Monday, 30 September 2019

வாழ்வில் வளம் தரும் விரதம்.!!

விநாயகர் எல்லாருக்கும் பொதுவாகவும், யாரும் சுலபமாக வழிபடும் வகையிலும் இருக்கிறார். இவரை விரதம் இருந்து வழிபாடு செய்தால் எண்ணங்கள் நிறைவேறும்.


விநாயகர் மிகவும் எளிமையான கடவுள். யார் கூப்பிட்டாலும் ஓடோடி வந்து அருள் தருவார். அதனால்தான் அவர் எல்லாருக்கும் பொதுவாகவும், யாரும் சுலபமாக வழிபடும் வகையிலும் இருக்கிறார். விநாயகர் விரதத்தை பார்வதி தேவியே மேற்கொண்டிருக்கிறார். தன் கணவரை அவமதித்து யாகம் நடத்திய தந்தை தட்சனிடம் நியாயம் கேட்கப் போனாள் பார்வதி என்ற தாட்சாயணி. ஆனால், தட்சனோ மிகவும் கர்வம் பிடித்தவன். மருமகனை அவமானப்படுத்தியது போதாதென்று, மகளையும் கேலி பேசினான்.

இந்த அவமானத்தை பொறுத்துக் கொள்ள முடியாத தாட்சாயணி, தட்சன் வளர்த்து வைத்திருந்த யாக குண்டத்தில் அப்படியே பாய்ந்துவிட்டாள். அதன்பிறகு, பர்வதராஜனுக்கு மகளாகப் பிறந்து பார்வதி என்னும் பெயருடன் வளர்ந்து வந்தாள். சிறு வயதிலிருந்தே கயிலைநாதன்தான் தன் கணவன் என்று தீர்மானமாக இருந்தாள். அவளுடைய அந்த எண்ணம் பலிக்க வேண்டும் என்றால், அவள் விநாயகரை நினைத்து சதுர்த்தி விரதம் மேற்கொள்ள வேண்டுமென்று அவளுடைய தந்தையார் பர்வதராஜன் யோசனை சொன்னார்.

அவர் சொன்னபடியே, மண்ணால் ஒரு விநாயகர் விக்ரகத்தை உருவாக்கினாள் பார்வதி. கூடவே தங்கத்தாலும் ஓர் உருவம் செய்து இரண்டையும் பொற்கும்பம் ஒன்றின் பக்கத்தில் வைத்தாள். அந்த விக்ரகங்களுக்கு ஆகம விதிப்படி பூஜைகளை செய்தாள். ஆவணி மாத அமாவாசைக்கு அடுத்த சதுர்த்தியில் இப்படி பூஜையை ஆரம்பித்து, பௌர்ணமிக்கு அடுத்த சதுர்த்தி வரையில் தினமும் பூஜை செய்தாள்.

அதற்குப் பிறகு மண் பிள்ளையாரை, மேள தாளத்தோடு ஊர்வலமாக எடுத்துப் போய் நதியிலே இறக்கி விட்டாள். அந்த பதினைந்து நாட்களும் நியம நிஷ்டைகளை மீறாமல் இருந்த விரதத்தின் பலனாக, தான் ஆசைப்பட்டாற்போல கயிலைநாதனை கைப்பிடித்தாள். விநாயகர் ஆதி பரம்பொருள். எல்லோருக்கும் மூத்தவர். பிரம்மா, விஷ்ணு, சிவன் என்று எல்லோரையும் உருவாக்கியவர் அவர்தான். அவர் சாதிக்க வேண்டியது நிறைய இருந்ததால் அவர் பலவித அவதாரங்களை எடுத்தார்.

அந்த மாதிரியான ஒரு அவதாரம்தான் சிவன் மகனாக அவர் தோன்றியது. அற்பத் தாவரமான புல்லையும் (அருகம்புல்) அவர் ஏற்றுக் கொள்கிறார். காட்டுப்பூவான எருக்கம்பூவைக் கூட அவர் மறுப்பதில்லை.

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  

     என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

மனதிற்கினிய இல்வாழ்க்கை துணை அருளும் ஆண்டாள் ஸ்லோகம்.!!

இம்மந்திரத்தை துதிக்கும் திருமண வயதுடைய ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தங்களின் மனதிற்கினிய இல்வாழ்க்கை துணை வாய்க்க பெறுவார்கள்.

