Saturday, 27 April 2019

சித்தம் சிவமாகும்.!!


அன்றாட வாழ்க்கை பாடத்தில்
அனுபவ பயிற்சி பெற்று

ஆசையெனும் அலைமோதி

ஆறாபுண்ணாம் துன்பமதை
அறுத்தெறிய வழியின்றி
பொறியில் அகப்பட்ட
எலியென இங்குமங்கும்
ஓடியலையும் மானிடரே!
 
ஆசையை அடக்கியாள
ஆயிரம் வழி முன்னோர்கள்
சொன்னதை படித்தும் கேட்டும்
மனம் பண்படவில்லையே!
படித்ததை மறைத்தும் மறந்தும்
பல்லாயிரம் ஆசை வளர்த்து
வாழ்வெனும் சூறாவளியில்
சிக்கித் தவிக்கின்றோம்!

மனஒளி மறைக்கும் மாசகற்றி
உள்ளத்தில் உயர்வு கண்டு
எண்ணம் ஏற்றம் கொண்டு
எங்கும் நிறை பரம்பொருளை
எப்போதும் தியானம் செய்து
இவ்வாழ்வு அவன் பிச்சை
என்றெண்ணி வாழ்ந்தால்
விடியும் காலை அமைதியும்
மடியும்நேரம் சொர்க்கம் வரும்!
 
சிவசிவ என்று இதயத்தில்
பச்சை குத்திவிட்டேன்- நாதன்
பெயர் மனத்துடிப்பாக்கி
சிலையோடு கலந்து சித்தம்
சிவனென்று ஆகிவிட்டேன்!
உயிர் எரித்து  உமைநாதன்
உணர்வில் கலந்து இருப்பேன்!
உறவு அவனின்றி யாருமில்லை!
 
தேன் தமிழ் தந்தான்-அதில்
தெவிட்டாத இன்பம் வைத்தான்!
கற்பனை நாயகன்! போட்டியில் வீரன் !
பொய்மை வேடதாரிக்கு சூரன்!
எம்பெருமான் அன்பர்க்கு
அமுதாவான்! உம்பர்க்கு எட்டாத
இறைவன் தொண்டர்க்கு செவிசாய்ப்பான்!
இன்ப உலகில் எனை சேர்ப்பான்!
 
தென்றல் சுகம்தர
வரமளித்த சிவனை
அகத்தில் நிரப்பி
அன்புடன் வணங்கிடுவோம்...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  
        _என்றும் இறைப்பணியில்_

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

No comments:

Post a Comment