Friday, 31 August 2018

நான்கு திருக்கரங்களுடன் அருளும் கிருஷ்ணர் எங்குள்ளார் தெரியுமா?

அதிகாலை ஐந்து மணிக்குத் திருப்பள்ளி எழுச்சி நடத்தி மன்னன் கண்ணனுக்கு முகம் கழுவி தங்கப் பல்குச்சியால் பல் தேய்த்து விட்டுச் சந்தனமும் குங்குமமும் இட்டுப் பழங்களை "முதல் போக்' ஆக அளிக்கிறார்கள். ஏழரை மணிக்கு லட்டு, ஜிலேபி என்று தின்பண்டங்களை உண்ணுவதிலிருந்து கண்ணனது போக்யங்கள் தொடங்கி விடுகின்றன. எட்டு மணிக்கு நெய், சர்க்கரை, பால், தயிர் என்று கொண்டு வந்து அவன் முன் வைத்து விடுகிறார்கள். பகல் பன்னிரண்டு மணிக்கு ராஜபோஜனம் தருகிறார்கள். ஐந்து மணி வரை ஓய்வு எடுக்க விடுகிறார்கள்.

இரவில் கடைசி உணவாக பாதாம் பருப்பு வகைகளும் உலர்ந்த பழங்களும் லேகியமும் வைக்கிறார்கள். தினந்தோறும் பதினேழு முறை போகி நிவேதனம் அவனுக்குப் படைக்கப்படுகிறது. ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை அவனுக்கு உடையலங்காரத்தை மாற்றிவிடுகிறார்கள்.

பத்துவகை பூஜைகள்: உடுப்பியில் ஸ்ரீ கிருஷ்ணருக்கு நிர்மால்ய விஸர் ஜன பூஜை, உஷத்கால பூஜை, அக்ஷய்ப் பாத்திர பூஜை, பஞ்சாமிர்த பூஜை, உத்வார்த்தன பூஜை, கலச பூஜை, தீர்த்த பூஜை, அலங்கார பூஜை, அவசர பூஜை, மஹா பூஜை ஆகிய பூஜைகள் உண்டு.

நான்கு வகை வழிபாடுகள்: உடுப்பி கிருஷ்ணனுக்கு வழிபாட்டு முறைகள் நான்கு வகையில் பிரிக்கப்படுகிறது. பாலே முகூர்த்தம், அக்னி முகூர்த்தம், கட்டிகே முகூர்த்தம், பக்தா முகூர்த்தம் எனும் நான்கு வேலைகளில் கிருஷ்ணனுக்கு வழிபாடுகள் நடைபெறுகின்றன.

முக்கிய உத்ஸவங்கள்: உடுப்பி கிருஷ்ணருக்கு செய்யும் முக்கியமான உத்ஸவங்கள் ரத உத்ஸவம், சுவர்ண பல்லக்கு உத்ஸவம், கருட உத்ஸவம், ரஜத ரஜோத்ஸவம், பிரம்மோத்ஸவம் ஆகியவை முக்கிய உத்ஸவங்களாகும்.

நான்கு திருக்கரங்களுடன் கிருஷ்ணர்: அகமதாபாத்திலிருந்து ராஜ்காட் - ஜாம்நகர் வழியாக துவாரகை திருத்தலத்தை அடையலாம். துவாரகையில் உள்ள கண்ணன் கோயிலை "ஜகத்மந்திர்' என்று அழைக்கிறார்கள். இங்கு மூலஸ்தானத்தில் மேற்கு திசை நோக்கி அருள்புரியும் கிருஷ்ணர் நான்கு திருக்கரங்களுடன் வெள்ளி மஞ்சத்தில் நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார்.

ஆலிலை கிருஷ்ணர்: பீகாரில் உள்ள ஸ்ரீ கதாதரர் கோயிலின் முன் உள்ள பெரிய ஆலமரத்தின் கீழ் பகவான் கிருஷ்ணன் குழந்தை வடிவில் ஆலிலையில் படுத்துக்கொண்டு வலது கால் கட்டை விரலை வாயில் வைத்துக்கொண்டிருக்கும் சிறிய திருவுருவத்தைத் தரிசிக்கலாம். இவரை தொட்டு வணங்குவது இங்கு வழக்கத்தில் உள்ளது...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  
        என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

பாவம் போக்கும் கோவிந்தா

கோவிந்தா... கோவிந்தா... என சொல்லச்சொல்ல பசுதானம் செய்த புண்ணியம் கிடைத்துக் கொண்டே இருக்குமாம். நம்முடைய அனைத்து பாவங்களும் நீங்கும்.

