Friday, 1 June 2018

ஸ்ரீமுனீஸ்வரர்

முனிகளுக்கெல்லாம் மூத்தவர் மகா முனீஸ்வரர். இவரை பெரியண்ணன், பெரியாண்டவர்,பெரியசாமி என்றும் அழைப்பதும் உண்டு.எத்தனையோ கோவில்களில் எத்தனையோ பொருட்கள் திருடு போய் இருக்கின்றன.ஆனால் எந்த தெய்வமும் அதை களவாடியவர்களை தண்டித்தது கிடையாது.   காவல் தெய்மான முனீஸ்வரர் பைரவரின் அம்சம்.  தவறிழைத்தால் தண்டிப்பதில் வல்லவர்.   அவரை அண்டி சரணடைந்தால், தம்மை அண்டியவர்களை காப்பாற்றி அருள்பாலிக்கும் மகா முனீஸ்வரின் பாதம் பணிந்து நாமும் எல்லா வளங்களையும், மன நிம்மதியையும் பெறுவோம். இடைப்பாடி அருகே நவ முனிஸ்வரர்கள் கோவில் உள்ளது. சர்வசக்தி உடைய ஒன்பது முனிகள் உள்ளது . அது பற்றிய முழு விவரம் விரைவில் பதிவிடுகிறேன். ஓம் ஹ்ரீம் மகா முனீஸ்வராய நமஹ

சிவனாரின் அம்சமே ஸ்ரீமுனீஸ்வரர். முதலில் அறுவடை செய்கையில்..புதிய பொருட்கள் வாங்குகையில் முதலில் அவருக்கு வைத்து படைத்திடுக. முக்கிய வேலைக்கு செல்கையில்.. இரவு நேர காப்புக்கு.. தீவினை சக்தியிலிருந்து விடுபட.. பிரயாணத்தின் போது ஜபித்திட.. பய உணர்வு அகன்றிட..தன்னம்பிக்கை பெருகிட..உகந்த துதி இதுவே.

தாடிக் கொண்டையுடனே தளர்விலா தெய்வ வடிவுற்று

ஓடிப்போன பொருளெல்லாம் கூடியே வரவழைத்து வாடிய பயிரையும்

வளரச் செய்யும் முனிஸ்வரனே போற்றி! போற்றி!போற்றி!

ஓம் சிவார்ப்பணம் முடிந்த வரை ஆயிரம் பேரை ஜபிக்க வைக்கவும்.ஸ்ரீமுனீஸ்வரர் ஆலயத்தில் மற்றவர் படிக்க வரைந்திடுக!

முனீஸ்வரர் காயத்ரி மந்திரம்

ஓம் கானக வாசாய வித்மஹே

கட்க ஹஸ்தாய தீமஹி

தந்நோ முனீஸ்வர ப்ரசோதயாத்

ஓம் பராக்ரமாய வித்மஹே

முனிஸ்ரேஷ்டாய தீமஹி

தந்நோ முனி ப்ரசோதயாத்.

முனீசுவரர் எனும் பெயர் முனிவர்களுக்கெல்லாம் ஈசுவரனாக இருந்து ஞானத்தை வழங்கியவன் எனக் குறிப்பிடும். முனீசுவரன் இந்துக்களின் கிராமியத் தெய்வங்களின் வரிசையில் வீரமும், ஆவேசமும் நிறைந்த ஆண் தெய்வமாகும். தமிழகம், இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் முதலான நாடுகளில் முனீசுவரர் வழிபாடு சிறப்படைந்து காணப்படுகின்றது. கிராம மக்கள் முனி, முனியாண்டி, முனியன், முனியப்பர் என பல பெயர்களாலும் அழைத்து வழிபடுவர். முனி என்ற சொல் ரிக் வேதத்தில் ‘தெய்வ ஆவேசம் படைத்தவர்’ என்றம், பயமற்றவர் என்றும் பொருள் கொள்ளப் படுகின்றது. உபநிடதம், பகவத்கீதை என்பவற்றில் உலக வாழ்க்கையை வெறுத்து ஞான வரம்பாகிய மௌனத்தைக் கடைப்பிடித்து பரமதியானத்தில் ஆழ்ந்து தட்பவெப்ப, சுகதுக்கம் தாக்கப்படாமல் விருப்பு – வெறுப்பு, கோபதாபம் முதலியவை அறவே நீக்கியவர்கள் என்றும் கூறப்படுகின்றது..கிராம மக்கள் மத்தியில் தவறு செய்தால் தலையில் அடிப்பவர், நம்மோடு ஒரு மனிதராகவே வருவார், வானுக்கும் பூமிக்குமாக ஒளிப்பிளம்பாக காட்சி தருபவர் என்று பலவாறு நம்பிக்கைகள் காணப்படுகின்றன...