அஸ்மாத்ருசா மபக்ருதௌ சிரக்ஷிதாநாம் 
அஹ்நாய தேவி தயதே யதஸௌ முகுந்த 
தந்நிச்சிதம் நியமிதஸ் தவ மௌளிதாம்நா 

தந்த்ரி நிநாத மதுர ச கிராம் நிகும்பை

ஸ்ரீவில்லிபுத்தூரில் கோயில் கொண்டிருக்கும் ஆண்டாள் என்றழைக்கப்படும் திருப்பாவை அருளிய கோதை நாச்சியாரின் மந்திரம் இது. இந்த மந்திரத்தை தினமும் காலையில் துதித்து வரலாம் எனினும் ஆண்டாளுக்குரிய மார்கழி மாத வெள்ளிக்கிழமைகளில் அதிகாலை எழுந்து குளித்து முடித்ததும் இம்மந்திரத்தை துதிக்கும் திருமண வயதுடைய ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தங்களின் மனதிற்கினிய இல்வாழ்க்கை துணை வாய்க்க பெறுவார்கள். திருமணமான தம்பதிகளின் மனஸ்தாபங்கள், கருத்துவேறுபாடுகள் நீங்கி அந்நோன்யம் பெருகும். தங்களின் பிள்ளைகள் சார்பாக அவர்களின் பெற்றோர்களும் ஆண்டாளை வணங்கி இம்மந்திரத்தை துதிக்கலாம்...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  

     என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

சிவபெருமானை சோதித்த முத்தாரம்மன்.!!

அஷ்ட காளியர்களாக அவதரித்த முத்தாரம்மன் உள்ளிட்ட எட்டுபேரும் மகிஷா சுரனை வதம் செய்த பின் சிவபெருமான் தங்களை மணமுடிப்பதாக கூறினாரே, ஆகவே, உடனே சிவனை மணம் முடிக்க கயிலாயம் செல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் கயிலாயம் வருகிறாள். இதையறிந்த சிவன் நந்தி தேவரை அழைத்து ரகசியம் கூற, அதன்படியே நந்திதேவரும் வண்டு மலைக்கு சென்று 8 வண்டுகளை பிடித்து 8 குழந்தைகளாக்கி அஷ்ட காளிகள் வரும் வழியில் வைத்திருந்தார். குழந்தைகள் அழுகுரல் கேட்ட அவர்கள் ஆளுக்கொரு குழந்தையை கையில் எடுத்து அதன் அழுகுரலை நிறுத்தி, அவர்களுடன் கயிலாயம் வருகிறார்கள்.


சிவபெருமானிடம் தாங்கள் கூறியது போல எங்களை மணமுடிக்க வேண்டும் என்கின்றனர். அப்போது சிவபெருமான், நீங்கள் கன்னியர்களாக  வரவில்லையே, கையில் குழந்தையோடு அல்லவா வந்திருக்கிறீர்கள் என்றார். அப்படியானால்... என்று ஐயத்துடன் வினா தொடுத்தனர் அஷ்ட  காளிகள். நீங்கள் பூலோகம் செல்ல வேண்டும். மனித உயிர்களுக்கு அபயம் அளித்து காக்கவேண்டும். உங்களுக்கு எல்லா வரமும் தந்தருள்வேன்  என்றார்.

வரங்களை பெற்றவர்கள் அய்யன் சிவபெருமான் ஆசியோடு பூலோகம் புறப்படுகின்றனர். அப்போது முத்தாரம்மன், சிவனிடம் சென்று தனக்கு தனியே  ஒரு வரம் வேண்டும். அது மற்றவர்கள் பெறாததாக இருக்க வேண்டும் என்றாள். அப்படி என்ன வரம் என்று சிவபெருமான் யோசிக்க, முத்தாரம்மன்  கூறினாள். தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். தப்பை உணர்ந்த பின் மன்னிக்கப்பட வேண்டும் அந்த வகையில் எனக்கு முத்து வரம்  வேண்டும் என்று கேட்க, சிவபெருமானும் தனது சக்தியால் 108 முத்துக்களை உருவாக்கி, அதை ஓலையால் வேயப்பட்ட பெட்டியில் வைத்து  அன்னை முத்தாரம்மன் கையில் கொடுத்தார்.

முத்துக்கள் சக்தி வாய்ந்தவையா என்று வினா தொடுத்த முத்தாரம்மனிடம், நிச்சயமாக சக்தி வாய்ந்தவை தான் என்றார் சிவபெருமான்.  அப்படியானால் அதை உங்களிடமே சோதித்து பார்க்கட்டுமா என்றாள் அன்னை நகைப்புடன். அய்யனும் புன்னகைத்தார். பெட்டியிலிருந்து எடுக்கப்பட்ட  முத்துக்களை வாரி சிவபெருமான் மேல் இறைத்தாள் முத்தாரம்மன்.உச்சி முதல் உள்ளங்கால் வரை முத்துக்கள் விழுந்து வலியால் வேதனைப்பட்டார் சிவன். அதைக்கண்டு பார்வதி தேவி கலங்கினாள். அண்ணன் மகாவிஷ்ணுவிடம் முறையிட்டாள். அவரும் தங்கையின் அம்சமான முத்தாரம்மனிடம், நீ போட்டதை, நீயே தான் இறக்க வேண்டும் என்றார். 

