Monday, 10 June 2019

சந்திராஷ்டமம் என்பது என்ன?

மனதைக் கட்டுப்படுத்தி அறிவுத் திறனை நிர்ணயிக்கும் ஆற்றல் சந்திரனுக்குத்தான் உண்டு. எப்பொழுதெல்லாம் குறிப்பிட்ட ராசிக்கு 8-ல் சந்திரன் வருகின்றதோ, அப்போதெல்லாம் சந்திராஷ்டமம்.

சந்திரன் என்ற கிரகத்தை ‘மனதுகாரகன்’ என்று அழைக்கிறோம். மனதைக் கட்டுப்படுத்தி அறிவுத் திறனை நிர்ணயிக்கும் ஆற்றல் சந்திரனுக்குத்தான் உண்டு. எப்பொழுதெல்லாம் குறிப்பிட்ட ராசிக்கு 8-ல் சந்திரன் வருகின்றதோ, அப்போதெல்லாம் சந்திராஷ்டமம். 

இறைவனை வழிபட்டு இனிமை காண வேண்டிய நாள் அது. அந்த நாளில் ஆலய வழிபாட்டில் ஆர்வம் காட்டுவதுதான் நல்லது. 8-ல் சந்திரன் வரும்பொழுது ஒருவருடைய அறிவுத்திறனும், மனோபலமும் குறையும். அந்த நேரத்தில் எடுக்கும் முடிவு சரியாக இருக்காது. அதனால்தான் சந்திராஷ்டமம் வரும் நாளில் எந்த முடிவும் எடுக்க மாட்டார்கள்.

மேலும் அன்றைய தினம் பயணங்களை தள்ளிவைத்துக் கொள்வது நல்லது. யாரிடமும் வாக்குவாதம் செய்யக்கூடாது. சிறிய பிரச்சினை கூட பெரிய பிரச்சினையாக மாறும். ஒவ்வொரு ராசியிலும் குறைந்தது 2¼ நாள் சந்திரன் உலாவரும். அந்த நாட்களில் எல்லாம் அதிக விழிப்புணர்ச்சியுடன் செயல்படுவது நல்லது...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  

     என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

No comments:

Post a Comment