Tuesday, 1 January 2019

ஏகாதசியன்று ஏன் விரதம் இருக்க வேண்டும்.!!

நம் முன்னோர்கள் ஏகாதசி தினத்தன்று விரதம் இருக்கும் அருமையான முறையை கொண்டு வந்து அதை ஆன்மீகத்துடன் ஐக்கியப்படுத்தி உள்ளனர்.

அமாவாசை அல்லது பவுர்ணமிக்கு பிறகு சந்திரன் பூமியை சுற்றி வரும்போது ஒரு நாளைக்கு 12 டிகிரி என்ற அளவில் விலகிச் சென்று ஏகாதசியன்று சுமார் 120 டிகிரிலியிருந்து 132 டிகிரியில் இருக்கும். அப்போது பூமி, சூரியன் சந்திரன் ஆகியவை ஒரு முக்கோண நிலையை அடைகிறது. அப்போது மற்ற நாட்களை விட அதிக அளவு பூமியின் மீதும், பூமியில் உள்ள தண்ணீர் மீதும், சந்திரனின் ஈர்ப்பு சக்தியால் பாதிப்பு உண்டாகிறது.

மனித உடலிலும் 70 சதவீதம் நீர் நிறைந்திருப்பதால் ஏகாதசி தினத்தன்று மனித உடலும் சந்திரனின் ஆகர்ஷண சக்தியால் பாதிக்கப்படும். அதன் காரணமாக நமது உடம்பில் உள்ள ஜீரண உறுப்புகள் சரிவர வேலை செய்யாது. அத்தகைய சூழ்நிலையில் நாம் உணவருந்தினால் சரியாக ஜீரணமாவது கடினம்.

சந்திரனின் ஆகர்ஷண சக்தியால் கடல் நீர் பொங்கி எழுந்து அலைக்கழிக்கப்படுவதைப் போல மனித உடலிலும் உள்ள தண்ணீரிலும் பாதிப்பு உண்டாகி, ஜீரண சக்தியை இழந்து விடுகிறது. மாதம் இருமுறை வரும் ஏகாதசி நாட்களில் தொடர்ந்து உணவை உட்கொண்டு வருபவர்களுக்கு அஜீரணம் உண்டாகலாம். 

அஜீரணமானவுடன் மருந்து உட்கொள்வதும், சாப்பிட்ட உணவை பலவந்தமாக ஜீரணிக்க முயற்சி செய்வதும் இயற்கைக்கு விரோதமான செயலாகும். இதன் விளைவாகத்தான் சிறிய சிறிய நோய்கள் உண்டாகிறது. அந்த நோய்கள் பெரிய நோய்களாக மாறி விடக்கூடாது என தடுக்கவே நம் முன்னோர்கள் ஏகாதசி தினத்தன்று விரதம் இருக்கும் அருமையான முறையை கொண்டு வந்து அதை ஆன்மீகத்துடன் ஐக்கியப்படுத்தி உள்ளனர்...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  
        என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

பீமனும்.. அனுமனும்.!!

திரவுபதி விரும்பிய சவுகந்திகா என்னும் மலர்களை பறிப்பதற்காக சென்ற பீமனுக்கு உதவி புரிய அனுமன் செய்த விளையாட்டை அறிந்து கொள்ளலாம்.

வனவாசத்தை முடித்துக் கொண்டு பாண்டவர்கள் நாடு திரும்பினர். அப்போது சவுகந்திகா என்னும் பெயர் கொண்ட மலர் ஒன்று திரவுபதியின் மீது வந்து விழுந்தது. அந்த மலரின் வாசனை திரவுபதிக்கு மிகவும் பிடித்துப் போனது. அதேபோன்ற மலர்கள் நிறைய வேண்டும் என்று ஆசை கொண்டாள். 

அவளது ஆசையை நிறைவேற்றும் பொருட்டு பீமன் புறப்பட்டான். அவனுக்கு உதவி செய்ய அனுமன் எண்ணினார். இமயமலைச் சாரலை அடைந்து, அங்கு பீமன் வரும் வழியில் பாதையை அடைத்தவாறு படுத்துக் கிடந்தார். வேகமாக வந்து கொண்டிருந்த பீமன், வழியில் வாலை நீட்டியவாறு படுத்திருந்த மாருதியை தள்ளிப்படுக்குமாறு கூறினான். 