எப்படி என்ற மறு கேள்வி கேட்ட முத்தாரம்மனிடம், அதற்கான விளக்கமளித்து வழிமுறையை சொல்லி கொடுத்தார் மகாவிஷ்ணு. அதன்படி தலைவாழை இலையை விரித்து, அதன் மேல் தயாபரனான சிவபெருமானை படுக்க வைத்து, சக்தியின் சூலாயுதத்தால் உருவான வேம்பு மரத்தின்  இலைகளைக்கொண்டு வந்து அதை வைத்து முத்துவை இறக்கினாள் முத்தாரம்மன். அகிலத்தையே ஆளும் சிவபெருமானாலேயே தாங்க  முடியவில்லை. மனித உயிர்கள் எப்படி தாங்கிக்கொள்ளும் என்று கருதி மகாவிஷ்ணு அந்த முத்துக்களை வாங்கி, கொப்பரையில் வைத்து வறுத்து,  அதன் வீரியத்தை குறைத்து அதன் பின் முத்தாரம்மனிடம் எடுத்து கொடுத்தார்.முத்து வரமும், தீராத நோய்களை திருநீற்றால் தீர்த்தருளும் வரமும் பெற்ற முத்தாரம்மன், முத்துக்கள் பெற்றதால் முத்துமாரி என்றும் முத்தாரம்மன் என்றும் அழைக்கப்படலானாள்...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  

     என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

சகல சம்பத்தையும் அருளும் ஸம்பத்கரிதேவி.!!

லலிதாம்பிகையின் யானைப் படைத்தலைவி இந்த ஸம்பத்கரி தேவி. கோடிக்கணக்கான  யானைகள், குதிரைகள், ரதங்கள் சூழ, சகல செல்வங்களையும் தன்னுள் கொண்ட  ஸம்பத்கரி பரமேஸ்வரி, தன் பக்தர்களுக்கு அழியாத நவநிதிகளையும்  வாரி வழங்கி  அருள்பாலிக்கிறாள். தேவியின் வாகனமான யானையின் பெயர் ரணகோலாஹலம்.லலிதா  ஸஹஸ்ரநாமத்தில் ஸம்பத்கரி ஸமாரூட ஸிந்தூர வ்ரஜஸேவிதா எனும் நாமம் இந்த  தேவியைப் போற்றுகிறது. கோடிக்கணக்கான யானைகள் பின் தொடர, சகல அஸ்திரங்களும்  தேவியைப் பாதுகாத்தபடி சூழ்ந்து வர, தேவி தன்  வாகனமான ரணகோலாஹலம் எனும்  யானையின் மீதேறி அருட்கோலம் காட்டுகிறாள். அதுவரை லட்சுமி கடாட்சம்  கிட்டாதவர்களுக்குக் கூட இந்த தேவியின் அருளால் நிச்சயம் கிட்டும் என்பதை  தேவி ஆரோகணித்து வரும் யானை  எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும், தாமரை  மலர்ந்து உணர்த்துகிறது. ஒரு யானையைக் கட்டி தீனி போடுவதற்கே பெருஞ்செல்வம்  வேண்டும். கோடிக்கணக்கான யானைகளைக் காப்பாற்றும் அளவிற்கு பெருஞ்செல்வம்  கொண்டவள் இத்தேவி எனில் இந்த அம்பிகையின் செல்வ வளத்தை அறியலாம். அந்த   செல்வ வளங்களை தன்னை உபாசனை புரியும் பக்தர்களுக்கும் வாரி வாரி வழங்கும்  பரம கருணாமூர்த்தினி இவள்.

லலிதாம்பிகையைப் போற்றும் சக்தி மஹிம்ன  துதியில் மிக வீர்யம் உள்ளதும் வெற்றியுடன் விளங்கக்கூடியதுமான உனது  அங்குசத்தை தன் உள்ளத்தில் எவன் தியானிக்கிறானோ அவன் தேவர்களையும்  பூவுலகில் ஆள்பவர்களையும் எதிரி  சைதன்யங்களைக் கட்டுப்படுத்தக்  கூடியவனாகவும் விளங்குவான் என்று கூறப்பட்டுள்ளது. அவ்வளவு பெருமை பெற்ற  லலிதையின் அங்குசத்திலிருந்து தோன்றிய சக்தி இந்த ஸம்பத்கரிதேவி.  யானையின் மதத்தை அடக்க அங்குசம் உதவுவதுபோல, நான் எனும் மதத்தை தேவி  அடக்குகிறாள். யானையைப் பழக்கிவிட்டால் அது எவ்வளவோ நல்ல பணிகளுக்கு  உதவுவது போல, இந்த தேவியும் தன்னை அன்பாக வழிபடும் பக்தர்களின் வாழ்வில்  மங்களங்கள் சூழ செல்வவளம் பெருக்குகிறாள். யானையும் குதிரையும் எங்கேயோ  காடுகளில் இல்லை. நமக்குள்ளேயே மனமாகவும், அகங்காரமாகவும்  உள்ளன.  இரண்டையும் பழக்கப்படுத்தி பக்குவமாக்க வேண்டும். அம்பிகையை அடைவதற்கு முன்,  குதிரையைப் பழக்குவது போல், நம் மனதைப்பழக்கி, யானையின் மதத்தைக்  கட்டுப்படுத்துவது போல நம் அகங்காரத்தையும் ஒடுக்க  வேண்டும் என்பதே இந்த  தேவியரின் தத்துவம் விளக்குகிறது.

