Monday, 1 October 2018

குழந்தை வரம் தரும் மழலை முனீஸ்வரன்.!!

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே வந்தவாசி சாலையில் உள்ள நல்லாளம் கிராமத்தில் 1800 ஆண்டுகள் பழமை வாய்ந்த மழலை முனீஸ்வரன் கோயில் உள்ளது. இங்கு காளிகாம்பாள் உடன் மழலை முனீஸ்வரன் என்ற பெயரில் சிவன் அருள்பாலிக்கிறார். பல ஆண்டுகளுக்கு முன் நல்லாளம் கிராமத்தில் தூளியில் இருக்கும் சிறு குழந்தைகள் அடிக்கடி காணாமல் போகும். குழந்தையின் பெற்றோர் தேடி திரியும்போது கோயில் அருகே உள்ள மரத்தின்மீது குழந்தை அழும் சத்தம் கேட்கும். பிறகு பெற்றோர்கள் கையேந்தி வணங்கி தன் பிள்ளையை பெற்று செல்வார்கள். இச்சம்பவம் அந்த கிராமத்தில் அடிக்கடி நடைபெறுகிறது.  ஒரு நாள் அதே கிராமத்தை சேர்ந்த காமாட்சி என்ற பெண் அவ்வழியாக ஆடுகளை ஓட்டி செல்லும்போது முட்புதரில் இருந்து அசரீரி ஒலி கேட்டது. ‘‘காமாட்சி, நான் மழலை முனீஸ்வரன். 

நான் இங்கு முட்புதரில் உள்ளேன், என்னை மீட்டு எனக்கு இங்கே ஒரு கோயில் கட்டு’’ என கேட்டுள்ளது. உடனே ஊருக்கு சென்ற காமாட்சி ஊர் மக்களை அழைத்து வந்து முட்புதர்களை சுத்தம் செய்தபோது 4 அடி உயர பீடத்தின் மீது சுயம்புவாக மழலை முனீஸ்வரன், காளிகாம்பாள் மற்றும் நாகலிங்கம் சிலைகள் இருந்தது. இதையடுத்து கிராம மக்கள் ஒன்று சேர்ந்து கோயில் கட்டினர். மழலை முனீஸ்வரன் பார்வதி தேவிக்கும், சிவபெருமானுக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தில் சிவபெருமான் கோபித்து கொண்டு சுடுகாட்டு வழியாக செல்கிறார். 

அப்போது தனது காலில் இறந்துபோன அழகான குழந்தைகளின் சடலம் தட்டுப்பட்டது. அந்த குழந்தைகளை கையில் தூக்கி பார்த்து கண்கலங்கிய சிவபெருமான், இந்த சின்னஞ்சிறிய மழலைச்செல்வங்களுக்கு இப்படி ஒரு கதியா என்று மனம் வருந்தினார். இனிமேல் இந்த மழலைச் செல்வங்கள் மட்டும் என்னால் உருவாக்கப்பட வேண்டும். அவ்வாறு உருவாகும் குழந்தைகளின் முதல் தலைமுடியை காணிக்கையாக செலுத்த வேண்டும் என்று அருளினார். அன்று முதல் இன்று வரை குழந்தைகளின் தலைமுடி காணிக்கை செலுத்தும் முறை  நடந்து கொண்டு இருக்கிறது. 

குழந்தை பாக்கியம்

இக்கோயிலுக்கு வெளியூர் மற்றும் வெளிமாநிலம் பக்தர்கள் தம்பதிகளாக வந்து குழந்தை வரம் வேண்டிகொள்கின்றனர். பின்னர் பிரார்த்தனைகள் நிறைவேறியதும் ஆடி மற்றும் தை மாதங்களில் கோயிலுக்கு வந்து சுவாமி, அம்பாளுக்கு பால் அபிஷேகம் செய்து குழந்தைகளுக்கு முடிகாணிக்கை செலுத்தி, காது குத்தி, அன்னதானம் செய்து வேண்டுதலை நிறைவேற்றுகின்றனர். இத்தலத்திற்கு வரும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்த வரவில்லை என்றால் அவர்களுக்கு நினைவுப்படுத்த குழந்தைகளின் முடிகளை சடைமுடியாக மாற்றி விடுவார் என்பது இத்தலத்தில் ஐதீகம்.