அனுமன் முடியாது என்று கூற இருவருக்கும் வாக்குவாதம் வளர்ந்தது. முடிவில் மாருதி பீமனைப் பார்த்து “நீயே என் வாலை இழுத்து அப்பாற் தள்ளிவிட்டுச் செல்” என்றார். பீமன் அவரது வாலை அலட்சியமாக தள்ளினான். ஆனால் ஆஞ்ச நேயருடைய வால் கல்போல் கனத்தது. பீமனால் அதை அசைக்கக்கூட முடியவில்லை. 

பீமன் பிரமித்தான். “பீமா! நான் உன் அண்ணன் ஆஞ்சநேயன்” என்று மாருதி கூறியதும், பீமன் மகிழ்ந்து அவரை அணைத்தான். பின்னர் ஆஞ்சநேயர் இமயமலை தடாகத்தில் மலர்ந்து இருக்கும் சவுகந்திகா மலரைக் காட்டினார். பீமன் அவரை பணிந்து, சவுகந்தியா மலர்களை பறித்துக் கொண்டு சென்றான்...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  
        என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

நம்பி இறங்கலாம் தொந்தி கணபதியை.!!

பிடிச்சுவெச்ச பிள்ளையார் மாதிரி உட்கார்ந்திருக்கியே .. அவ்வப்போது  ஆங்காங்கே கேட்கும் வசனம்தான். ஆனால் ஆழ்ந்து யோசித்தால் புரியும்.அவனின்றி ஓர் அணுவும் அசையாது என்று பிரபஞ்சத்தையே அடக்கி ஆளும் சக்தியை சொல்கிறோம். அந்த சக்தியைப் பெறுவதற்கு  பிள்ளையின் உதவி தேவை. பார்வதி பரமேஸ்வரிக்கு பிள்ளை என்பதால் நம் அனைவருக்கும் பிள்ளை.அவருக்கான மரியாதையைச் சேர்த்து பிள்ளையார்  என்று அழைக்கிறோம். 

இன்றும் நாம் செய்யும் அனைத்து சுப காரியங்களிலும் பிள்ளையாரை வணங்காமல் அக்காரியத்தில் நமக்கு பிடிப்பு இருப்பதில்லை. முதல் கோணல் முற்றிலும் கோணலாகாமல் இருக்க  பிள்ளையாரைத்தான் அணுக வேண்டும். மளிகை பொருள்கள் எழுதும் சாதாரண வெள்ளைத்தாளில் கூட பிள்ளையார் சுழி போடாமல் சிலர் எழுதமாட்டார்கள்.  அந்தளவு நம் வாழ்க்கையில், நம் இன்பத்தில் இரண்டறக் கலந்து விட்டவர் பிள்ளையார்.  கணங்களின் அதிபதி, பூதகணங்களிற்கெல்லாம் அதிபதி என்பதால் கணபதி என்றும், யானை போன்ற முகத்துடன் இருப்பதால் ஆனை முகன் என்றும், யானைக்கு மற்றொரு பெயரான கஜம் என்ற பெயரைக் கொண்டு கஜமுகன் என்றும் அழைக்கப்படுகிறார். கடவுள்களில் மிகவும் எளிதானவர். கோயில்களும், கோபுரங்களும், விமானமும் இல்லையென்றாலும் அரச மரத்தடியில் கூட ஆனந்தமாய் அமர்ந்து விடுவதால் அனைவருக்கும் பிடித்த முழுமுதற் கடவுளாகிவிட்டார். 

சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்ப்புஜம் 
ப்ரசன்ன வதனம் த்யாயேத் சர்வ விக்நோப சாந்தயே 

