Thursday, 22 November 2018

நாகதோஷங்கள் போக்கும் நாகர்கோவில் நாகராஜா திருக்கோயில்.!!

நாகத்தோஷங்களை  அடியோடு நீக்கும் திருத்தலம் நாகராஜா  திருக்கோயில் . தமிழகத்தின் தென் திசையில் கன்னியா குமரி மாவட்டத்தின் தலைநகர் நாகர்கோயிலில் அமைந்துள்ளது இந்த திருத்தலம். இங்கு வீற்றிருக்கும் நாகராஜரின் பெயரிலேயே, இந்த ஊர் ‘நாகர்கோவில்’ என்று அழைக்கப்படுகிறது. நாகர் வழிபாட்டிற்கு என்று தனியாக அமைந்தக் கோவில் இதுதான் என்பது தனிச்சிறப்பு . 
நாகராஜ ஆலயம் உருவானது எப்படி?
விவசாய நிலங்கள் நிறைந்த பகுதியான இங்கு  அரிவாளை வைத்து நெற்கதிர்களை அறுத்துக் கொண்டிருந்த ஒரு பெண், நெற்கதிரை அறுக்கும்போது, திடீரென ரத்தம் வந்தது. இதைக் கண்டு பயந்து போன அந்தப்பெண் அருகில் இருந்தவர்களிடம் சொல்ல, அவர்கள் ரத்தம் வந்த இடத்தைப் பார்த்தபோது, அங்கே பாறையொன்றில் ஐந்து தலையுடன் கூடிய நாகர் உருவம் இருந்தது. இப்படித்தான் பக்தர்களின் கண்களுக்கு சுயம்புவாய் முதலில் காட்சியளித்தார் நாகராஜர்.சிலை வடிவில் காணப்பட்ட  நாகராஜரின் மேற்பகுதியில் இருந்து ரத்தம் வந்து கொண்டிருந்தது. பின்பு அந்த நாகர் சிலைக்கு பாலாபிஷேகம் செய்து அந்தப் பகுதி மக்கள் அனைவரும் வழிபட்டனர். இதையடுத்து ரத்தம் வருவது நின்றது. இதனைத் தொடர்ந்து  பகுதி மக்கள், தினமும் நாகர்சிலைக்கு  பால் அபிஷேகம் செய்து வழிபடத் தொடங்கினர். அன்று முதல் இன்றுவரை தனது பக்தர்களின் துயரங்களை தீர்த்து வருகிறார் நாகராஜர்.
சரும நோயால் பாதிக்கப்பட்ட களக்காடு மன்னன் மார்த்தாண்ட வர்மா, நாகராஜா கோவிலுக்கு வந்தார். அவர் நாகராஜருக்கு பால் அபிஷேகம் செய்து வழிபட, மன்னரை வாட்டி வதைத்துக் கொண்டிருந்த சரும்  நோய் நீங்கியது . இதனால் பெரும் நிம்மதியும் மகிழ்ச்சியும் அடைந்த  மன்னன், நாகராஜா சிலை இருந்த வயற்காட்டில், நாகராஜாவுக்கு  ஆலயம்  ஒன்றைக் கட்டினார். ஆனால் கருவறை மட்டும் நாகங்கள் வசிப்பதற்கேற்ப, ஓலைக் கூரையாலேயே வேயப்பட்டது.

இந்தத் திருத்தலத்தில் தர்னேந்திரன் என்ற ஆண் நாகமும், பத்மாவதி என்ற பெண் நாகமும் துவார பாலகர்களாக உள்ளனர். மூலவர் நாகராஜாவின் எதிரில் உள்ள தூணில் நாகக்கன்னி சிற்பம் இருக்கிறது. கருவறையில் நாகராஜா இருக்கும் இடம் மணல் திட்டாக உள்ளது. மேலும் வயல் இருந்த இடம் என்பதால் எப்போதும் இவ்விடத்தில் நீர் ஊறிக்கொண்டே இருக்கிறது.இந்த நீருடன் சேர்ந்த மணலையே, கோவில் பிரசாதமாக பக்தர்களுக்கு வழங்கு கிறார்கள். இந்த மணலானது ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் வரை கருப்பு நிறத்திலும், தை மாதம் முதல் ஆனி மாதம் வரை வெள்ளை நிறத்திலும் மாறுவது ஆச்சார்யம் தருகிறது.
 நாகராஜர் சன்னிதிக்கு வலது புறம் காசி விஸ்வநாதர், அனந்த கிருஷ்ணன் மற்றும் கன்னி மூல கணபதி சன்னிதிகள் அமைந்துள்ளன. தினமும் நாகராஜருக்கு பூஜைகள் நடைபெற்று முடிந்த பின்னர்தான், இவர்களுக்கு பூஜைகள் நடைபெறும். அர்த்த ஜாம பூஜையில் மட்டும் அனந்த கிருஷ்ணருக்கு முதல் பூஜை நடைபெறுகிறது.
இந்த திருத்தல விருட்சம்  'ஓடவள்ளி' என்ற கொடி  விருட்சமாகும். ஆலயத்தின் வெளிப்பிரகாரத்தில் நாக உருவம் கொண்ட நாகலிங்க மரம் உள்ளது. ஞாயிற்றுக்கிழமைகளில் ராகு காலத்தில் இவ்வாலயத்தின் முன்புள்ள அரச மரங்களின் கீழ் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள நாகர் சிலைகளுக்கு பக்தர்கள் தங்கள் கையாலேயே மஞ்சள் பொடி தூவி, பால் அபிஷேகம் செய்யலாம்.

இந்த தலத்தில உள்ள துர்க்கை சிலை, நாக தீர்த்தத்தில் கிடைத்தது. எனவே அன்னையை ‘தீர்த்த துர்க்கை’ என்று அழைக்கிறார்கள். துர்க்கை அம்மன் கிடைத்த நாக தீர்த்தத்தில் செவ்வாய்க்கிழமை அன்று ராகு காலத்தில் நீராடி பால் அபிஷேகம் செய்து, நெய் தீபம் மற்றும் எலுமிச்சைப் பழ தீபம் ஏற்றி வழிபட்டால் நாக தோஷங்கள் உடனே அகலும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
நாகர்கோயில் சென்று நாகராஜாவை தரிசிப்போம். நாக தோஷங்கள் நீங்கி நலமுடன் வாழ்வோம்...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  
        என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

No comments:

Post a Comment