Tuesday, 31 July 2018

பெண்கள் ருத்ராட்சத்தை அணியலாமா?

நம்மில் பலரும் ருத்ராட்சத்தை அணிவதற்கு அச்சப்படுகிறார்கள். அதனை துறவிகள் மட்டுமே அணியவேண்டும். பெண்கள் ஒருபோதும் ருத்ராட்சம் அணியக்கூடாது என்று சொல்பவர்கள் ஏராளம்.

‘ருத்ராட்சமும், விபூதியும் அணிந்தவன் ஒருபோதும் எமலோகம் செல்வதில்லை. ஐஸ்வர்யங்கள் அருளும் ருத்ராட்சம் ஆன்மாவிற்கு மகா பேரானந்தத்தைத் தரும். ருத்ராட்சம் அணிந்து ஒருமுறை எவ்வித மந்திரம் கூறினாலும், அதை 1 கோடி முறை உச்சரித்த பலனைத்தரும். ருத்ராட்சம் அணிந்து ம்ருத்யுஞ்ச மந்திரம் உச்சரிப்பவன் எல்லாவித நோய்களிலிருந்தும் விடுபடுகிறான். அவனை அகால மரணமோ, துர்மரணமோ நெருங்குவதில்லை’ என்கிறார் மகா பெரியவா என்று அழைக்கப்படும் சந்திரசேகர சரஸ்வதி சுவாமிகள்.

இன்று நம்மில் பலரும் ருத்ராட்சத்தை அணிவதற்கு அச்சப்படுகிறார்கள். அது புனிதமானது. அதனை துறவிகள் மட்டுமே அணியவேண்டும். இல்லற வாழ்க்கையில் ஈடுபடுபவர்கள் அணியக்கூடாது. பெண்கள் ஒருபோதும் ருத்ராட்சம் அணியக்கூடாது என்று சொல்பவர்கள் ஏராளம்.

ஆனால் இயற்கையாகவே துளையோடு இருக்கும் ருத்ராட்சம், அனைவரும் அணிந்து கொள்வதற்காகவே அவ்வாறு இருக்கிறது. அதன் ஆண், பெண் பேதம் எதுவும் இல்லை என்பது ஆன்மிகத்தை நன்கு கற்றறிந்தவர்கள் கூறும் வாக்காகும்.

சிவபெருமான் கண்களில் இருந்து தோன்றியது ருத்ராட்சம். அதை அணிபவரை ஈசன், கண்போலக் காப்பாற்றுவார். எனவே அனைவரும் ஐந்து முகம் கொண்ட ஒரு ருத்ராட்சத்தையாவது அணிய வேண்டியது அவசியம். ருத்ராட்சத்தை யார் வேண்டுமானாலும் அணியலாம். எல்லா நேரத்திலும் அணிந்திருக்கலாம். நீர்பருகும் போதும், உணவு உண்ணும்போதும், தூங்கும்போதும் எல்லாக்காலத்திலும் ருத்ராட்சம் அணிந்திருக்க வேண்டும் என்று சிவபெருமானே கூறியுள்ளதாக சிவபுராணம் தெரிவிக்கிறது.

சிறுவர், சிறுமியர் ருத்ராட்சம் அணிவதால் அவர்களின் கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். பெண்கள் இந்த ருத்ராட்சத்தை அணிவதால், தீர்க்க சுமங்கலியாக வாழும் பாக்கியத்தைப் பெறுவார்கள். அவர்களுடைய கணவருக்கும் தொழிலில் வெற்றி கிடைக்கும். மேலும் ருத்ராட்சம் அணிந்தவர்களின் இல்லத்தில் லட்சுமி கடாட்சம் நிறைந்திருக்கும் என்பது சந்திரசேகர சரஸ்வதி சுவாமிகள் சொல்லும் வார்த்தைகளாகும்.

