Tuesday, 3 September 2019

இன்று ரிஷி பஞ்சமி விரதம் இருப்பது எப்படி?

உங்களின் குடும்பத்திற்கு, பெண்ணின் சாபம் இருப்பதாக நீங்கள் கருதினால், அது விலகுவதற்காக ஒரே தீர்வு ரிஷி பஞ்சமி விரதம் மேற்கொள்வதுதான்.


வளர்பிறை பஞ்சமி திதியில் இந்த விரதத்தை மேற்கொள்ள வேண்டும். சூரியன் உதிக்கும் முன்பாகவே எழுந்து நீராட வேண்டும். நதியிலோ, குளத்திலோ, கிணற்றிலோ நீராடுவது சிறப்பு. பின் பட்டாடை உடுத்தி விரதத்தை தொடங்க வேண்டும். சந்தனத்தால் பிள்ளையாரை பிடித்து வைத்து, அதற்கு மாலை அணிவித்து கலசம் வைக்க வேண்டும். 

அதன் பின் நாம் நமக்குத் தேவையான பிரார்த்தனை நிறைவேற வேண்டும் என வேண்டிக் கொண்டு பூஜையை செய்ய வேண்டும். அன்றைய தினம் முழுவதும் ஒரு வேளை மட்டுமே சிறிதளவு உணவருந்த வேண்டும். நைவேத்தியம் படைத்து, அந்த பிரசாதங்களை வீட்டிற்கு வரும் அக்கம் பக்கத்தினர், உறவினர், நண்பர்களுக்கு தரலாம். 

அப்படி யாரும் வரவில்லை என்றால், வாசலில் நின்று கொண்டு அங்கு வரும் யாசகர்களுக்காவது அந்த பிரசாதத்தை வழங்க வேண்டும். அதை ‘பூஜா பிரசாத தானம்’ என்பார்கள். அதன் பின் கலசத்தின் முன் நின்று கொண்டு மனதில் காசியபர், அத்ரி, பாரத்வாஜர், விஸ்வாமித்திரர், ஜமதக்னி மற்றும் வசிஷ்ட மகரிஷிகளை நினைத்து, தன் குடும்பத்தில் பெண்களால் ஏற்பட்டுள்ள சாபத்தை விலக்குமாறு வேண்டிக்கொள்ள வேண்டும்...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  

     என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

No comments:

Post a Comment