சில முனிப் பெயர்களைப்பார்ப்போம்:
முனி,
முனிரத்தினம்,
முனிராஜ்.
நாகமுனி,
வீரமுனி
ஜடாமுனி
ராஜமுனி
முனிராஜா
அருள்முனி
முனிராம்
முருகமுனி
முனிக்கருப்பன்
முனிதங்கம்
முனிவைரம்
முனீஸ்வரன்
முனீஸ்வரி
ஜெயமுனி
பொன்முனி
வெண்முனி
நாகரத்தினமுனி
சிவமுனி
மகாமுனி
சக்திமுனி
சுந்தரமகாமுனிலட்சுமி
முனிலட்சுமி
முனிகாளி
முனியப்பன்
முனியப்பு
முனியப்பா
முனிவாணி
கலைமுனி
நிலாமுனி
வான்முனி
சகாமுனி
வேல்முனி
ராஜமுனி
ராம்முனி
முனிபிள்ளையார்...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  
        என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

சொரிமுத்து அய்யனார் கோவில் வரலாறு

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள காரையாறில் அமைந்துள்ளது சொரிமுத்து அய்யனார் திருக்கோவில். இத்தலத்தின் வரலாற்றை பற்றி விரிவாக பார்க்கலாம்.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள காரையாறில் அமைந்துள்ளது சொரிமுத்து அய்யனார் திருக்கோவில். இத்தலத்தில் உள்ள இறைவனின் பெயர் சொரிமுத்து அய்யனார். இறைவியர் புஷ்கலை, பூர்ணகலை. தல விருட்சம் இலுப்பை மரம் ஆகும். இங்கு பாண தீர்த்தம், சாயா தீர்த்தம் என இரண்டு தீர்த்தங்கள் இருக்கின்றன.

இந்த ஆலயமானது, களக்காடு முண்டந்துறை புலிகள் சரணாலய வனப்பகுதிக்குள், பொதிகை மலையில் மரங்கள் சூழ, தென்றல் தாலாட்டு பாட, தாமிரபரணி சலசலத்து ஓட, ஒருமித்து மிளிரும் இயற்கையின் மையத்தே அமைந்துள்ளது. அடர்ந்த காட்டுப்பகுதியான இந்த இடத்தில் கொடிய விலங்குகள் பல வசித்து வந்தாலும், இத்தலத்து பகவானின் அருளால் அவைகள் பக்தர்களுக்கு எந்த வித தொல்லையும் கொடுப்பதில்லை என்பது ஆச்சரியமான விஷயமாகும்.

தல வரலாறு:

இந்தக் கோவிலைப் பற்றி தெரிந்து கொள்வோம்...

தென்னாட்டில் பண்டைய காலத்தில் பண்டமாற்று வணிகமுறை நடைமுறையில் இருந்தது. தற்போது சொரிமுத்து அய்யனார் சன்னிதி அமைந்து உள்ள இடத்திற்கு அருகில், பண்டமாற்று சந்தை நடைபெற்று வந்தது. அப்போது பொதி மாடுகளின் காலடி பட்டு ஓரிடத்தில் இருந்து ரத்தம் பெருகியது. இதைக் கண்ட வணிகர்கள் அந்த இடத்தை சூழ்ந்து கொண்டு அதிசயித்து பார்த்தனர்.