பெருமாளைக் கண்டதுமே மனமும், வாயும் “கோவிந்தா” என்றுதான் சொல்லும். ‘கோவிந்தா என்று சொன்னால் போனது வராது என்று அர்த்தமாகும். இதனால்தான் கடன் வாங்கியவன், திருப்பித்தராமல் ஏமாற்றி விட்டால், பணம் கோவிந்தா தானா? என கேட்கும் வழக்கம் வந்தது. 

கோவிந்தா எனும் சொல்லுக்கு வேறொரு பொருளும் உண்டு. இதை கோ இந்தா என்றும் பிரிக்கலாம். அப்போது கோ என்றால் பசு இந்தா என்றால் வாங்கிக்கொள் என்று பொருள் வரும். கோவிந்தா... கோவிந்தா... என சொல்லச்சொல்ல பசுதானம் செய்த புண்ணியம் கிடைத்துக் கொண்டே இருக்குமாம்.

எப்போதும் கோவிந்த நாமம் சொல்லிக்கொண்டே இருங்கள். பசுக்களுடன் விளையாடி மகிழ்ந்த கிருஷ்ணனின் அருள் நமக்கு பூரணமாகக் கிடைக்கும்.
கோவிந்தா என்ற சொல்லுக்கு ‘பசுக்களின் தலைவன், கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வருபவன்’, ‘பூமியை தாங்குபவன்’ என்றும் பொருளாகும். எனவே தான் பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என்கிறார்கள். வழிபாடு செய்யும் போது, கோவிந்தா என்று அழைத்து வழிபட்டால் கூடுதல் பலன்களைப் பெறலாம்.

“பார்வதி பதியே” என்று ஒரு பக்தர் சொன்னால், மற்ற பக்தர்கள் அவளது துணைவரான சிவபெருமானை குறிக்கும் வகையில் ‘ஹர ஹர மகாதேவ’ என்று சொல்வது வழக்கம். ஆனால், கோவிந்தநாமத்தைச் சொல்லும்போது முதலில் சொல்பவர் ‘கோவிந்தா’ என்று சொன்னால் கேட்பவர்களும் “கோவிந்தா கோவிந்தா” என்று தான் சொல்வார்கள். 

திருப்பதியில் ஏழுமலையானை தரிசனம் செய்ய செல்பவர்கள் நீண்ட வரிசையில் நிற்கும்போது இந்த கோவிந்தா நாம கோஷத்தை கேட்டிருக்கலாம். ‘கோவிந்தா’ என்றால் ‘எல்லாக் காலத்திலும்’, ‘எல்லா இடத்திலும்’, ‘எங்கும்’ என்பது பொருள். காணும் இடத்தில் எல்லாம் அந்த கோவிந்தனே இருக்கிறான் என்று அர்த்தமாகும். இந்த கோவிந்தா பெயர் எப்போது உருவானது தெரியுமா? பசுக்கூட்டத்தோடு பாலகிருஷ்ணனாக திரிந்த வேளையில் ‘கோவிந்தன்’ என்ற பெயர் உருவானது...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  
        என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

வருகிறது கோகுலாஷ்டமி: கிருஷ்ணரை வரவேற்கத் தயாராகுங்கள்!

ஒவ்வொரு பண்டிகைக்கும் ஒரு புராணக்கதை இருப்பது போல கோகுலாஷ்டமிக்கும் ஒரு கதை உண்டு. மஹாவிஷ்ணு, கிருஷ்ணாவதாரம் எடுத்த தினமே கிருஷ்ண ஜெயந்தி (கோகுலாஷ்டமி) பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது. 

