்சங்களைக் கொண்டுள்ளது.இங்கு 48 நாட்கள் கோயில் வளாகத்தில் தங்கி மதியம் உணவு மட்டும் உண்டு விரதம் இருந்து தேவார திருவாசங்களை பாராயணம் செய்தால் - 16 தலைமுறைக்கு பெரும் நோய் அண்டாது. குறைவில்லாத தனம் சேரும் என்கிறது நாடி சாஸ்திரம். இதையே புலிக்கால் முனி தனது நாடியில்,

‘‘போகா பீடை போம்
வம்ஸமது வ்ருத்தி யுண்டாம்
வாடா தனமது தானே வந்தண்டும்
சித்திரக் கூடத்துஞ் சிவகாமி நாதனை 
விரதங்கொண்டு
தில்லையிருந்து சேவிப்பார்க்கிது
திண்ணமாய் சொன்னோம்’’

பேய் பிசாசு போன்றவை கோயிலுக்குள் வருவது இல்லை. தீய சக்திகளும் ஒளிந்து ஓடும். பைத்தியம் என்ற பெரும் பீடைக்கு மருந்து, மன அழுத்தம் தீர மருந்து ஒன்று உண்டு. ஆனித் திருமஞ்சனத்தன்று தில்லை பொற்கூரையடி வீற்றிருக்கும் கயிலாநாதனை மனத்தில் ஒரு முகமாய் எண்ணி அவனை நோக்கி அமர்ந்து ‘’ஓம் நமசிவாய’’ என சொல்லி எழுந்தால் குறைவற்ற செல்வம் சேரும். இறை தரிசனமும் சேரும் என்கிறார் அகஸ்தியர்.

இறைவனின் திருக்கோல அழகினை மானுட சமூகம் கண்டு பயன்பெற வேண்டும் என்பதற்காகவே நடராஜப்பெருமான் தான் உறைந்துள்ள திருக்கோயில் கர்ப்பக்கிரகத்தில் இருந்து வெளிவந்து அருள் புரியும் திருவிழாக்கள் இரண்டேயாம். அவற்றுள் ஒன்று மார்கழி ஆருத்ரா தரிசனம், மற்றொன்று ஆனித்திருமஞ்சனம் ஆகும். சிதம்பரம் நடராஜருக்குத் தினந்தோறும் ஆறுகாலப் பூஜைகள் நடைபெறுகின்றன. அவை காலைசாந்தி, இரண்டாம்காலம், உச்சிகாலம், சாயங்காலம், ரகசியபூஜைக்காலம், அர்த்தசாமம் என்பனவாகும். அதே போன்று இறைவனுக்கு வருடத்தில் ஆறுமகா அபிஷேகங்கள் நடைபெறுகின்றன. இது இந்துசமயத் தொன்மத்தின்படி அமைந்ததாகும். தொன்மவியல் கணக்கின்படி ஓர் ஆண்டு என்பது தேவர்களுக்கு ஓர் நாளாகும். ஓர்நாளில் மனிதர்கள் இறைவனுக்குச் செய்யும் ஆறு காலப் பூஜைகளைப் போல் தேவர்களும் இறைவனுக்கு ஆறுகாலப்பூஜைகள் செய்கின்றனர். 

ஆனால் தேவர்களின் ஒரு நாள் மனிதர்களின் கணக்கின் படி ஓர் ஆண்டாய் அமைவதால் அது வருடத்திற்கு ஆறுகாலப் பூஜையாக அமைகின்றது. அத்தகைய ஐதீகத்தின் அடிப்படையிலே சிதம்பரம் நடராஜருக்கு வருடத்திற்கு ஆறு மகாபூஜைகள் நடைபெறுகின்றன. அவை முறையே சித்திரை மாதம் திருவோணநட்சத்திரத்தில் சிதம்பரத்தின் கனகசபையில் மாலையில் நடைபெறும் அபிஷேகம். ஆனிமாதம் உத்திரநட்சத்திரத்தில் ராஜசபையில் நடைபெறும் அபிஷேகம். ஆவணிமாதம் பூர்வபட்ச சதுர்த்தியில் கனகசபையில் மாலையில் நடைபெறும் அபிஷேகம். புரட்டாசி மாதம்; பூர்வபட்ச சதுர்த்தியில் கனகசபையில் மாலையில் நடைபெறும் அபிஷேகம். மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில் ராஜசபையில் நடைபெறும் அபிஷேகம். மாசிமாதம் பூர்வபட்ச சதுர்த்தியில் கனகசபையில் மாலையில் நடைபெறும் அபிஷேகம் என்பவையாகும் இவற்றுள் மார்கழித் திருவாதிரையும் ஆனித் திருமஞ்சனமும் குறிப்பிடத்தக்கதாகும். 

