Thursday, 22 August 2019

சக்தி பீடம் - பராசக்தி பீடம்.!!

சக்திபீடங்களில் தமிழகத்தில் அமைந்திருக்கும் திருத்தலங்களில் பராசக்தி பீடமும் ஒன்று.  திருநெல்வேலி மாவட்டத்தில் குற்றாலம் என்னும் ஊரில் குழல்வாய்மொழி மற்றும் பராசக்தியாக பக்தர்கள் அழைப்பில் வீற்றிருக்கிறாள் அம்பிகை சக்தி பீடங்களில் தரணி பீடம், யோகபீடம், பராசக்தி பீடம் என்று அழைக்கப்படும் இந்த அம்பிகையின் சன்னிதி சிறிய கோயிலாக அமைந்திருக்கிறது நான்கு வேதங்களும் நான்கு வாயில்களாக இங்கு விளங்குகின்றன. சிவன் சிற்பரையின் மந்திர சக்திகள் அடங்கிய ஆலயம், இங்கு அம்பிகை அரி, அயன், அரன் மூன்றுபேரையும் படைத்து அருளினாள்.

தலவரலாறு:
கயிலையில் எம்பெருமானுக்கும் பார்வதிதேவிக்கும் நடக்கும் திருமணக் கோலத்தை கண்டு களிக்க பிரம்மா, விஷ்ணு, முப்பத்து முக்கோடி தேவர்கள், ரிஷிகள், முனிவர்கள் சூழ்ந்திருக்கவே பூமியின் வடதிசை தாழ்ந்து, தென் திசை உயர ஆரம்பிக்கிறது. இதனால் சிவபெருமான் அகத்தியமுனிவரை அழைத்து இதை சமன்படுத்த நீ தென் திசை சென்றால் போதும் குற்றாலத்தில் விஷ்ணுவாக அருள்பாலித்து வந்த என்னை, சிவலிங்கமாக்கி ஆகம் நெறிக ளோடு பூஜை செய்து வந்தால் எங்களது திருமணத்தை இங்கிருந்தே தரிசிக் கலாம் என்று கூறுகிறார்.
எம்பெருமானின் கட்டளைக்கேற்ப வந்த அகத்தியரை கோயிலில் உள்ள வைணவர்கள், இவரை சைவர் என்று கூறி உள்ளே விட மறுத்தார்கள். உடனே அவர் அங்கிருந்து இலஞ்சிக்குமார் ஆலயத்துக்கு சென்று வெண்மணலில் லிங்கம் பிடித்து வழிபடத்தொடங்கினார். சிவதரிசனம் தரவேண்டும் என்று வேண்டவே அவருக்கு காட்சி தந்த முருகப் பெருமான் அகத்தியரை வைணவ வேடம் தரித்து ஆலயத்துக்குள் நுழைந்து பெருமாளை சிவனாக மாற்ற வழிகாட்டுகிறார்.
அவ்வண்ணமே அகத்தியர் செல்லவும், திருமாலின் கையில் இருந்த சங்கு, துளசி, பொட்டு, ரத்தினங்கள் மாறி, மான், சந்திரன், நெற்றிக்கண், பாம்பு என்று மாறியது. உயரமாக இருந்த திருமாலின் தலையில் கைவைத்து, திருமேனி குறுக குறுக என்று எம்பெருமானைப் பிரார்த்திக்க குறுகிய சிவனாக மாறினார். உடனேயே திருமணக்காட்சி தரிசனம் அகத்தியருக்கு கிடைத்தது. அகத்தியர் லிங்கத்தின் தலையை அழுத்திய வடு இன்றும் காணப்படுகிறது.

தலசிறப்பு:

இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். பஞ்ச பூத தலங்களை யும் இங்கு ஒன்றாக தரிசிக்கலாம். அகத்தியர் விஷ்ணு தலத்தை சிவத்தலமாக மாற்றிய போது சுவாமிக்கு  வலப்புறம் இருந்த தேவி, குழல்வாய் மொழி நாயகியாகவும், பூதேவி பராசக்தியாகவும் மாற்றினாராம். பராசக்தி ஸ்ரீ சக்ர மேரு அமைப்பில் உள்ள பீடத்தின் வடிவிலேயே அருள்பாலிக்கிறாள். இந்தப் பீடம் நவசக்திகளான ஒன்பது அம்பிகையின் அம்சமாக இருப்பதாக சொல்கி றார்கள். நவசக்திகளுக்கு ஒவ்வொரு பெளர்ணமி அன்றும் இரவில் பூஜைகள் நடத்தப்படுகிறது. பிரகாரத்தை சுற்றி வரும்போது அகத்தியர் பிரதிஷ்டை செய்த பராசக்தி பீடத்தைத் தரிசிக்கலாம். இவள் உக்கிரமாக இருப்பதால் இவ ளுக்கு எதிரே சிவலிங்க பிரதிஷ்டை செய்திருக்கிறார்கள். இவர் காமகோடீஸ் வரர் என்றழைக்கப்படுகிறார்.
இத்தலம் சங்கு வடிவில் இருப்பது ஆச்சர்யத்தை அளிக்கிறது. செண்பகாதேவி கோயிலுக்கு செல்லும் வழியில், அருவியின் மேற்பரப்பில் இருந்து இந்த வடி வத்தைக் காணலாம். இத்தலத்தின் தலவிருட்சமான  பலா மரத்தில் வருடம் முழுவதும் பலா இருந்தாலும் அதை யாரும் பறிப்பதில்லை என்பதோடு இதன் சுளைகள் லிங்கவடிவில் இருப்பதும் அதிசயமே. நடராஜப் பெருமானின் ஐந்து சபைகளில் ஒன்றான சித்திர சபையில் இரண்டு மண்டபங்கள் அமைந்துள்ளது. திருவாதிரை நாளில் நடராஜப்பெருமானின் இந்த மேடையில் அமர்ந்து அருள்பாலிக்கிறார்.
இங்கு பெருமாளும் எழுந்தருளியிருக்கிறார் இவரை நன்னகரப் பெருமாள் என்று அழைக்கிறார்கள். வேண்டும் பக்தர்களுக்கு நன்மை தருவதால் இவரை இப்பெயரில் அழைக்கிறார்கள்.மகாலஷ்மியின் அம்சமாக சங்கு விளங்குகிறது. இங்கு எட்டு கால பூஜைவேளைகளிலும் சிவன் சன்னிதியில் சங்கு ஊதுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள்.
ஐப்பசி மாதம்  பூரத்தன்று திருக்கல்யாணவிழா நடக்கிறது. அன்றைய தினம் குற்றால நாதரும்,குழல்வாய்மொழி நாயகி இருவரும் அகத்தியர் சன்னிதிக்கு எழுந்தருளி அகத்தியருக்கு திருமணக்காட்சி கொடுக்கிறார்கள். குற்றாலம் செல்லும் போது மறக்காமல் பராசக்தி பீடத்தில் வீற்றிருக்கும் குழல்வாய்மொழி நாயகியையும் தரிசித்துவருவோம்...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  

     என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

No comments:

Post a Comment