எவ்வளவு எளிதான  பிள்ளையாருக்கு உரிய மந்திரம். குழந்தைகள் கூட விரும்பிசொல்லும் இந்த மந்திரத்தைச் சொல்லியபடி நெற்றியில் குட்டிக்கொண்டு ஆரம்பிக்கும் எந்த ஒரு காரியமும் வெற்றிப்பாதையில் இருந்து விலகியதில்லை. என்ன வேண்டுமானாலும் யாருக்கு வேண்டுமானாலும்  உடனடியாக தருவதில் முதன்மையானவர்  நமது முத்துவிநாயகர். கடவுளை நேரில் காணமுடியாது உணரத்தான் முடியும் என்பதெல்லாம் இவரிடம் நடக்காது. நம்ம பக்கத்து வீட்டு ஆசாமி மாதிரியான சாமி இவர். கடவுள்களிடம் வேண்டுதல் இருக்கட்டும். அதை நிறைவேற்ற தூதுபோக ஒருவர் வேண்டாமா. அதைச் செவ்வனே சிறப்பாக செய்து வருவதால் பிள்ளையாரை நினைத்து செய்யும் காரியங்கள் சிறப்பாக நிறைவேறும்.  20 வருஷம் முன்னாடி பரீட்சைய நல்லா எழுதலேன்னா கூட பசங்க கவலைப்படமாட்டாங்க. பிள்ளையாரை வணங்கலன்னாதான்  பரீட்சையில மார்க் வராதுங்கிற பயமே வரும். ஏன்னா படிச்ச கேள்வியை மட்டும் கொடுக்கிறதும்  எல்லாருக்கும் மார்க் போடறது பிள்ளையார்தாங்கிற அசைக்க முடியாத நம்பிக்கை அவங்களுக்கு.  பூஜைக்கு மஞ்சப் பிள்ளையாரும், சுபவிசேஷங்களில் பிள்ளையார் சுழியுடன் தொடங்கப்படும் செயல்களும் இன்றும் பழமை  மாறாமல் ஜெயத்தைக் கொடுத்துவருகிறது. எந்த நற்காரியத்திலும் நம்பி இறங்கலாம் தொந்தி கணபதியை.
புதிய ஆண்டில் புதிதாக தொடங்கிய,தொடங்கப்போகும் செயல்களை பிள்ளையாரின் காதில் ஓதுங்கள். தகுந்த நேரத்தில்  தகுந்த இடத்தில் நமக்காக தூது போகும் முழுமுதற் கடவுள் அவர்தான். அவர் மட்டும்தான்.  முதன்மை கடவுள் பிள்ளையாரை ஆண்டின் தொடக்கத்தில் வணங்குங்கள். இந்த வருடம் முழுவதும் வெற்றியை உங்கள் வசமாக்குவார்...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  
        என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

ஆன்மீக கதை – யார் சுமப்பார் நம் பாவத்தை ?

நாம் செய்யும் பாவங்கள் நம்மை தாக்கும் என்பதை எல்லோரும் அறிவோம். ஆனால் செய்யும் பாவங்களின் பலனை பங்குபோட எல்லோருமல்ல ஒருவருமே விரும்பமாட்டார்கள் என்பது தான் உண்மை. திருடன் ஒருவன் இருந்தான். அவன் வழிப்போக்கர்களிடம் பொருள்களை கொள்ளை யடித்து குடும்பத்தைக் காப்பாற்றி வந்தான். அவன் களவாடிய பொருள்களை அடைவதற்காக ஒரு கூட்டமே அவனைச் சுற்றி இருந்தது. அவன் செய்யும் தொழில் எல்லோருக்கும் தெரியும் என்றாலும் யாரும் அவனை எதுவும் கேட்கவில்லை. அவர்களுக்குத் தேவையானதை அனைவரும் தயங்காமல் கேட்டு பெற்றுக்கொண்டனர்.

ஒவ்வொருமுறை அவன் தொழிலை முடித்து வீட்டுக்கு திரும்பியதும் அவனது கூட்டாளிகளுக்கு பகிர்ந்து கொடுத்து விட்டு வீட்டுக்கு திரும்புவான். அவனது பெற்றோர்களும், மனைவியும், பிள்ளைகளும் இவனுக்காக காத்திருப்பார்கள்.  இவன் தான் திருடனாக இருந்தான். இவன் பிள்ளைகளைப் படிக்க வைத்தான். நான் செய்வது பாவத்தொழில். என்னைப் போல் அல்லாமல் நீங்கள் நன்றாக படித்து வாழ்க்கையில் முன்னேறுங்கள் என்று சொல்வான். ஒரு முறை காட்டில் இரவு நேரத்தில் வந்த பயணிகளிடம் வழிப்பறி செய்தவனை அந்தக் கும்பல் விரட்டியது. சுற்றிலும் விரட்டிய கூட்டத்திலிருந்து தப்பிக்க வழியின்றி ஒரு முனிவரின் ஆசிரமத்தில் அடைக்கலமானான். இரண்டு நாட்களாக அவனை  வலைவீசி தேடியது அந்த கும்பல். வெளியே வர வழியின்றி முனிவரிடமே இருந்தான். அவரை கண்டதும் தான் ஒரு திருடன் என்பதையும், தன்னிடம் பொருள்களைப் பறிகொடுத்த கும்பல் தன்னை தேடுவதாகவும் கூறினான். முனிவர் எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தார். 

