Friday, 23 November 2018

ஐந்து தலை பாம்பினை ஈசன் ஆபரணமாக கொண்ட ரகசியம்.!!

சம்ஹார மூர்தியான சிவன் தனது தலை, கழுத்து, கைகளில் பாம்பை ஆபரணமாக அணிந்துள்ளார். உடலெங்கும் சாம்பலைப் பூசிக்கொண்டு, இடுகாட்டில் உலவுபவராக வணங்கப்படுகிறார். உலகையே காக்கும்  ஈசன் பாம்புகளையும், சாம்பலையும்,புலித்தோலையும் ஏன் அணிந்துக் கொள்ள வேண்டும்?. நமது இந்து மத தர்மத்தில் ஆன்மீகத்தின் வாயிலாக உலகியல் தர்மங்கள் போதிக்கப்படுகிறது.  
மனிதனை இயக்கும் ஐம்புலன்களாவன கண், காது, மூக்கு, வாய், மெய். நமது கட்டுப்பாட்டில் இல்லாமல் இவை தீயவழிகளில் ஈடுபடும் போது, கொடிய நஞ்சினை கக்கும் நாகம் போல மாறி மனிதனை துன்பத்திற்கு ஆளாக்கி விடும். அப்படியில்லாமல் ஐம்புலன்களை அடக்கி நல்வழியில் அவைகளை செலுத்தி விட்டால் வாழ்விற்கு அழகூட்டும் ஆபரணமாக அவை மாறி விடும். இதை நமக்கு உணர்த்தவே சிவன் ஐந்து தலை நாகப்பாம்பை ஆபரணமாக அணிந்துள்ளார். பாம்பின் ஐந்து தலைகள் நமது  ஐம்புலனைக் குறிக்கும். இதை உணர்த்தும் விதமாக தங்கம், வெள்ளி, பித்தளையால் ஆன நாகத்தை லிங்கத்தின் மீது ஆபரணமாக சாத்துவது வழக்கம்.  நாக லிங்கத்தை தரிசித்தால் நமது மனதில் எழும் தீய ஆசைகள் நீங்கி தெளிவு உண்டாகி அமைதி பெறும்...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  
        என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

No comments:

Post a Comment