எண்பதுகளில் பரமாச்சார்யார் அருளுரைப்படி பிடியரிசித் திட்டத்தை சைதாப்பேட்டையில் அறிமுகப்படுத்தி மாதா மாதம் சென்னையிலிருந்து 23 மூட்டை அரிசியை நானும் என் ஆருயிர் நண்பனுமான அமரர் கோயம்பேடு சரபேஸ்வரர்  வாசனும், மற்றும் சில அன்பர்களும் தேனம்பாக்கம் வேதபாடசாலைக்கு சேகரித்துத் தந்து கொண்டிருந்தபோது மகாபெரியவரின் அருளோடு ஸ்ரீவித்யையை உபாசிக்கும் பெரும்பேறு கிடைத்தது. தேவியை எனக்குத் தெரிந்த முறையில் உபாசித்த  போது 93ம் வருடம் தேவியின் யானைப்படைத் தலைவியான ஸம்பத்கரீ தேவியின் மந்திரம் கிடைத்தால் செல்வவளம் பெறலாம் என்று ஒரு புத்தகத்தில் பார்த்து ஒரு உபாசகர் மூலம் அந்த மந்திரத்தை உபதேசம் பெற்று வந்த அரைமணி  நேரத்தில் என் வீட்டின் முன் சர்வாலங்காரங்களோடு யானை வந்து என்னை ஆசிர்வதித்துச் சென்றது சத்தியம். அன்றிலிருந்து இன்று வரை தேவியின் அருட்கருணை எத்தனை எத்தனையோ சந்தர்ப்பங்களிலிருந்து காத்துகொண்டே வருகிறது.  நம்பினார் கெடுவதில்லை நான்குமறை தீர்ப்பு என்பதை என் வாழ்க்கையில் அனுபவித்துக் கொண்டே இருக்கிறேன். நான் பெற்ற இன்பத்தை அனைவரும் பெற வேண்டும் எனும் எண்ணத்தில் அந்த ஸம்பத்கரி மந்திரத்தை இங்கு அளிக்கிறேன்.

ஸம்பத்கரி தேவி தியானம்
அநேக கோடி மாதங்க துரங்க ரத பத்திபி:ஸேவிதாமருணாகாராம் வந்தே ஸம்பத் ஸரஸ்வதீம்

மூலமந்திரம்
க்லீம் ஹைம் ஹ்ஸெஹு ஹ்ஸௌஹு ஹைம் க்லீம்


🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳


           🔔 *சர்வம் சிவமயம்* 🔔


🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯

   


     என்றும் இறைப்பணியில்


*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*

                  *ஆன்மீக குழு*


            *வாட்சப் ல் இணைய*                               


             📲 +919486053609


     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰

        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂


🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡


Sunday, 29 September 2019

நவராத்திரியில் சுண்டல் நிவேதனம் ஏன்?

நவராத்திரி என்றவுடனேயே எல்லாருக்கும் கொலுலும் சுண்டலும் தான் நினைவுக்கு வரும். நவராத்திரியின் ஒன்பது நாளும், தினமும் ஒரு சுண்டல் செய்து, அம்பிக்கைக்கு நிவேதனம் செய்வது சிறப்பு.  சுண்டல் நிவேதனத்தை அப்படி என்ன சிறப்பு. இதற்கு அறிவியல் காரணமும் உள்ளது. 

 தேவர்களுக்கு சிவன், விஷ்ணு அமிர்தம் தந்து, அவர்களை காத்தது போல, பூமி உயிர்வாழ “மழை என்னும் அமிர்தத்தைத் தருகிறார்கள்.இதனால் பூமி “சக்தி பெறுகிறது. அந்த சக்தி எனும் பெண்ணுக்கு, பூமியில் விளைந்த விதவிதமான தானியங்கள் பக்குவப்படுத்தப்பட்டு, நிவேதனம் செய்யப்பட்டது. அதில் சுண்டல் பிரதான இடம் பெற்றது. 