ஆனித் திருமஞ்சனம் ஆனி மாதம் உத்திரத் திருநாளில் நடைபெறும். இவ் உத்திர நட்சத்திரம் துருவ நட்சத்திரம் என்று சொல்லப்படுகிறது. வேனிற்காலம், ஆனி இலை ‘அசங்க’ என்றொரு சொல் வழக்கு உண்டு. அதன் பொருள் ஆனி மாதத்தில் மழை வளம் சிறக்கும் என்பதாகும். அத்தகைய மாதத்தில்தான் நதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும். மேலும், பன்னிரு மாதங்களில் நீண்ட பகல்பொழுதினைக் கொண்ட மாதமும் ஆனி மாதமே ஆகும். இம்மாதத்தில் சிதம்பரத்திலும், திருவாரூரிலும் விழா சிறப்பாக நடைபெறும். தில்லையில் இறைவன் சந்நதிக்கு வலது புறத்தில் சிதம்பர ரகசியம் உள்ளது. திருவாரூரில் தியாகராஜப் பெருமானின் திருமேனியே ரகசியம் ஆகும். இந்த இரண்டு பெருமான்களின் திருநடனத்தையும் பதஞ்சலி முனிவரும் வியாக்ரபாத முனிவரும் கண்டு வழிபடுவதாய்ப் புராணங்கள் உரைக்கும். நடராஜருக்கு ஆனிமாதம் உத்திர நட்சத்திரத்தன்று சாயரட்சை பூஜையில் (மாலை வேளை)  சிறப்பு அபிஷேகமும் அலங்காரமும் செய்வதுதான் ஆனித் திருமஞ்சனம் எனப்படும். ஆனித் திருமஞ்சனத்தன்று சிதம்பரத்தில் எழுந்தருளி அருட் பாலிக்கும் ஆதிமூலவர் சந்திர மௌலீஸ்வரர்க்கு ஆறுகால வழிபாடு மிகச் சிறப்பாய் நடைபெறும்.  அந்த நிகழ்வின் போது கனகசபையில் சிறப்பு வழிபாடும் அபிஷேகமும் நடைபெறும். அது நிறைவு பெற்றவுடன் சிவகாமி அம்மை உடனாய தில்லை நடராஜருக்கு பதினாறு வகைத் தீபங்களால் ஆராதனை காட்டப்படும். இத்தகைய ஆனி திருமஞ்சனத் திருவிழாவினைத் தில்லையில் தொடங்கி வைத்தவர் பதஞ்சலி முனிவர் ஆவார்...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  

     என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

வரதர் சிலையை அத்தி மரத்தில் செய்யக்காரணம்.!!

எத்தனை ஆண்டுகள் ஆனாலும் அழியாத நிலையில் இருக்க வேண்டும் என்பதற்காக அத்தி மரத்தில் அந்த பெருமாள் சிலையை பிரம்மா வடித்ததாக புராணங்களில் கூறப்பட்டுள்ளது.

பெருமாள் தனக்கு உதவி செய்ததால் மகிழ்ச்சி அடைந்த பிரம்மா அந்த பெருமாளுக்கு ஒரு சிலை செய்ய முடிவு செய்தார். அந்த சிலை எப்படி அமைய வேண்டும் என்று பெருமாளிடமே அவர் விளக்கம் கேட்டார். உடனே பெருமாள் சங்கு, சக்கரம், கதை தாங்கிய திருக்கோலத்தில் காட்சி அளித்தார்.

