Wednesday, 17 October 2018

துர்காஷ்டமி : துர்க்கையை வழிபட மறக்காதீங்க.!!

புரட்டாசி மாதத்தில் வரும் அஷ்டமி திதியை துர்காஷ்டமியாக வழிபடுகிறோம். பகவான் கிருஷ்ணர் அவதரித்த தினத்தில்தான், கோகுலத்தில் துர்க்கையின் அவதாரமும் நிகழ்ந்தாக சொல்லப்படுகிறது. எனவே கிருஷ்ணர் அவதரித்த அஷ்டமி திதி, துர்க்கை வழிபாட்டுக்கு உகந்த திதியாக அமைந்துள்ளது.
அம்பாளுக்கு உகந்த நவராத்தி விழாவின் எட்டாவது நாள் அஷ்டமி திதி, மகா அஷ்டமி அல்லது துர்காஷ்டமி என்று அழைக்கப்படுகிறது. மறுநாள் வரும் நவதி திதி மகா நவமியாகப் போற்றப்படுகிறது.
துர்காஷ்டமியில் நமக்கு அனைத்துச் சக்தியும் கிடைப்பதாக ஐதீகம். இந்த நாளில், ராகுகால வேளையில் ஆலயங்களில் உள்ள துர்கை அம்மனுக்கு விசேஷ அபிஷேக ஆராதனைகள் நடைபெறும்.

நவராத்திரியின் எட்டாவது நாளில் துர்காஷ்டமி வருவதால், வீட்டிலும் துர்கை அம்மனை வழிபடலாம். குறிப்பாக, வீட்டில் கொலு வைத்திருப்பவர்கள், துர்காஷ்டமி நாளில் சிறுமிகளை வீட்டுக்கு வரவழைத்து, அவர்களை அம்பிகையின் அம்சமாகவே பாவித்து வழிபட்டு, அவர்களுக்கு மங்கலப் பொருள்களை வழங்கினால், துர்கையின் அருளால் வீட்டில் சகல ஐஸ்வர்யங்களும் நிலைத்திருக்கும் என்பது ஐதீகம்...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  
        என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

No comments:

Post a Comment