அந்த சமயத்தில் ஒரு அசரீரி ஒலித்தது. ‘குருதி பெருகும் இடத்தில் இருப்பவர் மகாலிங்க சுவாமி. இனி வரும் காலங்களில் மகாலிங்க சுவாமியை, சொரிமுத்தைய்யன், சங்கிலிமாடன், பிரம்மரட்சகி போன்ற மூர்த்திகள் சூழ ஆலயம் எழுப்பி வழிபட்டு வாருங்கள்’ என்றது அந்தக் குரல். அதன்படியே வணிகர்களும், ஊர் மக்களும் சேர்ந்து கோவில் எழுப்பி, பல சன்னிதிகளை அமைத்து வழிபட்டு வந்தனர்.

இமயமலையில் பரமேஸ்வரனுக்கும், பார்வதிக்கும் திருக்கல்யாணம் நடந்தது. இந்த தெய்வீக காட்சியைக் காண்பதற்காக தேவர்கள், முனிவர்கள் என அனைவரும் வடதிசை நோக்கி பயணப்பட்டனர். இதனால் வடதிசை தாழ்ந்தும், தென்திசை உயர்ந்தும் காணப்பட்டது. உலகை சமநிலை அடையச் செய்வதற்காக, சிவபெருமான் அகத்திய முனிவரை அழைத்தார். ‘அகத்தியனே! நீ தென்திசை நோக்கிச் செல். உன்னால் தான் இந்த உலகை சமநிலை பெறச் செய்ய முடியும்’ என்றார்.

இறைவனின் ஆணைப்படி நடக்க சித்தம் கொண்ட அகத்தியர், தென்திசை நோக்கி பயணித்து பொதிகை மலையை வந்தடைந்தார். அங்கு தற்போது சொரிமுத்து அய்யனார் சன்னிதி அமைந்திருக்கும் இடத்தில் நீராடி, தனது நித்திய காரியங்களை முடித்துக் கொண்டு யோக நிஷ்டையில் அமர்ந்தார். அப்போது ஜோதி ஒன்று அவரது மனக்கண்ணில் தோன்றியது. அதைக் கண்டு அதிசயித்த அகத்தியர், அந்த ஜோதியை யார் என்று அறிய ஞான திருஷ்டியால் பார்த்தார்.

அப்போது சாஸ்தாவானவர், சொரிமுத்து அய்யனாராக, மகாலிங்க பெருமானை பூஜிக்கும் காட்சி அவருக்கு தெரிந்தது. சொரிமுத்து அய்யனாருடன், பேச்சியம்மன், பிரம்மரட்சகி ஆகியோரும் மகாலிங்க சுவாமியை வழிபட்டனர்.

இதுகண்டு அகத்திய முனிவர் ஆனந்தம் அடைந்தார். பின்னர் மலர் தூவி ‘இவ்விடத்தில் எழுந்தருளியிருக்கும் மூர்த்திகளை தரிசித்து வழிபடுவோருக்கு எல்லா இன்னல்களும் நெருப்பிலிட்ட பஞ்சுபோல் ஆக வேண்டும்’ என்றும், ‘பக்தர்கள் தனது மக்களுடன் வழி, வழியாய் எல்லாப்பேறுகளும் பெற்று பெருவாழ்வு வாழ வரம் தர வேண்டும்’ என்றும் வேண்டிக்கொண்டார்.

அப்போது சாஸ்தாவானவர் ‘மலர் சொரிமுத்தய்யனார்’ என்று பெயர் தாங்கி, மகாலிங்கேசுவரர், சங்கிலி பூதத்தார், காத்தவராயர், மேலவாசி பூதத்தார், மேலவாசல் விநாயகர், தட்சிணாமூர்த்தி, கும்பமாமுனி, பெரியசாமி, பேச்சியம்மன், தூண்டில் மாடன், ஜோதிருத்திரன், பட்டவராயர் போன்ற பல தெய்வங்களுடன் ஒருசேர காட்சி கொடுத்து மறைந்தார். அன்று தொடங்கி இத்தலத்தில் மேற்சொன்ன அனைத்து தெய்வங்களுக்கும் சன்னிதி ஏற்படுத்தி வழிபாடு நடைபெற்று வருகிறது.

