உடல் வலிமையைப் பெருக்க விரும்புபவர்கள் அனுமனை விரதம் இருந்து வழிபட்டால் பலன் கிடைக்கும். மக்கட்பேறு, புகழ், கல்வி, செல்வம் போன்றவற்றை பெறலாம்.
அனுமனை மனத்தில் நினைப்பவர்கள் இம்மையில் சர்வ காரிய சித்தி பெற்று ஆரோக்கிய பலத்துடன் வாழ்வதுடன் மறுமையில் ராமன் அருளால் முக்தியும் அடைவர் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.
உடல் வலிமைக்கு உருவமாக அனுமன் கருதப்படுகிறார். உடல் வலிமையைப் பெருக்க விரும்புபவர்கள் அனுமனை விரதம் இருந்து வழிபட்டால் பலன் கிடைக்கும். மக்கட்பேறு, புகழ், கல்வி, செல்வம் போன்றவற்றை பெறலாம்.
நாமக்கல் ஆஞ்சநேயரை விரதம் இருந்து வழிபட்டால் மனதில் உள்ள சங்கடங்கள் தீரும். தொழில் அபிவிருத்தி அடையும். குடும்ப கஷ்டங்கள் தீரும். நோய்கள் விலகி ஆரோக்கியமான வாழ்க்கை அமையும். கல்வியில் மேன்மை ஏற்படும். நாமக்கல், கரூர், ஈரோடு, கோவை, சேலம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் அமாவாசை நாட்களில் ஆஞ்சநேயருக்கு பால், தயிர் அபிசேகம் செய்கிறார்கள்.
இதனால் தங்களது கால்நடைகளுக்கு நோய் வராமல் ஆஞ்சநேயர் காப்பதாக விவசாயிகளிடம் ஒரு நம்பிக்கை உள்ளது. முக்கிய வேண்டுதல் வைத்து நிறைவேறியவர்கள் ஆஞ்சநேயருக்கு வடைமாலை சாற்றி வழிபடுகிறார்கள். நீண்ட காலமாக திருமணம் தடைபட்டவர்கள் திருமணம் நடைபெறவும், இளம்பெண்கள் நல்ல கணவன் கிடைக்க வேண்டும் என்றும் வேண்டிக்கொள்கிறார்கள். அவர்களுக்கு திருமணம் நடந்தால் ஆஞ்சநேயருக்கு தங்க கவசம் சாற்றி வழிபடுகிறார்கள்.
ஆஞ்சநேயருக்கு கோவில் கட்டிய பிறகுதான் நாமக்கல் மாவட்டம் வளர்ச்சி பெற தொடங்கியதாக கல்வி நிறுவன அதிபர் ஒருவர் தெரிவித்தார். பிளஸ்2 - பத்தாம் வகுப்பு தேர்வுகளில் மாணவ-மாணவிகள் சாதனை படைக்கவும், முட்டை, கோழி, லாரி தொழில், ரிக் வண்டி தொழில், லாரி பாடி கட்டும் தொழில் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் நாமக்கல் சாதனை படைக்க ஆஞ்சநேயரும் உறுதுணையாக இருப்பதாக அவர் தெரிவித்தார்...
🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳
🔔 *சர்வம் சிவமயம்* 🔔
🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
என்றும் இறைப்பணியில்
*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
*ஆன்மீக குழு*
*வாட்சப் ல் இணைய*
📲 +919486053609
⏰ _ஒழுக்கம்! கட்டுப்பாடு!_ ⏰
👳🏻♂ *இறைத்தொண்டு!* 👳🏻♂
🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡
No comments:
Post a Comment