Wednesday, 3 July 2019

காஞ்சி வரதனை பாடுங்கடி.!!

கள்வனடி அவன் கள்வனடி

 கன்னியர் விரும்பும் கள்வனடி

 காஞ்சி வரதனை பாடுங்கடி
 காலம் கனிந்தது வாழ்த்துங்கடி!
 
அகில மெல்லாம் ஒன்று திரண்டு
 காஞ்சியில் சேர்ந்தது ஏனடியோ
 அத்தி வரதன் தரிசனம் கண்டு
 கண்கள் வியந்து பூத்திடவோ!
 
பூக்கள் திறந்தது வண்டாலோ - இல்லை
 பூவிழி கண்ணன் கண்ணாலோ
 பாக்கள் பிறந்தது சொல்லாலோ - இல்லை
 பரந்தாமன் அருள் தன்னாலோ!
 
கன்னத்தில் தந்தான் முத்தமடி
 எண்ணத்தில் செய்தான் யுத்தமடி
 கச்சி வரதனை காட்டேடி
 கழுத்தில் மாலை சூட்டிடுவேன்!
 
நாற்பது ஆண்டு நல்வினையால்
 அத்தி வரதனை பார்த்தேனடி!
 அனந்த தீர்த்த  துயில் நீங்கி
 ஆனந்த மண்டபம் சேர்ந்தான்டி!
 
நெய்யுமிருக்குது பாலுக்குள்ளே - நல்ல
 மோருமிருக்குது பாலுக்குள்ளே
 மெய்யுமிருக்குது நெஞ்சுக்குள்ளே - நாம்
 மூழ்கி தவிப்பது பொய்யுக்குள்ளே!
 
புடவை சரிந்தது ஏனடியோ - உன்
 புத்தி சரிந்தது ஏனடியோ
 பூபாலன் மனக்கிறுக்கினிலே
 பூவையும் கொண்ட கோலமிது!
     
தள்ளாத வயதிலும் மனதினிலே
  பொல்லாத ஆசைகள் ஏனடியோ
  எல்லா ஆசையும் விட்டொழித்து
  வரதன் நினைவில் கலந்திடடி!
 
இப்படியோ இல்லை அப்படியோ
 பெண் மனம் செல்வது எப்படியோ
 திருமங்கை ஆழ்வார் சொற்படியே
 கண்டு கொண்டேன்  வரதனை அப்படியே!
 
ஆயிரம் கோயில் மாநகரம்
  அத்தி கிரி என்னும் திருநகரம்
  தேசிகன் துணை கொண்டிடுவோம்
  பெருந்தேவி  தாயார் மனம் வென்றிடுவோம்...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  

     என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

No comments:

Post a Comment