Saturday, 14 September 2019

தர்ப்பணம் செய்ய சிறந்த இடங்கள் எவை?

இன்று துவங்கும் மஹாளய பட்சத்தின், பதினைந்து நாட்களும்,  நாம் தூய்மையான உள்ளத்துடன் இருக்க வேண்டும். வீட்டை தூய்மைப்படுத்தி, சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். 

இந்தப் பதினைந்து நாட்களிலும், வீட்டில் எவருடனும் சண்டையிடுவதோ, அல்லது தவறான வார்த்தைகள் பேசுவதோ அல்லது அசைவ உணவு உண்பதோ கண்டிப்பாகக் கூடாது. 

காசி, கயா, பத்ரிநாத், திருக்கயிலை, மானசரோவர் ஆகியவை , தர்ப்பணம்  தர ஏற்ற இடங்கள்.
தமிழகத்தில், ராமேஸ்வரம் ,சென்னை மத்திய கைலாசம், திருக்கழுக்குன்றம்., பவானி கூடுதுரை, ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம், பாபநாசம், கும்பகோணம் அருகில் உள்ள, செதலபதி ஆதி விநாயகர் ஆலயம், பூம்புகார் சங்கமுகேஸ்வரர் ஆலயம், திருக்கோவரணம் போன்ற இடங்கள் விசேஷ இடங்களாகும். 

அதே போல், திருவெண்காடு, உடுமலை திருமூர்த்திமலை அமண லிங்கேஸ்வரர் ஆலயம், மற்றும் ஆற்றங்கரைகளிலும், பித்ருக்களுக்காக  பிண்டம் பிடித்து, தர்ப்பனம் செய்வது கூடுதல் பலன் தரவல்லது.
நீர் நிலைகளுக்கோ, கோவில்களுக்கோ செல்ல முடியாதவர்கள் அல்லது இன்றைய அவசர அலுவலக யுகத்தில் உள்ளவர்கள், தங்கள் வீட்டிலேயே, தர்ப்பணம் கொடுக்கலாம். அது இன்னும் சிறப்பானது. நம்மை தேடி வரும் முன்னோர்களை, நம் வீட்டிலேயே வரவேற்று, அவர்களுக்கு, சாத பிண்டமோ, எள் தண்ணீரோ அற்பணித்தால், அவர்களின் உள்ளம் குளிர்வதோடு, நம்மை வாழ்த்தி செல்வர்...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  

     என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

No comments:

Post a Comment