மறுநாள் முனிவர் அவனிடமிருந்து அந்தப் பொருள்களைப் பெற்று அந்தக் குமபலை கண்டு அவர் களிடம் கொடுத்தார். ”அந்தத் திருடன் எங்கே?” என்றார்கள். ”அவன் தான் செய்த தவறை உணர்ந்து விட்டான். அவனை விட்டுவிடுங்கள்” என்றார். ”நீங்கள் சொல்லியதால் அவனை நாங்கள் தண்டிக்கவில்லை. இனியும் அவனை இப்பாவத்தொழிலை செய்ய சொல்லாதீர்கள். எங்கள் பொருள்கள் கிடைத்ததற்காக அவனுக்கு நாங்கள் நன்றி சொல்கிறோம்” என்று விடைபெற்றனர். அத்தனையும் மறைந்திருந்து கேட்டான் அந்தத் திருடன்.முனிவர் அவனைஅழைத்து ”உன் தவறை இப்போது உணர்ந்தாயா? நீ செய்யும் தொழில் உன் வீட்டுக்கு தெரியுமா? உன் வீட்டில் தடுக்கவில்லையா ?” என்று கேட்டார். ”அவர்களுக்கு தெரியும்.. மற்றவர்களின் துன்பத்தில் இன்பம் காணும் உன்னை கடவுள் நிச்சயம் தண்டிப்பார். நீ ஒவ்வொரு முறை மற்றவர்கள் பொருளை அபகரிக்கும் போதும் உனக்கான பாவக்கணக்கு கூடிகொண்டே போகும். இந்த பாவக்கணக்கை அவர்களும் பங்கு போடுகிறீர்களா என்று கேட்டு வா...” என்றார்.
”இதில் உங்களுக்கு சந்தேகமே வேண்டாம். அவர்களைக் காப்பாற்றதான் நான் இத்தொழிலில் ஈடு படுகிறேன். அதனால் அவர்களும் இதை ஏற்றுக் கொள்வார்கள் ” என்றான். ”சரி இன்று வெறுங்கையுடன் வீட்டுக்கு போய் நாளை என்னிடம் வா என்ன நடந்தாலும் எனக்கு தெரிவிக்க வேண்டும்” என்றார். அவரிடம் சம்மதம் தெரிவித்து வீட்டுக்கு சென்றான்.  வீட்டுக்குத் திரும்பிய திருடனை வரவேற்க அவனது கூட்டாளிகள், குடும்பத்தினர் காத்துக் கொண் டிருந்தனர். வெறுங்கையுடன் வந்த அவனை கண்டதும் அனைவரது விழிகளும் ஏமாற்றத்தில் மிதந்ததைக் கண்டான். அதை வெளியே காட்டிக்கொள்ளாமல் நடந்ததைக் கூறினான். ”நான் கஷ்டப் பட்டு என் உயிரை பணயம் வைத்து பொருளை ஈட்டி வருகிறேன். என் மீது ஏறும் பாவக் கணக்கில் நீங்களும் பங்கு கொள்ள விரும்புகிறேன்” என்றான். சற்று நேரம் அங்கு அமைதி நிலவியது. முதலில் கூட்டாளிகள் அவனிடம் வந்து நீ ஆரம்பத்திலேயே இதைப் பற்றி சொல்லியிருந்தால் நாங்கள் உன்னிடம் எதையும் பெற்று இருக்க மாட்டோம். இனிமேல் உனக்கும் எனக்கும் எவ்வித சம்பந்தமும் வேண்டாம் என்று வெளியேறிவிட்டார்கள். பெற்றோர்களிடம் வந்தான். ”என்னைக் காப்பாற்ற வேண்டியது உன்னுடைய கடமை. அதைத் தான் நீ செய்கிறாய்? அதனால் உன் பாவக்கணக்கில் எங்களைக் கூட்டு சேர்க்காதே” என்றார்கள். அடுத்ததாக மனைவியிடம் வந்தான் ”என்னில் பாதி நீ... என் சுகதுக்கங்களில் உனக்கும் சரிபாதி பங்குண்டு. அதனால் என் பாவக்கணக்கில் நீயும் பாதி எடுத்துக்கொள்கிறாயா?” என்றான். ”அது எப்படி .... மனைவியை கண்கலங்காமல் காப்பது கட்டியவனின் பொறுப்பு. உன்னிடம் நான் நேர்மையாக இருக்கிறேன். குழந்தைகளைப் பெற்று அவர்களையும், உன்னை பெற்றவர்களையும் பார்த்து கொள்கிறேன். என் கடமை இதோடு முடிந்தது என்றாள். பிள்ளைகளைப் பார்த்தான். எங்களை வளர்க்கும் பொறுப்பு உங்களுடையது தானே.. அதை தான் செய்கிறீர்கள். நாங்கள் உங்களை இத்தொழிலில் ஈடுபட சொல்லவில்லை. நீங்களாக ஏற்றுக்கொண்ட இத்தொழிலின் மூலம் கிடைக்கும் பாவக்கணக்கு உங்களையே சாரும்” என்றார்கள்.