கிருஷ்ணர் அஷ்டமி திதியன்று நள்ளிரவில் பிறந்ததால், அன்று கோகுலாஷ்டமி கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் அஷ்டமி திதி, ரோகிணி நட்சத்திரத்தன்று கிருஷ்ண ஜெயந்தி பண்டிகை இந்தியா முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது. ரோகிணி நட்சத்திரமும், அஷ்டமியும் சேர்ந்து வந்தால் அது இரட்டிப்பு சந்தோஷத்தை தரும். 

கிருஷ்ண அவதாரம் இந்துக்களுக்கு மிகவும் முக்கியமானதாகும். ஏனெனில், இந்துக்களின் புனித நூலான, பகவத் கீதையை நமக்கு அருளியவர் கிருஷ்ணபரமாத்மா. பகவத் கீதையில் அர்ச்சுனனுக்கு அருளிய உபதேசங்களுடன் இந்திய தத்துவ சாரங்களின் அடிப்படைகளை ஒன்று கலந்து கொடுக்கப்பட்டுள்ள நூல், பகவத் கீதையாகும். 

கோகுலாஷ்டமி நாளன்று கிருஷ்ணருக்குப் பிடித்த உணவுப் பொருட்களைச் செய்தும், கிருஷ்ணரின் சிலைகளை நன்றாக அலங்கரித்தும் கிருஷ்ணரைத் தங்கள் இல்லங்களுக்கு வரவழைக்கும் விதமாக, வீட்டு வாசலிலிருந்து பூஜை அறை வரை அரிசி மாவினால் குழந்தை கிருஷ்ணரின் கால் பாதங்களை வரைவார்கள். வீட்டில் சிறு குழந்தைகள் இருந்தால் அரிசி மாவில் அவர்களின் பாதங்களை பதிப்பார்கள். இவ்வாறு வரைவதால் குழந்தை கிருஷ்ணரே வீட்டிற்குள் வருவதாகப் பொருள்.

கோகுலாஷ்டமி தினத்தன்று கிருஷ்ணர் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். கிருஷ்ணர் நள்ளிரவில் பிறந்ததாக கூறப்படுவதால் நள்ளிரவு 12 மணிக்கு விசேஷ பூஜைகள் நடைபெறும். அன்றைய தினம் கிருஷ்ணனுக்கு மலர் மாலைகள் சூட்டி வழிபடும் போது துளசி மாலையும் அணிவிப்பது சிறந்தது.

அறிவாற்றல், நற்புத்தி, நேர்மை, சமயோசித புத்தி ஆகியவற்றின் மொத்த வடிவமான பகவானை வழிபட்டு அவர் காட்டிய கீதையைப் பின்பற்றுவதே இப்பண்டிகையின் தத்துவம். கோகுலாஷ்டமி தினத்தன்று குழந்தைக் கிருஷ்ணனை நாமும் நம் வீடுகளில் வரவேற்று, வாழ்வில் வளம் பெறுவோம்...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  
        என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

சகாதேவர் இயற்றிய கிருஷ்ண மந்திரம்

கிருஷ்ண பகவானை துதித்து இவர் எழுதிய மந்திரத்தை ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவை நினைத்து உச்சரித்தால் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் பரிபூரண அருள் கிடைக்கும் என்பது உறுதி.

பாண்டவர்களில் ஒருவர் சகாதேவர். சிறந்த ஞானம் உள்ளவர். பலவித ஜோதிட சாஸ்திரம் எழுதி ஜோதிடக்கலையில் வல்லவராக திகழ்ந்தார். கிருஷ்ண பகவானை துதித்து இவர் எழுதிய மந்திரத்தை ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவை நினைத்து உச்சரித்தால் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் பரிபூரண அருள் கிடைக்கும் என்பது உறுதி. அந்த சக்திவாய்ந்த மந்திரம் இதோ...

ஓம் நமோ விஸ்வரூபாய
விஸ்ய சித்யந்த ஹேதவே
விஹ்வேஸ்வராய விஸாவாய
கோவிந்தாய நமோ நமஹ நமோ
விக்ஞான ரூபாய
பரமானந்த ரூபிணே
கிருஷ்ணாய கோபிநாதாய
கோவிந்தாய நமோ நமஹ...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  
        என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

மூதாட்டிக்கு அருளிய குருவாயூரப்பன்

முன்னொரு சமயம் குருவாயூரப்பனின் தீவிர பக்தையாக ஒரு மூதாட்டி இருந்தாள். அந்த மூதாட்டிக்கு குவாயூரப்பன் உதவிய வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.

