Tuesday, 9 July 2019

நன்மைகளை அளிக்கும் காளி விரத வழிபாடு.!!

காளி தேவியை முழு மனதோடு விரதம் இருந்து வழிபடுவதன் மூலம் நம் இலட்சியத்தை நிச்சயம் அடையலாம் என்று கூறியுள்ளனர் ஆன்றோர்கள்.


சக்தியின் அம்சமாக போற்றப்படும் காளி காலங்களை கட்டுப்படுத்தும் சக்தி கொண்டவள். அவளை முழு மனதோடு விரதம் இருந்து வழிபடுவதன் மூலம் நம் இலட்சியத்தை நிச்சயம் அடையலாம் என்று கூறியுள்ளனர் ஆன்றோர்கள். 

மனிதர்கள் நம் அனைவருக்குமே இந்த வாழ்வும், இந்த வாழ்வை நாம் வாழும் இந்த பூமியை உள்ளடக்கிய இப்பிரபஞ்சமும், ஒவ்வொரு தினமும் ஏன் ஒவ்வொரு நொடியும் நமக்கு பல அதிசயங்களை காட்டுகிறது. அதே நேரத்தில் பல புதிய விடயங்களை கற்று தருகின்றது. சாமானிய வாழ்க்கை வாழும் மனிதர்களுக்கு தான் இவை எல்லாம் ஆச்சர்யங்கள். தங்களின் தீவிர தவத்தால் இவை எல்லாவற்றிற்கும் விடைகளை தெரிந்து கொண்ட ரிஷிகளுக்கும், ஞானிகளுக்கு இவை அனைத்தும் அந்த இறைவனின் திருவிளையாடல்கள்.

இந்த உலகத்தில் உயிருள்ளவற்றில் அனைத்திலுமே ஆண், பெண் என்ற இரு பிரிவுகள் உண்டு. இவை இரண்டும் ஒன்றை ஒன்று சார்ந்து இருக்கிறது. அது போலவே இயற்கையின் நீதியான பிறப்பும், இறப்பும் ஒன்று மற்றொன்றை ஈடுசெய்கிறது. அதில் இந்த இறப்பை வழங்குவது காலம் ஆகும். இந்த காலம் தான் காளி என்ற பெண் தெய்வமாக வழிபடப்படுகிறது. இந்த காளி தேவியை விரதம் இருந்து வணங்குவதால் அவருக்கு எதன் மீதும் இருக்கும் பயம் விலகும், மேலும் வழிபடுபவர்களுக்கு பல வித நன்மைகளை அளிக்கும் இந்த காளி விரத வழிபாடு...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  

     என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

No comments:

Post a Comment