முனிவரின் இருப்பிடத்தைத் தேடி வந்தான் திருடன். ”நீங்கள் சொன்னது சரியாயிற்று சாமி.. என் பாவக் கணக்கை ஏற்றுக்கொள்ள யாருமே முன் வரவில்லை. மற்றவர்களின் துன்பத்தில் இன்பத்தைக் கண்ட எனக்கு இது தேவைதான். இனி நான் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டான். தவறை உணர்ந்த மறுநிமிடம் இறைவன் உனக்கு துணையாகிவிட்டான். ”நீ மற்றவர்களுக்கு துணையாக இரு” என்றார். அன்றிலிருந்து அந்தக் காட்டிலேயே தங்கி வழிப்போக்கர்களுக்கு பாதுகாப்பாக இருந்தான். அவர்கள் தரும் உணவை உண்டான். பொருள் கொடுத்தாலும் எனக்கு தேவை பசியாறும் அளவு உணவு மட்டுமே. அதை இறைவன் உங்கள் மூலமாய் இந்த வேளை எனக்கு அருளியிருக்ககிறான் என்று அன்புடன் மறுத்துவிடுவான். அவனது பாதுகாப்பு நாளடைவில் மக்களிடம் பரவியது.காட்டின் எல்லைச்சாமியாக அவனை போற்றினார்கள் மக்கள். இறைவனின் அருளைப் பெற்று இறைவனடி சேர்ந்தான் திருடனாக இருந்தவன்.
படைத்தவனுக்கு தெரியும் நம்மை நல்வழியில் அழைத்துச்செல்ல.. எப்போதும் இறைவனை நினைத்திருந்தாலே அதற்கான பாதையையும் நமக்கு காட்டுவான்  இறைவன்...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  
        என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

சித்தர்களும், யோகிகளும் வணங்கும் மாவூற்று வேலப்பர்.!!

தமிழ்நாட்டில் உள்ள தேனிமாவட்டத்தில் ஆண்டிப்பட்டி- தெப்பம்பட்டி அருகில்  இருக்கும் மலைப்பகுதியில் அமைந்துள்ளது வேலப்பர் ஆலயம். தெப்பம் பட்டியில் பெரிய தெப்பம் ஒன்று உள்ளது. இந்த தெப்பத்துக்கும், தலத்துக்கும் சுரங்கத் தொடர்புகள் இருப்பதாக வரலாற்றுச் செய்திகள் தெரிவிக்கின்றன. குன்று இருக்கும் இடத்தில் குமரன் இருப்பான் என்பதற்கேற்ப 300 படிகளைக் கடந்தால் வேலப்பரைத் தரிசிக்கலாம். இங்கு மூலவராக இருக்கும் வேலப்பரை மாவூற்று வேலப்பர் என்று அழைக்கிறார்கள். இவர் சுயம்பு மூர்த்தியாக பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இந்தத் தலத்துக்கு அருகில் உள்ள நீரானது மருதமரத்தின் வேர்ப்பகுதியில் ஊற்றெடுத்து வழிந்தோடி பெரிய தீர்த்தமாக பெருகியது. மாமரத்தின் வேரிலிருந்து ஊற்று பெருகியதால் வேலப்பனை மாவூற்று வேலப்பன் என்று அழைக்கிறார்கள்.


