Friday, 12 July 2019

கேட்டவரம் தருவாள் கீழத்தெரு மாரியம்மன்.!!

பூலோக கைலாயம் என வர்ணிக்கப்படும் சிதம்பரத்தில் கிழக்கு பகுதியில் கீழத்தெருவில் அமர்ந்து அருளாட்சி செய்பவள் கீழத்தெரு மாரியம்மன். கடலூர் மாவட்டம் சிதம்பரம் பஸ் நிலையம் அருகே உள்ள இக்கோயில் சுமார் 200 ஆண்டுகளுக்கு முற்பட்டது எனக் கூறப்படுகிறது. கருணையின் உருவமே, கலைகளின் வடிவமே என போற்றப்படும் கீழத்தெரு மாரியம்மன் தில்லை வாழ் மக்கள் மனதில் நீங்கா இடம்பெற்றவர். புராண காலத்தில் தில்லை என போற்றப்பட்ட சிதம்பரத்தில் அசுரர்கள் உள்ளே நுழையாமல் இருப்பதற்காக தெற்கே வெள்ளந்தாங்கி அம்மனும், மேற்கே எல்லையம்மனும், வடக்கே தில்லைக்காளியும், கிழக்கே மாரியம்மனும் இருந்து காக்க சிவபெருமான் கட்டளையிட்டதாக வரலாறு கூறுகிறது. சிதம்பரம் நகரின் பிரசித்தி பெற்ற ஊர்க்காவல் தெய்வமான கீழத்தெரு மாரியம்மனை ஏராளமான பக்தர்கள் வழிபட்டு வந்துள்ளனர். பொதுவாக மாரியம்மன் கோயில் எதிர்புறத்தில் சிங்கம், கழுமரம்தான் இருக்கும். ஆனால் சிதம்பரம் கீழத்தெரு மாரியம்மன் கோயிலில் வித்தியாசமாக நந்தி பகவான் அருள்பாலிக்கிறார். 


கோயில் வளாகத்தில் பேச்சியம்மன், துர்க்கையம்மன், ஐயப்பன் மற்றும் நவக்கிரகங்களுக்கு தனி சன்னதி உள்ளது.  புகழ்பெற்ற இந்த அம்மனை கிள்ளை அருகே உள்ள பிச்சாவரம் ஜமீன் வகையறாவை சேர்ந்தவர்களும், சிதம்பரம் நடராஜருக்கு பூஜை செய்யும் தில்லை வாழ் அந்தணர்கள் என அழைக்கப்படும் தீட்சிதர்களும் குலதெய்வமாக வணங்கி வருகின்றனர். இக்கோயிலில் ஆண்டு தோறும் ஆடி மாத தீமிதி உற்சவம் சிறப்பாக பத்து தினங்கள் நடப்பது வழக்கம். தீமிதி விழாவில் சிதம்பரம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக் கான பக்தர்கள் நேர்த்தியாக விரதம் மேற்கொண்டு தீமிதித்து நேர்த்தி கடனை செலுத்துவார்கள். வெள்ளிக்கிழமைகளில் ஏராளமான பெண்கள் மாரியம்மனை தீபம் ஏற்றி வழிபட்டு வருவது வழக்கம். 

அம்பாள் மகிமை

கீழத்தெரு மாரியம்மனின் மகிமைகள் குறித்து பக்தர்கள் கூறுகையில், தமிழகத்தில் சமயபுரம், பெரியபாளையம், மேல்மலையனூர் ஆகிய பகுதிகளில் உள்ள சக்தி கோயில்களை அடுத்து பல மாநில பக்தர்கள் கூடும் ஆலயமாக சிதம்பரம் கீழத்தெரு மாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் வேண்டுதல்கள், பிரார்த்தனைகள் நிறைவேறுவதால் பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது. இக்கோயிலில் தீமிதி விழாவன்று அலகு அணிதல், பாடை கட்டி இழுத்தல், உடலில் மாவிளக்கு ஏற்றுதல், அங்கபிரதட்சணம் உள்ளிட்ட வேண்டுதல் களை பக்தர்கள் நிறைவேற்றுகின்றனர்.கேட்டவருக்கு கேட்ட வரம் அளிப்பவள் கீழத்தெரு மாரியம்மன். இந்த அம்பாளை வழிபட்டால் அனுக்கிரகம் கண்டிப்பாக உண்டு என்பதை அனைவரும் உணர்ந்ததால் இக்கோயிலில் அதிகமான பக்தர்கள் வழிபடுகின்றனர்.இங்கு மனிதர்களுக்கு மட்டுமில்லாமல் அனைத்து உயிரினங்களுக்கும் பிரார்த்தனை செய்யப் படுகிறது. அனைத்து மதத்தினரும் இக்கோயிலுக்கு வருகை தருவது சிறப்பு வாய்ந்தது என்றனர். 

செல்வது எப்படி?

சிதம்பரம் பேருந்து நிலையம் அருகில் கீழத்தெரு மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  

     என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

No comments:

Post a Comment