முன்னொரு சமயம் குருவாயூரப்பனின் தீவிர பக்தையாக ஒரு மூதாட்டி இருந்தாள். அவள் அனுதினமும் காலையும், மாலையும் குருவாயூரப்பன் சன்னிதிக்கு வந்து, கண்ணனை மனநிறைவோடு வழிபட்டுச் செல்வதை வழக்கமாக கொண்டிருந்தாள்.

ஒரு நாள் அந்த மூதாட்டி, இரவு நேர தரிசனம் முடிந்து வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தாள். அப்போது திடீரென்று பெருங்காற்றுடன் கனமழை பெய்தது. அந்நாட்களில் சாலை விளக்குகள் கிடையாது என்பதால், எங்கும் இருள் சூழ்ந்திருந்தது.

‘இந்த பெருமழையில் எப்படி வீட்டிற்குச் செல்வது?’ என்று கலங்கிய மூதாட்டி, குருவாயூரப்பனின் நாமங்களைச் சொல்லியபடியே தள்ளாடித் தள்ளாடி நடந்து கொண்டிருந்தாள்.

அப்போது ஒரு சிறுவன் அங்கு வந்து, ‘பாட்டி! கவலைப்படாதீர்கள். உங்களை நான் வீட்டில் கொண்டு விடுகிறேன்’ என்று அழைத்துச் சென்றான்.

பேசிக் கொண்டே பாட்டியின் வீட்டை அடைந்தார்கள். மழையில் இருவரும் முழுவதுமாக நனைந்து விட்டனர்.

மூதாட்டி ‘நீ செய்திருக்கும் உதவிக்கு, உனக்கு ஏதாவது நான் தர வேண்டும். என்ன வேண்டும்? கேள்’ என்றாள்.

சிறுவனோ, ‘மழையில் என் துணி நனைந்துவிட்டது. உங்களின் புடவையில் இருந்து ஒரு பகுதியைத் தாருங்கள்’ என்றான்.

மூதாட்டி தன்னிடம் இருந்த சிவப்பு நிறப் புடவையில் கொஞ்சத்தைக் கிழித்து சிறுவனிடம் கொடுத்தாள்.

மறுநாள் அதிகாலையில் குருவாயூரப்பன் சன்னிதியைத் திறந்த அர்ச்சகருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஆம்.. முன்தினம் இரவு பட்டுபீதாம்பரம் உடுத்தி நன்றாக அலங்காரம் செய்திருந்த, கண்ணனின் திருமேனியில், சிவப்பு நிற கோவணம் மட்டுமே இருந்தது. ஆனாலும் அந்த திவ்ய காட்சி அனைவரையும் மயக்கும் விதமாக இருந்தது.

காலையில் வழக்கம்போல் தரிசனத்திற்காக வந்திருந்த மூதாட்டியும் இந்தக் காட்சியைக் கண்டு அகமகிழ்ந்து போனாள். முன்தினம் இரவு நடந்ததைச் சொன்னதுடன், தான் கிழித்துக் கொடுத்த சிவப்பு நிற புடவையையும் காண்பித்தாள். அவள் கிழித்துக் கொடுத்த ஒரு பகுதியே, குருவாயூரப்பன் இடையில் கோவணமாக காட்சியளித்தது.

அன்று முதல் குருவாயூரப்பனுக்கு இரவில் ‘சிவப்புக் கௌபீனம்’ சாற்றுவது வழக்கமாக இருந்து வருகிறது...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  
        என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

பிள்ளையார் எறும்பு பிறந்த கதை!