சித்திரை மாதம் திருவோணம் நட்சத்திரத்தில் புண்ணிய கோடி விமானத்தில் பெருமாள் இந்த காட்சியை வெளிப்படுத்தினார். இந்த காட்சியை நன்கு பார்த்துக் கொண்ட பிரம்மா தனக்கு தரிசனம் தந்த பெருமாளின் வடிவத்தை அதே மாதிரி சிலையாக வடிவமைத்தார்.

எத்தனை ஆண்டுகள் ஆனாலும் அழியாத நிலையில் இருக்க வேண்டும் என்பதற்காக அத்தி மரத்தில் அந்த பெருமாள் சிலையை பிரம்மா வடித்ததாக புராணங்களில் கூறப்பட்டுள்ளது...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  

     என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

அனுமன் கால் பதித்த இலங்கை ரம்போடா அனுமன் ஆலயம்.!!

இலங்கை சின்மயா மிஷனால் உருவாக்கப்பட்ட ஆலயமே, ‘ரம்போடா அனுமன் ஆலயம்’ ஆகும். இங்கு அமைக்கப்பட்ட தனிக் கோவிலாக, இந்தக் கோவில் இருக்கிறது.


லட்சுமணனால் மூக்கறுபட்ட சூர்ப்பனகை, தன் சூழ்ச்சி வலையால் ராவணனுக்கு சீதையின் மீது அளவுகடந்த விருப்பம் ஏற்படும்படிச் செய்தாள். பெண் பித்து தலைக்கேறிய ராவணன், சீதையை தந்திரமாக கவர்ந்து சென்று இலங்கையில் சிறை வைத்தான்.

இதையடுத்து சீதையைத் தேடும் பணியில் ராமனும், அவருக்கு உதவிய சுக்ரீவனின் படை வீரர்களும் ஈடுபட்டனர். அப்போது சடாயுவின் சகோதரர் சம்பாதியின் மூலமாக, சீதை இலங்கையில் உள்ள அசோகவனத்தில் சிறை வைக்கப்பட்டிருப்பது தெரியவருகிறது. அங்கு செல்ல அனுமனால் மட்டுமே முடியும் என்பதை உணர்ந்த ராமபிரான், தன்னிடம் இருந்த மோதிரத்தை அடையாளமாக சீதையிடம் காட்டும்படி கூறி அனுமனிடம் கொடுத்து அனுப்பிவைத்தார்.

இலங்கைக்கு பறந்து சென்ற அனுமன், இலங்கையில் அசோகவனம் அருகே உள்ள ரம்போடா என்ற இடத்தில், தன் பாதங்களை வைத்து, அன்னை சீதையைத் தேடினார். ஒரு வழியாக அசோக வனத்தில் அரக்கியர்கள் காவலில் இருந்த சீதையைக் கண்டுபிடித்தார். பின்னர் அரக்கியர்களை மயங்கச் செய்து, ராமன் தந்த மோதிரத்தைக் காட்டி, தான் ராமனின் தூதன் என்று தன்னை அறிமுகம் செய்தார்.

அதன்பிறகே ராமபிரான், ராவணனுடன் போர்புரிந்து வதம் செய்ததாகவும், சீதை மீட்கப்பட்டதாகவும் ராமாயண இதிகாசம் எடுத்துரைக்கிறது.

இந்த வகையில், இலங்கையில் அனுமன் முதன் முதலில் தன் காலடித் தடத்தை பதித்த இடமாக, இலங்கையில் உள்ள ரம்போடா மலைமுகடு பகுதி நம்பப்படுகிறது. இந்த இடத்தில் இலங்கை சின்மயா மிஷனால் உருவாக்கப்பட்ட ஆலயமே, ‘ரம்போடா அனுமன் ஆலயம்’ ஆகும். இங்கு அமைக்கப்பட்ட தனிக் கோவிலாக, இந்தக் கோவில் இருக்கிறது.

இந்த வரலாற்றை உறுதிப்படுத்தும் விதமாக சீதை சிறையிடப்பட்ட அசோகவனம், தற்போது ‘சீதா எலியா’ என்று வழங்கப்படுகிறது. சீதை அக்னிப் பிரவேசம் செய்த இடம், ராவணன் மாளிகை, கோட்டை என பல்வேறு பகுதிகளும் இந்தப் பகுதிகளில் நிறைந்துள்ளன.