நவராத்திரி காலமான புரட்டாசி, ஐப்பசியில் அடைமழை ஏற்படும். இதனால் தோல் நோய் போன்றவை அதிகமாகும். இதைப் போக்கும் சக்தி சுண்டலுக்கு உண்டு.
இதை உணர்ந்து தான், நம் முன்னோர் நவராத்திரி நாட்களில், அம்பிகைக்கு சுண்டல் நிவேதனம் செய்ய சொல்லியுள்ளனர்...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  

     என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

நவராத்திரியில் அபிராமி அந்தாதியின் மகிமை.!!

அம்பிகை வழிபாட்டில் முக்கிய இடம் பெறும் துதிகள், ஆதிசங்கரர் அருளிய சவுந்தர்யலஹரி மற்றம் அபிராமி பட்டர் அருளிய அபிராமி அந்ததி ஆகியவை. இரண்டுமே, 100 பாடல்கள் கொண்டது. இதில் ஒவ்வொரு பாடலுக்கும் ஒரு  பலன் உண்டு. தினமும், ஒரு பாடலை மட்டும் பாராயணம் செய்துவந்தால், அதற்கான பலனை நாம் அடைய முடியும்.

அபிராமி அந்தாதியை அருளிய அபிராமி பட்டர் அன்றைய சோழநாட்டுப்பகுதியான திருகடவூரில் வாழ்ந்து வந்தார். (அன்னை அபிராமி இருக்கும் இடம்) அவர் எப்பொழுது அன்னை அபிராமி எண்ணி யோக நிலையில் இருப்பது வழக்கம். உலகம் அவரைப்பற்றி பேசுவதைப்பற்றி கவலைப்படாமல் இருந்தார். 

அப்பொழுது சோழநாட்டை ஆண்ட இரண்டாம் சரபோஜி ராவ் போன்ஸ்லே மன்னர், அபிராமியை  தரிசிப்பதற்கு சென்றார். அப்பொழுதும் அபிராமி பட்டர், மன்னரின் வருகையைப்பற்றி உணராமல், அன்னை அபிராமியின் ஒளிமிகுந்த முகத்தை பற்றி எண்ணி யோக நிலையிலேயே இருந்தார். 
அப்பொழுது மன்னர் மிகுந்த மரியாதையுடன் அவரை அணுகி இன்று என்ன திதி என்று கேட்டார். அப்பொழுது அபிராமி பட்டர் உண்மையான நாளான அமாவாசையை உணராமல் பவுர்ணமி என்று சொல்ல, அனைவரும் அபிராமி பட்டரைப் பார்த்து சிரித்தனர்.
சரபோஜி மன்னர் கோபம்கொண்டு அபிராமி பட்டரை சொன்னது போல் அவரது வார்த்தைப் பொய்த்தால் அபிராமி பட்டரை உயிரோடு எரிக்குமாறு கூற, அதற்கான தளம் ஏற்பாடு செய்து கீழே நெருப்பு எரியூட்டப்பட்டது. அபிராமி பட்டர் தன் தவறை உணர்ந்தவராக, பழியை அன்னை அபிராமியின் மீதே போட்டார். .அவர் அன்னை அபிராமியைப்பற்றி நூறு சுலோகங்களை மிக அருமையாகப் பாடத் தொடங்கினார்.

அந்தப்பாடல்கள் தமிழ் இலக்கியத்தில் அந்தாதி என்றப்பெயரில் வந்தன, அந்தாதி என்றால் அடுத்தப்பாடல், முதல் பாடல் எந்த வார்த்தையில் முடிந்ததோ அதே வார்த்தையில் தொடங்க வேண்டும். அபிராமி பட்டருக்கு இருந்த திறமையையும், கடவுளின் அருளால் இந்த அருமையான நூறு பாடல்களை ஒரே இரவில் பாடியதையும். பாராட்டியே ஆகவேண்டும். 
அபிராமி அந்தாதியில் இன்னொரு தனித்துவம் என்னவென்றால் அதற்கு முடிவும் இல்லை ஆரம்பமும் இல்லை. முதல் வரி 'உதிக்கின்ற செங்கதிர் உச்சி திலகம்..... ' என்று தொடங்க 100வது பாடல் ' உதிக்கின்றனவே ' என்று முடிகிறது.


அபிராமி பட்டர் 79வது பாடலை பாடிக்கொண்டிருக்கையில் 'விழிக்கே அருளுண்டு வேதம் சொன்ன..... ' அன்னை அபிரமி அவரது பக்தியால் இன்புற்று அவர் முன்னே தோன்றி தனது காதணியை ஆகாயத்தில் வீச அது வான் முழுவதும் முழு பெளர்ணமியைப் போல பிரகாசித்து ஜொலித்து. 
அனைவரும் அன்னையை வணங்கி அன்னையின் மகத்தான சக்தி கண்டு வியந்தனர். மன்னர் அபிராமி பட்டரிடம் மன்னிப்பு கோரினார். அப்படிப்பட்ட அபிராமி அந்தாதியை, நவராத்திரி நாளில் பாராயணம் செய்வது சிறப்பு. 100 பாடலை பாராயணம் செய்ய முடியாதவர்கள், குறிப்பிட்ட பாடல்களையாவது கட்டாயம் பாராயணம் செய்ய வேண்டும். அம்பிக்கையின் பரிபூரண அருள் நமக்கு கிட்டும்...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  

     என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

ஞாபக சக்தி அதிகரிக்க வேண்டுமா?

