Saturday, 29 December 2018

இருக்கன்குடி மாரியம்மன்.!!

இருக்கன்குடி மாரியம்மன் தலத்தில் இருக்கும் மாரியம்மன், சிவ அம்சமாகவே இருப்பதால், அம்மனுக்கு முன்பாக நந்தி வாகனம் இருக்கிறது. இங்கே சக்திக்குள் சிவன் அடங்கியிருப்பதாக ஐதீகம்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் இருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது இருக்கன்குடி கிராமம். இங்குதான் பல சிறப்புகளை கொண்ட இருக்கன்குடி மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. 

இத்தலத்தில் இருக்கும் மாரியம்மன், சிவ அம்சமாகவே இருப்பதால், அம்மனுக்கு முன்பாக நந்தி வாகனம் இருக்கிறது. இங்கே சக்திக்குள் சிவன் அடங்கியிருப்பதாக ஐதீகம். கோவிலுக்கு தென்புறம் வைப்பாறும், வடபுறம் அர்ச்சுனன் ஆறும் ஓடுகிறது. இரு ஆறுகளும் கங்கைக்கு ஒப்பானவை என்று சொல்லப்படுகிறது. 

இரு கங்கைகள் இணையும் பகுதியில் அம்மன் குடியிருப்பதால் ‘இருகங்கைக்குடி’ என்று அழைக்கப்பட்ட இந்த திருத்தலம் காலப்போக்கில் மருகி ‘இருக்கன்குடி’ என்றானதாக சொல்லப்படுகிறது. ‘இடுக்கன்’ எனப்படும் துன்பத்தை அகற்றும் அன்னை குடியிருக்கும் இடம் என்பதால் ‘இடுக்கன்குடி’ என்று பெயர்பெற்று, அதுவே ‘இருக்கன்குடி’ என்றானதாகவும் சொல்வார்கள். 

அம்மனுக்கு நடக்கும் அபிஷேகத்தை பார்க்க இயலாது. பவுர்ணமி நாளில் நடைபெறும் அபிஷேகத்தை மட்டும் கண்குளிர கண்டு களிக்கலாம்...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  
        என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

திருவக்கரை வக்கிரகாளிம்மன் கோவில் பற்றிய 35 சிறப்புகள்.!!

திருவக்கரை மிகப் பழமையானது. பெருமையும், புனிதமும் நிறைந்தது. திருவக்கரை வக்கிரகாளியை வழிபட்டால் எல்லா வக்கிரங்களும் தீரும்.

1. திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சேக்கிழார், அருணகிரிநாதர், ராமலிங்க சுவாமிகள் ஆகிய அருளாளர்கள் திருவக்கரை அருள்மிகு சந்திரமவுலீசுவரரை பாடி உள்ளனர்.

2. திருவக்கரை கோவிலுக்கு ஒவ்வொரு பவுர்ணமி அன்றும் புதுச்சேரியில் இருந்தும், திண்டிவனத்தில் இருந்தும் சிறப்பு பஸ்கள் செல்கின்றன.

3. ஒவ்வொரு பவுர்ணமி அன்றும் குறைந்தது ஒரு லட்சம் பக்தர்களாவது இங்கு கூடுகின்றனர்.

4. ஒவ்வொரு பவுணர்மி அன்றும் ஏராளமான பக்தர்கள் கூடி நின்று தீபம் ஏற்றி வழிபடுவர். வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள் தம்பதி சகிதமாக ஆலயத்திற்கு வந்து அம்மனை மனமுருகி வழிபட்டுச் செல்கிறார்கள்.

5. தலப்புராணத்தில் வக்கிராசூரனுடைய தாத்தாவாக குண்டலினி முனிவர் குறிப்பிடப்படுகின்றார். இதன் வெளிப்பாடாக குண்டலினி முனிவர் அவரது பேரனான வக்கிராசூரன் ஆகியோர் சிற்பங்கள் தென் பிரகாரத்தில் காணப்படுகின்றன.

6. சந்திரமவுலீஸ்வரர் ஆலயத்தில் பெருமாள் கோவிலில் பின்புறம் கிழக்கு நோக்கி சகஸ்ரலிங்கம் கோவில் அமைந்துள்ளது. ஒரே ஒரு சிறிய சிவலிங்கத்தில் ஆயிரத்தெட்டு லிங்கங்கள் அமைக்கப் பெற்றுள்ளது. இது அபூர்வ லிங்கம். 