ஆலய அமைப்பு

கொழும்பில் இருந்து, மலைகள் நிறைந்த நுவரெலியா செல்லும் சாலையில், சாலையோர மலை முகட்டில், ரம்போடா அனுமன் கோவில் அமைந்துள்ளது. மேலே செல்ல சாலை வசதி இருக்கிறது. எழிலான தனிக்கோவிலில் அனுமன் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். ஆலயத்தின் இடது மற்றும் வலது புறங்களில் மலைகள் நிறைந்துள்ளன. நேர் எதிரே பதினாறு அடி உயர பக்த அனுமன் கைகூப்பி வணங்கிய கோலத்தில், ராம பக்தனாகப் பணிவுடன் நிற்பது நம்மைப் பரவசப்படுத்துகிறது. ஆலயத்தின் பின்புறம் உயரமான மலைகள் பசுமைப் போர்வையைப் போர்த்தியபடி, கண்ணுக்கு விருந்தளிக்கின்றன.

ஒரே கல்லால் ஆன பதினாறு அடி உயர பக்த அனுமன் சிலை, 2001-ம் ஆண்டில் இந்த ஆலயத்தில் அமைக்கப்பட்டிருக்கிறது. இலங்கை நாட்டின் முக்கியமான வழிபாட்டுத் தலம் என்ற பெருமையை இந்த ஆலயம் பெற்றிருக்கிறது. இலங்கைக்கு வரும் பயணிகள் அனைவரையும் கவர்ந்திழுக்கும் ஆலயமாகவும் இது விளங்குகிறது. அடித்தளத்தில் பிரமாண்ட தியான மண்டபம் அமைந்துள்ளது. இலங்கையில் சின்மயா மிஷன் கோவில் எழுப்ப, 1980-ல் பூஜ்ய குருதேவ் சுவாமி சின்மயானந்தா தேர்வு செய்த இடம் இது. இதன்பின் 2001-ம் ஆண்டில்தான் பக்த அனுமன் ஆலயம் எழுப்பப்பட்டுள்ளது.

இந்த ஆலயத்தில் பவுர்ணமி நாளன்று சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. அன்று மட்டும் சுமார் மூவாயிரத்திற்கும் மேலான பக்தர்கள் வந்து வழிபடுகின்றனர். ரம்போடா அனுமன் கோவிலை, இலங்கை நாட்டின் சின்மயா மிஷன் நிர்வாகம் செய்து வருகிறது.

அமைவிடம்

இலங்கை நாட்டின் மத்திய மாகாணம், நுவரெலியா மாவட்டத்தில், பெரதெளியா- நுவரெலியா நெடுஞ்சாலையில், கொழும்பில் இருந்து 150 கிலோமீட்டர் தொலைவிலும், பெரதெளியாவில் இருந்து 40 கிலோமீட்டர் தூரத்திலும் அனுமன் ஆலயம் இருக்கும் மலைப் பகுதி அமைந்திருக்கிறது. இம்மலைகளின் வடபகுதி ‘ரம்போடா’ என்றும், தென்பகுதி ‘ராவணா போடா’ என்றும் அழைக்கப்படுகிறது. இதன் பொருள், ‘ராமன் படைவீரர்கள் பகுதி’, ‘ராவண படைப்பிரிவு பகுதி’ என்பதாகும்...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  

     என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

துஷ்ட சக்திகளால் பாதிப்புகள் ஏற்படாமல் காக்கும் வழிபாடு.!!

துர்க்கை அம்மனை தொடர்ந்து வழிபடுவர்களுக்கு எதிரிகளே இல்லாத நிலையும் உண்டாகும். செய்வினை, மாந்திரீக ஏவல்கள் மற்றும் துஷ்ட சக்திகளால் பாதிப்புகள் ஏற்படாமல் காக்கும்.


வடமொழியில் துர்க்கை என்றால் “வெல்ல முடியாதவள்” என்று பொருள். அவளை மனதார வணங்குபவர்களுக்கு அவர் பல அற்புத சக்திகளை தருவாள் என்பது உண்மை. 