ஒரு சமயம் இப்பகுதியில் வற்கடம்(12 ஆண்டுகளுக்கு மழையின்மை) ஏற்பட்டது. அப்போது அகத்திய முனிவர் ‘ஆடி அமாவாசையன்று, இந்தத் திருத்தலத்தில் உள்ள சாஸ்தாவுக்கு புனித நீர் சொரிந்து அபிஷேகம் செய்தால், மாதம் மும்மாரி பொழியும்; வறட்சி நீங்கும்’ என்று கூறினார். அதன்படியே புனித நீரை பொற்குடங்களில் நிரப்பி, அபிஷேகம் செய்ய வறட்சி நீங்கியது. மழையை பொழிய வைத்த அய்யனார், ‘சொரிமுத்து அய்யனார்’ என அழைக்கப்பட்டதாகவும் செவி வழிச் செய்திகள் கூறுகின்றன.

முத்துப்பட்டன் என்ற பிராமண இளைஞன், தாழ்த்தப்பட்ட குலத்தில் பிறந்த பொம்மக்கா, திம்மக்கா ஆகிய சகோதரிகளை மணம் புரிந்து கொண்டு செருப்பு தைக்கும் தொழிலை செய்து வந்தான். ஒருசமயம் பசுக்களை பாதுகாக்க போரிடும்போது முத்துப்பட்டன் வீரமரணம் அடைந்தான். பட்டவராயன் என்றழைக்கப்பட்ட அவருக்கும், இத்தலத்தில் கோவில் எழுப்பப்பட்டுள்ளது.

அய்யப்பனின் முதல் நிலையாக சொரிமுத்து அய்யனார் விளங்குவதால், கார்த்திகை மாதங் களில் அய்யப்ப பக்தர்கள் ஏராளமானோர் இங்கு வந்து மாலை அணிவிந்து சபரிமலைக்கு செல்கின்றனர். இக்கோவிலில் தினசரி காலை 6 மணி அளவிலும், மாலை 5.30 மணி அளவிலும் பூஜைகள் நடைபெறுகிறது.

நெல்லைக்கு மேற்கே அம்பாசமுத்திரம், பாபநாசம் வழியாக செல்லும் பாதையில் நெல்லையில் இருந்து சுமார் 70 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது இந்த ஆலயம். நெல்லை மற்றும் செங்கோட்டையில் இருந்து இக்கோவிலுக்கு அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்படுகின்றன.

ஆடி அமாவாசை திருவிழா :

அகத்திய முனிவரின் யோக நித்திரையில் இறைவன் திருவருள் கூடி காட்சி தந்த நாள் ஆடி அமாவாசை ஆகும். எனவே இத்தலத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி அமாவாசை அன்று லட்சக்கணக்கான பக்தர்கள் கூடி தங்களது நேர்த்திக் கடன்களை பக்திப்பெருக்கோடு செலுத்தி வருகின்றனர். இத்திருத்தலத்தில் நடைபெறும் ஆடி அமாவாசை விழாவானது நெல்லை மாவட்டத்தில் குறிப்பிடப்பட்ட திருவிழா ஆகும். இதேபோல் தை, மாசி மாத அமாவாசை தினங்களும் விசேஷமான நாட்களாகும். இக்கோவிலுக்கு அருகில் உள்ள பாணதீர்த்த அருவிக்கு பக்தர்கள் சென்று புனித நீராடி தங்களது முன்னோர்களுக்கு நீத்ததார் கடன் மேற்கொள்வார்கள். இந்த பாணதீர்த்தத்தில்தான் ராமர் தனது தந்தை தசரதனுக்கு திதி செய்தார் என்று ஒரு ஐதீகம் நிலவுகிறது.