7. திருவக்கரை வக்கிர காளியை வழிபட்டால் எல்லா வக்கிரங்களும் தீரும். மனம் பக்குவப்படும்.

8. திருவக்கரை மிகப் பழமையானது. பெருமையும், புனிதமும் நிறைந்தது.

9. வராக ஆறு என அழைக்கப்படும் சங்கராபரணி ஆற்றின் வடகரையில் கோவில் அமைந்துள்ளது.

10. திருமணமாகாதோர், பிள்ளைப்பேறு அற்றோர் இக்கோவிலில் உள்ள துர்க்கையம்மனை தரிசித்து, செவ்வாய் மற்றும் வெள்ளி கிழமைகளில் ராகுகால நேரத்தில் அர்ச்சனை செய்தால் நல்ல பலன் உண்டு.

11. நினைத்த காரியம் கைகூட வக்கிர காளியம்மனைத் தொடர்ந்து மூன்று பவுர்ணமி நாளில் தரிசிக்க வேண்டும். 

12. மன நிம்மதி வேண்டி வரும் பக்தர்களுக்கு வேண்டிய வரம் அருளும் அற்புத தெய்வமாக திருவக்கரை வக்கிர காளியம்மன் விளங்குகிறாள்.

13. இத்திருக்கோவில் விழுப்புரம் மாவட்டம் வானூர் ஒன்றியம் திருவக்கரை கிராமத்தில் அமைந்துள்ளது.

14. இத்திருத்தலம் மூலவராக உள்ள சந்திரமவுலீஸ்வரரின் பெயரில் விளங்கினாலும் வக்கிர காளியம்மனே பிரசித்தி பெற்று விளங்குகிறார்.

15. கருவறையில் பின்புறம் மேற்கு நோக்கி வரதராஜ பெருமாள் நின்ற கோலத்தில் தனித்து காட்சியளிக்கிறார்.

16. இக்கோவிலில் உள்ள வக்கிரகாளியம்மன், சந்திரமவுலீஸ் வரர், சனி பகவான் சன்னதிகள் வெவ்வெறு திசைகளை நோக்கியவாறு வக்கிரமாக உள்ளன.

17. வக்கிர கிரகங்களால் வாழ்க்கையில் பாதிக்கப்பட்டவர்கள் இத்திருத்தலத்திற்கு வந்து வக்கிர காளி, வக்கிர லிங்கம், வக்கிர சனி பகவான் முதலியோரை தரிசித்து வக்கிரமாக கட்டப்பட்டுள்ள இக்கோவிலை வலம் வந்தால் வக்கிர கிரகங்களின் தொல்லைகளும் துன்பங்களும் நீங்கப் பெற்று வாழ்க்கையில் பயன் அடைவர்.

18. அமாவாசை, பவுர்ணமி விழாக்காலங்களில் வக்கிர காளியம்மனை சந்தன காப்பு அலங்காரத்துடன் காணும் காட்சி கண் கொள்ளாக் காட்சியாகும்.

19. பவுர்ணமி தினத்தில் இரவு 12 மணிக்கும், அமாவாசையில் பகல் 12 மணிக்கும் இங்கு காட்டப்படும் ஜோதி தரிசனம் நிகழ்ச்சி மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.

20. மாதாந்திர பவுர்ணமி, அமாவாசை விழா, சித்ரா பவுர்ணமி உற்சவம் ஆடிக்கிருத்திகை, கார்த்திகை தீப உற்சவம், தை பூசம் மற்றும் காணும் பொங்கல் உற்சவம், தமிழ் வருடப்பிறப்பு, திருக்குளத்தில் தெப்பல், உற்சவம் ஆகியவை இத்தலத்து முக்கிய விழாக்கள்ஆகும்.

21. வக்கிர காளியம்மனை தொடர்ந்து தரிசனம் செய்து வந்தால் வாழ்வில் நிச்சயம் திருப்பம் ஏற்படும் என பக்தர்கள் கருதுகின்றனர்.

22. சான்றோர் நிறைந்த தொண்டை நாட்டுத் திருக்கோவில்கள் முப்பத்து இரண்டினுள் முப்பதாவது திருக்கோவில் இது. இறைவன் சந்திரசேகரர், இறைவியின் திருநாமம் வடிவாம்பிகை.

