Thursday, 20 September 2018

விநாயகர் வழிபாடும் சுக்கிர தசைப் பலன்களும்.!!

ஒருவரது ஜாதகத்தில் சுக்கிர தசை இருக்குமானால் அவருக்கு என்னென்ன பலன்கள் கிட்டுமென ஜோதிடத்தில் கூறப்பட்டுள்ளது. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஒருவரது ஜாதகத்தில் சுக்கிர தசை இருக்குமானால் அவருக்கு என்னென்ன பலன்கள் கிட்டுமென ஜோதிடத்தில் கூறப்பட்டுள்ளது. சுக்கிர தசையைச் செல்வம் பெருகும் காலமாகச் சாதாரண மக்கள் கூட தெரிந்து வைத்துள்ளனர்.

சுக்கிரனை ‘உயர் வெள்ளி’ என்றும் அழைக்கிறார்கள். இவரது ஆட்சி ஒருவரது வாழ்வில் நடக்கும் காலத்தில் வண்டி, வாகனங்கள் வாங்கும் சூழல் ஏற்படும். திருமணமாகாத பெண்களுக்குத் திருமண பிராப்தி ஏற்படும். நல்ல குழந்தைச் செல்வம் கிடைக்கும்.

சுவைமிக்க உணவைத்தருவார். உயர்வகை ஆபரணங்களை அணியச் செய்வார். விலை உயர்ந்த வஸ்திரங்களை வாங்கித் தருவார். சுபவலிமை பொருந்திய சுக்கிர தசையில் நிலம் வாங்குவார்கள். வீடு கட்டுவார்கள். மென்மையான படுக்கையில் படுக்கும் வாய்ப்புக் கிடைக்கும். மலர் மாலைகள் சங்கீதத்தில் ஈடுபாடு தோன்றும்.

ஆனால் சுக்கிர தசையில் ஒரு எச்சரிக்கையை மனதில் கொள்ள வேண்டும். சுக்கிரதசை எல்லாப் போகங்களையும் கொடுக்கும். இதற்கு ஜாதகத்தில் சுக்கிரன் சுபனாக அமைந்திருக்க வேண்டும். இந்த சமயத்தில் ஜாதகனுக்கு சபல புத்தி ஏற்படும். இதைப் பயன்படுத்தி தவறான வழியில் செல்வதோ, தவறான முறையில் பொருள் சேர்க்கவோ செய்தால் சுக்கிர தசை முடிந்ததும் அவர் பெரும் நோயைக் கொடுத்து விடுவார். எனவே சுக்கிர தசையின் போது மனக்கட்டுப்பாடு மிகமிக அவசியம்...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  
        என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

No comments:

Post a Comment