Saturday, 14 September 2019

பெண்களின் முந்தானைக்கும், லட்சுமி கடாக்ஷத்திற்கும் சம்பந்தம் உண்டு தெரியுமா?

நம் வீட்டில் லட்சுமி கடாக்ஷம் செழிக்கவும், செல்வத்திற்கு அதிபதியாம் லட்சுமி தேவி நிரந்தரமாக குடியிருக்க, கீழ்கண்டவற்றை கட்டாயம் கடை பிடிக்க வேண்டும். 

நமது வீட்டிற்கு வரும், பெண்களுக்கு யாராக இருந்தாலும் அவர்களுக்கு குடிக்க நீர் கொடுக்க வேண்டும். எந்த பெண் வடிவிலும் லட்சுமி தேவியே நம் வீட்டிற்கு எப்போது வேண்டுமானாலும் வரலாம்.  பின் மஞ்சள் குங்குமம் தரவும். இதனால் ஜென்ம ஜென்மாந்திர தரித்திரம் தீர்ந்து, பண வரவு  ஏற்படும்.

ஒற்றை ருத்திராட்சத்தைக் கழுத்துக்குழிக்கு மேல் கட்ட வேண்டும். கீழே இறங்கக் கூடாது.. அது எப்போதும் கழுத்தில் இருக்கலாம். 
அமாவாசை அன்று வீட்டு வாசலில் கோலம் போடக்கூடாது. தலைக்கு எண்ணெய் தடவக்கூடாது. பூஜை காலைப் பொழுதில் செய்யக்கூடாது. பிதுர்களை மட்டும் வழிபட பணம் வரும். 

ருத்திராட்சம், துளசி மணி, ஸ்படிகம் போன்ற மாலைகளை ஜபம் ஹோமம் போன்ற காலங்களைத் தவிர மற்ற நேரங்களில் அணியக் கூடாது. 
வீட்டில் மாலை விளக்கு ஏற்றியவுடன் பால், தயிர், குடிநீர், உப்பு, ஊசி, நூல் இவைகள் வீட்டை விட்டு வெளியேறக்கூடாது. பணம் ஓடிவிடும்.


கோயிலுக்குச் செல்லும் போதும், பூஜை செய்யும் போதும், பெண்கள் முடியை தொங்கவிடாமல், நுனி முடிச்சுப் போடவேண்டும். 
பூஜை செய்யும்போது , பூத்தட்டை மடியில் வைத்து, பூவெடுத்து பூஜை செய்யக் கூடாது. வெறுங்கையில் பூப்பறித்து வந்து, அதை இறைவனுக்கு பூஜை  செய்யக்கூடாது. 

வீட்டில் சாமியிடம் ஏற்றிய தீபத்தை, வாயினால் ஊதி அணைக்கக் கூடாது. விரலால் பால் தொட்டு வைத்தோ, குங்குமம் வைத்தோ, பூவாலோ அமர்த்தலாம். ஆண்கள் அணைப்பது மத்திமம். 
துளசி, வில்வம் இவற்றை செவ்வாய், வெள்ளி, அமாவாசை பவுர்ணமி, துவாதசி,  சாயங்காலம், இரவு நேரம் பறிக்கக் கூடாது.
பெண்கள் எப்பொழுதும், மூன்று இடங்களில் குங்குமம் இட வேண்டும். மாங்கல்யம், நெற்றி, முன் வகிடு மத்தி. இது தெய்வீக பண்புகளைப் பெற்று தரும்.
காலையில் அடுப்பு பற்ற வைக்கும்பொழுது, அக்னியை வணங்கி, இன்று சமைக்கும் உணவினை அனைவரும் உண்டு ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும் என பிரார்த்தனை செய்து, அடுப்பை பற்ற வைக்க வேண்டும்.

மாலை வேளையில் அரசமரத்தை வலம் வரக்கூடாது. கோயிலுக்கு கொண்டு செல்லும் எண்ணெயை, கோயில் விளக்கில் தான் ஊற்ற வேண்டும். வேறு ஒருவர் ஏற்றி வைத்த விளக்கில், ஊற்றக்கூடாது.
 
முந்தானையை தொங்க விட்டு நடக்கக்கூடாது;. முந்தானை ஆடினால் குடும்பமும் ஆடிவிடும்.  குத்துவிளக்கு ஏற்றும்போது, ஒரு திரி மட்டும் போடக்கூடாது; இரு திரி இட்டு, ஒரு முகம் ஏற்ற வேண்டும்.
தெற்கே பார்த்து நின்று கொண்டு, கோலம் போடக்கூடாது. பெருமாள் கோயிலில் தீர்த்தம் வாங்கும்போது, இடது கைக்கும், வலது கைக்கும் நடுவில் முந்தானை துணியை வைத்து தீர்த்தம் வாங்க வேண்டும்.
 பெண்கள், தெற்கு முகமாக உட்கார்ந்து. சிறிது மஞ்சளை தேய்த்து, முகத்தில் பூசிக் கொண்டு தான் குளிக்க வேண்டும். ஆடி மாத செவ்வாய் கிழமைகளில் பெண்கள், எண்ணெய் தேய்த்து, மஞ்சள் பூசி, குளித்து அம்மனை வழிபட்டால், மாங்கல்ய பலம் கூடும் என்பது ஐதீகம்...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  

     என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

No comments:

Post a Comment