மண் குதிரையில் வலம்

மண் குதிரையில் முனீஸ்வரன் இரவு நேரத்தில் ஊரை சுற்றி வலம் வந்து காப்பதாகவும் ஊரில் இதுவரை எந்த ஒரு திருட்டு சம்பவமும் நடந்தது இல்லை என்று முனீஸ்வரனை கிராம மக்கள் போற்றுகின்றனர்.

காளிகாம்பாள்

இங்கு அம்மன் சுயம்புவாக கிழக்கு பார்த்த வண்ணம் கருணை பொங்கும் விழியுடன், பெண்களின் திருமாங்கல்யத்தை காப்பவராக காட்சி தருகிறார்.  இஷ்ட தேவதைகள் வாமுனீ, கரிமுனீ, மச்சமுனீ, ஜடாமுனீ, சட்டமுனீ, எல்லையை காக்கும் யோகமுனீ, லாடமுனீ, தவமுனீ, ஜெயமுனீ, செம்முனீ, ஆகிய பிரமாண்ட சிலைகள் உள்ளன. முனீஸ்வரரை வணங்கினால் திருமண தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது பக்தர்களின் தீராத நம்பிக்கை. மேலும் திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும் என்பதும் தீராத நோய்கள் தீரும் என்பது இத்தலத்தின் சிறப்பு. காளிகாம்பாள் சிவனின் அம்சமாக விளங்குவதால் இங்கு விபூதியே பிரசாதமாக பக்தர்களுக்கு தரப்படுகிறது...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  
        என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

சித்திரையில் சூரியன் வணங்கும் தான்தோன்றீஸ்வரர் கோயில்.!!

சேலத்தை அடுத்த வாழப்பாடி பேளூரில் இருக்கிறது தமிழகத்தில் பிரசித்தி பெற்ற தான்தோன்றீஸ்வரர் கோயில். 97 அடி உயர ராஜகோபுரத்துடன் கம்பீரமாக காட்சியளிக்கும் கோயிலின் முன்பகுதியில்  பதினாறு கால் மண்டபம் அசரவைக்கிறது. இங்கு யாழி மற்றும் குதிரைவீரன் சிற்பங்கள் கலை நுணுக்கத் துடன் அற்புதமாக செதுக்கப்பட்டுள்ளன. பஞ்சபூத லிங்கங்கள், அறுபத்து மூவர், குபேரலிங்கம், தட்சிணாமூர்த்தி, சகஸ்ரலிங்கம், ஆறுமுகசாமி, கஜலட்சுமி, ஜேஷ்டாதேவி, துர்க்கை, பிச்சாடனர், காலபைரவர் போன்ற சன்னதிகளும் உள்ளன. 

வன்னி மரத்தடியில் நவக்கிரகங்கள் வீற்றிருப்பதும், சனீஸ்வரர் காக்கை வாகனத்தில் ஒற்றைக்காலுடன் நின்றபடி காட்சி தருவதும்  சிறப்பம்சமாகும். முன்பொரு காலத்தில், இந்த பகுதியில் மிளகு வியாபாரி ஒருவர் வசித்தார். அவரை மக்கள் மிளகு செட்டியார் என்று அழைத்தனர். அவர் தினமும் மிளகு மூட்டைகளை மாட்டு வண்டியில் ஏற்றிச்சென்று சந்தையில் விற்று வருவார். ஒரு நாள் களைப்பு காரணமாக, அடர்ந்த காட்டுப்பகுதியில் தங்கினார். அப்போது சமையல் செய்ய, சுண்டைக்காய்களை ஒரு கல்லில் நசுக்கும்போது ‘எனக்கு கல்லடி பட்டு தலை வலிக்கிறது. உன் மிளகை அரைத்து பற்றுப்போடு’ என்று ஒரு குரல் கேட்டது. 

