Thursday, 12 September 2019

இளநீரில் எரியும் விளக்கு, முகம் வியர்க்கும் முருகன் சிலை... கோவில் அதிசயங்கள்.!!

திருநெல்வேலி பாளையங்கோட்டைஅருகே, திருச்செந்தூா் சாலையில் உள்ள சிரட்டை பிள்ளையாா் கோவிலில் விநாயகருக்கு விடலை போடும் போது சிரட்டையும், தேங்காயும் பிரிந்து சிதறுகிறது.

தஞ்சைபிரகதீஸ்வரர் கோவிலில், 72 டன் எடையுடைய கல், கோபுர உச்சியில் வைக்கப்பட்டுள்ளது. கருவறை குளிர்காலத்தில் வெப்பமாகவும், வெயில் காலத்தில் குளிராகவும் இருக்கிறது.

தாராசுரம் (கும்பகோணம்) ஐராவதீஸ்வரர் கோவிலில் உள்ள இசைப்படிகளில் தட்டினால் சரிகமபதநிச என்ற இசை வருகிறது.
 
கடலுக்கு, 3500 அடி உயரத்தில் உள்ள, வெள்ளியங்கிரி மலையில் சிவனின் பஞ்சவாத்ய ஒலி கேட்கிறது.
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே கோட்டையூரில் நூற்றி ஒன்று சாமிமலை குகையில், ஓரடி உயரம் கொண்ட கல்லால் ஆன அகல் விளக்கில் இளநீர் விட்டு தீபமேற்றினால், பிரகாசமாக எரியும் அதிசயம் நடக்கிறது.

 சென்னை வியாசர்பாடி ரவீஸ்வரர் கோயிலில் தினமும் சூரிய ஒளி, மூலவா் மீது விழுகிறது.
 சுசிந்திரம் சிவன் கோவிலில், ஒரு சிற்பத்தின் காதில் குச்சியை நுழைத்தால், மறு காதுவழியாக வருகிறது.

 திருப்பூரில் உள்ள குண்டடம் வடுக நாத பைரவர் கோவிலில், குழந்தை ,தாயின் வயிற்றில் இருக்கும் பொழுது,, குழந்தை இந்த மாதத்தில், இந்தந்த வடிவத்தில், இந்த விதமாக இருக்கும் என்பதை, பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, கல்லில் சிற்பங்களாக வடித்து வைத்துள்ளார்கள் நம் முன்னோர்கள்.
 
செங்கம் ஊரில் உள்ள, ஸ்ரீ அனுபாம்பிகை உடனுறை ரிஷபேஸ்வரர் கோவிலில், ஆண்டுக்கு ஒருமுறை, பங்குனி மாதம் மூன்றாம் நாள், மாலை சூரிய அஸ்தமனத்தின் பொழுது, நந்தியம் பெருமான் மீது சூரிய ஒளி விழும் பொழுது, அவர் தங்க நிறத்தில் ஜொலிப்பார்.
ஜெயங்கொண்டத்தில் உள்ள கங்கை கொண்ட சோழபுரம் கோவிலில் உள்ள கிணற்றிற்கு அருகில், ஒரு சிங்கத்தின் சிற்பம் இருக்கும். சிங்கத்தின் வாயில். ஒரு கதவு தென்படும். அதன் மூலம் கீழே இறங்கினால், கிணற்றில் குளிக்கலாம். ஆனால் மேலேயிருந்து பார்த்தால், நாம் குளிப்பது தெரியாது.

ஈரோடு காங்கேயத்துக்கு அருகில், மடவிளாகம் சிவன்கோவில் குளத்தில், பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை ,ஒரு மண் பானை நிறைய விபூதி தோன்றுகிறது
மதுரை மீனாட்சி அம்மன்கோவில் தெப்பகுளத்தில் மீன்கள் வளராது.
சேலம் தாரமங்கலம் பெருமாள் கோவிலில், ஸ்ரீராமா் சிற்பம் இருக்கும் இடத்திலிருந்து, வாலி சிற்பம் இருப்பதை பார்க்க முடியும். ஆனால் வாலி சிற்பம் இருக்கும் இடத்திலிருந்து, ஸ்ரீராமரைப் பார்க்க முடியாது.

தென்காசி அருகில், புளியங்குடியில், சுயம்பு நீரூற்று வற்றி, தண்ணீா் இல்லாமல் இருக்கும்போது பிரரார்த்தனை செய்து ,பால் அல்லது இளநீா் விட்டால் மறுநாள் ஊற்றில் நீர் வரும். 

குளித்தலை அருகில் ரத்தினகிரி  மலை மேல், காகங்கள் பறப்பதில்லை
தேனி அருகில் உள்ள சிவன்கோவிலில், அவரவா் உயரத்தில் சிவலிங்கம் காட்சி தருகிறது.
விருதுநகரில்  மகான் திருப்புகழ்சாமி கோவில் திருவிழாவின்போது, சுவாமிக்கு படைக்கப்பட்ட சாதத்தில் வேல் வைத்து பூஜை செய்கின்றனா்., அதன் பின் எவ்வளவு பக்தா்கள் வந்தாலும், உணவு குறையாமல் வந்துகொண்டே இருக்கிறது, வேலை எடுத்தவுடன் குறைந்து காலியாகிவிடும்
சென்னி மலை முருகனுக்கு அபிஷேகம் செய்யப்படும் தயிர் புளிக்காது. 

திண்டுக்கல் அருகே திருமலைக்கேணி முருகன் கோவிலில் அருகருகே உள்ள தெய்வானை சுனையின் நீர் எப்போதும் குளிர்ந்த நீராகவும், வள்ளிசுனையின் நீர் ,இரவுபகல் எந்நேரமும், வெந்நீராகவும் இருக்கிறது.
சிக்கல் சிங்காரவேலர் கோவிலில், சூரசம்ஹாரத்திற்காக ,முருகன், அம்பிகையிடம் வேல்வாங்கும்போது முருகனின் திருமேனி முழுவதும், வியர்வை பெருகுகிறது. அா்ச்சகா், பட்டுத்துணியால் ஒற்றி எடுக்க ,துணி  நனைந்துவிடுகிறது...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  

     என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

No comments:

Post a Comment