பல்லாண்டுகளுக்கு முன்பு மலைப்பகுதியில் பளிஞர் இனத்தவர்கள் வசித்துவந்தனர். அவர்கள் வள்ளிக்கிழங்கை பயிரிட்டு அவற்றை உணவாக உண்டு வந்தனர். ஒருமுறை வள்ளிக்கிழங்கை எடுக்க மண்ணை கிளறிய போது இக்கோயில் உள்ள இடத்தில் வள்ளிக்கிழங்கின் வேர் மட்டும் வளர்ந்துக் கொண்டே போனது. வேரைத் தோண்டியபடி அவர்கள் செல்ல செல்ல ஆழமும் அதிகரித்தது. எனினும் விடாமல் தோண்டியதில் வேரின் முடிவில் சுயம்புவாக வேலப்பர் இருந்ததைப் பழங்குடியினர் கண்டனர். அப்போதைய ஜமீனிடம் இத்தகவலைத் தெரிவித்து சுயம்பு மூர்த்தியாக உருவான வேலப்பருக்கு கோயில் எழுப்பப்பட்டது. இன்றும் இந்த மூலவருக்கு வழிபாடு செய்வது பளிஞர் இன மக்கள்தான். தமிழகத்தில் எங்கும் இல்லாத சிறப்பாக இந்த இனத்தவர்  பரம்பரையாக பூஜை செய்வதோடு அருள்வாக்கும் கொடுக்கின்றனர். மாவூற்று  வேலப்பரும், மாவூற்று விநாயகரும் வடக்கு நோக்கி அருள்வது இத்தலத்தின் சிறப்பு. உடன் சப்தமாதர்களும் அருள் புரிகின்றனர். மலையின் அடிவாரத்தில் சக்தி கருப்பண்ணசாமி அருள்புரிகின்றனர்.

மாவூற்று வேலப்பரை பக்தர்களுடன் குகைகள் நிறைந்துள்ள பகுதியில் வசிக்கும் சித்தர்களும், யோகிகளும் வேலப்பனை நினைத்து தவம் புரிவதாக அங்கிருப்பவர்கள் சொல்கிறார்கள். கடன் தொல்லை, தீராத பிணி, சரும வியாதிகளை உடையவர்கள் இயற்கை அன்னையின் மடியில் எழில் கொஞ்சும் அழகில் அமைந்திருக்கும் ஊற்றில் நீராடி, மாவூற்று வேலப்பனை மனமுருக வேண்டினால் தீராத நோயும் தீரும். மனக்குறைகளும் அகலும். இங்குள்ள வேலப்பருக்கு பால், இளநீர்,பஞ்சாமிர்தம் போன்றவற்றால் சிறப்பு அபிஷேகம் செய்யப்படுகிறது. பக்தர்கள் நினைத்தது நிறைவேற வேலப்பனை தரிசித்து பால்குடம், காவடி எடுக்கின்றனர். விவசாயிகள் முளைப்பாரி எடுத்து வந்து வழிபட்டு விவசாயம் தழைக்க வேண்டுவார்கள். பக்தர்கள் ஊற்றிலிருந்து வெளிப்படும் தீர்த்தத்தை பக்தியுடன் எடுத்துச் செல்கின்றனர். இந்தத் தீர்த்தத்தை நீரில் கலந்து வீட்டுக்குள் தெளித்தால் நல்ல சக்திகள் வீட்டுக்குள் இருக்கும் என்பது நம்பிக்கை. 
மாவூற்று வேலவனை மனமுருக தரிசிப்போம்.  நினைத்த வரம் பெறுவோம்...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  
        என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

நாக தோஷம் நீங்க செய்யும் கருடன் வழிபாடு!!

கருடனுக்கு கருடாழ்வார் என்று சிறப்பு தருகிறது புராணங்கள். இந்த கருட பகவானை குறிப்பிட்ட நாட்களில் பார்த்தால் குறிப்பிட்ட பலன்களை பெறலாம்.