இதனால் பயந்துபோனவர் ‘என்னிடம் உளுந்துதான் இருக்கிறது’ என்று கூறியபடி, அங்கிருந்து அவசரமாக ஊருக்கு திரும்பினார். வீட்டிற்கு சென்றதும் மிளகு மூட்டைகளை திறந்து பார்த்தபோது அதிர்ச்சியில் உறைந்தார். காரணம் மிளகு முழுவதும் உளுந்தாக மாறி இருந்தது. பதறிப்போன வியாபாரி அசரீரி ஒலித்த இடத்திற்கு சென்று இறைவனை வேண்டினார்.  அப்போது, ‘நீ சுண்டைக்காய் நசுக்கிய இடத்து மண்ணை எடுத்து, உளுந்தின் மீது தூவு என்று குரல் ஒலித்தது. அதன்படியே செய்ய, உளுந்து மீண்டும் மிளகாக மாறியது. இதையடுத்து அந்த வியாபாரி தான் சுண்டைக்காய் நசுக்கிய கல்லை பார்த்தபோது, அது சுயம்புலிங்கம் என தெரியவந்தது. இப்படி சுயம்புவாக தோன்றிய சிவனுக்கு மிளகு செட்டியார் கட்டியதே இந்த கோயில் என்று தலவரலாறு கூறுகிறது. 

மூலவரான தான்தோன்றீஸ்வரர் சுயம்புலிங்கமாக கிழக்குநோக்கி காட்சி தருகிறார். இவரை வணங்கினால் கல்வி, செல்வம், உத்தியோக உயர்வு கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. ஆண்டுதோறும் சித்திரை 3ம் தேதி முதல் 10ம் தேதி வரை, சூரியன் தனது ஒளிக்கதிர்களால் மூலவரை வழிபடுவது வியப்புக்குரியது. அம்பாள் ‘அறம் வளர்த்த நாயகி’ என்ற பெயரில் ஈசனின் சன்னதிக்கு இடதுபுறம் தனிச்சன்னதியில் வீற்றிருக்கிறார். மா, பலா, இலுப்பை மூன்றும் இணைந்த அதிசய மரம் இங்கு தல விருட்சமாக இருக்கிறது. இங்கு தமிழ் புத்தாண்டு, சித்ரா பவுர்ணமி, திருவாதிரை, பங்குனி உத்திரம், ஆடிப்பெருக்கு, ஆடி அமாவாசை, ஆருத்ரா தரிசனம், சிவராத்திரி, நவராத்திரி போன்ற விழாக்கள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

திருமண பாக்கியம் தரும் இரட்டை விநாயகர்கள்

இந்த கோயிலில் வலம்புரி விநாயகர், இடம்புரி விநாயகர் என இரட்டை விநாயகர்கள் உள்ளனர். இவரை கல்யாண விநாயகர்கள் என்று அழைக்கிறார்கள். சங்கடஹர சதுர்த்தியின்போது இந்த இரட்டை விநாயகரை வழிபட்டு அபிஷேகம், அர்ச்சனை செய்து அருகு அல்லது வெள்ளெருக்கு மாலை அணிவித்தால் விரைவில் திருமண பாக்கியம் கிடைக்கும். இந்த விநாயகர் சன்னதி முன்பாக திருமணங்கள் நடைபெறும். இந்த தலத்தில் வசிஷ்டரும், அருந்ததியும் நேரடியாக இருந்து ஆசீர்வதிப்பதால், இங்கு நடக்கும் திருமணங்களில் அம்மி மிதித்து, அருந்ததி பார்ப்பது கிடையாது என்பதும் வியப்புக்குரிய தகவல்...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  
        என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

தாமிரபரணி ஆற்றில் 149 தீர்த்தக் கட்டங்கள்.!!

தாமிரபரணி ஆற்றில் சுவாமிக்கு தீர்த்தவாரி நடைபெறக்கூடிய படித்துறைகள் அனைத்தும் தீர்த்தக்கட்டம் என்று அழைக்கப்படுகின்றன. தாமிரபரணி ஆற்றில் 149 தீர்த்தக்கட்டங்கள் உள்ளன.