பராசக்தியான பார்வதியின் ஒரு அம்சமாக தோன்றியவர் தான் துர்கா தேவி. தன்னை வழிபடும் பக்தர்களுக்கு அனைத்தையும் அருள்கின்ற தெய்வம் துர்கா தேவி. அதிலும் குறிப்பாக எதிர்ப்புகளை சமாளிக்கும் வெற்றி பெறும் ஆற்றலை வழங்குகிறார். புராண காலத்தில் அயோத்தி சக்கரவர்த்தியான ஸ்ரீராமச்சந்திரமூர்த்தி துர்கா தேவியை வழிபட்ட பிறகே, இலங்கை வேந்தன் ராவணனை வெற்றி கொள்ளும் சக்தியை பெற்றதாக கூறப்படுகிறது. 

வாழ்வில் மிகுந்த கஷ்டங்களை சந்திப்பவர்கள், நேரடி மற்றும் மறைமுக எதிர்ப்புகளால் அவதிப்படுபவர்கள் வாழ்நாள் முழுவதும் துர்க்கை தேவியை வழிபட்டு வருவதால் சிறப்பான பலன்கள் ஏற்படும். துஷ்ட சக்திகளை அழிக்கும் தெய்வமாக தோன்றியவர் தான் துர்க்கை அம்மன். எனவே துர்க்கையம்மனை முறைப்படி வழிபடுபவர்களுக்கு நேரடி மற்றும் மறைமுக எதிரிகளால் ஏற்படும் தொல்லைகள் நீங்கும். 

துர்க்கை அம்மனை தொடர்ந்து வழிபடுவர்களுக்கு எதிரிகளே இல்லாத நிலையும் உண்டாகும். செய்வினை, மாந்திரீக ஏவல்கள் மற்றும் துஷ்ட சக்திகளால் பாதிப்புகள் ஏற்படாமல் காக்கும். குடும்பத்தில் பொருளாதார கஷ்ட நிலையை அறவே நீக்கும். சுபிட்சங்கள் பெருகும். பெண்களுக்கு சீக்கிரத்தில் நல்ல முறையில் திருமணம் நடக்கும். ஈடுபடும் காரியங்கள் அனைத்திலும் தாமதங்கள், தடைகள் நீங்கி மகத்தான வெற்றி உண்டாகும்...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  

     என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

சக்தி தரும் துர்க்கை மந்திரம்.!!

துர்க்கையை வணங்கும் சமயத்தில் கீழே உள்ள மந்திரத்தை ஜெபிப்பதன் மூலம் அவள் அருளை பெறலாம். இதோ அவருக்குரிய காயத்ரி மந்திரம்.


ஓம் காத்யாயனய வித்மஹே 
கன்யாகுமாரி தீமஹி 
தன்னோ துர்கிப்ரசோதயாத்

பொது பொருள்: காத்யாயனய மகரிஷிக்கு மகளாய் பிறந்தவளே, என்றும் இளம் குமரியாய் விளங்குபவளே உங்களை வணங்குவதன் பயனாக என் மனதை தெளிவு படுத்தி என் அறிவை மேம்படுத்தி பல நற்பலன்களை எனக்கு அளிக்க உங்கள் பாதம் பணிகிறேன்...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  

     என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

இன்று 02.07.2019 ஆனி அமாவாசை விரதம்.!!

ஆனி மாத அமாவாசை தினத்தில் விரதம் இருநது தர்ப்பணம் மற்றும் சிராத்தம் தந்து முன்னோர்களை வழிபடுவதால் குடும்பத்தில் தரித்திர நிலை நீங்கி சுபிட்சங்கள் பெருகும்.


சூரியன் மிதுன ராசியில் பிரவேசிக்கும் மாதமே ஆனி மாதம் எனப்படுகிறது. ஆனி மாத அமாவாசை தினத்தன்று காலையில் குளித்து முடித்து, உங்கள் ஊரில் இருக்கும் ஆற்றங்கரை அல்லது குளக்கரையில் மைத்ர முகூர்த்த நேரம் எனப்படும் அதிகாலை நேரத்தில் வேதியர்களை கொண்டு மறைந்த உங்கள் முன்னோர்கள், உறவினர்களுக்கு திதி தர்ப்பணம் தர வேண்டும். 