முப்பத்து முக்கோடி தேவர்கள் முதல் ஓரறிவு கொண்ட உயிரினங்கள் வரை எல்லா ஜீவன்களுக்கும் படியளப்பவர் பரமேஸ்வரன். இதை அறியாதவளா பார்வதிதேவி?! ஆனாலும் அவளுக்கு, ‘இந்தத் தொழிலை ஈசன் சரிவர கவனிக்கிறாரா?’ என்றொரு சந்தேகம். அதற்குத் தீர்வு காண முனைந்தாள். சிறு பாத்திரம் ஒன்றை எடுத்து வந்து அதற்குள் கறுப்பு எறும்புகள் சிலவற்றைப் பிடித்துப் போட்டு மூடி விட்டாள். ‘இந்த எறும்புகளுக்கு ஈசன் எப்படி உணவு அளிக்கிறார், பார்க்கலாம்!’ என்பது அவளது எண்ணம்.

மறு நாள், ”ஸ்வாமி, நேற்று எல்லா ஜீவராசிகளுக்கும் படியளந்தீர்களா?” என்று ஈசனிடம் கேட்டாள்.

‘உலகநாயகி தன்னோடு விளையாடுகிறாள்!’ என்பது ஈசனுக்குப் புரிந்தது. ஆனாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல், ”இதிலென்ன சந்தேகம்… பாத்திரத்தில் நீ சிறை வைத்த எறும்புகளைப் பார்த்திருந்தால், இந்தக் கேள்விக்கே இடம் இருந்திருக்காது!” என்றார்.


பார்வதிதேவி, ஓடோடிச் சென்று பாத்திரத்தைத் திறந்து பார்த்தாள்! சுறுசுறுப்புடன் சுற்றிக் கொண்டிருந்தன எறும்புகள். அத்துடன் சில அன்னப் பருக்கைகளும் கிடந்தன. ‘ச்சே… வீணாக ஸ்வாமியை சந்தேகப்பட்டு விட்டோமே!’ என வருந்தினாள் தேவி.

”மகேஸ்வரி… உனது ஐயம் விலகியதா?”- குறும்பா கக் கேட்ட பரமேஸ்வரன், ”சரி, சரி… விநாயகன் உன்னைத் தேடிக் கொண்டிருந்தான்… போய்ப் பார்!” என்றார். விநாயகரைச் சந்தித்த பார்வதிதேவி அதிர்ந்து போனாள். ஒட்டிய வயிறும் வாடிய முகத்துடனும் இருந்தார் கணபதி!

”ஏனம்மா அப்படிப் பார்க்கிறீர்கள். எல்லாவற்றுக்கும் தாங்கள்தான் காரணம்!” என்றார் விநாயகர்.

”என்னச் சொல்கிறாய் நீ?” படபடப்புடன் கேட்டாள் பார்வதிதேவி.

”அன்னையே… அகிலம் ஆளும் நாயகனின் நித்திய தர்ம பரிபாலனத்தில் சந்தேகம் கொண்டது தாங்கள் செய்த முதல் தவறு. அடுத்தது, அப்பாவி எறும்புகளை பட்டினி போடும் விதம் சிறையிட்டது! தாயின் பழி தனயனைத் தானே சாரும். எனவே, எறும்புகளின் பசியை நான் ஏற்றுக் கொண்டு தாங்கள் எனக்களித்த அன்னத்தை, எறும்புகளுக்கு இட்டேன். பட்டினி கிடந்ததால், எனது வயிறு சிறுத்துப் போனது!” விளக்கி முடித்தார் விநாயகர்.

பார்வதிதேவி கண் கலங்கினாள். விநாயகரை அழைத் துக் கொண்டு சிவனாரிடம் சென்றவள், ”ஸ்வாமி, என்னை மன்னியுங்கள். நான் செய்த தவறுக்கு நம் மகனை வதைக்க வேண்டாம்!” என்று வேண்டினாள்.

”வருந்தாதே தேவி! பக்தர்கள் என்பால் வைக்கும் நம்பிக்கை, சற்றும் குறைவில்லாததாக இருக்க வேண்டும். அந்த ‘நம்பிக்கை’க்கு இணையான பூஜையோ வழிபாடோ கிடையாது. இதை, உலக மக்களுக்கு உணர்த்த நடந்த திருவிளையாடலே இது. அன்னபூரணியான நீ, உன் பிள்ளைக்கு அன்னம் அளித்தாய். அவன், அதை எறும்பு களுக்கு வழங்கினான். விநாயகனின் பெருமையைப் போற்றும் வகையில், அவை இனி பிள்ளையார் எறும்புகள் என்றே அழைக்கப்படட்டும்!” என்று அருளினார்.

