வீட்டில் செல்வம் இருந்தால் லஷ்மி வசிப்பதாக சொல்வதெல்லாம் உண்மையில்லை.. செல்வம் இல்லாத வீட்டில் லஷ்மி இல்லை என்பதும் உண்மையில்லை.. என்கிறார்கள் ஆன்மிக பெரியோர்கள்.. செல்வத்தை மிகுதியாக ஒருவன் பெறுவதற்கு காரணம் முற்பிறவி கர்மாக்கள் தான்.. தான தர்மங்கள் செய்யாத செய்ய விரும்பாத அதர்மத்தில் ஊறி திளைக்கும் செல்வந்தர்களைக் கண்டு பொறுமாத நல்ல உள்ளங்களே இல்லை..
செய்வது அத்தனையும் செய்யக்கூடாதவையாக இருக்கும் போது இறைவன் அவர்களை மட்டும் நிம்மதியாக வைத்திருக்கிறானே என்று வெளிப்படையாகவே புலம்புவார்கள்... ஆனால் ஆழ்ந்து பார்த்தாலே புரிந்து கொள்ளலாம். செல்வத்தை வற்றாமல் கொண்டிருப்பவர்கள் பெரும்பாலும் ஏதோ ஒரு துன்பத்தை அனுபவித்துக்கொண்டு இருப்பார்கள். செல்வம் இருக்கும் இடத்தில் லஷ்மி வசித்தால் அங்கு துன்பத்துக்கு வேலையில்லை..
தட்டு நிறைய ருசியான உணவு இல்லையென்றாலும் கிடைத்த எளிய உணவை ஆண்டவனுக்கு நன்றி கூறி திருப்தியுடன் பெற்றுக்கொள்பவரின் வீட்டில் லஷ்மி வாசம் செய்கிறாள். ருசியான உணவை கண் முன் கண்டாலும் அதை சாப்பிட முடியாமல் தீரா பிணி கொண்டிருக்கும் செல்வந்தர்களிடம் செல்வமிருந்து என்ன பயன் என்கிறார்கள் பெரியோர்கள். செல்வம் நிறைந்த பெரிய இல்லங்கள் பெரும்பாலும் இன்பம் என்னும் நிறைவைப் பெற்றிருப்பதில்லை என்பதே உண்மை.
செல்வங்களை இறைவன் அளிப்பதில்லை. அதைத் தக்க வைக்க லஷ்மி உதவுகிறாள். அவற்றோடு, அன்பு, பாசம், திருப்தி போன்ற இனிய மனநிலைகளையும் அளிக்கிறாள். இறைவனின் விருப்பப்படிதான் நம்வாழ்வு முறை அமைந்திருக்கும். நம்மால் அதை மாற்றமுடியாது. அதனால்தான் பெரும்பாலும் நல்லா சம்பாதிக்கிறேன். ஆனால் சேர்த்து வைக்க முடியல.. வீட்ல எப்பவும் ஏதாவது ஒரு பீடை மாதிரி பிணி சுத்திக்கிட்டே இருக்கு என்று சொல்வார்கள். இவர்களெல்லாம் லஷ்மி விரும்பாத செயல்களை தாங்களே அறியாமல் செய்து கொண்டிருப்பார்கள்.
குலதெய்வத்தை மறந்தவர்கள், கடமை, செய்நன்றி, நேர்மை, தர்மம், உண்மை மறந்தவர்கள், சோம்பேறிகள், அகத்தூய்மை, புறத்தூய்மை கொள்ளாதவர்கள், ஏமாற்றுபவர்கள், களவாணிகள், தற்புகழ்ச்சி கொள்பவர்கள், வெற்றுடம்பில் குளிப்பவர்கள், அந்தியில் தீபம் ஏற்றாதவர்கள், சாப்பிடுபவர்கள், எப்போதும் தீயப்பழக்கங்களில் சுழல்பவர்கள் இப்படி 70-க்கு மேற்பட்ட தகாத செயல்களை செய்பவர்களிடம் செல்வம் இருந்தாலும் லஷ்மி தேவி வசிக்கமாட்டாள்.
இவை அனைத்தும் விலக்க வேண்டிய தீய பழக்கவழக்கங்கள். எக்காலத்திலும் சாஸ்திரங்களில் சொல்லப்பட்டிருக்கும் முறையில் தர்மவழியில் நடப்பதே சிறந்தது.
புகழ், கல்வி, வலிமை,நேர்மை, அன்பு, பொறுமை, நம்பிக்கை, அறிவு, அழகு, துணிவு, ஆரோக்யம். நீண்ட ஆயுள் போன்றவை 16 பேறுகளைக் குறிக்கும் செல்வம் மட்டுமே கிடைத்தால் போதுமென்று தீயவழியில் நாடாமல் லஷ்மி கடாட்சத்தைப் பெற தர்மவழியிலும் நடப்பதே இப்பிறவியிலும் மீண்டும் பிறவாமை நிலையை அடையவும் உகந்த வழி…
🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳
🔔 *சர்வம் சிவமயம்* 🔔
🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
_என்றும் இறைப்பணியில்_
*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
*ஆன்மீக குழு*
*வாட்சப் ல் இணைய*
📲 +919486053609
⏰ _ஒழுக்கம்! கட்டுப்பாடு!_ ⏰
👳🏻♂ *இறைத்தொண்டு!* 👳🏻♂
🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡
No comments:
Post a Comment