Thursday, 10 May 2018

சங்கரன்_சங்காபிஷேகம்

கர்நாடக மாநிலம் மைசூரை அடுத்த ஸ்ரீரங்கப்பட்டிணத்தில் இருந்து 3 கி.மீ. தூரத்தில் காவேரிலோக் பவானி நதிகள் கூடும் சங்கம் என்ற இடத்தில் பெரிய மேடையில் காவேரித் தாய் தன் கிளை நதியான (தன் பெண் குழந்தையான) லோக் பவானியைத் தனது இடதுபக்கத் தொடையில் அமர்த்திக் கொண்டு, வலது காலை கீழே வைத்த நிலையில் திறந்தவெளியில் காட்சியளிக்கிறாள். தேடிவரும் பக்தர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் இவளை தரிசிப்பதற்கு காவிரியின் எதிர்க்கரையிருந்து படகில்தான் வர வேண்டும். இவளுக்கு குங்குமத்தால் அர்ச்சனை செய்யப்பட்டு பக்தர்களுக்கு அதே குங்குமம் பிரசாதமாக வழங்கப்
படுகிறது. இவளை தரிசிக்கப் படகில் வரும்போது நடுவில் உள்ள மண்திட்டில், திறந்தவெளியில் ஒரு லிங்க வடிவ சிவபெருமான் காட்சியளிக்கிறார். இவருக்கு ‘வழிகாட்டி சிவன்’ என்று பெயர். படகிலிருந்தபடியே இவரையும் கட்டாயம் தரிசிக்க வேண்டும். மைசூரிலிருந்து இந்த ‘சங்கம்’ க்ஷேத்திரத்திற்கு எல்லாவித வாகன வசதிகளும் உண்டு.

சங்கு முத்திரை

திருநெல்வேலி மாவட்டம் திருநெல்வேலியிலிருந்து சுமார் 60 கி.மீ. தூரத்தில் பாபநாசம் அணை உள்ளது. அங்கிருந்து 35 கி.மீ. தூரத்தில் ‘‘அப்பர்டேம்’’ அணைக்கட்டு உள்ளது. அங்கிருந்து படகில் பயணம் செய்து வாண தீர்த்தம் என்ற புனித அருவி உள்ள இடத்தை அடையலாம். நீர்வீழ்ச்சியில் நீராடிய பின் மலைமீது ஏறி ‘‘கறுக்குமேடு’’என்ற காட்டுப்பகுதியில் அமைந்துள்ள கல்லருவி என்ற கல்லாற்றுப் பகுதியை அடைந்தபின் செங்குத்தான மலை மீது ஏறி அங்குள்ள ‘‘சங்கு முத்திரை’’என்ற இடத்திற்குச் சென்று காட்டுப்பாதையில் பயணித்தால் பொதிகை மலை சிகரத்தை அடையலாம். மலைவாழ் மக்கள் வழிகாட்டுதல் இல்லாமல் பயணிக்க முடியாது.

சங்குப்பேட்டை

பெரம்பலூர் நகரப் பகுதிக்குள் ‘சங்குப்பேட்டை’ என்ற பெயரில் ஒரு இடம் இருக்கிறது. இங்கு சங்குகள் வைத்து வியாபாரம் செய்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. தற்பொழுது பொது நிகழ்ச்சிகள் நடத்தப் பயன்படுகிறது.

சங்கு வேலி

யாழ்பாணத்தில் சங்கு வேலி என்ற ஊரில் கி.பி. 1748ல் சிங்கைப் பரராசசேகரன் இரண்டாவது தமிழ் சங்கத்தை நிறுவினான். இந்த ஊர் தற்பொழுது ‘சங்குவேலி’ என்றழைக்கப்படுகிறது. ‘சங்கமான்’ கண்டி,‘சங்கானை’ என்ற ஊர்களும் இருக்கிறது...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  
        என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

No comments:

Post a Comment