வானில் தோன்றும் மூன்றாம் பிறை நிலவைத் தரிசிப்பதையே, 'பிறை காணுதல்' என்கின்றனர். பஞ்சாங்கத்திலும், காலண்டரிலும் மூன்றாம் பிறையை மக்கள் பார்க்கவேண்டும் என்பதற்காக 'சந்திர தரிசனம்' என்று குறிப்பிட்டுள்ளது.

சிவன், பார்வதி, விநாயகப் பெருமான் போன்ற தெய்வங்கள் சூடும் இந்தப் பிறை தெய்வீக சின்னமாகும். காமம், வெகுளி, மயக்கம் இந்த மூன்று குணங்களையும் கடந்தவன் முக்தி அடையலாம் என்பதை நினைவுபடுத்துவதற்கே பெரியவர்கள் இதைக் காணவேண்டும் என்று கூறினார்கள்.

ஒரு முறை தட்சனின் சாபத்தால், தனது பதினாறு கலைகளையும் இழந்தான் சந்திரன். தனது கலைகளை மீண்டும் பெறுவதற்காக சந்திரன் சிவனை நினைத்து தியானம் செய்தார். தட்சனின் சாபத்தால் உருகும் சந்திர பகவானின் தேக நிலை குறித்து மிகவும் வருத்தம் அடைந்தனர் அவரின் இருபத்தேழு நட்சத்திர மனைவியர். 
உடனே தங்களின் தந்தையான தட்சனிடம் சென்று சாப விமோசனம் அளிக்கும்படி வேண்டினர் . தட்சனோ தனது அறியாமையால், அளித்த சாபத்தால் தனது புண்ணியம் அனைத்தும் குறைந்துவிட்டது என்றும், தன்னால் சாப விமோசனம் அளிக்க முடியாது என்றும் கூறினார். இறுதியில் 27 நட்சத்திர மனைவியரும் சந்திரனும் சிவ பெருமானை நினைத்து தவம்புரிந்தனர்.  சந்திரனின் தவத்தை மெச்சிய சிவபெருமான் தன் தலைமுடியில், ‘மூன்றாம் பிறையாக’ அமரும் பேறுபெற்றார்.

சுறுசுறுப்போடு  அதேநேரம் சிறுகச் சிறுக வளர்ந்தால் முழுப்பலனையும் அடையமுடியும் என்னும் கருத்தை வலியுறுத்துகின்றது இந்த பிறை. இதை வைத்துத்தான் எண்பது வயது நிறைவுற்றவர்களை 'ஆயிரம் பிறை கண்டவர்' என்று அவருக்குச் சதாபிஷேகம் செய்து கொண்டாடுகின்றோம். 
அமாவசையை அடுத்து வரும் மூன்றாம் நாளில் சந்திர தரிசனம் காண்பவர்களுக்கு ஞாபக சக்தி அதிகரிக்கும். மனக்குழப்பம் நீங்கும். கண் பார்வை தெளிவாகும். செவ்வாய், வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் வரும் மூன்றாம் பிறை மிகவும் விசேஷமான ஒன்றாகும்.

குறிப்பாக சித்திரை, வைகாசி மாதங்களில் வரும் இப்பிறையைக் கண்டால் ஓர் ஆண்டு சந்திர தரிசனம் செய்த பலன் கிடைக்கும். கார்த்திகை, மார்கழி மாதங்களில் வரும் மூன்றாம் பிறையைக் கண்டால் சகல பாவங்களும் தொலையும்...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  

     என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

நவராத்திரி கொலு வைபவம்.!!

நவராத்திரியை 3, 3 நாட்களாக பிரித்துக்கொள்கிறோம். முதல் 3 நாட்கள் துர்க்கை அம்மனுக்கும், இரண்டாது 3 நாட்கள் மகாலட்சுமிக்கும் கடைசி 3 நாட்கள் சரஸ்வதி அம்மனுக்கும் உகந்தது.


நவராத்திரி என்பது ஆண்டுக்கு 2 முறை வருகிறது. சில இடங்களில் 4 நவராத்திரிகள் கூட கொண்டாடுவார்கள். ஆனால் அக்டோபர் மாதத்தில் கொண்டாடப்படும் நவராத்திரியை தான் நாம் கடைபிடிக்கிறோம். இந்த நவராத்திரிக்கு சாரதா நவராத்திரி என்று பெயர். வட மாநிலங்களில் ஷ்ரதா நவராத்திரி என்று சொல்கிறார்கள். நியமப்படி பக்தியுடன் கொண்டாடப்படும் நவராத்திரி என்று இதற்கு பொருள். மார்ச் மாதத்தில் கொண்டாடப்படும் நவராத்திரிக்கு வசந்த நவராத்திரி என்று பெயர். 