செருப்பு காணிக்கை:

குல தெய்வம் தெரியாதவர்கள் இவரையே(சொரிமுத்து அய்யனார்) குலதெய்வமாக வழிபடலாம் என்ற சிறப்புடையது இக்கோவில். இத்திருத்தலத்தில் உள்ள பட்டவராயர் சன்னிதியில் பக்தர்கள் செருப்புகளை காணிக்கையாக செலுத்துவது வழக்கம். முதல் ஆண்டு இங்கு கட்டப்படும் செருப்புகளை மறு ஆண்டு இக்கோவிலுக்கு வந்து பார்த்தால் அந்த செருப்புகள் தேய்ந்திருப்பதை காணமுடியும். பக்தர்கள் இத்தலத்திற்கு காணிக்கையாக வழங்கும் செருப்புகளை பட்டவராயரே பயன்படுத்துவதாக பக்தர்களிடம் அசைக்க முடியாத நம்பிக்கை நிலவுகிறது.

மணி விழுங்கி மரம் :

இத்திருக்கோவில் வளாகத்தில் இலுப்பை மரம் ஒன்று உள்ளது. பக்தர்களின் வேண்டுதலின்படி இந்த மரத்தில் கட்டப்படும் மணிகள் மரத்தின் உள்ளே பதிந்து விடுவதால் இந்த மரம் மணி விழுங்கி மரம் என்று அழைக்கப்படுகிறது. பக்தர்களின் காணிக்கைகளை இறைவன் இதன் மூலம் ஏற்றுக்கொள்வதாக நம்பப்படுகிறது...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  
        என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

நித்யகல்யாணி அம்மன் வரலாறு

நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் அருள் பாலிக்கிறாள் நித்ய கல்யாணி அம்மன். செங்கோட்டை, கேரளா திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இருந்தபோது  திருவிதாங்கூர் மன்னர் குற்றாலத்திற்கு அடிக்கடி விஜயம் செய்வார்.  அவ்வாறு வந்துவிட்டு செல்லும்போது செங்கோட்டை அருகே இலத்தூரில் உள்ள  மதுநாதசுவாமியை தரிசனம் செய்துவிட்டுத் தான் செல்வார். ஒருமுறை இலத்தூருக்கு சென்று கொண்டிருக்கும்போது கானகத்தின் நடுவே உள்ள பாதையில்  மூங்கில் மரங்கள் அடர்த்தியாக வளர்ந்த பகுதியில் வந்ததும் மன்னரின் வண்டி நின்றுவிட்டது. சாரதி எவ்வளவோ முயன்றும் குதிரைகள் நகரவே இல்லை. அப்போது அடர்த்தியாக நின்ற மூங்கில் மரக்காட்டில் இருந்து ஒரு பெண்ணின் சிரிப்பொலி கேட்டது. திடுக்கிட்ட மன்னர்.

தனது சேவகர்களை உடனே அந்த மூங்கில்களை வெட்டி அகற்றுங்கள் என்று கட்டளையிட்டார். அப்போது அங்கிருந்து பெண் குரல் வந்தது. ‘‘மன்னா, நான்  குலசேகரநாதரின் மனைவி தனது பெயர் நித்ய கல்யாணி. அசைவ உணவை உண்ண ஆசைப்பட்டு வைராவி இனத்தார் வீடு சென்று உண்டு விட்டேன். அதற்கு  தண்டனையாக எனது கணவர் என்னை வீட்டை விட்டு வெளியே அனுப்பினார். அது மட்டுமல்ல அரிஹர ஆற்றுக்கு அந்தப்பக்கம் சென்றுவிட வேண்டும் என்றும்  தினமும் கால்படி அரிசியும், ஆறு மாதத்திற்கு ஒரு முறை ஒரு புடவையும் தருவதாக கூறினார். அதன்படி நான் இங்கே இருக்கிறேன்.’’ என்று கூறியது. ‘‘சரி, நான் இப்போ என்ன செய்ய வேண்டும்’’ என்று மன்னன் கேட்க, ‘‘எனக்கு தினமும் வழிபாடு வேண்டும்.