அதிக விலைகொடுத்து அபூர்வ வகையிலான ருத்ராட்சத்தை வாங்கி அணியவேண்டும் என்று அவசியமில்லை. எல்லா இடங்களிலும் எளிமையாக கிடைக்கும் ஐந்து முக ருத்ராட்சத்தை அணிந்தாலே போதுமானது. சிவபெருமானின் திருமுகம் ஐந்து. நமசிவாய மந்திரம் ஐந்தெழுத்து. பஞ்சபூதங்கள் ஐந்து (நிலம், நீர்,நெருப்பு, காற்று மற்றும் ஆகாயம்). நமது கை கால் விரல்கள் ஐந்து. புலன்கள் ஐந்து. ஆகையால் தான் இயற்கையே மிக அதிகமாக ஐந்து முக ருத்ராட்சத்தை பூமிக்கு அருள்கிறது. எனவே ஐந்து முக ருத்ராட்சங்களை அணிவதே சிறப்பு. ஐந்து முக ருத்ராட்சத்திலேயே மற்ற எல்லா முக ருத்ராட்சங்களினால் கிடைக்கின்ற பலன்களும் அடங்கிவிடும்.

பெண்களின் பெருந்தெய்வமாக விளங்குபவள் ஆதிபராசக்தி. அவள் ருத்ராட்சம் அணிந்திருப்பதை, அருணாசலபுராணம் விவரிக்கிறது. எனவே பெண்கள் தாராளமாக அம்பிகை காட்டும் வழியைப் பின்பற்றி ருத்ராட்சம் அணியலாம். சிவ மகாபுராணத்திலும் பெண்கள் கட்டாயம் ருத்ராட்சம் அணிய வேண்டும் என்று ஈசனே வலியுறுத்தியிருக்கிறார்.

பெண்கள் தங்களுடைய தாலிக்கொடியை எல்லா நாட்களிலும், எல்லா நேரங்களிலும் அணிந்திருப்பதைப் போல, ருத்ராட்சத்தையும் அனைத்து நேரங்களிலும் அணிந்து கொள்ளலாம். ருத்ராட்சத்தை ஈசன் அருளியது மனிதன் வாழும் உடலுக்காக அல்ல.. உயிரின் ஆன்மாவிற்காக என்பதை அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும்.

நீத்தார் கடன் எனப்படும் முன்னோர்களுக்கு திதி கொடுப்பது, பெண்களின் தீட்டு காலம் எனப்படும் மாதவிலக்கு, கணவன்-மனைவி தாம்பத்திய நேரங்களில் கூட ருத்ராட்சம் அணியலாமா? என்ற கேள்வி எழலாம். இவை மூன்று விஷயங்களும் இயற்கையானதே தவிர, எதுவும் செயற்கையானது அல்ல. பித்ரு கடன் நிறைவேற்றும்போது ருத்ராட்சம் அணிந்து கொள்ளலாம். இதனால் முன்னோர்களின் ஆன்மாக்கள் மகிழும். அதனால் பாவமோ, தோஷமோ கிடையாது.

நீராடும் போது ருத்ராட்சம் அணிந்திருந்தால் கங்கையில் குளித்த புண்ணியம் கிடைக்கும் என்று புராணங்கள் தெரிவிக்கின்றன. கங்கையில் மூழ்கினால் பாவம் போகும் என்பது பலரும் சொல்லும் வாக்கு. பாவங்களால் தான் நமக்கு துன்பங்கள் நிகழ்கின்றன. அதற்காக நாம் கங்கையைத் தேடிச் செல்ல வேண்டியதில்லை. ருத்ராட்சத்தை அணிந்து கொண்டாலே கொடிய பாவங்களும் நீங்கும். 

நம் வாழ்வில் உள்ள துன்பங்கள் படிப்படியாக குறையும் என்கின்ற புராணங்கள், கங்கையில் மூழ்கினால் பாவம் போகும் என்பது நம் அனைவருக்கும் தெரியும். பாவங்களினால் தான் நமக்குக்கஷ்டம் உண்டாகிறது. ருத்ராட்சம் அணிவதால் கொடியபாவங்கள் தீரும். இதனால் நம் வாழ்வில் ஏற்படும் துன்பங்களும் படிப்படியாகக் குறைந்து விடும். ருத்ராட்சம் அணிபவருக்கு லட்சுமி கடாட்சமும், செய்யும் தொழிலில் மேன்மையும், சகலவிதமான ஐஸ்வரியங்களும் கிடைக்கும்.