வீட்டின் பூஜையறையை சுத்தம் செய்து தீபமேற்ற வேண்டும். பின்பு உங்கள் வீட்டிலிருக்கும் மறைந்த முன்னோர்களின் படத்திற்கு பூக்கள் சமர்ப்பித்து, தூபங்கள் கொளுத்தி வணங்க வேண்டும். சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக அமாவாசை திதி, தர்ப்பணம் போன்றவற்றை தர இயலாதவர்கள் அன்றைய தினம் உங்கள் வீட்டிலேயே முன்னோர்களை வழிபட்டு கருப்பு மற்றும் வெள்ளை எள் கலந்த சாதத்தை காகங்களுக்கு உணவாக வைப்பதால் முன்னோர்களுக்கு திதி அளித்த பலன் உண்டாகும்.

தொழில் மற்றும் வியாபாரங்களில் ஈடுபடுபவர்கள் நோய்களால் பாதிக்கப்பட்டு உடல்நலம் தேறுபவர்கள் ஆனி அமாவாசை தினத்தில் திருஷ்டி பூசணிகாய் அல்லது எலுமிச்சை பழம் வாங்கி வாங்கி, அதன் மீது கற்பூரம் கொளுத்தி உங்கள் தொழில், வியாபார இடங்களை திருஷ்டி கழித்து அதற்குரிய பூசணிக்காயை உடைத்தும், எலுமிச்சம் பழத்தை நசுக்கியும் திருஷ்டி கழித்திட வேண்டும்.

ஆனி மாதம் இறை வழிபாடு மேற்கொள்ளதக்க ஒரு சிறப்பான மாதமாக இருக்கிறது. இந்த ஆனி மாத அமாவாசை தினத்தில் விரதம் இருநது தர்ப்பணம் மற்றும் சிராத்தம் தந்து முன்னோர்களை வழிபடுவதால் குடும்பத்தில் தரித்திர நிலை நீங்கி சுபிட்சங்கள் பெருகும். தங்கள் வம்சத்தில் திருமணம் காலதாமதம் ஆகும் நபர்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும். வீண் பண விரயங்கள் ஏற்படுவது நீங்கும். வெளிநாடு செல்லும் முயற்சிகள் வெற்றி பெறும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றிகள் உண்டாகும். காரிய தடைகள் நீங்கும்...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  

     என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

Monday, 1 July 2019

அத்தி வரதர் மீண்டும் 2059-ம் ஆண்டு தான் காட்சி தருவார்.!!

இன்று 01.07.2019 முதல் காட்சி தரும் அத்தி வரதர் ஆகஸ்டு 17-ந்தேதி வரை பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். அடுத்து 2059-ம் ஆண்டு தான் மீண்டும் பக்தர்களுக்கு காட்சி தர வருவார்.


வசந்த மண்டபத்தில் இருந்து இன்று முதல் காட்சி தரும் ஆதி அத்தி வரதர் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 17-ந்தேதி வரை பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். அதன்பிறகு, பரிகார பூஜைகள் செய்யப்பட்டு மீண்டும் அனந்தசரஸ் குளத்திற்குள் நீருக்கடியில் வைக்கப்படுவார். அடுத்து 2059-ம் ஆண்டு தான் மீண்டும் பக்தர்களுக்கு காட்சி தர வருவார்.

இதற்கு முன்பு 1854-ம் ஆண்டு ஜூன் மாதம் 18-ந்தேதி, 1892-ம் ஆண்டு ஜூன் மாதம் 13-ந்தேதி, 1937-ம் ஆண்டு ஜூலை மாதம் 2-ந்தேதி ஆகிய நாட்களில் ஆதி அத்தி வரதர் குளத்தில் இருந்து வெளியே வந்து பக்தர்களுக்கு காட்சியளித்துள்ளார். ஆனால், அப்போதெல்லாம் 40 ஆண்டுகள் இடைவெளி என்பது சரியாக பின்பற்றப்படவில்லை. 

