Friday, 17 August 2018

அம்பிகை அருளால் அகிலம் வசப்படும்.!!

ஒளிமுகம் நட்சத்திர மண்டலம்
ஒளிரும் முழுநிலவு கண்கள்

கடல் ஒடுங்கும் பொற்பாதம்
கனல் விழுங்கிய செவ்வாய்
நிலமாளும் வளைக்கரம்-மன
எல்லைக்காவல் அம்பிகையே, தாயே!

நிறைமதி கலைவாணர் சூழ
அரியணையில் புன்னகை பூப்பவளே!
குறைமதி குழந்தை என்னை
குறைநீக்கி மடிசேர்த்த குணவதியே!
குவளை கண்கள் அருள்நோக்கால்
குங்கும அறிவு மணம்வீசும்!

தாயின் அருகமர்ந்து அவள்
வீரத்திருவழகை ரசிப்பது தியானம்!
மந்திரம் ஆயிரம் திருநாமம்
மனதில் உருகுதல் தவம்!
அசையா சுடரென நானிருக்க
ஆடுவதும், ஆடவைப்பதும்
அம்பிகையே!

ஆடிமாதம் மனநோய் அச்சமகற்ற
வேப்பிலை ஏந்திவரும் அருள்மாரி!
அம்பிகையருளால் அகிலம் வசப்படும்
அறிவுப்பொருள் விளங்கி மெய்ப்படும்!
அன்பு பெருந்தெய்வம் துணையால்
நாளும் நலமே விளையும்!

இளமை, செல்வம், செல்வாக்கை
இன்புறும் காதலி அவளல்ல!
மாசற்ற மாறாதமனம் கண்டு
மகிழ்ந்து செல்வம் தந்து
பெருமைசூழ் வாழ்வை மாலைசூடி
பெருமிதம் கொள்வாள் அம்பிகை!

மாஞ்சோலை பறவையாகி
மாட்டுத்தொழுவ மதில் கறவையாகி
மகத்தான மனித பிறப்பெடுத்தோம்!
மீனாட்சி பாதம் சரண்புகுவோம்!
வாழ்க்கை சகதியில் உழல்வதுவீண்!
சுழலும் பிறவி தொலைப்போம்!

செடி, கொடிகளில் பசுமைதீட்டி
உயிர்தந்து விதிவகுத்து- மண்ணில்
அடிபரந்து வேராகி நிற்கிறாள்!
இயற்கை மூச்சாகி, உணவாகி
நிலமாகி, நீராகி, நெருப்பாகி
அழியாத வடிவெடுத்து சிரிக்கிறாள்!

பிறந்தோம், தவழ்ந்தோம், நடந்தோம்
உண்டோம் சுகம் கண்டோம்!
நரை தரித்து நடை தளர்ந்தோம்!
நோயால் படுக்கை கிடந்தோம்!
அருள்விழி அம்பிகையை வணங்கி
ஒளிவாழ்வு, இளமை பெறுவோம்...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  
        என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

No comments:

Post a Comment