Wednesday, 3 July 2019

தங்கம் தாமிரமானது.!!

திருநெல்வேலி நகருக்கு வடகிழக்கே சுமார் 15 கி.மீ தூரத்தில் ராகவல்லிபுரம் என்ற ஊருக்கு அருகே உள்ளது செப்பறை நெல்லையப்பர் ஆலயம். இங்குள்ள நடராஜர் மிகவும் சிறப்பு வாய்ந்தவர். இங்குள்ள நடராஜர் சிலையே இந்தியாவில் முதன் முதலாக உருவாக்கப்பட்டது என்ற பெருமையைக் கொண்டது.தாமிரபரணி நதியின் வடகரையில் உள்ள ராஜவல்லிபுரத்தில் மன்னர் ராம பாண்டியனின் அரண்மனை இருந்தது. நெல்லையப்பர்-காந்திமதி பக்தரான அவர், தினமும் ராஜவல்லிபுரத்திலிருந்து நெல்லையில் உள்ள நெல்லையப்பர் ஆலயத்துக்குச் சென்று வழிபட்டு வந்தபிறகே உணவு எடுத்துக் கொள்வார். ஒருமுறை தாமிர பரணி நதியில் பெருவெள்ளம் ஏற்பட அவரால் அன்று ஆற்றைக் கடந்து ஆலயத்துக்குச் செல்ல இயலாமல் போயிற்று. 


அதனால் அவர் அன்று முழுவதும் உணவு அருந்தவில்லை. இரவில் மன்னரின் கனவில் சுவாமி நெல்லையப்பர் தோன்றி, தான் இனி அவரது அரண்மனைக்கு அருகிலேயே ஆலயம் கொள்ள விருப்பதாகவும் அவர் அங்கேயே தன்னை தரிசித்துக் கொள்ளலாம் என்றும் கூறினார். மேலும் சிதம்பரத்திலிருந்து ஒருவர் தனது நடன விக்ரகத்தை எடுத்து வருவார் என்றும் அந்த சிலையை மன்னரின் மாளிகைக்கு அருகில் பிரதிஷ்டை செய்து கோயில் கட்டுமாறும் கூறினார். கோயில் அமையவேண்டிய இடத்தில் குழிக்குள் எறும்புகள் ஊர்ந்து செல்லும் என்றும் இந்த இடத்தில் சிவலிங்க பிரதிஷ்டை செய்யுமாறும் கூடுதல் குறிப்புகள் கொடுத்தார். மன்னர் அதேபோல லிங்கம் ஒன்றை பிரதிஷ்டை செய்து, நடராஜருக்கும் தனி சந்நதி அமைத்தார்.

இதற்கிடையில், சிதம்பரத்திலிருந்து சிற்பி யொருவர் நடராஜ விக்ரகம் ஒன்றை சுமந்து வர, வழியில் செப்பரை என்ற இடத்தில் அந்த சிலையை வைத்துவிட்டு களைப்பினால் உறங்கிவிட்டார். கண் விழித்துப் பார்த்தால், நடராஜர் விக்ரகத்தை காணவில்லை. அவர் மன்னர் ராம பாண்டியனிடம் சென்று முறையிட, மன்னரும் அதை தேடிச் சென்றார். ஏற்கனவே தான் சிவலிங்க பிரதிஷ்டை செய்த பகுதியில் சலங்கையொலியுடன் யாரோ நடனமாடும் ஓசை கேட்டது. அருகில் நடராஜரின் சிலையும் இருந்தது. உடனே இந்த நடராஜரை, நெல்லையப்பர் சந்நதிக்கு அருகிலேயே தான் அமைத்த தனி சந்நதியில் பிரதிஷ்டை செய்தார்.

உலகிலேயே முதலாவதாக செய்யப்பட்ட நடராஜர் சிலை இங்கு எப்படி பிரதிஷ்டை செய்யப்பட்டது? சோழநாட்டு சிற்பியொருவர் சிதம்பரம் ஆலயத்துக்கு நடராஜர் சிலை வடிக்க, அது அவ்வூரை ஆண்ட மன்னன் சிங்க வர்மனுக்கு அதிர்ச்சியாக இருந்தது. ஆம்! அந்த சிலையை தங்கத்தில் வடிக்க சொல்லியிருந்த அவனுக்கு அது தாமிர சிலையாக இருந்தால் அதிர்ச்சிதானே! ஆகவே இந்த சிலையை ஒதுக்கி விட்டு மீண்டும் தங்கச் சிலை உருவாக்க உத்தரவிட்டான். இரண்டாம் முறையும் தங்கச் சிலை தாமிரச் சிலையாயிற்று! அப்போது சிவபெருமான் அவன் முன் தோன்றி, ‘உனக்கு மட்டும் நான் தங்கமாக தெரிவேன்; மற்றவருக்கு தாமிரமாகவே தெரிவேன்’ என்று கூறி மறைந்தாராம்!

அதனால் இரண்டாவது சிலையை சிதம்பரத்தில் பிரதிஷ்டை செய்துவிட்டு, முதல் சிலையை சிற்பியொருவனிடம் கொடுத்துவிட்டான் மன்னன். சிற்பியின் கனவில் தோன்றிய இறைவன், அதை சுமந்துகொண்டு தென்திசை நோக்கி செல்லுமாறு அறிவுறுத்தி மறைந்தார். அந்த சிற்பி கொண்டு வந்த சிலையே தற்போது செப்பறை ஆலயத்தில் தாமிரசபையில் உள்ளது. திருநெல்வேலி நெல்லையப்பர்-காந்திமதி ஆலயங்களுக்குச் சென்று வழிபடும் பக்தர்கள் இந்த செப்பறை ஆலயத்துக்கும் சென்று சிற்றம்பல நாயகனை வழிபட்டு வரலாம்...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  

     என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

No comments:

Post a Comment