தாமிரபரணி ஆற்றில் சுவாமிக்கு தீர்த்தவாரி நடைபெறக்கூடிய படித்துறைகள் அனைத்தும் தீர்த்தக்கட்டம் என்று அழைக்கப்படுகின்றன. இந்த தீர்த்தக்கட்டங்கள் அனைத்திலும் புஷ்கர விழா கொண்டாடப்படுகிறது. தாமிரபரணி ஆற்றில் 149 தீர்த்தக்கட்டங்கள் உள்ளன. தூத்துக்குடி மாவட்டத்தில் முறப்பநாடு முதல் புன்னக்காயல் வரை பாய்ந்து ஓடும் தாமிரபரணி ஆற்றில் படித்துறைகளில் பூஜைகள் நடக்கிறது. முறப்பநாடு, ஆழ்வார்திருநகரி, ஸ்ரீவைகுண்டம், தென்திருப்பேரை, ஏரல், முக்காணி, ஆத்தூர், சேர்ந்தப்பூமங்கலம் ஆகிய இடங்களில் புஷ்கர விழா பூஜைகள் நடக்கிறது.

இந்த படித்துறைகளில் அந்தந்த ஊர் மக்கள் சார்பில் தினமும் புஷ்கர பூஜைகள், சிறிய அளவிலான ஹோமங்கள் நடத்தப்படுகிறது. தினமும் மாலையில் தாமிரபரணி நதிக்கு ஆரத்தி எடுக்கும் நதி ஆராதனை நிகழ்ச்சி நடக்கிறது.

முறப்பநாட்டில் பொதுமக்கள் பங்கேற்கும் வகையில் அமிர்த மிருத்ஞ்சய ஹோமம் நடக்கிறது. பிரமாண்டமான அதிருத்ர பெருவேள்வி நடக்கிறது. மக்கள் தாமிரபரணிக்கு விளக்கு ஏற்றி ஆராதனை செய்யும் வகையில் தீபலட்சுமி பூஜை நடக்கிறது. இதில் மக்கள் தீபங்களை ஏற்றி ஆராதனை செய்யலாம்.

விழாவின் நிறைவுநாளான 24-ந் தேதி 5,004 திருவிளக்கு பூஜை நடக்கிறது. விழாவையொட்டி தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கப்படுகிறது. அதே போன்று போலீசார் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்து உள்ளனர்...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  
        என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

மதுரை மீனாட்சி அம்மன் கிளி.!!

பக்தர்கள் அன்னை மீனாட்சியின் மீது மட்டுமல்ல, அவர் ஏந்திய கிளியின் மீதும் பக்தி கொண்டிருக்கிறார்கள். அந்த கிளி உங்கள் வேண்டுதல்களை அன்னை மீனாட்சியிடம் எடுத்து சொல்லி உங்கள் வேண்டுதல்களை நிறைவேற்ற உதவும்.

மதுரை மீனாட்சி அம்மனின் உருவத்தை நினைத்தாலே அவர் திருத்தோளில் இருக்கும் கிளியின் நினைவும் நமக்கு வந்து விடும். மீனாட்சி மதுரையம்பதியை ஆட்சி செய்து வந்த நேரத்தில் பறக்க முடியாத ஒரு கிளி மீனாட்சியை எண்ணி அழுததாம்.

அகிலத்தையே காக்கும் அந்த அங்கயற்கண்ணி கிளியை தனது கரத்தில் தாங்கி எப்போதும் தன்னோடே இருக்குமாறு வைத்துக்கொண்டாள் என ஒரு கர்ண பரம்பரை கதை சொல்லப்படுகின்றது. அதுமட்டுமல்ல, அன்னையை வேண்டி வணங்கும் பக்தர்களின் வேண்டுதல்களை மறக்காமல் ஞாபகம் வைத்துக்கொண்டு இந்த கிளி தான் அன்னையிடம் எப்போதும் சொல்லிக்கொண்டு இருக்குமாம்.

அதனால் தான் பக்தர்கள் அன்னை மீனாட்சியின் மீது மட்டுமல்ல, அவர் ஏந்திய அந்தக்கிளியின் மீதும் பக்தி கொண்டிருக்கிறார்கள். ஆனால் சில பக்தர்கள் அன்னை மீனாட்சியை வழிபடும் போது, அந்த கிளிளை கண்டு கொள்ளாமல் விட்டு விடுகிறார்கள்.