ஆனால் அதிகம் பேர் கொண்டாடுவது சாரதா நவராத்திரியை தான். காளி அவதாரம் எடுத்து மகிஷாசுரனை அழித்த பராசக்தியை கொண்டாடுவதே நவராத்திரி. அறிவியல் காரணம் நவராத்திரிக்கும் உண்டு. இந்த அக்டோபர் மாதம் என்பது மழை தொடங்கும் நேரம். இந்த காலங்களில் இரவு நேரம் அதிகமாகவும் பகல் நேரம் குறைவாகவும் இருக்கும். எனவே இந்த சீதோஷ்ண நிலைக்கு நம் உடலை மாற்றும் வகையிலேயே நவராத்திரி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த 9 நாட்களுமே பூஜை செய்யப்பட்டு சுண்டல் போன்ற புரோட்டீன் அடங்கிய உணவுகள் சாப்பிடுவதால் உடல் தெம்பு பெறும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும். 

இந்த நவராத்திரியை 3, 3 நாட்களாக பிரித்துக்கொள்கிறோம். முதல் 3 நாட்கள் துர்க்கை அம்மனுக்கும், இரண்டாது 3 நாட்கள் மகாலட்சுமிக்கும் கடைசி 3 நாட்கள் சரஸ்வதி அம்மனுக்கும் உகந்தது. பத்தாம் நாள் தான் வெற்றிக்கு உகந்த விஜயதசமி கொண்டாடப்படுகிறது. மனிதன் வாழ தைரியம், செல்வம், கல்வி மூன்றும் தேவை. இந்த அர்த்தத்தை உணரும் வகையில் தான் நவராத்திரியை கொண்டாடுகிறோம்.

கொலு வைக்கும் முறை 

கொலு வைப்பதை பொருத்தவரை பாரம்பரியமாக வைப்பவர்கள் தான் கொண்டாட வேண்டும் என்று இல்லை. புதிதாக கொலு வைப்பவர்களும் கொண்டாடலாம். முதலில் கொலு வைக்கும் படிகள் இருந்தால் அதை எடுத்து சுத்தப்படுத்தி மஞ்சள், குங்குமம் வைக்கவும். சுத்தமான சிவப்பு துணியை விரித்துக்கொள்ளவும். கொலு பூஜையில் கலசத்தில் இருந்துதான் பூஜையை தொடங்கவேண்டும். 

கலசத்தில் நூல் கட்டவேண்டும். ஆனால் அதற்கான ஐதீகம் தெரியாதவர்கள் நூல் கட்டுவது சிரமம். எனவே நூல் கட்டாவிட்டாலும் பரவாயில்லை. அந்த கலசத்தில் எலுமிச்சம்பழம், வெத்தலை பாக்கு, ஒரு ரூபாய் நாணயம் ஆகியவற்றை போட்டு வாய் பகுதியில் மாவிலை கட்டிக்கொள்ளவும். மாவிலை கிடைக்கவில்லை என்றால் வெற்றிலையை பயன்படுத்தலாம். தேங்காயை குடுமியுடன் மஞ்சள் குங்குமம், மாலை அணிவித்து அதில் வைக்கவேண்டும். இந்த கும்ப பூஜையை நவராத்திரி தொடங்கும் நாள் அன்று சூரிய ஓரையின்போது செய்யவேண்டும். 

பூஜை செய்த கலசத்தை கொலு ஸ்டாண்டுக்கு அருகில் வைத்துக்கொள்ளவும். கொலுப்படிகள் எப்போதுமே ஒற்றைப்படை எண்ணிக்கையில் தான் அமைக்கப்பட வேண்டும். 5, 7, 9 என்ற எண்ணிக்கையில் வைக்கவும். 9 படிகள் வைத்தால் சிறப்பு. ஒவ்வொரு படியிலும் என்னென்ன வைக்க வேண்டும் என்பதை பார்க்கலாம். கொலு வைக்கும் முறையே மனிதனுடைய வாழ்க்கைக்கு என்னென்ன தேவை என்பதை உணர்த்தும் வகையிலேயே இருக்கும். ஒன்றோடு ஒன்று சார்ந்த வகையில் தான் பொம்மைகள் இருக்கும். மண்ணால் செய்த பொம்மைகளை வைத்து வணங்கும் இடத்தில் எனது பேரருள் இருக்கும் என்று பராசக்தியே கூறி இருக்கிறார்.

