Thursday, 5 July 2018

இறைவன் (ஈசன்) அருளை பெற என்ன செய்ய வேண்டும்?

பூஜை, புனஸ்காரம் இவை மட்டுமே
ஈசனை  சென்றடைய  உதவாது.
மாறாக உள்ளன்புடன் அவன் திருவடியில் அமர்ந்து அழவேண்டும் என்கிறார் மாணிக்கவாசகர். ஏன் அழ வேண்டும்.? பேசாமல் பூஜைகள் செய்து விட்டு இருக்கலாமே. காரணம் அழுதால்
உன்னை பெறலாமே என்பது அவர் வாக்கு.

திருவிழா நடக்கிறது.
வாழ்க்கையே ஒரு திருவிழா தானே. எவ்வளவோ பேர் வருகிறார்கள், செல்கிறார்கள். இந்த திருவிழா கூட்டத்தில் ஒரு குழந்தை பெற்றோரைத் தவற விட்டு விட்டது. அவர்களை எப்படி அடைவது என்று தெரியவில்லை. ஓவென்று அழுகிறது. அந்த அழுகுரல் கேட்டு அதன் பெற்றோர் வந்து அதனை கண்டு கொள்வார்கள் என்று குழந்தை நினைக்கிறது.

அந்த குழந்தைக்கு அழுவதைத் தவிர
அதற்கு வேறு ஒன்றும் தெரியவில்லை. பெற்றோர்கள் எங்கு இருப்பார்கள்? அவர்களை எப்படி அடைவது என்று ஒன்றும் தெரியவில்லை. யாரிடம் போய் கேட்பது ? திகைத்து அழுகிறது அந்த குழந்தை. அந்த குழந்தையை போல் திகைத்து அழுகிறேன் என்கிறார் மாணிக்கவாசகர்..

பாடல்..!

முழுமுத லேஐம் புலனுக்கும்
மூவர்க்கும் என்றனக்கும்
வழிமுத லேநின் பழவடி யார்திரள்
வான்குழுமிக் கெழுமுத லே
அருள் தந்திருக் கஇரங் குங்கொல்லோ
என்றழுமது வேயன்றி மற்றென்
செய் கேன்பொன்னம் பலத்தரைசே...!
                      

முழு முதலே..!
எனது ஐந்து புலன்களுக்கும்,
மூன்று தேவர்களுக்கும், எனக்கும்,
வாழ்வின் வழி காட்டுபவனே,
உன் அடியார்கள் திரண்டு
உன்னிடம் வந்து இருக்கிறார்கள். 
எனக்கு எப்போது அருள் தருவாய் என்று நினைத்து அழுவதைத் தவிர வேறு என்ன என்னால் செய்ய முடியும், பொன்னம்பலத்தில் ஆடும் அரசனே..!

மாணிக்கவாசகர் போல நாமும் சிவன்  திருவடியில்  பணிந்து அழுது, அவன் தாள் வணங்கி அவனருள் பெறுவோம்.

திருச்சிற்றம்பலம்.

No comments:

Post a Comment