மதுரை மீனாட்சி “பிசி”யாக இருப்பவள். எனவே உங்கள் வேண்டுதல்களை எதற்கும் அந்த கிளியிடம் சொல்லி வையுங்கள். அந்த கிளி உங்கள் வேண்டுதல்களை சரியான நேரத்தில் அன்னை மீனாட்சியிடம் எடுத்து சொல்லி உங்கள் வேண்டுதல்களை நிறைவேற்ற உதவும். ஆகையால் கிளியை மறக்காதீர்கள்...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  
        என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

பிரச்சனை, தொல்லைகளை போக்கும் பைரவர் ஸ்லோகம்.!!

பைரவ மூர்த்தியை பவுர்ணமிக்கு பின் வரும் தேய்பிறை அஷ்டமி தினத்தில் பஞ்ச தீபம் ஏற்றிவைத்து வழிபாடு செய்தால், காலத்தால் தீர்க்க முடியாத தொல்லைகள் நீங்கும் என்பது ஐதீகம்.

சிவபெருமானின் ஐந்து முகங்களில் ஒன்றான தத்புருஷ முகத்தில் இருந்து தோன்றியவர் பைரவர். பைரவ மூர்த்தியை பவுர்ணமிக்கு பின் வரும் அஷ்டமியில், அதாவது தேய்பிறை அஷ்டமி தினத்தில் பஞ்ச தீபம் ஏற்றிவைத்து வழிபாடு செய்தால், காலத்தால் தீர்க்க முடியாத தொல்லைகள் கூட நீங்கும் என்பது ஐதீகம். 

உலகில் பிறந்தவர்கள் வேண்டுவது முக்தியைத் தான். அதாவது மறுபிறவி இல்லாத நிலை. ஆனால் ஒருவருக்கு பாவமோ அல்லது புண்ணியமோ இருந்தால் மறுபிறவி உண்டு. எப்போது பாவம் மற்றும் புண்ணியம் இரண்டும் அழிந்து வெறுமை நிலை உண்டாகின்றதோ அப்போது தான் பிறவி இல்லாத பெருநிலை ஏற்படும். அத்தகைய பிறவி இல்லாத பெருவாழ்வை தருபவர் கால பைரவர். இவர் காலத்தை மாற்றும் சக்தி கொண்டவர் என்பதால், ஒருவரது பாவ- புண்ணியங்களை அழிக்கும் ஆற்றல் இவருக்கு உண்டு.

வீட்டில் தினமும் விளக்கேற்றி வைத்து, ‘ஓம் ஹ்ரீம் கால பைரவாய நமஹ’ என்ற மந்திரத்தை 27 முறை உச்சரித்து வந்தால், வாழ்வில் அனைத்து வளங்களையும் பெறலாம்...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  
        என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

பதவி உயர்வு, திருமண தடை நீக்கும் வாழை பரிகார பூஜை.!!

திருச்சி அடுத்த திருப்பைஞ்ஞீலி என்ற இடத்தில் உள்ள ஞீலிவனேஸ்வரர் கோவிலில் பதவி உயர்வு கிடைக்க, திருமண தடை நீங்க, ஆயுள் நீடிக்க இங்கு வேண்டிக் கொள்ளலாம்.

திருச்சி அடுத்த திருப்பைஞ்ஞீலி என்ற இடத்தில் ஞீலிவனேஸ்வரர் கோயில் உள்ளது. ஞீலி என்பது ஒரு வகை கல்வாழை. பைஞ்ஞீலி என்றால் பசுமையான வாழை. பசுமையான ஞீலி வாழையை தல விருட்சமாக பெற்றதால் திருப்பபைஞ்ஞீலி என்று இத்தலம் பெயர் பெற்றது. 

இக்கோயிலில் இரு அம்மன் சன்னதிகள் இருக்கின்றன. இரண்டு அம்மன்கள் பெயரும் விசாலாட்சி தான். பார்வதி தேவி ஒருமுறை இத்தலத்திற்கு வந்து தவம் மேற்கொண்டாள். நிழல் தரும் மரங்கள் இல்லாததைக் கண்டு தனக்கு பணிவிடை செய்ய வந்த சப்த கன்னிகளை வாழை மரங்களாக அருகில் இருக்கக் கூறி அருள்செய்தாள். அத்தகைய பெருமை பெற்ற வாழைக்குப் பரிகாரம் செய்ய விரைவில் திருமணம் கைகூடும். 

வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வாழைக்குப் பரிகாரம் செய்வது மிகவும் சிறப்பாகும். வாழைப்பரிகார பூஜை நேரம் காலை 8.30 முதல் பகல் 12.30 மணி வரையும், மாலையில் 4.30 முதல் 5.30 வரையும் நடத்தப்படும். இழந்த பணிவாய்ப்புகள் கிடைக்க, பதவி உயர்வு கிடைக்க, திருமண தடை நீங்க, ஆயுள் நீடிக்க இங்கு வேண்டிக் கொள்ளலாம். எமன் சன்னதியில் ஆயுள் ஹோமங்கள் செய்கிறார்கள்...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  
        என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

தரணி புகழும் தாமிரபரணி.!!

ஒவ்வொரு நதிக்கும் ஒரு வரலாறு உண்டு. தாமிரபரணியின் வரலாறு தெய்வாம்சம் நிறைந்தது. இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.

ஒவ்வொரு நதிக்கும் ஒரு வரலாறு உண்டு. தாமிரபரணியின் வரலாறு தெய்வாம்சம் நிறைந்தது.

தட்சனின் மகளும், சிவபெருமானின் மனைவியுமானவர் தாட்சாயிணி. தட்சன் நடத்திய யாகத்துக்கு சிவபெருமானை அழைக்க மறுத்துவிட்டான். இதை அறிந்த தாட்சாயிணி கடும் கோபம் அடைந்து யாக சாலைக்கு சென்று யாகத்தில் குதித்துவிட்டாள். மறுபிறவியில் இமவான் மகளாக பார்வதிதேவி அவதாரம் செய்தார். அவர் பரமேசுவரனை திருமணம் செய்வதற்காக பராசக்தியை இடைவிடாது பூஜை செய்தார்.

அவரது பூஜைக்கு மனம் மகிழ்ந்த பராசக்தி, பார்வதி முன்தோன்றி அவரை ஆசீர்வதித்து, ‘உன் விருப்பம் நிறைவேறும்’ என்று ஒரு தாமிர புஷ்ப மாலையை பரிசாக அளித்தார். இந்த மாலையால் உலகுக்கு நன்மை ஏற்படும் என்று கூறி வாழ்த்தினார். பின்னர் சிவன்-பார்வதியின் திருமண நிகழ்ச்சி தொடங்கியது. இந்த அரிய திருமணத்தைக் காண மூவுலகில் உள்ள தேவர்களும், ரிஷிகளும், முனிவர்களும் வந்து குவிந்தனர். சிவன்-பார்வதி திருமணத்தை காண அகத்தியர் தன் மனைவி லோபா முத்திரையுடன் வந்து இருந்தார்.

உலகம் முழுவதும் பூமியின் வடதிசையில் கூடி இருந்ததால் பாரம் தங்காமல் வடதிசை தாழ்ந்து தென்திசை உயர்ந்தது. உடனே சிவபெருமான் உலகை சமன் செய்யும் பொருட்டு அகத்திய முனிவரை, லோகமுத்திரையுடன் தென்திசை செல்லும்படி உத்தரவிட்டார். சிவபெருமானின் திருமணக் கோலத்தை காண முடியவில்லையே என்று அகத்தியருக்கு வருத்தம் ஏற்பட்டது. இதை அறிந்த சிவபெருமான் அகத்தியரிடம் தன்னுடைய திருமணக் காட்சியை அவர் இருக்கும் இடத்தில் காட்டுவதாக உறுதி அளித்தார்.

முன்பு பார்வதிக்கு பராசக்தியால் அளிக்கப்பட்ட தாமிர மாலையை சிவன் அகத்தியரிடம் அளித்தார். அந்த மாலையை அகத்தியர் பெற்றுக்கொண்டபோது திடீரென அது அழகிய பெண்ணாக உருமாறியது. இதைக் கண்ணுற்ற அங்கு கூடியிருந்த தேவர்கள் பூ மாரி பெய்தனர்.