படி தத்துவம்

அம்பாளே 9வது படியில் விநாயகரையும் அடுத்து அம்பாளையும் அதற்கு அடுத்து லட்சுமி, சரஸ்வதியை வைக்கவேண்டும் என்று கூறி இருக்கிறார். அதற்கு அடுத்து சிவன், விஷ்ணு, பிரம்மா என்று வரிசையாக முழு முதற் கடவுள்களை ஒன்பதாவது படியில் வைக்க வேண்டும். நாம் உயிர் வாழ அடிப்படையே விவசாயம் தான். அதை உணர்த்தக்கூடிய புல், பூண்டு, முளைப்பாரி, தானிய வகைகளை குறிக்கும் பொம்மைகளை முதல் படியில் வைக்கவேண்டும். சிலர் முந்தைய நாளே முளைக்க வைக்கப்பட்ட தானியங்களை கொத்துடன் வைப்பார்கள். 

முதல் படியில் ஓரறிவு உள்ள உயிர்களை வைத்துவிட்டோம். அடுத்த படியில் ஈருயிர் உருவங்களை வைக்கவேண்டும். கடல்வாழ் உயிரினங்களான மீன், சிப்பி, நத்தை போன்ற உருவங்களை இந்த படியிலும் அடுத்த படியான மூன்றாவது படியில் மூவுயிர் பிராணிகளான எறும்பு, ஈ, கரையான் போன்ற உருவங்களையும் வைக்கவேண்டும். நான்காம் படியில் நான்கு அறிவு ஜீவன்களான நண்டு, வண்டு போன்ற உருவங்களை வைக்கவேண்டும். ஐந்தாம் படியில் ஐந்தறிவு உடைய விலங்குகளையும் பறவைகளையும் வைக்கவேண்டும். ஆறாம் படியில் ஆறறிவு உடைய மனித பொம்மைகளை வைக்கவேண்டும். 

மரப்பாச்சி 

ஏழாம் படியில் ஏழறிவு பெற்ற உயிர்களான மகான்கள், சித்தர்கள், ரிஷிகள் ஆகியோரது பொம்மைகளை வைக்கவும். எட்டாம் படியில் பஞ்ச பூதங்களையும் நவகிரகங்களையும் வைக்கவேண்டும் என்று கூறப்பட்டு இருக்கிறது. இந்த உலகம் ஒன்றை ஒன்று சார்ந்து தான் இயங்குகிறது என்ற சார்பியல் தத்துவத்தை விளக்கும் வகையில் தான் இந்த கொலு முறை அமைந்து இருக்கிறது. 

கொலு முடிந்த பிறகு பத்தாம் நாள் அம்பாள் வெற்றி பெற்ற களிப்பில் இருப்பார். அப்போது காலையிலேயே ஒருமுறை பூஜை செய்துவிட்டு பொம்மைகளை எடுத்து சுத்தப்படுத்தி பத்திரமாக வைத்துக்கொள்ளவும். ஒவ்வொரு கொலுவின் போது முடிந்த அளவுக்கு புதிய பொம்மைகளை வாங்கி வைத்து சேர்க்கவும். கொலுவில் கட்டாயம் இடம்பெற வேண்டியது மரப்பாச்சி பொம்மை. இந்த பொம்மைக்கு ஒரு சிறப்பு இருக்கிறது. மரப்பாச்சி பொம்மை வெங்கடேச பெருமாளையும் அம்பாளையும் குறிப்பதாக ஐதீகம். 

நைவேத்தியம் 

நவராத்திரியில் படைக்கப்படும் நைவேத்தியங்களில் வெங்காயம் சேர்க்காமல் சமைப்பதே சிறப்பு. மந்திரங்கள், சுலோகங்கள் சொல்லலாமா என்று கேட்டால் நன்றாக தெரிந்தால் மட்டுமே சொல்லவும். சில மந்திரங்கள் சரியாக சொல்லப்படா விட்டாலோ தவறாக உச்சரித்து விட்டாலோ மாற்று விளைவுகளை ஏற்படுத்தலாம். எனவே லலிதா சகஸ்ரநாமம், மகிஷாசுரமர்த்தினி பாடல் போன்றவைகளை கேட்கலாம். சொல்லலாம். அம்பாளுக்கு உகந்த பாடல்களை கேட்கலாம். பக்திமயமாகவும் இருக்கும். சரஸ்வதி பூஜை அன்றைக்கு வெள்ளை நிற கொண்டைக்கடலை சுண்டல் செய்து நைவேத்தியம் செய்யவும். விஜயதசமி அன்று குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பவர்கள் அவர்களுக்கு வாங்கிய ரைம்ஸ் புத்தகத்துக்கு அவர்கள் கைகளாலேயே பொட்டு வைத்து பூஜையறையில் வைத்து பூஜிக்க சொல்லலாம்...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  

     என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