23. தஞ்சை நிசும்ப சூதனி, திருநல்லூர்க் காளி, ஆலம்பாக்கத்து அம்மன், பட்டி சுரம் துர்க்கை, சிதம்பரம் நான் முகநாயகி, தில்லை காளி, திண்டிவனம் கிடங்கில் கொற்றவை போன்ற அற்புதமான சிற்பங்களைப் போலவே, வக்கிர காளியின் திருவுருவம் எல்லா வகையிலும் தனிச்சிறப்புடன் விளங்குகிறது.

24. நடராஜர் தன் இயல்பான தாண்டவத்தினின்றும் மாறுபட்டு இங்கே, ‘வக்கிர தாண்டவம்’ ஆடுவது குறிப்பிடத்தக்கது.

25. சோழன் கோச்செங்கணான் இங்குள்ள பெருமாள் கோவிலைக் கட்டினான் என்பதிலிருந்து சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இத்திருத்தலம் பெருமையுடன் விளங்கியது என்பதை அறியலாம்.

26. முதலாம் ஆதித்த சோழன் தொடங்கிப் பல சோழ மன்னர்கள் அந்த கோவிலை புதுப்பித்தும் விரிவு படுத்தியும் கட்டி வந்திருக்கிறார்கள்.

27. மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய முப்பெருமைகளையும் பெற்று பாடல் பெற்ற தலமாகவும் இது விளங்குகிறது.

28. சைவ சமயக் குரவர்கள் தொண்டை மண்டலத்தில் முப்பது திருப்பதிகளைப் பாடி இருக்கிறார்கள். இதில் முப்பதாவது தலமாக விளங்குவது திருவக்கரை தலம்.

29. திருமுறையில் சம்பந்தர் இந்த தலம் பற்றிப் பாடிய தேவாரப் பதிகங்கள் உள்ளன.

30. புதுச்சேரியிலிருந்து பதிமூன்றாவது மைலில் புதுச்சேரி மயிலம் சாலையில் இந்த தலம் இருக்கிறது. பிரதான சாலையிலிருந்து இந்த தலம் சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவில் வடக்கில் உள்ளது.

31. இந்த தலத்தின் பெருமையைக் குறிக்கும் பல கதைகள் வழங்குகின்றன.

32. மேற்குப்பாகத்தில் அமைய வேண்டிய சத்தியோ- ஜாதம் என்ற முகம் இங்கே அமையவில்லை. கிருதயுகத்திலிருந்து திரேதாயுகம், துவாபரயுகம் என்று ஒவ்வொரு முகமாக உண்டாயிற்று என்றும் கலியுக முடிவில் மேற்குப் பக்கத்திலும் முகம் ஏற்படும் என்றும் கூறுகிறார்கள்.

33. சாஸ்திரப்படி முக லிங்கங்களின் முகங்கள் வெவ்வேறு முறையில் அமைந்திருக்க வேண்டும். ஆனால் இங்கே லிங்கத்தின் மூன்று முகங்களும் வேறுபாடில்லாமல் அமைந்திருப்பது புதுமை.

34. எலிபெண்டாக் குகைக் கோவில், பிரமன் ஸ்தாபித்த காளஹஸ்திக் குடைவரையிலுள்ள முகலிங்கம் ஆகிய இடங்களில் ஒவ்வொரு முகத்தை நோக்கியும் ஜன்னலோ, திறந்த வெளியோ இருக்கிறது. இங்கே அப்படி அமையவில்லை.

35. அலைபுனலில் தவழ் வளை சில வைத்தருமணிதிரு வக்கரை யுறைவோனே அடியவர் இச்சையில் எவை எவை புற்றன அவை தரு வித்தருள் பெருமானே என்று அருணகிரிநாதர் இந்த தலத்திலுள்ள முருகப்பெருமானை வேண்டுகிறார்...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  
        என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

திருமால் திருவருள் கிட்ட ஸ்லோகம்.!!

இத்துதியை சனிக்கிழமைகளில் அல்லது தினமும் பாராயணம் செய்து வந்தால் தீவினைகள் அகன்று திருமால் திருவருள் கிட்டும்.

செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே
நெடியானே வேங்கடவா நின்கோயிலின் வாசல்
அடியாரும் வானவரும் அரம்பையரும் கிடந்தியங்கும்

படியாய்க் கிடந்துன் பவளவாய் காண்பேனே.

(பெரியாழ்வார் திருமொழி)

பொதுப்பொருள்: மிகப்பெரிய தீவினைகளையும் அழித்திடும் வல்லமை மிக்க பெருமாளே! நெடிதுயர்ந்த திருவுருகொண்ட வேங்கடவா! நின் பக்தர்களும் தேவர்களும் ரம்பை, ஊர்வசி, மேனகை, திலோத்தமை போன்ற நாட்டிய நங்கையரும் ஏங்கி எதிர்நோக்கும் உன் தரிசனம் காணும்படியாக இருந்து உன் பவளவாயை எந்நேரமும் தரிசிக்க அருள்புரிவாய்...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  
        என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

அரச மரத்தை வலம் வர இது தான் சரியான நேரம்.!!

கடவுள் தூணிலும் இருப்பார்.. துரும்பிலும் இருப்பார் என்பதற்கேற்ப  ராஜவிருட்சம் என்று அழைக்கப்படும் அரசமரத்தின் அடியில் மும்மூர்த்திகள் இணைந்து வாசம் செய்து அருள்பாலிக்கிறார்கள் என்பது ஐதிகம். கீதையில் கண்ணன் மரங்களில் நான் அரசமரமாக இருக்கிறேன் என்று சொல்லும்போதே  அரசமரத்தின் அருமையை நாம் உணர்ந்துகொள்ளலாம். அரசமரத்துக்கு அஸ்வத்தம் என்ற பெயரும் உண்டு. அதாவது அஸ்வத்தா என்றால் வழிபடுபவர்களின்பாவத்தை அடுத்த நாளே போக்குவது என்று பொருள். இதற்கு அச்சுவத்தம், திருமரம், போதி, கவலை, பேதி, கணவம், சராசனம், மிப்பலம்  போன்ற பல பெயர்களிலும் அழைக்கப்படுகிறது. இந்துக்களின் வழிப்பாட்டில் அரசமரம் முக்கியப் பங்கு வகிக்கிறது.

அரசமரத்தின் அடிப்பாகத்தில் படைக்கும் தொழிலைக் கொண்ட பிரம்மா வசிக்கிறார். மரத்தின் நடுப்பகுதியில் காக்கும் கடவுளான விஷ்ணுவும், மேல்பகுதியில் சிவனும் இருப்பதாக புராணம் சொல்கிறது. அரசமரத்தைச் சுற்றி 30 மீட்டருக்குள் கோயில் இருந்தால் அங்கு வழிபடும்போது நிச்சயம் அமைதி கிடைக்கும். புத்தருக்கு ஞானம் கிடைத்தது போதிமரத்தில் தான் என்று சொல்கிறோம். அந்த போதிமரமே அரசமரம் தான். அரசமரத்தைச் சுற்றி வேண்டியதைப் பெறலாம் என்கிறார்கள் பக்தர்கள்.மரத்தை சுற்றுவதற்கு ஏற்ப பலன்கள் உண்டு. அதே போல் வழிபடும் கிழமைகளுக்கேற்ப பலன்களையும் பெறலாம்.

அரசமரத்தைச் சுற்றும் போது இந்த மந்திரத்தைச் சொல்லி சுற்ற வேண்டும்.

