Saturday, 4 August 2018

வாராகி வழிபாடு செய்வதற்கு உகந்த காலம்

வாராகி வழிபாட்டை எந்த நேரத்தில் முதல்நாள் தொடங்குகிறோமோ அதே நேரத்தில் தான் எப்போதும் வழிபாடுகளை செய்ய வேண்டும். இது குறித்து விரிவாக பார்க்கலாம்.

1. பொதுவாக அம்பிகை என்றாலே மாலைநேர வழிபாடுதான் மகத்தானது. நாம் நினைக்கும் காரியங்கள் தடையின்றி நடக்க மாலை நேர வழிபாடுகளை தான் அதிகம் செய்ய வேண்டும். 

மாலை நேர வழிபாடுகளில் முதன் மையான இடம் உக்ர தெய்வங்களுக்கு உண்டு. வாராகியே அதன் நாயகியாக விளங்குகிறாள். இவளை மாலை நேரத்தில் தொழும்போது மட்டும் இவள் சக்தியும் பெருகும் நம் வலிமையும் பெருகும். 

2. வாராகி வழிபாட்டை பொருத்த மட்டில், 

காலை வழிபாட்டிற்கு :- 25 சதவீதம் நற்பலன்கள்
மாலை வழிபாட்டிற்கு :- 70 சதவீதம் நற்பலன்கள்
இரவு நேர வழிபாட்டிற்கு :- 100 சதவீதம் நற்பலன்கள் 
நிச்சயம் உண்டு, 

3. வாராகி வழிபாடு செய்யும் நேர அளவு 8 மணி முதல் 9 மணிக்குள் அமைய வேண்டும். இந்த நேரத்தில் அவளை அர்ச்சித்து பணியும் போது கிடைக்கும் ஆற்றல் அளவற்றது. 

மேலும் வாராகி வழிபாட்டை எந்த நேரத்தில் முதல்நாள் தொடங்குகிறோமோ அதே நேரத்தில் தான் எப்போதும் வழிபாடுகளை செய்ய வேண்டும். நம் சுய வேலைக்காக நேரத்தை அடிக்கடி மாற்றினால் கேட்டபலன் கிடைப்பது கடினம். ஆக காலம் அறிந்து அவளை வழிபட்டு நற்பயன்பெறுங்கள்...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  
        என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

No comments:

Post a Comment