குமரி மாவட்டம் கல்குளம் தாலுகா பகுதி திருநயினார் குறிச்சியில் அமைந்துள்ளது கறைகண்டேஸ்வரர் கோயில். நாகர்கோவிலில் இருந்து சுமார் 16 கிலோ மீட்டர் தொலைவில் இந்த கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் இருந்து சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்தில் வெள்ளிமலை பாலமுருகன் கோயில் உள்ளது. கறைகண்டேஸ்வரர் கோயில் அமைந்துள்ள இடத்தை சுற்றிலும் தென்னை, விவசாய நிலங்கள் நிறைந்து காணப்படுகிறது. இந்த கோயில் பார்க்கடல் கடைந்த கதையுடன் தொடபுடையது ஆகும். பார்க்கடலில் அமுதம் கடைந்தபோது வந்த விஷத்தை சிவன் அருந்தினார். அப்போது பார்வதி தேவி சிவனின் கழுத்தில் கைவைத்து பிடித்தார். விஷம்(கறை), கழுத்து(கண்டம்) இதனால் இந்த சிவன், கறைகண்ட ஈஸ்வரன் என பெயர் பெற்றார். ஈஸ்வரன் குடிகொண்ட இடம் இது.
இந்த கோயில் அமைந்துள்ள இடத்தின் அருகே உள்ள கடியப்பட்டணத்தில் கரையில் பாறையில் குடைவரை கோயில் தோண்டும் முயற்சி பாதியில் நின்றதன் அடையாளம் இப்போதும் உள்ளது. முற்றுபெறாத இந்த குடைவரை அருகே ஒரு பாறையில் நடராஜரின் புடைப்பு சிற்பம் உள்ளது. இதன் அமைப்பின் படி கிபி 7, 8 நூற்றாண்டு என்று கூறுகிறார்கள். கறைகண்டேஸ்வரர் கோயில் பழைய அமைப்பு உடையது என்பது கட்டுமான அமைப்பின் வழியும், கிடைக்கும் கல்வெட்டுகளையும் கொண்டு அறியலாம். கோயில் முன்புள்ள முகப்பு மண்டபம், 17ம் நூற்றாண்டில் உள்ளது. இதையடுத்த திறந்த வெளி கிழக்கு பிரகாரம், பிற மூன்று பிரகாரங்களும் வெட்டவெளி பகுதியாகும். மரங்கள், செடிகளும் நிற்கின்றன. இக்கோயில் சோபன படி வழிஏறி சிறிய முன்மண்டபத்தை கடந்தால், கண்பாது முகப்பு மண்டபம், இது சோழர் காலத்து பழைய கட்டுமானம்.
இதனை அடுத்து சென்றால் சிறிய அர்த்த மண்டபம், உள்பிரகாரம், கருவறையை சுற்றிய அதிஷ்டான அமைப்பு இக்கோயிலின் பழமையை காட்டும். கருவறை, அந்தராளம் என்னும் 2 அறைகளை கொண்டது. விமானம் 16 நூற்றாண்டுகளை கொண்டது. பழைய கட்டுமான பணிகள் சீர் செய்யப்பட்டன. கருவறை கட்டுமானம் மிகப் பழையது. 12ம் நூற்றாண்டுக்கு முற்பட்டது. கல்வெட்டு சான்று உள்ளது. மூலவர் லிங்க வடிவினர். லிங்கத்தின் தட்டையான அமைப்பும், ஆவுடையும் நீர்விழும் தூம்பும் பழமையை காட்டுகிறது. இக்கோயிலில் பரிவார தெய்வங்கள், கணபதி, சாஸ்தா, பைரவர் ஆகியோர். இக்கோயிலில் 10 கல்வெட்டுகள் உள்ளன. 8 கல்வெட்டுகள் அச்சில் வந்துள்ளன. கல்வெட்டு காணப்படும் இடம், கட்டுமான வரலாறு அடிப்படையில் இக்கோயில் பழமையானது என கூறமுடியும்.
இந்த கோயிலில் மாத அஸ்டமி விழா, சித்திரை விழா, ஆடிவிழா ஆகியவை நடந்துள்ளதுன. 1432ம் ஆண்டு சித்திரை மாதம் கும்பாபிஷேகம் நடந்ததை ஒரு கல்வெட்டு கூறுகிறது. மண்டபத்தில் குழல் ஊதும் கண்ணன், அர்ஜூனன் தபசு சிற்பங்கள் உள்ளன. இந்த கோயிலில் தினமும் காலை 6 மணிக்கு நடைதிறப்பு, 6.30 மணிக்கு அபிஷேகம், 7.30 மணிக்கு தீபாராதனை, மாலை 5.30 மணிக்கு நடைதிறப்பு, இரவு 7.30 மணிக்கு தீபாராதனை, 8 மணிக்கு நடைசாத்துடன் நடக்கிறது. சித்திரை விசு, மார்கழி திருவாதிரை, சிவராத்திரி, திருக்கார்த்திகை ஆகிய விஷேச நாட்களில் திருவிழா நடக்கிறது. 2013ல் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. தற்போது ராஜகோபுரம் வேலை நடந்து வருகிறது...
🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳
🔔 *சர்வம் சிவமயம்* 🔔
🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
_என்றும் இறைப்பணியில்_
*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
*ஆன்மீக குழு*
*வாட்சப் ல் இணைய*
📲 +919486053609
⏰ _ஒழுக்கம்! கட்டுப்பாடு!_ ⏰
👳🏻♂ *இறைத்தொண்டு!* 👳🏻♂
🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡
No comments:
Post a Comment