மூலதோ பிரம்மரூபாய மத்யதோ விஷ்ணுரூபிணே

அக்ரதஸ் சிவரூபாய வ்ருக்ஷ ராஜாயதே நம:
ஆயுர்பலம் யசோவர்ச்ச: ப்ரஜா: பசு வஸுநிச

ப்ரம்ம ப்ரக்ஞாம் சமேதாம் சத்வம் நோதேஹி வனஸ்பதே.
ஞாயிற்றுக்கிழமைகளில் அரசமரம் சுற்றும்போது சூரியபகவானை வணங்கிய பிறகு அரசமரத்தை 15 முறை மந்திரம் சொல்லி வலம் வந்தால் குடும்பத்தில் உள்ள இன்னல்கள் நீங்கும். திங்கள் கிழமைகளில் சிவனை நினைத்தும், செவ்வாய்க்கிழமைகளில் அம்பிகையை நினைத்தும், புதன் கிழமைகளில்  முப்பத்து முக்கோடி தேவர்களையும், வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்தியையும் , வெள்ளிக்கிழமைகளில் லஷ்மியையும், சனிக்கிழமைகளில் விஷ்ணுவையும் நினைத்து சுற்றவேண்டும். வறுமை விலகி குலம் தழைக்கவும், செல்வம் பெருக்கவும் அரச மரம் வழிபாடு அவசியம். அரச மரத்தை சுற்றிவிட்டு அடிவயிற்றைத் தொட்டு பார்த்தாள் என்ற பழமொழி உண்டு. பெண்களின் கருப்பைக் கோளாறுகளை நீக்கும் தன்மை அரசமரசத்திலிருந்து வெளிவரும் காற்றுக்கு உண்டு. குலம் தழைக்கச் செய்யும். பிள்ளைப் பேற்றை உண்டாக்கும். இது விஞ்ஞான பூர்வமாகவும் நிரூபிக்கப்பட்டுள்ளது.
அரச மரத்தின் அடியில் அமர்ந்தாலே மனம் அமைதியடையும். அரச மரத்தின் கீழ் அமர்ந்து ஸ்லோகங்களைச் சொல்லும் போது அதற்குரிய பலன் நிச்சயம் கிடைக்கும். தர்மசாஸ்திரத்தின் படி அரசமரத்தை காலை 10.40 மணிக்குள் வழிபட வேண்டும். சனிக்கிழமையன்று மட்டும் காலை 8.30 மணிக்குள் அரசமரத்தை வலம் வரவேண்டும். உங்கள் வேண்டுதலின் படி 15, 54,108 என்ற எண்ணிக்கையில் சுற்றலாம். சனிக்கிழமையன்று மட்டுமே அரசமரத்தை தொட்டு வணங்கலாம். மற்ற நாட்களில் அரசமரத்தைக் கையால் தொடக்கூடாது. இனி காலை நேரங்களில் அரசமரத்தை எங்கு கண்டாலும் பத்து நிமிடம் ஒதுக்கி சுற்றி வாருங்கள். பலனை உணர்வீர்கள்...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  
        என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

சனிக்கிழமை பெருமாளுக்கு உகந்த நாளாக மாறிய கதை.!!

மண்ணையும் விண்ணையும் அளந்த பெருமாளுக்கு உகந்த நாளாக சனிக்கிழமை விளங்குகிறது. புரட்டாசி சனிக்கிழமை மட்டுமல்ல எல்லா சனிக்கிழமைகளும் எம்பெருமானுக்கு உகந்த நாள்தான். வேண்டிய வரம் பெற வேங்கடவனை நினைத்து விரதம் இருக்க நல்ல நாளாக சனிக்கிழமையைச் சொல்லலாம். ஏழரைச் சனியால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் அதிலிருந்து மீட்சி பெற ஒரே வழி எம்பெருமானை சரணடைவதுதான். சனிபகவானை ஆயுள்காரகன் என்று சொல்கிறோம். இவர் சூரியன் மற்றும் சாயாதேவியின் புதல்வன். புரட்டாசி மாதம் ரோகினி நட்சத்திரத்தில் சனீஸ்வரன் பிறந்தார்.  நவக்கிரகங்களின் சனிபகவான் ஆதிக்கத்தைப் பொறுத்தே ஒருவனது ஆயுட்காலம் அமைகிறது. சனியின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்தும் பெருமாளே  சனிக்கு அதிபதியாக இருப்பவர்.

ஒருமுறை சனிபகவான் கலியுகத்துக்கு முதன் முதலாக வருவதற்கு ஆயுத்தமானார்.அப்போது எதிர்பட்ட நாரதரைச் சந்தித்தார். அப்போது தான் கலியுகத்துக்கு செல்வதாக கூற .. அப்படியானால் சரி ஆனால் நீங்கள் பூலோகத்தில் எங்கு வேண்டுமானாலும் சென்று யாரை வேண்டுமானாலும் துன்புறுத்தலாம். ஆனால் தவறிகூட திருமலை பக்கம் சென்றுவிடாதீர்கள்.ஏன் உங்கள் பார்வை கூட அங்கு படாமல் இருப்பதே நல்லது என்று மறைமுகமாக   வழக்கத்துக்கே உரிய தம் கலக பாணியில் தெரிவித்தார் நாரதர். என்ன செய்ய வேண்டும் என்பதை விட என்ன செய்யக்கூடாது என்று சொல்லும்போது தான் கவனம் அவற்றில் போகும். குழந்தைகளும் இதைத்தான் விரும்புவார்கள். சனிபகவான் மட்டும் விதிவிலக்கா...

