பழநியில் இருந்து 7 கிமீ தொலைவில் உள்ளது மானூர். இங்கு பழமையான பெரியாவுடையார் என்று அழைக்கப்படும் சிவபெருமான் கோயில் உள்ளது. விநாயகர், சுப்பிரமணியர், பிரதோஷ தாண்டவர், மாணிக்கவாசகர் சிலைகள் உள்ளன. தல விருட்சமாக கடம்ப மரம் உள்ளது. சண்முக நதி தீர்த்தம் உள்ளது.
தல வரலாறு
பண்டைய காலத்தில், பழநியை விராடன் என்ற அரசன் ஆண்டு வந்தார். சிறந்த சிவபக்தனான விராடன் ஒருநாள் வேட்டையாட சென்ற போது, அவன் முன்பு மான் உருவில் சிவபெருமான் தோன்றினார். மானின் அழகில் மயங்கிய விராடன், அதனை பிடிக்க விரட்டி சென்றார். விராடனின் பிடியில் சிக்காத மான், அருகில் லிங்க வடிவிலிருந்த ஒரு புதருக்குள் மறைந்து கொண்டது. அதனை தொடர்ந்து சென்ற விராடன், அந்த புதர் மீது அம்பெய்தார். அந்த புதரிலிருந்து திடீரென ரத்தம் பெருக்கெடுத்து ஓடியது. பயந்து போன விராடன், புதரை விலக்கி உள்ளே சென்ற போது, அங்கு ஒரு சிவலிங்கம் இருப்பதை பார்த்தார். தான் எய்த அம்பால், அந்த சிவலிங்கத்தில் இருந்து ரத்தம் வழிந்தோடுவதை பார்த்து மனம் வருந்தினார்.
பின்னர் சிவபெருமானிடம், தான் அறியாமல் செய்த தவறை மன்னிக்கும்படி வேண்டினார். விராடன் முன்பு தோன்றிய சிவபெருமான், ‘‘உன்னை சோதிக்கவே நான் திருவிளையாடல் நடத்தினேன். நீ இப்பகுதியில் எனக்கு கோயில் கட்டி, பூஜை செய்ய வேண்டும் என்று கூறி மறைந்தார். இந்த நிகழ்வுக்கு பின்னர் விராடன் சிவபெருமானுக்கு அப்பகுதியில் கோயில் எழுப்பினார். விராடன், மானை துரத்தி வந்ததால் அப்பகுதி மானூர் என்று அழைக்கப்பட்டது என்பது புராணம். விராடன் எய்த அம்பால் ஏற்பட்ட காயம், தற்போதும் சிவலிங்கத்தின் மீது தழும்பாக காணப்படுவதாக பக்தர்கள் கூறுகின்றனர்.
ஆடி 18ம் பெருக்கு, ஆடி அமாவாசை, மகா சிவராத்திரி, பிரதோஷம், தமிழ் வருட பிறப்பு, ஆனி மாத ஜேஷ்டாபிஷேகம், ஐப்பசி பவுர்ணமி அன்னாபிஷேகம், கார்த்திகை சம்வத்சராபிஷேகம், சங்காபிஷேகம், தனுர் மாத பூஜை, தை அமாவாசை ஆகியவை இக்கோயிலின் விசேஷ தினங்களாகும். ஆடி 18ம் பெருக்கில் பெரியநாயகியம்மனை வழிபட்டு பெண்கள் தங்களது தாலிச்சரடை மாற்றி கொள்கின்றனர். இங்குள்ள மூலவரை வழிபட்டால் தடைபட்ட திருமணம் நடக்கும். குழந்தைப்பேறு கிட்டும். தகுதியான வேலை கிடைக்கும். பித்ரு சாபம் நீங்கும். எதிரிகள் தொல்லை நீங்கும். தன்னம்பிக்கையும், மனத்தெளிவும் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. நீண்ட ஆயுள் மற்றும் ஆரோக்கியத்திற்காக இங்கு பக்தர்களுக்கு ஆயுள் ஹோமம், மிருத்தியஞ்சய ஹோமம் நடத்தப்படுகிறது.
வேண்டுதல் நிறைவேறியவர்கள், மூலவருக்கு திருமுழுக்காட்டு செய்து, புத்தாடை அணிவித்து, சிறப்பு பூஜைகள் செய்து வழிபடுகின்றனர். கோயில் நடை தினமும் காலை 6 மணி முதல், பகல் 11 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கிறது...
🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳
🔔 *சர்வம் சிவமயம்* 🔔
🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
_என்றும் இறைப்பணியில்_
*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
*ஆன்மீக குழு*
*வாட்சப் ல் இணைய*
📲 +919486053609
⏰ _ஒழுக்கம்! கட்டுப்பாடு!_ ⏰
👳🏻♂ *இறைத்தொண்டு!* 👳🏻♂
🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡
No comments:
Post a Comment