தாமிர மாலையில் இருந்து தோன்றியதாலும், நல்ல சிவந்த நிறம் உள்ளதாலும் தாமிரபரணி என்றும் பலவாறு புகழ்ந்து போற்றினர். மேலும் அந்த தாமிரபரணி தேவியானவள் பெண் உருவம் கொண்ட நதி என்றும், உரிய காலத்தில் நதி உருவம் பெற்று சிறந்த மேன்மையை உண்டாக்குவாள் என்றும் ஈஸ்வரன் அருள்வாக்கு கூறி அவளையும் தன்னோடு தென்திசைக்கு அழைத்துச் செல்லுமாறு அகத்தியருக்கு உத்தரவிட்டார். 

அகத்தியரும் தாமிரபரணியுடன் பொதிகை மலைக்கு வந்து சேர்ந்தார். தாமிரபரணி உரிய காலம் வந்த உடன் நதி வடிவம் அடைந்தாள். பின்னர் பொதிகை மலையில் உள்ள குப்தசிருங்கம் எனப்படும் கொடுமுடியில் இருந்தும் குகையில் இருந்தும் உற்பத்தியாகி பூர்வவாகினியாகவும் உத்தரவாகினியாகவும் வெகுதூரம் பாய்ந்து சென்று இறுதியில் திருச்செந்தூருக்கு வடதிசையில் மூன்று பாகமாக கடலில் கலக்கிறாள்.

தாமிரபரணியின் இரண்டு கரைகளிலும் எண்ணற்ற சிவாலயங்கள், விஷ்ணு ஆலயங்கள் குறிப்பாக நவகைலாயம், நவ திருப்பதி என போற்றப்படுகின்ற திருக்கோவில்கள் அமைந்து சிவ-விஷ்ணு ஒற்றுமையை பறைசாற்றுகின்றன.

ஆழ்வார்திருநகரியில் இருக்கும் நம்மாழ்வார் திருமேனி தாமிரபரணியின் புனித நீரால் உண்டாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  
        என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

விஷ்ணுக்குரிய விரதங்கள் - வழிபாடுகள்.!!

மஹாவிஷ்ணு தீயோரை தண்டித்து நல்லவர்களை காக்கும் கடவுள் மட்டுமன்று. அவரை விரதம் இருந்து வழிபடுவதால் வாழ்வில் மகிழ்ச்சி பெருகும்.

மஹாவிஷ்ணு தீயோரை தண்டித்து நல்லவர்களை காக்கும் கடவுள் மட்டுமன்று. எல்லாவற்றிலும் எல்லாமாக நிறைந்திருப்பவர். அவரை வழிபடுவதால் வாழ்வில் மகிழ்ச்சி பெருகும்.

ஒரு பௌர்ணமி அன்று, மஹாவிஷ்ணுக்கு முதல் பூஜையை தொடங்க வேண்டும். அடுத்து ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் இந்த பூஜையை தொடர வேண்டும். இந்த பூஜை செய்வதால் மகிழ்ச்சி மட்டுமன்று, செல்வம் சேரும், புகழ் கிட்டும், பொருளாதார சிக்கல் தீரும்.

மஹாவிஷ்ணு பூஜைக்கு தேவையான பொருள்கள் :

நிறை நாழி நெல், துளசி தளம், வாசனை திரவியங்கள், இனிப்பு பலகாரங்கள், நெற்பொரி, செங்கதலிப்பழம், பால், தேன், இளநீர், துருவிய தேங்காய், வெல்லம் ஆகியன சேர்த்து பிசைந்த அவல், கற்பூரம், ஊதுபத்தி ஆகியவற்றை தயாரித்து வைத்துக்கொள்ள வேண்டும் .

பௌர்ணமியன்று, வீட்டிலுள்ள ஓர் அறையை சுத்தம் செய்து, கிழக்கு முகமாக ஒரு பீடம் அமைக்க வேண்டும். அந்த பீடத்தில் துளசி தளம் நிரப்பி அதன் மீது நிறை நாழி நெல் வைக்க வேண்டும்.

துளசி தளத்தால் கட்டிய சரங்களால் நிறை நாழியை அலங்காரம் செய்ய வேண்டும். பின் அதற்கு மஞ்சள், குங்குமம் திலகமிடவும். அதனருகே, நெய் ஊற்றி ஏற்றிய விளக்கை வைக்கவும். தனியாக ஒரு தட்டில் அருகம்புல் பரப்பி, அதன் மீது மஞ்சள் தூள் அல்லது சாணத்தால் செய்த விநாயகரை வைத்து, மஞ்சள் குங்கும திலகமிடவும்.

