தண்டாயுதபாணி விக்ரகத்திற்கு நான்கு விதமான அபிஷேக பொருட்கள் மட்டும் தான் உபயோகிக்கப்படுகிறது.
அவை, நல்லெண்ணெய், பஞ்சாமிர்தம்,சந்தனம், விபூதி என்பவை. பன்னீர் மார்கழிமாதத்தில் மட்டும்உபயோகப்படுத்தப்படுகிறது. இவைகளில்சந்தனம், பன்னீர் தவிர மற்றவை எல்லாம்தண்டாயுதபாணியின் சிரசில் வைத்து,உடனே அகற்றப்படுகிறது. அதாவது முடிமுதல், அடி வரை அபிஷேகம் என்கிற முழுஅபிஷேகம் சந்தனத்துக்கும், பன்னீரும்மட்டும் தான். இதில் சிரசு விபூதி என்பதுசித்தர் உத்தரவால் பக்தர்களுக்குவழங்கபடுகிற ஒரு பிரசாதம். அதுகிடைப்பது மிக புண்ணியம்.
ஒரு நாளைக்கு ஆறு முறைதண்டாயுதபாணிக்கு அபிஷேகம்அலங்காரம் செய்யபடுகிறது. இது ஐந்துமுதல் ஏழு நிமிடத்துக்குள்முடிந்துவிடும். அபிஷேகம் முடிந்துஅலங்காரம் செய்துவிட்டால், பின்னர் அடுத்தஅபிஷேகம் வரை மாலை சாற்றுவதோ,பூக்களால் அர்ச்சனை செய்வதோகிடையாது.
இரவில் முருகனின் மார்பில் மட்டும் வட்டவடிவில் சந்தனக் காப்புசார்த்தபடுகிறது. விக்ரகத்தின்புருவங்களுக்கிடையில் ஒரு பொட்டுஅளவுக்கு சந்தனம் வைக்கப்படும்.முன்னொரு காலத்தில் சந்தன காப்பைமுகத்திலும் சார்த்திக் கொண்டிருந்தனர்.பின்னாளில் இந்த முறை மாற்றப்பட்டது.
தண்டாயுதபாணி விக்ரகம் மிகுந்த சூடாகஇருக்கும். ஆதலால் இரவு முழுவதும், அந்தவிக்கிரகத்திலிருந்து நீர் வெளிப்படும். இந்தநீரை அபிஷேக தீர்த்ததுடன் கலந்து, காலைஅபிஷேகம் நடக்கும் போது, அங்கு இருக்கும்பக்தர்களுக்கு பிரசாதமாக விநியோகம்செய்கிறார்கள்.
தண்டாயுதபாணி சிலையில், நெற்றியில்ருத்ராக்ஷம், கண், மூக்கு, வாய், தோள்கள்,கை, விரல்கள் போன்றவை மிக அற்புதமாகஉளியால் செதுக்கபட்டது போல் தெளிவாகஇருக்கும். இது போகரின் கைவண்ணம். அந்த சிலையை சுற்றி எப்போதும்ஒரு வித சுகந்த மணம் (இதுவரை ஒருபோதும் வெளியே உணர்ந்திராத) பரவிநிற்கும்.
இந்த சிலையை செய்ய போகர்எடுத்துக்கொண்ட நாட்கள் – ஒன்பதுவருடம். அம்பாள், முருகர், அகத்தியர்இவர்களுடைய உத்தரவுக்கு பின் தான்போகர் இப்படி ஒரு சக்தி வாய்ந்த சிலையைசெய்ய முயற்ச்சியே எடுத்தார். இதற்காக4000 மேற்பட்ட மூலிகைகளை பலஇடங்களிலும் சென்று தெரிவு செய்துகொண்டு வந்தார்.
81 சித்தர்கள் இந்த நவபாஷாணத்தைபோகர் சொற்படி தயார் பண்ணினர். இதுபொது நல எண்ணத்துடன் செய்யப்பட்டதால்காலமும், இயற்கையும் தன் சீற்றத்தைகுறைத்துக் கொண்டு சித்தர்களுக்கு உதவிசெய்ததாக இன்னொரு துணுக்குத் தகவல்உண்டு.
அகத்தியர் உத்தரவால், ஒரு அசுரன், இருமலைகளை காவடி போல்...
🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳
🔔 *சர்வம் சிவமயம்* 🔔
🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
என்றும் இறைப்பணியில்
*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
*ஆன்மீக குழு*
*வாட்சப் ல் இணைய*
📲 +919486053609
⏰ _ஒழுக்கம்! கட்டுப்பாடு!_ ⏰
👳🏻♂ *இறைத்தொண்டு!* 👳🏻♂
🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡
No comments:
Post a Comment