ருத்ராட்சம் அணிவதால் இதய நோய், ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், புற்றுநோய் போன்றவற்றின் தீவிரம் குறைவதாக ஆய்வுகள் கூறுகின்றன. எனவே தூங்கும்போதும் கூட ருத்ராட்சத்தைக் கழற்றி வைக்க வேண்டிய அவசியம் கிடையாது. திருமணம் ஆகாதவர்கள், குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், வேலை வாய்ப்பு இல்லாதவர்களும் ருத்ராட்சம் அணிந்து, தினமும் 108 முறை எழுத்தாலோ, மனதலோ பஞ்சாட்சரத்தைச் சொல்லி வந்தால், 18 மாதத்தில் மேற்கூறிய பிரார்த்தனைகள் நிறைவேறும்...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  
        என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

அவ்வையாருக்கு உகந்த ஆடி செவ்வாய் விரதம்

ஆடி செவ்வாய்க்கிழமைகளில் அவ்வை பாட்டிக்கு விரதம் இருக்கும் பாரம்பரிய பழக்கம் தென்மாவட்ட பெண்களிடம் இன்றும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

ஆடி செவ்வாய்க்கிழமைகளில் அவ்வை பாட்டிக்கு விரதம் இருக்கும் பாரம்பரிய பழக்கம் தென்மாவட்ட பெண்களிடம் இன்றும் உள்ளது. செவ்வாய் இரவு பெண்கள் யாராவது ஒருவர் வீட்டில் கூடுவார்கள். பச்சரிசிமாவுடன் வெல்லம், தேங்காய் கலந்து கொழுக்கடை செய்வார்கள்.இரவு அந்த கொழுக்கட்டைகளை அவ்வைக்கு படைத்து வழிபடுவார்கள். 

ஆண்கள் இந்த பூஜையை பார்க்கவோ, கொழுக்கட்டை சாப்பிடவோ அனுமதிக்கப்பட மாட்டார்கள். 

அவ்வை பாட்டியை நினைத்து நடத்தப்படும் இந்த பூஜையில் பங்கேற்றால் கணவருக்கு நீண்ட ஆயுள் கிடைக்கும் என்பது பெண்களின் நம்பிக்கை. 

அது போல பாட்டி நோன்பு இருந்தால் கன்னிப் பெண்களுக்கு நல்ல இடத்தில் திருமணம் நடைபெறும் என்று நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்ட மக்கள் நம்புகிறார்கள்...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  
        என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

செல்வ வளம் தரும் குலசுந்தரி மந்திரம்

இந்த தேவிக்கு உகந்த மந்திரத்தை சொல்லி இவளை பூஜிப்பவர்கள் சர்வ ஞானமும் அடைவர். செல்வ வளமும், சொத்துக்கள் சேர்க்கையும் கிட்டும்.

குலசுந்தரி என்பது குண்டலினி சக்தியையே குறிக்கும். நம் சரீரமே குலம். அதை இயக்குபவள் இவள். பன்னிரண்டு திருக்கரங்கள், தாமரை மலரையொத்த ஆறு திருமுகங்கள், ஒவ்வொரு முகத்திலும் முக்கண் கள் கொண்டு தாமரை பீடத்தில் அமர்ந்து அருள்பவள். 

திருமேனி முழுவதும் திருவாபரணங்கள் துலங்க, கரங்களில் ஜபமாலை, தாமரை, கமண்டலம், கோப்பை, மாதுளம்பழம், புத்தகம், தாமரை, எழுத்தாணி, சங்கு, வரத முத்திரை கொண்டு தரிசனம் அளிக்கிறாள்.

மந்திரம்:

ஓம் குலஸுந்தர்யை வித்மஹே
காமேஸ்வர்யை தீமஹி
தன்னோ சக்தி ப்ரசோதயாத்.

வழிபட வேண்டிய திதிகள்: சுக்ல பட்ச நவமி, கிருஷ்ண பட்ச சப்தமி.

பலன்கள்: இந்த தேவியின் அபூர்வ அருளால் இவளை பூஜிப்பவர்கள் சர்வ ஞானமும் அடைவர். செல்வ வளமும், சொத்துக்கள் சேர்க்கையும் கிட்டும்...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  
        என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

சிவனுக்கு துளசி அர்ச்சனை

சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தியில் திருநோக்கிய அழகியநாதர் ஆலயம் உள்ளது. இத்தல ஈசனுக்கு திங்கட்கிழமைகளில் துளசித்தள அர்ச்சனை நடைபெறுகிறது.

சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தியில் மருநோக்கும் பூங்குழலியம்மை சமேத திருநோக்கிய அழகியநாதர் ஆலயம் உள்ளது. இறைவி தனது குறைகளை போக்க வேண்டி, இத்தலத்தில் துளசி தளங்களால் ஈசனை வழிபட்டாளாம். 

