Wednesday, 22 August 2018

முனீஸ்வரர் திருக்கோவில், திருவள்ளூர் ( குன்னத்தூர் )

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி வட்டம், நாபலூர் ஊராட்சிக்கு உட்பட்டு குன்னத்தூர் கிராமம் உள்ளது. இக்கிராமத்தில் பொதுமக்களின் முயற்சியால், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் ஸ்ரீ அருள்மிகு முனீஸ்வரர் சுவாமி பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளது. இந்த சுவாமிக்கு குழந்தைகளின் முதல் முடி காணிக்கை செலுத்திய பின்னர், மற்ற கோயில்களில் முடி காணிக்கை செலுத்துவர். இந்த முனீஸ்வரரை பயபக்தியுடன் வேண்டினால், அவர்களுக்கு கேட்கும் வரங்களைத் தரும் கடவுளாக காட்சியளிக்கிறார். இங்கு முனீஸ்வரர் சிலைக்கு எதிர்ப்புறம் குதிரை வாகனம் மற்றும் பலி பீடம் உள்ளது. வலது பக்கவாட்டில் விநாயகரும், இடது பக்கத்தில் கருமாரி அம்மனும் உள்ளனர். 

தங்கள் குழந்தையின் முதல் முடி காணிக்கை செலுத்தும் பக்தர்கள், தங்களது குடும்பத்தினர் மற்றும் உற்றார் உறவினர்களுடன் மேளதாளங்கள் முழங்க கோயிலுக்கு வந்து, முனீஸ்வரருக்கு கறுப்பு ஆட்டுக்கிடா வெட்டி, பொங்கல் வைத்து, குழந்தைகளுக்கு காது குத்தும் விழா நடத்தி, தங்களது நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர். எனவே, இக்கோயிலில் தங்களது பிணி, கவலை உள்ளிட்ட அனைத்து பிரச்னைகளையும் முனீஸ்வர சுவாமி தீர்க்க வேண்டி பக்தர்கள் வழிபடுகின்றனர். பக்தர்களின் குறைகளை முனீஸ்வர சுவாமி காது கொடுத்து, அப்பிரச்னைகளை தீர்த்து வைக்கிறார். இதனால் அவருக்கு பல்வேறு வகைகளில் நேர்த்திக்கடன்களை செலுத்தி வருகிறோம் என பக்தர்கள் கூறுகின்றனர்...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  
        என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

No comments:

Post a Comment