கன்னிப்பெண்களுக்கு நீண்ட நாட்களாக திருமணம் தடைப்பட்டு வந்தால் திருவக்கரை வக்கிர காளியம்மன் தலத்திற்கு வந்து பஞ்சக்கன்னி தோஷ பரிகாரம் செய்து கொண்டால் உடனடியாகத் திருமணம் கைகூடும் என்பது நம்பிக்கை.
கன்னிப்பெண்களுக்கு நீண்ட நாட்களாக திருமணம் தடைப்பட்டு வந்தால் திருவக்கரை வக்கிர காளியம்மன் தலத்திற்கு வந்து கருவறையின் உள்சுற்றில் இருக்கும் கருங்கல் சுவருக்கு மஞ்சள் பூசி, பூஜை செய்து, ‘பஞ்சக்கன்னி தோஷம்‘ செய்து கொண்டால் உடனடியாகத் திருமணம் கைகூடும் என்பது நம்பிக்கை. இதனால் ஏராளமான கன்னிப்பெண்கள் கருங்கல் சுவருக்கு மஞ்சள் பூஜை நடத்துகிறார்கள்.
வக்கிர காளியம்மன் ஆலயத்தில் அம்மன் கோவிலுக்கு அருகில் தீபலட்சுமி கோவில் உள்ளது. நீண்ட நாட்களாகத் திருமணம் ஆகாதவர்கள் ராகு காலத்தில் திருவிளக்கேற்றி இந்த அம்மனை வணங்கி மாங்கல்யம் கட்டி விட்டு வந்தால் விரைவிலேயே திருமணம் நடக்கும் என்பது ஐதீகம்.
திருமணமாகி நீண்ட நாட்கள் குழந்தை இல்லாத தம்பதியர் இந்த ஆலயத்திற்கு வந்து இங்குள்ள தல விருட்சமான வில்வ மரத்தை வலம் வந்து அம்மரத்தில் தொட்டில் கட்டிச் செல்கிறார்கள்.
இப்படிச் செய்வதன் மூலம் விரைவிலேயே அவர்களுக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்று நம்புகிறார்கள்.அவ்வாறு குழந்தைப் பெற்றவர்கள் குழந்தையுடன் ஆலயத்திற்கு வந்து இறைவனை வழிபட்டுத் தங்கள் நேர்த்திக் கடனை செலுத்தி விட்டுத் திரும்புகிறார்கள். சில பெண்கள் குழந்தை வடிவ சிற்பங்களை வாங்கி வந்து பிரதிஷ்டை செய்து வழிபட்டு செல்கிறார்கள். அந்த வகையில் நிறைய குழந்தைகளின் கல் சிலைகள் அங்கு உள்ளன...
🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳
🔔 *சர்வம் சிவமயம்* 🔔
🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
என்றும் இறைப்பணியில்
*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
*ஆன்மீக குழு*
*வாட்சப் ல் இணைய*
📲 +919486053609
⏰ _ஒழுக்கம்! கட்டுப்பாடு!_ ⏰
👳🏻♂ *இறைத்தொண்டு!* 👳🏻♂
🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡
No comments:
Post a Comment