வீட்டில் இருபவருள் எவர் மூத்தவரோ அவரை பூஜை செய்ய சொல்லவும். முதலில் விநாயகரை பூஜித்து கற்பூர தூபம் காட்டி எல்லோரும் வணங்கவும் . அதற்கடுத்து நிறை நாழியிலுள்ள மஹாவிஷ்ணுவிற்கு கற்பூர தூபம் காட்டி, ஸ்ரீ மஹாவிஷ்ணு தோத்திரம், மஹாவிஷ்ணு நாமாவளி கூறி, துளசி தாழ் அர்ச்சனை செய்யவேண்டும். அதற்கு பிறகு கற்பூர தூப தீபம் காட்டி எல்லாரும் வணங்க வேண்டும். 

இறைவனுக்கு படைத்த பிரசாதங்களை, பிறருக்கு கொடுத்து விட்டு பின்னரே வீட்டிலுள்ள அனைவரும் எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த முறைப்படி ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி அன்று இந்த மஹா விஷ்ணு பூஜை செய்தால் மன மகிழ்ச்சியும், குடும்பத்தினர் அனைவர்க்கும் எல்லா நன்மைகளும் கிட்டும்...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  
        என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

தாய், தந்தையருக்காகப் பகவான் கிருஷ்ணரையே காக்க வைத்த பக்தன்..!!

பித்ரு வழிபாடு செய்யும் போது சிலருக்கு இந்த சந்தேகம் ஏற்படும். கடவுளுக்கு முதலில் வழிபாடு செய்ய வேண்டுமா? அல்லது நம் முன்னோர்களுக்கு முதலில் பூஜை செய்து வழிபட வேண்டுமா? என்பதே அது. 
முதலில் பித்ருக்களைதான் நாம் வணங்க வேண்டும். அதன் பிறகே தெய்வ வழிபாட்டில் ஈடுபட வேண்டும் என்று சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளது. இதற்கு ஒரு புராண கதையும் இருக்கின்றது. 
பகவான் பாண்டுரங்கள் ஒரு முறை தன் பக்தன் ஹரிதாசரைப் பார்க்கச் சென்றார். அப்போது ஹரிதாசர் வயதான தன் பெற்றோருக்குப் பணிவிடைகள் செய்து கொண்டிருந்தார். 
பகவானைக் கண்டதும் ஹரிதாசர் தன் பணிவிடையை நிறுத்தவில்லை. பகவானைப் பார்த்து, சிறிது நேரம் காத்திருங்கள் நான் என் பணிவிடைகளை முடித்துவிட்டு வருகிறேன் என்று கூறி ஒரு செங்கலை சுட்டிக்காட்டினாராம். 
உடனே பகவான் பாண்டுரங்கன் அந்தச் செங்கல் மீது ஏறி நின்று கொண்டார். ஹரிதாசர் பணிவிடைகளை முடித்துவிட்டு வந்த பிறகு அவருக்குப் பகவான் ஆசி வழங்கினாராம். 
எனவே நம் வீட்டுப் பெரியவர்களுக்கே முதலில் மரியாதை கொடுக்க வேண்டும் என்பது இதன் மூலம் உறுதியாகிறது. பெற்ற தாய் தந்தையை பட்டினி போட்டுவிட்டு கோயிலுக்குச் சென்று அபிஷேகம், அன்னதானம் என்று செய்தால் ஒரு புண்ணியமும் கிடைக்காது என்பதை உணர வேண்டும்.
ஆகையால் நீங்கள் எந்த மாதம் சிரார்த்தம் செய்ய வேண்டியது உள்ளதோ அந்த மாதம் மற்ற சுப நிகழ்ச்சிகள் இல்லாதபடி பார்த்துக்கொள்ள வேண்டும். அதுபோல சிரார்த்தம் செய்யும் மாதங்களில் வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று சங்கல்பம் செய்துகொள்ளாமல் இருப்பது நல்லது...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  
        என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