Monday, 29 April 2019

அஷ்வாரூடா தேவி.!!

ராஜராஜேஸ்வரியின் குதிரைப்படைக்குத் தலைவியாக விளங்குபவள் இந்த அஷ்வாரூடா தேவி. இவள் ஆரோகணித்திருக்கும் குதிரைக்கு அபராஜிதம் என்றுபெயர். அபராஜிதம் என்றால் யாராலும் ஜெயிக்கமுடியாதது என்று பொருள். லலிதாம்பிகையைப் போற்றும் ‘சக்திமஹிம்ன’ துதியில், உன் திருக்கரங்களிலுள்ள பாசத்தை யார் மனதில் தியானம் செய்கிறார்களோ, அவர்கள் மூவுலகங்களையும் வசப்படுத்தும் ஆற்றல் பெறுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது. அந்த சக்தி மிக்க பாசத்திலிருந்து உதித்தவளே அஷ்வாரூடா தேவி. இந்த அம்பிகை தன் திருக்கரங்களில் ஸ்வர்ணத்தாலான பெரிய சாட்டையுடன் கூடிய தடியைத் தரித்தவளாகவும் பாசம் ஏந்தியும் இரு கரங்களில் ஒன்று குதிரை லகானைப் பற்றிக் கொண்டும் மற்றொன்றில் தாமரை மலரைக் கொண்டவளாகவும் காட்சியளிக்கிறாள். 


இந்த அன்னையின் அருள் இந்த பூவுலகில் உள்ள போகசுகங்கள் அனைத்தையும் சாதகனுக்குக் கிட்ட வைக்கும். ஆனால் அதிலேயே சாதகன் மூழ்கி விடாமலும் காக்கும். இந்த தேவி கணவன்மனைவி ஒற்றுமையை ஓங்கச் செய்பவள். வீட்டைக் காக்கும் தேவதையாகவும் போற்றப்படுகிறாள். குதிரை கட்டுப்பட்டு ஓடினால், சவாரி சுகமாக இருக்கும். கட்டுப்பாடு மீறி தலை தெறிக்க ஓடினால் தன் மேல் சவாரி செய்பவனைதலை கீழாகத் தள்ளிவிடும். அது போல் நம் ஐம்புலன்களும் கட்டுப்பாட்டுடன் சுகங்களை அனுபவிக்க வேண்டும். மீறினால் அதற்கான பலனை அனுபவிக்க வேண்டும் என்பதே அஷ்வாரூடா தத்துவமாகும். வாசி எனில் குதிரை. மூச்சுக் காற்று என்றும் பொருள்படும். அந்த வாசியோகம், இந்த அஷ்வாரூடா அருட்கடாட்சத்தினால் கிட்டும்...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  
        _என்றும் இறைப்பணியில்_

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

No comments:

Post a Comment