அதனால் திங்கட்கிழமைகளில் இத்தல ஈசனுக்கு துளசித்தள அர்ச்சனை நடைபெறுகிறது. திருமண வரம் கிடைக்கவும், பிரிந்த தம்பதியர் ஒன்றுபடவும், இத்தல இறைவனை தரிசனம் செய்யலாம். இங்கு பிரதோஷ காலங்களில் மட்டும், இரு மரகத லிங்கங்கள் வெளியே எடுக்கப்பட்டு பூஜிக்கப்படுகின்றன...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  
        என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

Monday, 30 July 2018

மகிழ்ச்சி தரும் சாளக்கிராமம்

சாளக்கிராமம் என்பது புனிதமான வழிபாட்டு பொருளாக கருதப்படுகிறது. வைணவ குடும்பங்களில் பலரும் இதை பரம்பரை பரம்பரையாக வைத்து பூஜித்து வருவார்கள்.

சாளக்கிராமம் என்பது புனிதமான வழிபாட்டு பொருளாக கருதப்படுகிறது. வைணவ குடும்பங்களில் பலரும் இதை பரம்பரை பரம்பரையாக வைத்து பூஜித்து வருவார்கள். உருளையாகவும், மிருதுவாகவும், கரிய நிறம் அல்லது சிவப்பு நிறமாக இருக்கும் இந்த வகை கல் விஷ்ணுவின் அருள் நிறைந்தது என்று புராணங்கள் சொல்கின்றன. பூஜை அறையில் சிறிய பெட்டியில் பத்திரமாக பூட்டி வைத்திருப்பவர்கள் ஏராளம்.

வைணவ வழி திருமணங்களில் பெண்ணை கன்னிகாதானம் செய்து கொடுக்கும் போது, வரனுக்கு சாளக்கிராம கல்லை தானம் செய்வதும் வழக்கத்தில் இருக்கிறது.

சாளக்கிராமக் கல் நேபாளத்தில் உள்ள கண்டகி நதியில் கிடைக்கிறது. இந்த சாளக்கிராமம் பற்றிய ஒரு கதையை இங்கே பார்க்கலாம்.

பிரம்மதேவரின் வியர்வைத் துளியில் இருந்து கண்டகி என்ற ஒரு பெண் உருவெடுத்தாள். அவள் கடுந்தவம் புரிந்தமையால் அச்சமுற்ற தேவர்கள் அவளை நாடி வரமளிக்க வந்தனர். அவளோ அவர்களை தன் பிள்ளைகளாகப் பெற விரும்பினாள். அதற்கு தேவர்கள் அனைவரும் மறுப்பு தெரிவித்து விட்டனர். இதனால் தேவர்கள் அனைவரும் பூமியில் புழுக்களாக பிறக்கும்படி கண்டகி சபித்து விட்டாள்.

இதைக்கேட்டு அதிர்ச்சியும், கோபமும் கொண்ட தேவர்கள், கண்டகிக்கு எதிர் சாபம் அளித்தனர். அதன்படி அவளை ஒரு ஜடமாக மாறும்படி சாபம் கொடுத்தனர்.பிறகு தேவர்கள் அனைவரும் பிரம்மனையும், சிவபெருமானையும் சந்தித்து, தங்களின் சாபத்தை போக்கி அருளும்படி வேண்டினர். அவர்கள் இருவரும் விஷ்ணுவிடம் முறையிடும்படி தேவர்களை அனுப்பி வைத்தனர். அதன்படி தேவர்களும் விஷ்ணுவிடம் சென்று தங்களின் வேண்டுதலை வைத்தனர்.

ஆனால் சாபங்கள் எதையும் அகற்ற முடியாது என்று கூறிய விஷ்ணு ஒரு உபாயம் கூறினார். ‘சாளக்ராம ஷேத்திரத்தில் உள்ள சக்ர தீர்த்தத்தில் நான் வாசம் செய்வேன். தேவர்களாகிய நீங்கள் ‘வஜ்ரகீடம்’ என்ற புழுக்களாக மாறி, அங்குள்ள கூழாங்கற்களை ஆகாரமாகக் கொண்டு வாழவேண்டும். கண்டகி ஒரு நதி வடிவமாக அந்த கற்களில் பாயவேண்டும்’ என்று அருளினார்.