பிறகு பார்வதியிடம், ”எறும்பு உண்டது போக, மீதம் உள்ள அன்னப் பருக்கைகளை விநாயகனுக்குக் கொடு!” என்றார். அப்படியே செய்தாள் பார்வதி. அந்த பருக்கை களை உண்ட விநாயகரின் வயிறு பழைய நிலைக்குத் திரும்பியது; அவரது பசியும் தீர்ந்தது.

இந்த அருளாடல் சம்பவம், தேய்பிறை சதுர்த்தி திதி நாளில் நிகழ்ந்தது. இதையே சங்கடஹர சதுர்த்தி நாளாக அனுஷ்டித்து விநாயகரை வழிபடுகிறோம் என்று கர்ண பரம்பரைக் கதை ஒன்று உண்டு...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  
        என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

ராகு - கேது தோஷமும்.. பரிகாரமும்

ராகு, கேதுவால் ஏற்படும் தோஷங்களும் அந்த தோஷத்திற்கு செய்ய வேண்டிய பரிகாரங்களை பற்றியும் விரிவாக அறிந்து கொள்ளலாம்.

ராகு தோஷமும்.. பரிகாரமும்..

ராகு 2-ல் இருந்தால் குடும்ப வாழ்க்கை சரியாக அமையாது.

ராகு 4-ல் இருந்தால் மனை தோஷம் ஏற்படும்.

ராகு 7-ல் இருந்தால் திருமண தோஷம் உண்டாகும்.

கும்பகோணத்தில் உள்ள திருநாகேஸ்வரம் கோவிலில் உள்ள ராகு பகவானை வணங்கி வர தோஷம் நிவர்த்தியாகும்.

அரசமரமும், வேப்பமரமும் உள்ள இடத்தில் சர்ப்பக் கிரகத்தை பிரதிஷ்டை செய்துள்ள இடத்திற்கு சென்று வழிபட தோஷ நிவர்த்தியாகும்.

செவ்வாய்க்கிழமை ராகு காலத்தில் துர்க்கை அம்மனை வழிபடுவது சிறப்பு. 

கேது தோஷமும்.. பரிகாரமும்..

திருமணத் தடையை ஏற்படுத்துவார்.

குழந்தை பாக்கியத்தை தாமதப்படுத்துவார்.

பழிச்சொல்லுக்கு ஆளாக்குவார்.

கேது 12-ல் இருந்தால் மோட்சம் தருவார்.

விநாயகரை அருகம்புல் மாலை போட்டு வணங்கி வர தோஷம் நிவர்த்தியாகும்.

காஞ்சீபுரத்தில் உள்ள சித்ரகுப்தர் ஆலயம் சென்று வழிபட கேதுவினால் ஏற்பட்ட தோஷம் நிவர்த்தியாகும்...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  
        என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

கிரகங்களாக மாறிய ராகு - கேது வரலாறு

ராவணன் அழிக்கப்பட்ட பின்னர், கேதுவும் ராகுவும் நவக்கிரகங்களில் கிரக அந்தஸ்து பெற்று சஞ்சாரம் செய்யத் தொடங்கினார்கள் என்பது புராண வரலாறு. இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.

அமிர்தம் பெறுவதற்காக பாற்கடல் கடையப்பட்டது. தேவர்களும், அசுரர்களும் சேர்ந்து பாற்கடலைக் கடைந்தனர். அப்போது சில பொருட்கள் கடலுக்குள் இருந்து வெளிப்பட்டன. அதில் காமதேனு என்ற பசு, உச்சை சிரவஸ் என்ற வெள்ளைக் குதிரை, ஐராவதம் என்ற யானை மற்றும் கற்பக விருட்சத்தை தேவர்களின் தலைவனான தேவேந்திரன் எடுத்துக்கொண்டான். அப்சரஸ்திரிகளை அசுரர்கள் ஏற்றுக் கொண்டனர். அகலிகை என்ற அழகான பதுமையை பிரம்மன் தனது வளர்ப்பு மகளாக எடுத்துக்கொண்டார். பின்னாளில் அவளை கவுதம முனிவர் மணம் முடித்தார். திருமகள் என்ற லட்சுமி தேவியை, மகாவிஷ்ணு தன் மார்பில் அமர்த்திக் கொண்டார்.

