நவக்கிரகங்களில் மிகவும் முக்கியமானவர் குருபகவான். ஒருவருடைய ஜாதகத்தில் குரு வலிமையாக இருந்தால், அந்த நபர் வாழ்வில் எதிலும் வெற்றி காண்பவராக இருப்பார்.
குருபகவான் முழுமையான சுபக்கிரகம் என்று அழைக்கப்படுவர். எந்த விஷயத்தைப் பார்ப்பதாக இருந்தாலும் குருபகவானுடைய அனுக்கிரகம் அந்த ஜாதகருக்கு இருக்கிறதா…உதாரணமாக ஒருவருக்கு திருமணம் ஆக வேண்டும் என்றால் குருபலன் வந்துவிட்டதா, வியாழ நோக்கம் வந்துவிட்டதா, குரு பார்வை இருக்கிறதா என்பதைத் தான் முதலில் பார்ப்போம்.
அப்பேர்பட்ட குருவினால் ஏற்பட்ட தோஷம் விலக வேண்டுமென்றால் கீழ்க்கண்ட இந்த ஸ்லோகத்தை தினமும் சொல்லி வரலாம். வியாழக்கிழமைகளில் குருவுக்கு உகந்த முல்லை பூவையும், கொண்டைக் கடலையும் நிவேதனமாகப் படைத்து இந்த ஸ்லோகத்தைச் சொன்னால் மேலும் சிறப்பு.
தேவா நாஞ்ச ரிஷீணாஞ்ச
குரும் காஞ்சந ஸந்நிபம் !!
பக்தி பூதம் த்ரிலோ கேஸம்
தம் நமாமி ப்ருணஸ்பதிம் !!
இதைச் சொல்ல சிரமம் ஏற்படுமாயின்...
மறைமிகு கலை நூல்வல்லோன் வானவர்க்கரசன் மந்திரி
நறை சொறி கற்பக பொன்னாட்டினுக் கதிபனாகி
நிறை தனஞ் சிவிகை மண்ணீடு போகத்தை நல்கு
மிறையன் குருவியாழமிகு மலர்ப்பா தம் போற்றி!
என்றும் சொல்லாம். 9 அல்லது 108 தடவை சொல்ல குரு பகவான் மகிழ்ந்து தன் தோஷத்தை விலக்கிக் கொள்ளுவார்...
🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳
🔔 *சர்வம் சிவமயம்* 🔔
🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
என்றும் இறைப்பணியில்
*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
*ஆன்மீக குழு*
*வாட்சப் ல் இணைய*
📲 +919486053609
⏰ _ஒழுக்கம்! கட்டுப்பாடு!_ ⏰
👳🏻♂ *இறைத்தொண்டு!* 👳🏻♂
🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡
No comments:
Post a Comment