அத்தகைய தேவாம்சமும், விஷ்ணு அம்சமும் பொருந்தியதே சாளக்கிராம கற்கள். பத்ரிநாத்தில் உள்ள இறைவனின் உருவங்கள் சாளக்கிராம கல்லினால் ஆனவை. சாளக்கிராமத்தை கோர்த்து மாலையாகவும் இவைனுக்கு சமர்ப்பிக்கலாம். சாளக்கிராமம் உடைந்திருந்தாலும், உருவம் சிதைவுற்று இருந்தாலும், அக்னியில் எரிந்திருந்தாலும் அதற்கு ஒரு தோஷமும் இல்லை. சாளக்கிராமம் குற்றம் அற்றது.

சாளக்கிராம பூஜை செய்ய மந்திரமோ, தந்திரமோ, புனித தீர்த்தமோ வேறு எதுவுமே தேவையில்லை. அது இருந்தாலே மகிழ்ச்சியை அளிக்க வல்லது. முன்னோர்களுக்கான வழிபாட்டின்போது, சாளக்கிராம கல்லை வைத்து பூஜிப்பது முன்னோர்களுக்கு மகிழ்ச்சியை வழங்கும். சாளக்கிராம அபிஷேக தீர்த்தத்தை தலையில் தெளித்துக் கொண்டு, அதை அர்ச்சித்த துளசியை தரித்துக் கொண்டு, அதற்கு நிவேதனம் செய்த உணவை உண்பதால் வைகுண்ட வாசம் கிடைக்கும்.

சாளக்கிராம அபிஷேக நீரை கீழே கொட்டக்கூடாது. இக்கற்களில் இயற்கையாகவே திருமாலின் சங்கு, சக்கரம், கதை, தாமரை போன்ற உருவங்கள் காணப்படுகின்றன. இந்த வகை கற்கள், நெடுங்காலமாக கோவில்கள், மடங்கள், வீடுகளில் வைக்கப்பட்டு வழிபடப்படுகிறது.

சங்கு, சக்கரம், கதை, தாமரை ஆகியவை ஓர் குறிப்பிட்ட அமைப்பில் உள்ள கற்கள் ‘கேசவம்’ என அழைக்கப்படுகின்றன. இதே போல மாதவம், நாராயணம், கோவிந்தம், விஷ்ணு, மதுசூதனம், திரிவிக்கிரமம், வாமனம், சிறீதரம், இரிசிகேசம், பத்மநாபம், தமோதரம், சங்கர்சனம், பிரத்யும்னம், நரசிம்மம், சனார்த்தனம், அரி, கிருஷ்ணம், சந்தான கோபாலன், லட்சுமி நாராயணன், வராகமூர்த்தி, மத்ஸ்யமூர்த்தி, கூர்மம், சுதர்சனம், ஹிரண்ய கர்ப்பம் என்று 68 வகை சாளக்கிராமங்கள் உள்ளதாக கூறப்படுகிறது...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  
        என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

எந்த தோஷத்திற்கு எத்தனை தீப பரிகாரம்

தோஷங்கள் நீங்க எளிமையான பரிகாரமாக தெய்வங்களுக்கு தீபங்கள் ஏற்றி வழிபட்டாலே போதுமானது. எந்த தோஷத்திற்கு எத்தனை தீபம் ஏற்ற வேண்டும் என்பதை இங்கே பார்க்கலாம்.

ஜோதிடத்தின் கிரக பலன்களைப் பொறுத்தே வாழ்வு அமையும் என்கிறது ஜோதிட சாஸ்திரம். கிரக நிலைகள் சரியில்லாத வேளையில் சில தோஷங்கள் தோன்றலாம். அந்த தோஷங்கள் நீங்க எளிமையான பரிகாரமாக தெய்வங்களுக்கு தீபங்கள் ஏற்றி வழிபட்டாலே போதுமானது. எந்த தோஷத்திற்கு எத்தனை தீபம் ஏற்ற வேண்டும் என்பதை இங்கே பார்க்கலாம்.