திருமாலின் வாகனமாக இருப்பவர் கருடன். பறவைகளின் அரசானாக விளங்கும் கருடன், மங்கள வடிவமாக கருதப்படுகிறார். அமிர்தத்தை தேவ லோகத்தில்  இருந்து கொண்டு வந்த பெருமை இவரை சாரும். கோவிலிலும், வீட்டிலும் கருடனை தினம்தோறும் வணங்குவதன் மூலம் நாக தோஷம் நீங்கும். தோல் வியாதிகள் குணமடையும். திருமணமான பெண்களுக்கு அறிவும், ஆற்றலும் நிறைந்த குழந்தை பிறக்கும். தீராத நோய்கள் தீரும்.
 
பெருமாள் கோவில்களுக்கு செல்வோர் கருடனை வழிபட்ட பின்னரே மூலவரை வழிபட வேண்டும் என்பது வைணவ ஆகமத்தின் நியதியாகும். கோவிலில் கும்பாபிஷேகம் நடக்கும்போது கருடன் வந்து வட்டமிட்டால் மட்டுமே அந்த கும்பாபிஷேகம் முழுமை அடைகிறது.
 
நாட்களும் பலன்களும்:
 
ஞாயிறு: நோய் நீங்கும். திங்கள்: குடும்பம் செழிக்கும். செவ்வாய்: உடல் பலம் கூடும். புதன்: எதிரிகளின் தொல்லை நீங்கும். வியாழன்: நீண்ட ஆயுளை  பெறலாம். வெள்ளி: லட்சுமி கடாட்சம் உண்டாகும். சனி: மோட்சம் கிடைக்கும்...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  
        என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

ஏகாதசியன்று ஏன் விரதம் இருக்க வேண்டும்?

நம் முன்னோர்கள் ஏகாதசி தினத்தன்று விரதம் இருக்கும் அருமையான முறையை கொண்டு வந்து அதை ஆன்மீகத்துடன் ஐக்கியப்படுத்தி உள்ளனர்.


அமாவாசை அல்லது பவுர்ணமிக்கு பிறகு சந்திரன் பூமியை சுற்றி வரும்போது ஒரு நாளைக்கு 12 டிகிரி என்ற அளவில் விலகிச் சென்று ஏகாதசியன்று சுமார் 120 டிகிரிலியிருந்து 132 டிகிரியில் இருக்கும். அப்போது பூமி, சூரியன் சந்திரன் ஆகியவை ஒரு முக்கோண நிலையை அடைகிறது. அப்போது மற்ற நாட்களை விட அதிக அளவு பூமியின் மீதும், பூமியில் உள்ள தண்ணீர் மீதும், சந்திரனின் ஈர்ப்பு சக்தியால் பாதிப்பு உண்டாகிறது.

மனித உடலிலும் 70 சதவீதம் நீர் நிறைந்திருப்பதால் ஏகாதசி தினத்தன்று மனித உடலும் சந்திரனின் ஆகர்ஷண சக்தியால் பாதிக்கப்படும். அதன் காரணமாக நமது உடம்பில் உள்ள ஜீரண உறுப்புகள் சரிவர வேலை செய்யாது. அத்தகைய சூழ்நிலையில் நாம் உணவருந்தினால் சரியாக ஜீரணமாவது கடினம்.

சந்திரனின் ஆகர்ஷண சக்தியால் கடல் நீர் பொங்கி எழுந்து அலைக்கழிக்கப்படுவதைப் போல மனித உடலிலும் உள்ள தண்ணீரிலும் பாதிப்பு உண்டாகி, ஜீரண சக்தியை இழந்து விடுகிறது. மாதம் இருமுறை வரும் ஏகாதசி நாட்களில் தொடர்ந்து உணவை உட்கொண்டு வருபவர்களுக்கு அஜீரணம் உண்டாகலாம். 

அஜீரணமானவுடன் மருந்து உட்கொள்வதும், சாப்பிட்ட உணவை பலவந்தமாக ஜீரணிக்க முயற்சி செய்வதும் இயற்கைக்கு விரோதமான செயலாகும். இதன் விளைவாகத்தான் சிறிய சிறிய நோய்கள் உண்டாகிறது. அந்த நோய்கள் பெரிய நோய்களாக மாறி விடக்கூடாது என தடுக்கவே நம் முன்னோர்கள் ஏகாதசி தினத்தன்று விரதம் இருக்கும் அருமையான முறையை கொண்டு வந்து அதை ஆன்மீகத்துடன் ஐக்கியப்படுத்தி உள்ளனர்...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  
        என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