1937-ம் ஆண்டுக்கு பிறகு 1977-ம் ஆண்டு ஆதி அத்தி வரதர் குளத்தில் இருந்து வெளியே வந்திருக்க வேண்டும். அந்த நேரத்தில், கோவில் ராஜகோபுரம் கட்டும் பணி நடந்துள்ளது. எனவே, அந்தப் பணி முடிந்ததும் 1978-ம் ஆண்டு கோவில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளது. அதன்பிறகு, 1979-ம் ஆண்டு ஜூலை 2-ந்தேதி தான் (அதாவது 42 ஆண்டுகள் கழித்து) ஆதி அத்தி வரதர் அனந்தசரஸ் குளத்தில் இருந்து வெளியே வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்துள்ளார். தற்போது, சரியாக 40 ஆண்டுகளில் மீண்டும் அவர் வெளியே வந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  

     என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

இன்று ஆனி மாத சிவராத்திரி : புண்ணிய பலன்களை தரும் ஈசன் வழிபாடு.!!

சிவபெருமானுக்கு சிறப்பாக உள்ள நாட்கள் மூன்றாகும். அவை மகா சிவராத்திரி, திருக்கார்த்திகை, திருவாதிரை ஆகியவை ஆகும்.அதில் சிவராத்திரி தினங்களில் சிவபெருமானை வழிபடுவது மிகவும் சிறப்புடையதாகும்.அன்றையதினம் சிவன் கோவில்கள் இரவு முழுவதும் திறந்திருக்கும். ஆறு காலங்களுக்கும் அபிஷேகங்கள், பூஜைகள் நடைபெறும். அன்று ஈசனை நினைத்து விரதம் இருந்து ஆறு காலங்களையும் அபிஷேக ஆராதனையுடன் தரிசிப்பது மிகவும் புண்ணிய பலன்களை தரும். முக்தி கிடைக்கும்.


சிவராத்திரியில் யோக சிவ ராத்திரி, நித்திய சிவராத்திரி, பட்ச சிவ ராத்திரி, மாத சிவ ராத்திரி, மகா சிவராத்திரி என்று ஐந்து வகைகள் உண்டு. மாசி மாதம் கிருஷ்ணபட்ச சதுர்த்தியில் மகா சிவராத்திரி வரும். இன்று ஆனி மாத சிவராத்திரி. பக்தர்கள் விரதம் இருந்து சிவபெருமானை வழிபாடு செய்தால் வேண்டிய வரங்கள் அனைத்தும் நிறைவேறும். இந்த மாத சிவராத்திரி விரதம் தேன்றிய வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.

ஒரு காலத்தில் உலகப் பிரளயத்தின் போது உயிர்கள் எல்லாம் 'சிவன்' சிவனிடத்தே ஒடுங்கின. உலகங்களே தோன்றவில்லை. இந்த நிலையில் எல்லையில்லாக் கருணையுடைய அம்பிகை அண்டங்கள் தோன்றி இயங்கும் பொருட்டு இறைவனை இடைவிடாது தியானம் செய்தாள். அப்போது இறைவன் தன்னுள் ஒடுங்கி இருந்த உலகங்களை மீண்டும் உண்டாகச் செய்து உயிர்களையும் படைத்தார்.

அதன்பால் அன்னை பார்வதி தங்களை மனதில் தியானித்துப் போற்றிய காலம் 'சிவராத்திரி' என்று பெயர் பெறவேண்டும் என்றும் அதனைச் சிவராத்திரி விரதம் என்று எல்லோரும் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அதை கடைப்பிடிப்பவர்கள் எல்லா நலன்களும் பெற்று முக்தியடையவேண்டும் என்று இறைவனிடம் வேண்டினார் இறைவனும் அவ்வாறே நடைபெறும் என்று அருள்புரிந்தார்.

தேவியை போல நந்தி பெருமான், சனகாதி முனிவர் சிவராத்திரி விரதம் அனுஷ்டித்து தங்கள் விருப்பம் நிறைவேறப்பெற்றார். ஒவ்வொரு மாதமும் தேய்பிறை சதுர்த்தசி இரவு சிவனடியார் பலர் இந்த சிவராத்திரியை விரதத்தை மாதந்தோறும் தவறாமல் இதனை கடைப்பிடித்து வருவர்...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  

     என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