கோயில் எழுப்ப வேண்டும்.’’ என்று கூற, சரி. உடனே அதற்கு நான் ஏற்பாடு செய்கிறேன் என்று மன்னன் கூற, அந்த பெண், ‘‘மன்னனே, எனது உருவம்  சிலையாக அரிஹர ஆற்றில் கிடக்கிறது. அதனை எடுத்து பூஜிக்க வேண்டும். எனக்கு பூஜை செய்யும் உரிமையை நான் அசைவ உணவு உண்ட வைராவி  இனத்தாருக்கு அளிக்க வேண்டும்’’ என்றும் கூறியது. அதன்படி மன்னன் உடனே அப்பகுதியைச் சேர்ந்த வைராவி, சேனைத்தலைவர் சமுதாயத்தின்  முன்னோடிகளை அழைத்து உடனே கோயில் கட்டுவதற்கான ஏற்பாடுகளை செய்யவும் அதற்கான பொருளை தான் தருவதாகவும் கூறினார். உடனே அவர்கள்   ஆற்றிலிருந்து அம்மன் சிலையை எடுத்து வந்து ஓலைகீற்றில் கூரையுடன் கூடிய கோயில் அமைத்து நித்ய பூஜை செய்து வழிபட்டனர்.

பின்னர் கோயில் கட்டப்பட்டது. அப்போது கர்ப்பகிரஹம் கல் மண்டபத்தில் அமைக்கப்பட்டது. அப்போது மண்டப வாயில் சிறியதாக அமைந்து விட்டது. சிலையை  உள்ளே கொண்டு போக முடியாத நிலை உருவானது. இதனால் மண்டபபணியில் ஈடுபட்ட பணியாளர்கள் முதல் ஊர்மக்கள் அனைவரும் மனம் வருந்தினர். சரி  மறுநாள் மண்டபத்தின் வாயிலை இடித்து விட்டு மீண்டும் பெரிதாக கட்டலாம் என்று முடிவு செய்தனர். இரவானதால் அனைவரும் அவரவர் இல்லம் சென்றனர். மறு நாள் காலையில் மண்டபத்தின் வாயிலை இடிக்க பணியாளர்கள் வந்தபோது கல் மண்டபத்தின் உள்ளே அம்மன் சிலை இருந்தது. அனைவரும் வியந்தனர்.  ஊர் மக்கள் திரண்டனர். அம்மா, தாயே கல்யாணி என்று உணர்ச்சி பொங்க குரல் எழுப்பி கை தொழுதனர்.

அம்மன் கோயில்களில் எந்த கோயிலிலும் இல்லாத தனிச்சிறப்பு இந்த கோயிலுக்கு உண்டு, சிலையை யாரும் வடிக்கவில்லை. சிலையை யாரும் கோயிலில்  கொண்டு வந்து நிறுவவும் இல்லை. அம்மன் தானே வந்தமர்ந்ததாக ஊர் மக்கள் கருதுகின்றனர். பொதுவாக கோயில் கட்டி, சிலையை பிரதிஷ்டை செய்யும்போது  உரு ஏற்றும் நிகழ்ச்சியும், மருந்து சாத்துதலும் நடைபெறும். இந்த கோயிலில் ஆகம விதிப்படி கும்பாபிஷேகம் நிகழ்ந்த போதும் மூல விக்கிரகத்தினை எதுவும்  செய்யாமல் பிற சடங்குகளை செய்தனர். ஐந்தடி உயர சிலையில் அம்மன் அமர்ந்த கோலத்தில் எட்டு கரங்களுடன் நித்ய கல்யாணி அம்மன் வீற்றிருக்கிறாள்.  நிலபுலங்களை காத்து அருள்கிறாள் என்கின்றனர்.