ராகு தோஷம் - 21 தீபங்கள்

சனி தோஷம் - 9 தீபங்கள்

குரு தோஷம் - 33 தீபங்கள்

திருமண தோஷம் - 21 தீபங்கள்

புத்திர தோஷம் - 51 தீபங்கள்

சர்ப்ப தோஷம் - 48 தீபங்கள்

காலசர்ப்ப தோஷம் - 21 தீபங்கள்

களத்திர தோஷம் - 108 தீபங்கள்

துர்க்கைக்கு - 9 தீபங்கள்

ஈஸ்வரனுக்கு - 11 தீபங்கள்...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  
        என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

கொழுந்தீஸ்வரர் திருக்கோவில்

திருமலைக்குன்றின் வடக்குப்பகுதியில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது, மலைகொழுந்தீஸ்வரர் திருக்கோவில். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.

சிவகங்கை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட கோவில்களில், இரண்டு மலைக்கோவில்கள் உள்ளது. ஒன்று மருந்து மலை. மற்றொன்று திருமலை. தற்போது திருமலை என்று அழைக்கப்படும் இந்த ஊர், கி.பி. 13-ம் நூற்றாண்டில் குன்றுத்தூர், கோனேரிப்பட்டி ஆகிய பெயர்களில் அழைக்கப்பட்டிருக்கிறது.

திருமலைக் குன்றின் உச்சியில் பம்பர மலைக்கு மேற்கே உள்ள பெரிய பாறைகளின் இணைவில், வடக்கு நோக்கி இரு குகைகள் அமைந்துள்ளன. அவற்றின் அடித்தளப்பகுதியில் சமணர் படுக்கைகள் காணப்படுகின்றன. இதனை பாண்டவர் படுக்கை, ராமர்- சீதை படுக்கை, சித்தர் படுக்கைகள் எனவும் கூறுகிறார்கள். இங்கு சித்தர்கள் பலர் வாழ்ந்ததாகவும், அவர்கள் இம்மலைக்குகைகளில் ஜீவசமாதி அடைந்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

மலைக்குன்றின் வடக்குப்பகுதியில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது, மலைகொழுந்தீஸ்வரர் திருக்கோவில். இந்த ஆலயத்தில் இறைவனின் சக்தியோடு, இந்த மலையில் ஜீவசமாதி அடைந்த சித்தர்களின் சக்தியும் இணைந்து பக்தர்களுக்கு அருளை அள்ளி வழங்குவதாக நம்பப்படுகின்றது. இக்கோவிலுக்குள் வடக்கு நோக்கிய ஒரு குடவரைக் கோவில் இருக்கிறது. ஆலயத்தின் நாற்புற சுவர்களும் ஒரு குறிப்பிட்ட அமைப்பில் திகழ வேண்டும் என்பது விதியாகும். ஆனால் இந்த ஆலயம் ஒரு ஒட்டுக்கோவில் என்பதால், இந்த நாற்புற திருச்சுற்றுகளும், குறிப்பிட்ட அளவாய் அமையாமல் மாறுபட்டிருக்கின்றன.

இத்திருத்தலத்தின் இறைவனை குடவரை கோவிலில் உள்ள இறைவன். கட்டுமானக்கோவிலில் உள்ள இறைவன் எனப் பகுத்துக் காணலாம். குடவரையில் உள்ள இறைவன்- இறைவியர் உமா சமேத மூர்த்தி ஆவார். தற்போது இவரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் என்று அழைத்து வருகின்றனர். கட்டுமானக் கோவிலில் உள்ள இறைவன் ‘மலைகொழுந்தீஸ்வரர்’ ஆவார். இவ்விறைவனின் லிங்கத் திருமேனி நேராக இல்லாமல், சற்று சாய்ந்து காணப்படுகிறது.

குடவரைக் கோவில் கருவறையின் மேற்கு உட்புறச்சுவரில் கிழக்கு நோக்கியவாறு சிவனும், உமையும் புடைப்புச்சிற்பமாக அமைக்கப்பட்டுள்ளனர். இத்தோற்றத்தை மக்கள் கல்யாணசுந்தர மூர்த்தி என்றழைக்கின்றனர். இங்கு காணப்படும் இறைவனின் அமைப்பைப் போன்று பிரான்மலைக் குடவரை மற்றும் ஆணைமலை லாடன் கோவிலிலும் காணப்பெறுகிறது. சிவனும், உமையும் கல் இருக்கையின் மீது வீற்றிருக்கின்றனர். சிவன் இடக்காலையும், உமை வலக்காலையும் இருக்கையின் மீது குத்திட்டு முறையே வலக்காலையும் இடக்காலையும் தொங்கவிட்டுள்ளனர். இவ்விருவரும் இரு திருக்கரங்களுடன் உள்ளனர்.

