குழந்தை பருவத்தில் கிருஷ்ண பரமாத்மா படு சூட்டிகையான குழந்தை. அவரைக் கட்டுப்படுத்துவது என்பது யசோதாவின் முக்கிய சவால்களில் ஒன்று. தினமும் உறியில் இருக்கும் வெண்ணெய்யை அன்னைக்கு தெரியாமல் திருடித் தின்பதே கிருஷ்ணருடைய வேலை. இதைத் தடுக்க யசோதா ஒரு காரியம் செய்தாள்.
வெண்ணெய் இருக்கும் உறியில் சில மணிகளைக் கட்டிவைத்தாள். வெண்ணெய்யை எடுக்கக் கிருஷ்ணன் முயன்றால், மணிகள் அசைந்து ஒலித்து காட்டிக்கொடுத்து விடும் என்பது அவளது திட்டம்.
அதன்படி அன்றைக்கும் வழக்கம்போல் கிருஷ்ணனை உரலில் கட்டிவைத்திருந்தாள் யசோதா. சமையலறைக்குள் அவள் மும்முரமாக இருந்தபோது, கிருஷ்ணனுக்கு ஒரு திட்டம் தோன்றியது. சுற்றும்முற்றும் பார்த்தான். உரலிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டு உறியின் அருகே சென்றான்.
சின்னஞ் சிறிய இடுப்பில் கைகளை ஒய்யாரமாக வைத்துக் கொண்டு, மணிகளைப் பார்த்துக் கேட்டான், "மணிகளே.. நான் யார் தெரியுமா? ".
மணிகளும் பவ்யத்துடன் கூறின, "தாங்கள் பரமாத்மா ஆயிற்றே."
உடனே மணிகளுக்குக் கட்டளையிட்டார் கிருஷ்ணன், "மணிகளே... நான் வெண்ணெய் சாப்பிடப்போகிறேன். யாரும் ஒலிக்கக் கூடாது!”
"அப்படியே ஆகட்டும்" என்றன மணிகள்.
உரலை மெதுவாக உருட்டிக்கொண்டு வந்து, அதன் மீது ஏறினான். உறியில் கைவைத்து அதிலிருக்கும் பானையில் தன் சின்ன விரல்களை விட்டு துழாவினான். வெண்ணெய்யை கைநிறைய எடுத்து வாயில் வைக்கப்போனான், அட டா... அப்போது பார்த்து மணிகள் கணகணவென்று ஒலித்தன. சப்தம் கேட்டு ஓடிவந்த யசோதா கிருஷ்ணனை கையும் களவுமாகப் பிடித்து அவன் முதுகில் மத்தளம் வாசித்தாள்.
யசோதா மீண்டும் சமையல்கட்டுக்குப் போன பின், மணிகளைப் பார்த்துக் கிருஷ்ணன் கோபமாக கேட்டான், "மணிகளே, ஒலிக்க மாட்டோம் என்று வாக்குறுதி தந்துவிட்டு ஒலித்தீர்களே, சத்தியத்தை மீறிய பாவத்துக்கு என்ன தண்டனை தெரியுமா?" என்று கேட்டார்.
அதற்கு அவைகள், "தெரியும் ஸ்வாமி! ஆனால், பகவானுக்கு நைவேத்யம் ஆகும்போது ஒலிப்பதுதானே எங்கள் சுதர்மம்? அதற்காகத்தானே பிறப்பெடுத்தோம்? சுதர்மத்தை மீறுவது பெரும் பாவமல்லவா! அதற்கான தண்டனையும் அதிகமல்லவா" என்று பதில் கூறின மணிகள். பரமாத்மா இந்த பதிலால் மனம் மகிழ்ந்து அவைகளை ஆசீர்வதித்தார்...
🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳
🔔 *சர்வம் சிவமயம்* 🔔
🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
என்றும் இறைப்பணியில்
*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
*ஆன்மீக குழு*
*வாட்சப் ல் இணைய*
📲 +919486053609
⏰ _ஒழுக்கம்! கட்டுப்பாடு!_ ⏰
👳🏻♂ *இறைத்தொண்டு!* 👳🏻♂
🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡
No comments:
Post a Comment