அப்பகுதி மக்கள். இக்கோயிலில் பேச்சியம்மன், பைரவர், விநாயகர், வள்ளி, தெய்வானையுடன் சுப்ரமணியர் மற்றும் காவல் தெய்வம் மாடன் உள்ளிட்ட பரிவார  தெய்வங்கள் அருள்பாலிக்கின்றனர். ஆண்டு தோறும் சித்திரை மாதம் செவ்வாய்க்கிழமை கொடை விழா நடத்தப்படுகிறது. ஆனி மாதம் வருஷாபிஷேகமும்,  ஆடிப்பூரத்தில் சிறப்பு வழிபாடும், புரட்டாசி மாதம் நவராத்திரி விழாவும் நடத்தப்படுகிறது. உடம்பில் உள்ள வடுக்கள், பாலுண்ணிகள் மற்றும் முகத்திலுள்ள  பருக்கள் மறைவதற்கு இந்த அம்மனை வேண்டி, கோயிலுக்கு உப்பும், மிளகும் வாங்கிக் கொடுத்தால் எட்டு நாளைக்குள் அது மாறிவிடுவதாக அப்பகுதியினர்  கூறுகின்றனர். இக்கோயில் செங்கோட்டை ஊரின் வடக்கு எல்லையில் ஓடுகின்ற ஹரிஹர ஆற்றின் வட கரையில் வயல்கள் சூழ அமைந்துள்ளது...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  
        என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

மாசாணியம்மன் ஸ்தல வரலாறு

பழங்காலத்தில் நன்னன் என்கிற மன்னன் ஆனை மலைப்பகுதியை ஆட்சி செய்து வந்தார் . அவரைச்சந்திக்க ஒரு துறவி வந்தார் .அவரை வரவேற்று பல உபசரிப்புகள் நன்னன் செய்தாராம்
.
அரசனின் உபரசரிப்பில் ஆனந்தமான துறவி அவருக்கு ஓர் மாங்கனியை கொடுத்து

" மன்னா இது அதிசய மாங்கனி இதை எனது குருநாதர் பரிசாக அளித்தார் .
உன்னால் மகிழ்வுற்ற நான் இந்த மாங்கனியை பரிசளிக்கிறேன் ,முக்கியமான
ஒன்று இதை உண்டபின் இந்த மாங்களி கொட்டையை ஆற்றில் விட்டு விடு .

இல்லையெனில் இது ஆபத்தாக முடிந்து விடும்''' .

மன்னர் சரி என்றவாறு துறவியை வழியனுப்பி விட்டு மாங்கனியை சுவைக்கத்துவங்கினார் .சுவை நன்றாக இருக்கவே
அந்த மாங்கொட்டையை துறவி சொன்னதை அலட்சியப்படுத்தி தமது நந்தவனத்தில்ஆற்றோரம் நட்டு பராமரித்து வந்தார் .

மரம்பெரியதாகி பழம் விடும் நேரம்
வந்ததும் அரண்மணைக் காவலாளிகள் வைத்து மாங்கனியை யாரும் பறிக்ககூடாது .அப்படி சாப்பிட்டால் மரண தண்டனை என அறிவித்தார் . இதைக்கேள்லிப்பட்டதுறவி மன்னரிடம் வந்து

''மன்னா நீங்கள் அந்த மாங்கனி கொட்டையை நான்
சொன்னதை கேளாமல் மரமாக்கி விட்டீர்கள் . நீங்கள் நினைப்பது போல் அந்த
மரத்தில் ஓரே பழம் மட்டுமே பழுக்கும் அதையும் நீங்கள் சாப்பிடக்கூடாது
. அதை தெய்வீகப்பெண்மணி ஒருவரே சாப்பிடுவார் . நீங்கள் சாப்பிட
நினைத்தால் இந்த தேசம் அழிவுறும் '''

என உரைத்து கிளம்பினார் துறவி. மன்னர்
நன்னன் அதை அலட்சியப்படுத்தி இந்த மாமரத்தில் பழுக்கும் பழத்த
மாம்பழத்தை யாரேனும் சாப்பிட்டால் மரண தண்டணை என அறிவித்தான். தாரகன் என்பவர் வியாபார விஷயமாக தன்மகள் தாரணி உடன் ஆனைமலைக்கு வந்திருந்தார் .

