புரட்டாசி சனியன்று, இந்த திருமால் போற்றியை வீட்டிலும், பெருமாள் கோயில்களிலும் குழுவாகப் படிக்கலாம். ஒருவர் சொல்ல, மற்றவர்கள் பின் தொடரலாமே!
ஓம் அன்பின் சுடரே போற்றி
ஓம் அளவிலா அறமே போற்றி
ஓம் அருட்கடலே போற்றி
ஓம் அரவ சயனா போற்றி
ஓம் அக்காரக்கனியே போற்றி
ஓம் அரவிந்தலோசனா போற்றி
ஓம் அச்சுத மூர்த்தியே போற்றி
ஓம் அற்புத லீலா போற்றி
ஓம் அநாத ரட்சகா போற்றி
ஓம் அலர்மேல் மார்பா போற்றி
ஓம் அலங்கார பிரியனே போற்றி
ஓம் ஆதிநாராயணா போற்றி
ஓம் ஆயர் கொழுந்தே போற்றி
ஓம் ஆழ்வார் உயிரே போற்றி
ஓம் ஆதிமூலமே போற்றி
ஓம் ஆபத்து சகாயா போற்றி
ஓம் ஆலிலை பாலகா போற்றி
ஓம் ஆனையை காத்தாய் போற்றி
ஓம் ஆனந்த மூர்த்தியே போற்றி
ஓம் இன்னல் தீர்ப்பாய் போற்றி
ஓம் இமையவர் தலைவா போற்றி
ஓம் ஈகை நெஞ்சினாய் போற்றி
ஓம் உலகமுண்ட வாயா போற்றி
ஓம் உம்பர் கோமானே போற்றி
ஓம் எங்கும் நிறைந்தாய் போற்றி
ஓம் எட்டெழுத்தானே போற்றி
ஓம் எழில்மிகு தேவா போற்றி
ஓம் ஏழுமலையானே போற்றி
ஓம் ஏழைப் பங்காளா போற்றி
ஓம் ஒளிமணி வண்ணா போற்றி
ஓம் ஓங்காரப் பொருளே போற்றி
ஓம் கலியுக வரதனே போற்றி
ஓம் கண்கண்ட தேவா போற்றி
ஓம் கருட வாகனனே போற்றி
ஓம் கல்யாண மூர்த்தி போற்றி
ஓம் கல்மாரி காத்தாய் போற்றி
ஓம் கருட கொடியானே போற்றி
ஓம் கமலக் கண்ணனே போற்றி
ஓம் கஸ்தூரி திலகனே போற்றி
ஓம் கலியுக தெய்வமே போற்றி
ஓம் கார்முகில் வண்ணா போற்றி
ஓம் குன்றம் தாங்கினாய் போற்றி
ஓம் கோவிந்த மூர்த்தி போற்றி
ஓம் கோபியர் நேசா போற்றி
ஓம் கோகுல பாலா போற்றி
ஓம் கோதண்டபாணி போற்றி
ஓம் சர்வலோக சரண்யா போற்றி
ஓம் சபரிக்கு அருளினாய் போற்றி
ஓம் சகஸ்ரநாம பிரியனே போற்றி
ஓம் சாந்த சொரூபியே போற்றி
ஓம் சங்கடம் தீர்ப்பாய் போற்றி
ஓம் சங்கரப்பிரியனே போற்றி
ஓம் சங்கு சக்கர தாரியே போற்றி
ஓம் சப்தகிரி வாசனே போற்றி
ஓம் சிந்தனைக்கினியாய் போற்றி
ஓம் சீனிவாசச பெருமாளே போற்றி
ஓம் சீதேவி நாயகனே போற்றி
ஓம் சுயம்பிரகாசா போற்றி
ஓம் சுந்தர தோளினாய் போற்றி
ஓம் சுந்தரராஜ மூர்த்தி போற்றி
ஓம் ஜெகந்நாதப் பெருமாளே போற்றி
ஓம் தசரதன் வாழ்வே போற்றி
ஓம் தசாவதாரம் எடுத்தாய் போற்றி
ஓம் திருமகள் கேள்வா போற்றி
ஓம் திருவேங்கடவனே போற்றி
ஓம் திருமலை உறைவாய் போற்றி
ஓம் திருத்துழாய் பிரியனே போற்றி
ஓம் துருவனைக் காத்தாய் போற்றி
ஓம் துன்பம் தீர்ப்பவனே போற்றி
ஓம் தேவகி பாலகனே போற்றி
ஓம் தோள்மாலை சூடினாய் போற்றி
ஓம் நந்தகோபாலனே போற்றி
ஓம் நஞ்சரவில் துயின்றாய் போற்றி
ஓம் நான்முகன் பிதாவே போற்றி
ஓம் பக்தவத்சலனே போற்றி
ஓம் பக்தர் சகாயனே போற்றி
ஓம் பரந்தாமனே போற்றி
ஓம் பத்மநாபனே போற்றி
ஓம் பரம தயாளனே போற்றி
ஓம் பத்மாவதி துணைவா போற்றி
ஓம் பக்தர் தம் திலகமே போற்றி
ஓம் பாற்கடல் உறைவாய் போற்றி
ஓம் பார்த்தசாரதியே போற்றி
ஓம் பார் புகழ் தேவா போற்றி
ஓம் பாஞ்சஜன்யம் ஏந்தினாய் போற்றி
ஓம் பாண்டவர் தூதா போற்றி
ஓம் பாஞ்சாலியை காத்தாய் போற்றி
ஓம் பாலாஜி வெங்கடேசா போற்றி
ஓம் பிரகலாதப் பிரியனே போற்றி
ஓம் புருஷோத்தமனே போற்றி
ஓம் புண்ணிய மூர்த்தியே போற்றி
ஓம் புரட்டாசி நாயகா போற்றி
ஓம் மகாவிஷ்ணுவே போற்றி
ஓம் மண்மலர் ஏற்றாய் போற்றி
ஓம் மலைமேல் நிற்பாய் போற்றி
ஓம் மலையப்ப சுவாமி போற்றி
ஓம் மாயக் கண்ணனே போற்றி
ஓம் யசோதை கண்மணியே போற்றி
ஓம் ராமானுஜர் வாழ்வே போற்றி
ஓம் வகுளமாலிகா செல்வனே போற்றி
ஓம் விஜய ராகவனே போற்றி
ஓம் வில்லொடித்த வீரா போற்றி
ஓம் வீபிஷணன் வாழ்வே போற்றி
ஓம் வெண்ணையுண்ட வாயா போற்றி
ஓம் வேங்கடத்துறைவா போற்றி
ஓம் வைகுண்டவாசனே போற்றி
ஓம் வையம் காப்பவனே போற்றி
ஓம் நமோ நாராயணனே போற்றி போற்றி...
🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳
🔔 *சர்வம் சிவமயம்* 🔔
🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
என்றும் இறைப்பணியில்
*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
*ஆன்மீக குழு*
*வாட்சப் ல் இணைய*
📲 +919486053609
⏰ _ஒழுக்கம்! கட்டுப்பாடு!_ ⏰
👳🏻♂ *இறைத்தொண்டு!* 👳🏻♂
🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡
No comments:
Post a Comment