நான் சனிபகவான்.. நான் பிடித்தால் யாராக இருந்தாலும் எனக்கு கட்டுப்பட வேண்டியதுதான் என்று, திருமலையில் பாதம் பதித்த அடுத்த நொடியில்      தூக்கியெறியப்பட்டார். மற்றவரை துன்பப் படுத்தி இன்பம் காணும் உனக்கு திருமலையில் இருப்பது யார் என்று தெரிந்தும் உன் திரு விளையாடலை என்னிடம் காட்டுகிறாயா? என்று சினம் கொண்ட வேங்கடவனைக் கண்டு நடுங்கினார் சனிபகவான். எல்லோரையும் துன்பப்படுத்தி மகிழும் என்னை வழிநடத்தும் பரம்பொருளே என்னை மன்னித்தருளும் என்று அவர் பாதம் பிடித்து மன்னிப்பு கேட்டார். 
என்னை நினைத்து வாழும் பக்தர்களுக்கு நீ எந்த துன்பமும் கொடுக்க கூடாது என்ற நிபந்தனையுடன் மன்னிப்பு வழங்கினார். அப்போது சனி பகவானின் விருப்பத்துக்கிணங்க அவர் பிறந்த தினமான சனிக்கிழமையன்று பெருமாளை வழிபட்டால் பக்தர்களின் விருப்பங்களை நிறைவேற்றவேண்டும் என்ற கோரிக்கையையும் ஏற்றுக்கொண்டார் வேங்கடவன். அன்று முதல் சனிக்கிழமை பெருமாளுக்கு உகந்த நாளாக ஆயிற்று.
பக்தர்களின் வேண்டுதல் செல்வம், ஆயுள், ஆரோக்யம் இவற்றை முன்னிறுத்தி தான். இவை அனைத்தும் குறைவின்றி கிடைக்க ஒவ்வொரு சனிக்கிழமையும்  சங்கடத்திலிருந்து காக்கும் வேங்கடவனை வழிபடுவோம். சனியின் உக்கிர பார்வையைத் தணித்து நம்மைக் காக்கத்தான் வேங்கடவன் இருக்கிறாரே...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  
        என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

வீடு-மனையில் உள்ள சிக்கல்களுக்கு வாஸ்து காட்டும் வழிமுறைகள்.!!

வீடு-மனை ஆகியவற்றை அடைவதில் உள்ள சிக்கல்களுக்கு வாஸ்து சாஸ்திர நிபுணர்கள் இரண்டு விதமான வழிகளை காட்டி இருக்கின்றனர். அவை என்னவென்று பார்க்கலாம்.

‘எலி வளை ஆனாலும் தனி வளை..’ என்ற பழமொழிக்கேற்ப சொந்த வீட்டில் குடியிருப்பது பெருமையும், மனநிறைவையும் அளிக்கக்கூடிய விஷயம். ஆனால், இன்றைய காலகட்டம் பல்வேறு பொருளாதார நெருக்கடிகள் கொண்டதாக அமைந்துள்ள நிலையில் சொந்த வீடு என்ற லட்சியத்தை அடைய பல்வேறு சிக்கல்கள் ஏற்படுவது பலருக்கும் அனுபவமாக உள்ளது.

இரண்டு வித முறைகள்

வீடு-மனை ஆகியவற்றை அடைவதில் உள்ள சிக்கல்களுக்கு வாஸ்து சாஸ்திர நிபுணர்கள் இரண்டு விதமான வழிகளை காட்டி இருக்கின்றனர். முதலாவது வழி பூமி வசிய முறை என்றும், இரண்டாவது வழி கிரக வசிய முறை என்றும் குறிப்பிடப்பட்டுள்ள நம்பிக்கை சார்ந்த விஷயங்கள் பற்றிய குறிப்புகளை இங்கே காணலாம்.