இறுதியாக அமிர்த கலசத்துடன் வெளிவந்த தன்வந்திரி பகவானிடம் இருந்து, அசுரர்கள் அமிர்த கலசத்தை பறித்துச் சென்றனர். அமிர்தத்தை யார் முதலில் அருந்துவது என்பதில் அசுரர்களுக்குள்ளேயே கலவரம் மூண்டது. இதில் அமிர்தம் யாருக்கும் கிடைக்காமல் வீணாகிவிடும் நிலை உருவானது. இதனால் தேவர்கள் பெரும் கவலை அடைந்தனர்.

அவர்கள் மகாவிஷ்ணுவிடம் சென்று, அமிர்தத்தைக் காத்து அருளும்படி வேண்டினர். தேவர்களின் வேண்டுதலை ஏற்றுக்கொண்ட விஷ்ணு, மோகினி அவதாரம் எடுத்து அசுரர்களிடம் சென்றார். மோகினி உருவத்தில் இருந்த மகாவிஷ்ணு, ‘நான் அமிர்தத்தை தேவர்களுக்கும் உங்களுக்கும் சரிபாதியாக பங்கிட்டு தருகிறேன்’ என்று அசுரர்களிடம் கூறினார். மோகினியின் அழகில் மயங்கிய அசுரர்கள் அமிர்த கலசத்தை அவளிடம் கொடுத்தனர்.

அமிர்த கலசத்தை வாங்கிய மோகினி, தேவர்களையும் அசுரர்களையும் இரு வரிசைகளாக நிற்கச் சொன்னாள். பின்னர், ‘முதலில் எந்த வரிசைக்குக் கொடுக்கட்டும். இல்லை ஒருவர் மாற்றி ஒருவராக தரட்டுமா?’ என்றாள்.

அசுரர்கள் அமிர்த கலசத்தின் அடிப்பாகத்தில் உள்ள அமிர்தத்தை தங்களுக்கும், தெளிந்த மேல் பகுதியில் இருப்பதை தேவர்களுக்கும் அளிக்கலாம் என்றனர்.

அதன்படி தேவர்களுக்கு அமிர்தத்தை வழங்கத் தொடங்கினாள் மோகினி. அளவுக்கு அதிகமாகவே தேவர்களுக்கு வழங்கப்பட்டது. மோகினியின் சூழ்ச்சியை உணர்ந்த சுவர்பானு என்ற அசுரன், தேவர்களைப் போல உருவத்தை மாற்றிக்கொண்டு, தேவர்களின் வரிசையில் போய் நின்றான். அவனைக் கவனிக்காத மோகினி, சுவர்பானுவுக்கும் அமிர்தத்தை வழங்கினாள்.

அமிர்தம் கிடைத்தவுடன் அதை உடனடியாக பருகிவிட்டான் சுவர்பானு. தான் அமிர்தம் உண்டதை யாரும் அறியவில்லை என்று சுவர்பானு கருதினான். ஆனால் அவனைக் கவனித்த சூரியனும் சந்திரனும் அவன் ஒரு அசுரன் என்பதை மோகினிக்கு உணர்த்தினர்.

இதையறிந்த மோகினி, அமிர்தம் வழங்குவதற்காக வைத்திருந்த அகப்பையைக் கொண்டு சுவர்பானுவின் தலையை துண்டித்தாள். உடல் வேறு, தலை வேறாக பிரிந்தாலும், அமிர்தம் உண்ட காரணத்தால் சுவர்பானுவுக்கு மரணம் சம்பவிக்கவில்லை. மேலும் துண்டான தலைக்கு பாம்பின் உடலும், உடலுக்கு 5 பாம்பின் தலையும் முளைத்தன.