மலை கொழுந்தீஸ்வரர் கட்டுமானக் கோவில் கருவறையினுள் கிழக்கு நோக்கியவாறு லிங்க விடிவில் காட்சி தருகிறார். பாகம்பிரியாள் கருவறையில் நின்ற திருக்கோலத்தில் தெற்கு முகமாக காட்சி தருகிறாள்.

மலைகொழுந்தீஸ்வரர், பாகம்பிரியாள், உமா சமேத மூர்த்தி

இக்கோவில் தீர்த்தத்தில் நீராடி, மலையை 7 முறை சுற்றிவந்து இறைவனையும், இறைவியையும் வழிபட்டால் விரைவில் திருமணம் நடைபெறும். அதுப்போல் கணவன்-மனைவி ஒற்றுமையாக வாழ்வதற்கு உமா சமேத மூர்த்திக்கு பெரிய மாலை சாத்தி வழிபடலாம். தீராத நோய், உடல்வலி, முடக்குவாதம் போன்ற வியாதிகளால் அவதிப்படுபவர்கள், மலை கொழுந்தீஸ்வரருக்கு அபிஷேகம் செய்கின்றனர். குணமானதும் மலையில் பாதங்களைப் பொறித்து வைக்கின்றனர். குழந்தைப் பாக்கியத்திற்காக இங்குள்ள காட்டாத்தி மரத்தில் தொட்டில் கட்டி வழிபடும் முறையும் வழக்கத்தில் உள்ளது.

இத்தலத்தில் குடவரை முருகன் சன்னிதி சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. வலப்புறம் சாய்ந்த நிலையில் காணப்படும் இத்தல முருகப்பெருமான், கீழ் ஆடை மட்டுமே அணிந்துள்ளார். ஆடையின் மேல் கட்டப்பட்டுள்ள துண்டின் நுனிப் பகுதி, முருகனின் இடப்புறமாகத் தொங்கி பீடத்தினைத் தொட்டுக்கொண்டிருக்கிறது. இவர் அணிந்திருக்கும் முப்புரிநூல் வலது கையில் மேல் செல்கிறது. இந்த அமைப்பு முற்கால பாண்டியருக்குரியது என்று சொல்கிறார்கள். முருகப்பெரு மானின் இடதுபுறம் ஒரு துறவி இருக்கிறார். முருகனின் வலப்புறம் பெரிய வயிற்றுடன் முருகனை நோக்கியவாறு அடியவர் ஒருவர் குடைபிடித்தவாறு உள்ளார்.

விழாக்கள்

ஐப்பசி பவுர்ணமி நாளில் அன்னாபிஷேஷகம் வெகுசிறப்பாக நடைபெறுகிறது. இத்திருநாள் மலை கொழுந்தீஸ்வரருக்கு சிறப்புத் திருநாளாகும். அதுப்போல் திருக்கார்த்திகை நாளன்று இறைவன் முன்பாக ஐந்து அகல் விளக்குகள் வைத்து பூஜைகள் செய்யப்படுகின்றன. பிறகு அதில் நான்கு விளக்கை எடுத்து அம்மன், முக்குறுணி விநாயகர், ஆறுமுகன் ஆகியோருக்கு தலா ஒன்று வைத்து விட்டு, மற்றொன்றை சொக்கப்பனை எரிப்பதற்கு பயன்படுத்துகின்றனர். கார்த்திகை திருநாள் அன்று ஏராளமான பக்தர்கள் அங்கு கிரிவலம் செல்கிறார்கள்.

அமைவிடம்

சிவகங்கையில் இருந்து கீழப்பூங்குடி வழியாக கட்டாணிப்பட்டி செல்லும் பேருந்தில் ஏறி, 23 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள திருமலையில் இறங்கி ஆலயத்திற்குச் செல்லலாம். அதே போல் மதுரையில் இருந்து உறங்கான்பட்டி வழியாக மதகுப்பட்டி, கல்லல், பாகனேரி செல்லும் பேருந்துகளில் ஏறி, அழகமாநகரி என்ற இடத்தில் இறங்கியும் கோவிலுக்குச் செல்லலாம்...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  
        என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