தேவியின் உடற்கூறுகளில் நாபி( தொப்புள் கொடி) அல்லது வயிற்றின் மூன்றாவது மடிப்பு விழுந்த இடமாக புரி ஜகந்நாதர் ஆலயத்தில் உள்ள விம லாதேவி ஆலயம் கூறப்படுகிறது. சக்தி பீடங்களில் முக்கியமானது நான்கு ஆதி சக்தி பீடங்கள் என்கிறார்கள். அந்த ஆதிசக்தி பீடங்களில் இது தேவியின் பாதம் விழுந்த இடம் என்று காளிகா புராணத்தில் கூறப்பட்டுள்ளது. இவளை தரிசிக்க ஒரிசா மாநிலத்துக்கு வர வேண்டும். புரி ஜகந்நாதபுரியின் முக்கிய அதி தேவதையாக இவள் வணங்கப்படுகிறாள். லலிதா சகஸ்ரநாமத்தில் இருப்பது போலவே விஜயாவும், விமலையும் அருகே அமர்ந்து அருள்புரியும் இப்பீடம் விரஜாம்கா சக்திபீடம் என்றும் வழங்கப்படுகிறது.விமலை என்றால் அப்பழுக்கற்றவள் என்று பொருள்.
தலவரலாறு:
புரியை ஆண்டு வந்த அரசன் இந்திரத்தையுமா. அவன் சிறந்த பெருமாள் பக் தன். ஒரு முறை பெருமாள் அவனது கனவில் தோன்றி தனக்கு ஒரு ஆலயம் எழுப்புமாறு கேட்டுகொண்டார்.அந்த ஆலயத்தின் சிலையை கடலில் மிதந்து வரும் பொருளை கொண்டு வடிவமைக்கவேண்டும் என்றும் கேட்டுக் கொண் டார். மறுநாள் காலை அரசன் எழுந்ததும் காவலாளிகளை அழைத்து கடற்க ரையில் மிதந்துவரும் பொருளை எடுத்துவரும்படி கட்டளை பிறப்பித்தான். அதற்கேற்ப காவலர்களும் கடற்கரையில் காத்திருந்தார்கள். மரக்கட்டை ஒன்று மிதந்துவந்தது. அந்த மரக்கட்டையை எடுத்துசென்று அரசனிடம் ஒப்ப டைத்தார்கள்.
அரசன் அந்த மரக்கட்டைக்கு உரிய பூஜை செய்து தச்சரை அழைத்து அழகிய பெருமாள் சிலை வடிக்கசொல்லி கூறினார். தச்சர்கள் ஒப்புக்கொண்டு வேலை யைத் துவங்கினார்கள். மரத்தில் உளி பட்டதுமே உளி உடைந்து விட்டது. தொடக்கத்திலேயே நடந்த இந்த நிகழ்வு அரசனை பெரிதும் பாதித்தது. அபச குணமாகிவிட்டதே என்று வருந்திய அரசனை பெருமாளே முதிய தச்சர் வேடம் அணிந்து அரசனை சந்தித்து. நீங்கள் விரும்பியது போல் நானே பெரு மாளை வடிவமைக்கிறேன். எனக்கு 21 நாட்கள் தேவை. என்னை தனி அற யில் அமர்த்த வேண்டும். யாரும் என்னை தொல்லை செய்யக்கூடாது என்று நிபந்தனை விதித்தார். அரசனும் மகிழ்ந்து ஒப்புக்கொண்டார்.