அசுரர்களுக்கு அமிர்தத்தை வழங்காமல் இருக்க என்ன செய்யலாம் என்று ஆலோசித்துக் கொண்டிருந்த மோகினிக்கு, சுவர்பானு உருமாறி வந்த காரணம் கிடைத்து விட்டது. அதைச் சுட்டிக் காட்டி அசுரர்களுக்கு அமிர்தம் வழங்க மறுத்து விட்டாள். இதனால் சுவர்பானுவின் மீது கோபம் கொண்ட அசுரர்கள், சுவர்பானுவை தங்களின் கூட்டத்தோடு சேர்த்துக் கொள்ளவில்லை. மாறுபட்ட உடல் அமைப்பைக் கொண்ட அவனை, தேவர்களும் ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டனர்.

இதனால் மிகவும் வருத்தம் அடைந்த சுவர்பானு, பிரம்மதேவரை தஞ்சம் அடைந்தான். தனக்கு பழைய உடல் உருவைத் தரும்படி பிரம்மனிடம் வேண்டினான்.

பிரம்மதேவரோ, ‘நாராயணரால் தண்டிக்கப்பட்ட உன்னை, பழைய நிலைக்கு மாற்றுவது என்பது இயலாது. எனவே இருவேறு உடல் பிரிவுகளைக் கொண்டவனாக இருப்பாய். மனித தலையும் பாம்பு உடலும் கொண்ட உடல் அமைப்பிற்கு ‘ராகு’ என்றும், மனித உடலும், பாம்பின் தலையும் கொண்ட அமைப்புக்கு ‘கேது’ என்றும் பெயர் அமையும்’ என்றார் பிரம்மதேவர்.

இதையடுத்து பிரம்மனிடம் மேலும் சில வேண்டுதலை வைத்தான் சுவர்பானு. ‘சூரியனும் சந்திரனும் காட்டிக் கொடுத்ததால் தான் எனக்கு இந்த நிலை ஏற்பட்டது. எனவே அவர்களைப் பழி வாங்குவதற்கு அருள்புரிய வேண்டும்’ என்றான் சுவர்பானு.

பிரம்மதேவர் எவ்வளவு எடுத்துரைத்தும் அவன் சமாதானம் அடையவில்லை. இதையடுத்து ‘நவக்கிரக பரிபாலனத்தில் இணையும்போது, சூரியன் மற்றும் சந்திரன் ஒளிகளை அடக்கி அவர்களுக்கு கிரகண தோஷத்தை ஏற்படுத்துவீர்கள். மேலும் நீங்கள் இருவரும் மற்ற கிரகங்களைப் போல் முன்னோக்கிச் செல்லாமல், பின்னோக்கி சஞ்சாரம் செய்வீர்கள்’ என்று பிரம்மன் அருள்புரிந்தார்.

அப்போது ராகு-கேதுவின் முன்பாக மகாவிஷ்ணு தோன்றினார். அவர் பிரம்மனிடம், ‘ராகுவையும், கேதுவையும் உடனடியாக நவக்கிரக பரிபாலனத்தில் ஈடுபடுத்தக் கூடாது. அசுரர்களின் ஆட்சி நடக்கும் காலத்தில் அசுரன் ஒருவனை அப்படி ஈடுபடுத்துவது சரிவராது. அது அசுரர்களின் பலத்தை அதிகரிக்கும். கடைசி அசுரனான ராவணன் அழியும் வரை, கேது கடக ராசியில் அமர்ந்து ரிக், யஜூர், சாம வேதங்களையும், ராகு மகர ராசியில் இருந்து அதர்வண வேதத்தையும் உரியவர்கள் மூலமாக கற்றுணர்ந்து கொள்ளட்டும். ராவணன் அழிவுக்குப் பிறகு, ஞானம் பெற்ற ராகு ஞானகாரகனாகவும், கேது மோட்சகாரகனாகவும் செயல்பட்டு பூமியில் தோன்றிய உயிர்களுக்கு ஞானம் மற்றும் மோட்சத்தை பெற அனுக்கிரகம் செய்யட்டும்’ என்றார்.

அதன்படியே ராவணன் அழிக்கப்பட்ட பின்னர், கேதுவும் ராகுவும் நவக்கிரகங்களில் கிரக அந்தஸ்து பெற்று சஞ்சாரம் செய்யத் தொடங்கினார்கள் என்பது புராண வரலாறு...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  
        என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