அப்போது அவர்கள் வீட்டின் அருகில் இருந்த தோழிகளுடன் தாரணி ஆற்றில்
குளிக்கச்சென்றார் . அங்குதான் அரசனின் நந்தவனமும் அதிசயமாமரமும்
இருந்தது . தாரணி நீராடும்போது அந்த மாமரத்தில் இருந்து தன் அருகே
விழுந்த மாங்கனியை எடுத்து சாப்பிட்டார் .

மற்ற பெண்கள் இது அரசகட்டளை
இதை சாப்பிட்டு விட்டாயே ராஜ தண்டனை கிடைக்குமே என பதறினார்கள் .
பயத்தில் உடனடியாக கிளம்பினார் . தாரணின் அப்பாவிடம் இந்த விஷயத்தை
கூறினார்கள் .

அதற்குள் இந்தவிஷயம் மன்னர் காதுக்கு எட்டியது .காவலாளிகளை
விட்டு தாரணியை கைது செய்து அரண்மனைக்கு கூட்டிச்சென்றார்கள் .குற்றம் சாட்டப்பட்டது .தாரணி அழுது புலம்பினால் அரசரின் அறிவிப்பு அறியாமல்பிழையாகி விட்டது ,மன்னிக்கவேண்டினாள் .

அரசனோ இரக்கில்லாமல் மரணதண்டனையை அறிவித்தான் . ஒரு மாங்கனிக்காக என் உயிர் பிரிந்தாலும் என்
ஆத்மா இந்த மண்ணிலிருக்கும் .

என்புகழ் ஓங்கும் . உன் ஆட்சி அழியும் என
சூளூரைத்து கொலைகளம் சென்று உயிர் பிரிந்தாள் . அவள் உடல் மயானம்
எடுத்துச்செல்லப்பட்டது .அவள் உருவத்தைப்போலவே மண்ணால் செய்து வைத்து,மாங்கனிக்காக இறந்த கன்னியை மாங்கன்னியாக மாசானி அம்மனாக தொழுதுசென்றார்கள் '

அரசரால் கொல்லப்பட்ட தாரணி தெய்வீக பெண் அவரே மாசாணி அம்மனாக சிறிதளவில் அவர் சமாதியில் துவங்கிய வழிபாடு அந்த ஆத்மா நம்பி
வரும் பக்தர்களை காத்து அருள்பாலிக்கிறது.

பல்வேறு அவதாரங்களில் ஈஸ்வரி
அவதாரம் எடுத்து பல அம்மனாக அற்புதங்களை தந்திருக்கிறார் . மாசாணி அம்மன் உக்கிர தெய்வம் .

நீண்டவாக்கில் படுத்திருக்கும் அன்னை.பிற்காலத்தில் கொடுங்கோல் மன்னன் எதிரிகளிடம் இறந்தான் . கன்னி தெய்வத்தை பலியிட்ட இடம்

பிங்கொணம்பாறை என அழைக்கப்படுகிறது.

மாசாணி அம்மனிடம் குறைகளை எழுதி
பூசாரியிடம் பக்தர்கள் தர அதை அம்மன் நிவர்த்தி செய்கிறார் . பில்லி
சூனியம் போன்ற அமானூஷ்ய சக்திகளிடம் இருந்து காக்க உக்கிரதெய்வமான மாசாணிஅம்மன வணங்கினால் நலம் பயக்கும்.

உப்பாறு படுகையில் பொள்ளாச்சியில்
இருந்து 15 கி.மீட்டர் தொலைவில் ஆனைமலையில் உள்ள மிக பிரமாண்டமாண   ஸ்ரீமாசாணி அம்மன் திருக்கோவில் அம்பிகையை வந்து வணங்கி தங்கள் வாழ்வில்
வளம் பெறுங்கள்...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  
        என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