15 நாட்கள் வரை அந்த அறைக்குள்ளிருந்து உளிச்சத்தம் கேட்டுக்கொண்டே இருந்தது. அதன்பிறகு மூன்று நாட்கள் எவ்வித சத்தமும் கேட்கவில்லை. அரசன் தச்சன் தூங்கிவிட்டாரோ என்று எண்ணி கதவை திறந்து பார்த்தான். தச்சர் பெருமாளாக உருவெடுத்து மனிதனுக்கு பொறுமை வேண்டும். சத்தம் வரவில்லை என்றதும் கதவை திறந்துவிட்டாய். இந்த ஆலயத்தில் நீ பிர திஷ்டை செய்யும் அனைத்து சிலைகளும் அரைகுறையாகத்தான் இருக்கும். ஆனாலும் எதையும் யோசியாமல் அப்படியே பிரதிஷ்டை செய்துவிடு. இங்குவந்து வழிபடும் பக்தர்களுக்கு பொறுமையின் அவசியம் புரியட்டும் என் றார். அந்த அறையில் அரைகுறை நிலையில் இருந்தஜெகந்நாதர், பலராமன், சுபத்திரா ஆகியோரின் சிலைகளை பிரதிஷ்டை செய்தார்.
இத்தலத்தின் வளாகத்தில் தென்மேற்கு மூலையில் ரோஹிணி குண்ட் அருகே விமலாதேவியின் சன்னிதி அமைந்திருக்கிறது. அழகிய மண்டபங்களைத் தாண்டி சிறிய தனிக்கோயிலில் அருள்பாலிக்கிறாள். இத்தலத்தில் முதலில் குடியேறீயவள் இவளே என்பது குறிப்பிடத்தக்கது. விமலாவின் இடத்துக்கு வரவேண்டும் என்று விரும்பினார் பூரிஜெகந்நாதர். ஆனால் விமலை இந்த ஆலயத்தில் ஜெகந்நாதர் எழுந்தருளினாலும் முதல் நிவேதனப்பொருள் தமக்கே வழங்க வேண்டும் என்று நிபந்தனை விதித்தாள். ஜெகந்நாதரும் சம்மதம் தெரிவிக்கவே இதுவே வழக்கமாயிற்று.
விமலை தேவியை அபிதான சிந்தாமணி சிவசூர்ய பீடத்து அமரும் சக்தி என்று குறிப்பிடுகிறது. மத்ஸ புராணம் மற்றும் கந்த புராணத்தில் இவள் புகழ் பாடப்பட்டுள்ளது. விமலை சாந்தவடிவத்தில் பத்மாஸனத்தில் அமர்ந்து நான்கு திருக்கரங்களுடன் அருள்பாலிக்கிறாள். சந்த்ரகலையை தன்னுடைய சிரசில் தரித்திருக்கிறாள். ஒளிமயமானவள். ஒளி என்னும் சொல்லுக்கே பொருளுடை யவளாய் அழகுபட காட்சியளிக்கிறாள் விமலை தேவி. நவசக்திகளுள் ஒன் றாக போற்றப்படுகிறாள் விமலாதேவி.
விமலையை தரிசிப்பவர்களுக்கு லஷ்மியும், சரஸ்வதியும் பணிவிடை செய் வார்கள். நவராத்திரி காலங்களில் அன்னையை விதவிதமான அலங்காரங் களில் தரிசிக்கலாம். விஜயதசமி அன்று அம்பாளைத் தரிசிக்க பக்தர்கள் கூட் டம் அலைமோதுகிறது. செளந்தர்ய லஹரியில் சரஸ்வத்யா எனத்தொடங்கும் பாடலில் அம்பிகையை வழிபடுபவர்கள் பிரம்மாவும், விஷ்ணுவும் பொறா மைப்படும் அளவுக்கு கல்வி, செல்வம் முதலான அனைத்துப்பேறுகளையும் பெறுவார்கள் என்று குறிப்பிடப்படுகிறது. அம்பிகையின் வடிவமான விமலா தேவி வழிபட செல்வோமா?
🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳
🔔 *சர்வம் சிவமயம்* 🔔
🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
என்றும் இறைப்பணியில்
*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
*ஆன்மீக குழு*
*வாட்சப் ல் இணைய*
📲 +919486053609
⏰ _ஒழுக்கம்! கட்டுப்பாடு!_ ⏰
👳🏻♂ *இறைத்தொண்டு!* 👳🏻♂
🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡
No comments:
Post a Comment