முதலாவது வழிமுறை

இந்த வழிமுறையானது ஜோதிட கிரக சிந்தாமணி என்ற பெரிய வருசாதி நூலில் உள்ளதாக சொல்லப்படுகிறது. அதாவது,

அஸ்தம், பரணி, திருவோணம் மற்றும் விசாகம் ஆகிய நான்கு நட்சத்திரங்கள் அமைந்த நாளில், நட்சத்திரத்தின் நான்காம் பாதம் உள்ள நேரத்தை கணக்கிட்டு கொள்ளவேண்டும்.

அன்று செவ்வாய் கிழமையாக இருப்பது அவசியம்.

மேற்கண்ட இரண்டு நிலைகளும் உள்ள நாளில் வரக்கூடிய கடக லக்னம் அமைந்த நேரத்தில் சுத்தமான மண்ணை சிறிய அளவில் பிரசாதமாக சாப்பிட வேண்டும். அதன் மூலம் பூமி, மனை மற்றும் வீடு ஆகிய பாக்கியம் கிடைக்கும் என்று பாடல் வடிவத்தில் கூறப்பட்டுள்ளது.

மேற்கண்ட முறையில் மண்ணை எடுக்க சுத்தமான ஒரு இடத்தில் மேல் பரப்பில் உள்ள மண்ணை ஒதுக்கி விட்டு சுமார் மூன்றடி ஆழத்தில் இருக்கும் சுத்தமான மண்ணை எடுத்து முன்னதாக வைத்துகொள்வது அவசியம். மேற்கண்ட நேரத்தில் இஷ்ட தெய்வம், வாஸ்து மற்றும் செவ்வாய் ஆகியவற்றுக்கு பூஜைகள் செய்து பழங்களில் வைக்கப்பட்ட சிறிதளவு மண்ணை பிரசாதமாக உண்பதன் மூலம் சொந்த வீடு அல்லது மனை வாங்கக்கூடிய யோகம் வாய்க்கும் என்று சொல்லப்பட்டுள்ளது.

இரண்டாவது வழிமுறை

வீடு அல்லது மனை வாங்க தேவையான வசதிகள் அமைந்த பலருக்கும் எதிர்பாராத தடைகள் காரணமாக அவற்றை வாங்குவது தாமதமாகி கொண்டு இருக்கக்கூடும். அது போன்ற சூழலில் உள்ளவர்களுக்கு வாஸ்து கிரக வசிய முறை என்ற வழி வாஸ்து வல்லுனர்களால் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அவை பற்றிய தகவல்களை இங்கே காணலாம்.

ஒரு ஆண்டுக்கு 8 முறை வாஸ்து கண் விழிக்கும் நாளாக கணக்கிடப்பட்டுள்ளது. அந்த நாட்களில் கிரக வசிய முறையை கடைப்பிடித்து பயன்பெறலாம்.

வாஸ்து விழித்தெழும் நாட்கள்

சித்திரை - 10-ம் நாள் காலை 8-55 முதல் 9-30 மணி வரை.

வைகாசி - 21-ம் நாள் காலை 10-06 முதல் 10-42 மணி வரை.

ஆடி - 11-ம் நாள் காலை 7-38 முதல் 8-14 மணி வரை.

ஆவணி - 6-ம் நாள் பகல் 3-18 முதல் 3-54 மணி வரை.

ஐப்பசி - 11-ம் நாள் காலை 7-42 முதல் 8-18 மணி வரை.

கார்த்திகை - 8-ம் நாள் காலை 11-09 முதல் 11-45 மணி வரை.

தை - 12-ம் நாள் காலை 10-50 முதல் 11-26 மணி வரை.

மாசி - 22-ம் நாள் காலை 10-12 முதல் 10-48 மணி வரை.

மேற்கண்ட எட்டு நாள்களில் எந்த நாளிலும் கிரக வசிய பூஜையை செய்து கொள்ளலாம் பூஜைகள் வழக்கமான முறைப்படி மங்களன் என்ற செவ்வாய் மற்றும் வாஸ்து புருஷன் ஆகியவர்களுக்கு செய்வது முறை. அதன் மூலம் மனை வாங்குவதில் உள்ள தடைகள், மனை வாங்கிய பிறகு வீடு கட்டுவதில் உள்ள தடைகள் ஆகியவை அகலும் என்பது நம்பிக்கையாக இருந்து வருகிறது...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  
        என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