கன்னியாகுமரி மாவட்டம் இயற்கை வளத்திற்கு மட்டுமல்லாமல், ஆன்மீக தலங்களுக்கும் வரலாற்று தொடர்புகளில் முக்கியத்துவம் பெற்று விளங்குகிறது. நன்றி உணர்ச்சி மற்றும் சமத்துவத்திற்கு சான்றான கேரளபுரம் மகாதேவர் ஆலயம், அதிசய விநாயகர் ஆலயம் ஆகியவை இதற்கு உதாரணமாக திகழ்கிறது. மாவட்டத்தின் தலைநகரான நாகர்கோவிலில் இருந்து சுமார் 17 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது கேரளபுரம் மகாதேவர் ஆலயம். தக்கலையில் இருந்து திருவிதாங்கோடு செல்லும் சாலையில் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் இந்த ஆலயம் உள்ளது. திருவிதாங்கூர் சமஸ்தான மன்னரான ரவி பால மார்த்தாண்ட வர்மாவை அவரது பங்காளிகள் பப்பு தம்பி, ராமன் தம்பி ஆகியோர் கொலை செய்வதற்காக தேடிக் கொண்டிருந்தனர்.
அப்போது கேரளபுரத்தில் உள்ள தாழ்த்தப்பட்ட ஜாதியை சேர்ந்த பெண் ஒருவர் ரவிபால மார்த்தாண்ட வர்மாவுக்கு அடைக்கலம் கொடுத்துள்ளார். அடைக்கலம் கொடுத்த தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த அந்த பெண்ணிற்கு 21 வாரிசுகள் உண்டு. இந்த நிலையில், மன்னரை தேடி கேரளபுரம் வந்த பங்காளிகள் பல்வேறு இடங்களிலும் தேடி பார்த்தனர். அப்போது தாழ்த்தப்பட்ட பெண்ணின் வீட்டிற்குள் இருக்க மாட்டார் என்று எண்ணியவர்கள் அங்கு மட்டும் பார்க்காமல் சென்று விடுகிறார்கள். இந்த நிலையில் ஜாதிக் கொடுமைகள் இங்கு ஒழிய வேண்டும். அதற்காக ஒரு ஆலயம் அமைக்க வேண்டும் என்று, தாழ்த்தப்பட்ட பெண் குடும்பம் அவரிடம் கோரிக்கை வைக்கின்றனர்.
இதை ஏற்ற திருவிதாங்கூர் சமஸ்தான மன்னரான ரவி பால மார்த்தாண்ட வர்மா, கேரளபுரம் மகாதேவர் ஆலயத்தை கட்டியுள்ளார். அப்போது அவரது கனவில் வந்த உத்தரவுப்படி மன்னர் ராமேஸ்வரம் சென்றார். அங்கு கடலில் தீர்த்தம் செல்லும் போது, சந்திரகாந்த கல் கிடைக்கிறது. இதனையடுத்து சந்திரகாந்த கல்லில் விநாயகர் சிலையை செய்து கேரளபுரம் சிவன் கோயிலில் பிரதிஷ்டை செய்கிறார். இந்த விநாயகர் சிலை தமிழ் மாதமான தை முதல் ஆனி வரை, உத்ராயண காலத்தில் கருப்பாகவும், ஆடி முதல் மார்கழி வரையிலான தட்சாயண காலத்தில், வெள்ளை நிறமாகவும் காட்சியளிக்கிறது. தற்போதும் இந்த அதிசய நிகழ்வு பக்தர்களை பிரமிப்பில் ஆழ்த்தி வருகிறது...
🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳
🔔 *சர்வம் சிவமயம்* 🔔
🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
_என்றும் இறைப்பணியில்_
*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
*ஆன்மீக குழு*
*வாட்சப் ல் இணைய*
📲 +919486053609
⏰ _ஒழுக்கம்! கட்டுப்பாடு!_ ⏰
👳🏻♂ *இறைத்தொண்டு!* 👳🏻♂
🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡
No comments:
Post a Comment